வணக்கம். நேற்றைய ஹிட் பாடலுக்கான விடைகள் வந்துகொண்டிருக்கிறது. இது விடுமுறை காலம் என்பதால், குறைந்தபட்சமாக 24 மணி நேரம் அவகாசம் கொடுத்து, பிறகு tag செய்யலாம் என்றிருக்கிறேன். போதாத குறைக்கு, இணைய availability ஒரு சிறு பிரச்சினையாக உள்ளதால், இந்த சிறிய சலுகை. ஆனால், முடிந்த அளவுக்கு அடுத்த நாள் க்ளூ வருவதற்குள்ளாக பதிலை அளித்துவிடுங்கள் 🙂
இன்றைய பாடல் புதிர், எனக்கு சற்று personal ஆன ஒன்று என்றே சொல்லலாம். அதிகம் தொலைகாட்சி, வானொலி என்றெல்லாம் மெனக்கெட்டு call செய்ததில்லை நான். என்றாலும், the one and only time I had ever called a Radio Station LIVE, is for this song. இந்த பாடலை நான் எனது நண்பர்களுக்காக dedicate செய்தேன், சிங்கப்பூர் ஒலி வானொலி வாயிலாக என்று நினைக்கிறேன். செம experience 😉
இந்த பாடலின் interlude செம energetic. முழுக்க முழுக்க flutes மற்றும் violins கொடிகட்டும் interlude என்றாலும், அந்த shenai மற்றும் வடக்கத்திய மத்தள சங்கதிகளைப் பார்த்தீர்களா? ரொம்ப fantastic இல்ல?
இந்த படம் எனக்கு personal favoriteம் கூட. அட்டகாச காமெடி. என்றைக்கு பார்த்தாலும் ரசித்து சிரிக்கலாம்.
Please leave your answers below in the COMMENTS section with your Twitter handle/username. For other discussions on Twitter, please use hashtag #365RajaQuiz.
Clue: Please try to figure out the answer sincerely as the posted audio is the clue and hint you will ever need. But, if you need one more lifeline, then just select the box below,with your mouse, between the double-quotes to view the additional hint:
Two leading heroes acted in this movie. Three comedians played a storng supportive role too, with one of them having a directorial experience behind his back.
நேற்றைய புதிர் சுலபம் என்று, பதில்கள் வந்த வேகத்தில் இருந்தே தெரிந்தது. SPB-SJவின் டூயட் பாடல்களில், பலருக்கு மிகவும் பிடித்ததும் கூட என்று தெரிகிறது.
இன்றைய புதிர் பாடல் அருமையான ஒரு fantasy song. இதைப் பாடியவர் இசைஞானி இளையராஜா. இதை நான் முதலிலேயே சொல்லிவிட்டதற்கு ஒரு காரணம் இருக்கிறது.
பொதுவாக, voice மாற்றி ஒரு வித குறும்புத்தனமாக பாடுவது என்றால், இசைஞானி உடனடியாக தேடுவது மலேசியா வாசுதேவன் அண்ணனாகத் தான் இருக்கமுடியும் என்பது என் தனிப்பட்ட கருத்து. இதற்கு நிறைய பாடல்களை எடுத்துக்காட்டாக காட்டலாம். ஆனால் மலேசியா அண்ணன் இல்லாத / பாட முடியாத காலங்களில், அந்த கம்பீரமான குரலையும், நெளிவு சுளிவுகளுடன் குரலையே மாற்றி படுபயங்கர குறும்புத்தனத்தோடு பாடும் லாகவத்திலும், மலேசியா அண்ணனின் இழப்பை ஈடு செய்ய இசைஞானி இளையராஜா தான் முயன்றார் என்றால் அது மிகையாகாது. இதனாலேயே இசைஞானி இளையராஜாவின் குரலை ரசிப்பவர்கள், பெரும்பாலும் மலேசியா அண்ணனின் குரலை ரசிக்கின்றார்களோ என்று நான் தனிமையில் நிறைய யோசிப்பது உண்டு. Again, it is just something I used to ruminate by myself 🙂
இன்றைய புதிருக்கும் நாளைய புதிருக்கும் இருக்கும் connecting leitmotivஏ அது தான்.
அதாவது, இன்றைய புதிர் பாடலை, சேட்டைத்தனத்தோடும், குறும்போடும், ஜாலியாக அனுபவித்து பாடியிருப்பவர் இசைஞானி இளையராஜா என்றால், நாளை 120/365ல் பாருங்கள், இசைஞானி chorusல் ஒதுங்கிக்கொண்டு மலேசியா வாசுதேவன் அண்ணனை main leadல் பாட வைத்து அழகு பார்ப்பார். அப்போது நீங்களே புரிந்து கொள்ளலாம்.
Charlotteல் இருந்து Washington வரும் வழியில் Appalachian Mountain Ranges வரும். சுமார் 7 மணி நேர கார் பயணத்தில், 4 மணி நேரம், இந்த பாடல் தான் continuous-loopல் வந்தது. அதற்கு பல காரணங்கள் என்றாலும், இந்த interlude sequenceஏ முதற்காரணம்.
என் மனத்தை இந்தப் பாடலில் இழந்துவிட்டேன். இந்த பாடலில் இசைஞானி பாடியிருப்பது போன்று, மிக சொற்பமான பாடல்களிலேயே பாடியிருக்கிறார் என்று அடித்து சொல்லலாம். இந்த பாடல் ஒரு அருமையான rhythmic patternல் synth உதவியுடன் fantasy பயணம் இனிதே அரங்கேற ஆரம்பிக்கிறது. அருமையான melody இசை இது. கண்ணை மூடிக்கொண்டு, இந்த interludeஐ மட்டுமே கேட்டுக்கொண்டு இருக்கலாம். அப்படி ஒரு innocence தெறிக்கும், மென்மையான soothing இசை. The best highlight for me in this entire interlude is from the point at 24-second marker till the end. Plain, awesome! 🙂
என்ன, இப்போது கண்டுபிடித்துவிடலாம், இல்லையா? கண்டுபிடுத்தவுடன், நாளை என்ன பாடல் புதிரில் வரும் என்று உங்களுக்குள் ஒரு bet வைத்துக்கொண்டு இன்னும் 24 மணி நேரம் காத்திருங்கள். In the meanwhile, நான் கொஞ்சம் அமெரிக்காவின் ஜனநாயக தலைமையகமான வாஷிங்டன் நகரில் சில சுற்றுகளை முடித்துவிட்டு வந்துவிடுகிறேன் 🙂
Please leave your answers below in the COMMENTS section with your Twitter handle/username. For other discussions on Twitter, please use hashtag #365RajaQuiz.
Clue: Please try to figure out the answer sincerely as the posted audio is the clue and hint you will ever need. But, if you need one more lifeline, then just select the box below,with your mouse, between the double-quotes to view the additional hint:
This movie won 2 national awards in India, while also earning the privilege of being the only other Tamil movie to be screened at the most coveted International Film Festivals in the American Continent.
வணக்கம். நேற்றைய BGMக்கு அமோக வரவேற்பு + சிலாகிப்பு இருந்ததை கண்டு மிக்க மகிழ்ச்சி. இன்றைய புதிரை பதிக்க இரு மணி நேர தாமதம் ஆகிவிட்டது. Sorry about the short delay.
இன்றைய புதிர், ஒரு அருமையான, relaxing, soothing fun number. இசைஞானி எந்த ஒரு சூழலில் இப்படி ஒரு ஜாலி பாட்டு போட்டார் என்று தெரியவில்லை. இந்த பாடல் முழுவதும் ஒரு அட்டகாசமான styleஐ உப்யோகித்திருப்பார். இந்த பாடலில் சகலமும் உண்டு. அதை timed-commentsஆக, SoundCloud trackல் விட்டிருக்கிறேன். பாருங்கள்.
Right from electric flutes to percussion beats, gorgeous violins to Sax, this song has it all. Its clear uniqueness is its ravishing style with a calm treatment.
0 second marker: ஆரம்பத்தில் ஒரு சாதாரண percussionல் ஆரம்பிக்கிறது.
2 second marker: அது பயணம் செய்யும் ஆரம்பத்தில், வரும் Sax இந்த புதிரின் ஒரு highlight.
6 second marker: I just love this stylish strumming of the guitar. Just uber fun and class style.
16 second marker: இங்கே வரும் stylish flutes இன்னொரு அருமையான highlight for this clue.
23 second marker: Trust me, this casual, stylish, single guitar-strumming is the highlight of the whole song for me. For some reason, this simple addition makes the whole interlude very different to me 🙂
26 second marker: முந்தைய guitar strummingஐ ஈடு செய்ய வரும் simple flute sequence இது.
29 second marker: This is just a repeat in a sense of the 23-second marker.
32 second marker: This is just a repeat of the 29-second marker, but, with a mischievous, stylish flute ending.
இந்தப் படத்தில் வந்த அனைத்துப் பாடல்களும் சூப்பர் ஹிட். அதில் இதை நான் தேர்ந்தெடுக்க காரணமாக இருந்தது, இந்த பாடலில் கையாளப்பட்டிருக்கும் புதுமையான style.
என்ன, easy தானே? Have a nice weekend.
Signing-off from Washington DC.
Please leave your answers below in the COMMENTS section with your Twitter handle/username. For other discussions on Twitter, please use hashtag #365RajaQuiz.
If sound link doesn’t appear on mobile devices, please try this direct link.
Clue: Please try to figure out the answer sincerely as the posted audio is the clue and hint you will ever need. But, if you need one more lifeline, then just select the box below,with your mouse, between the double-quotes to view the additional hint:
திருமணமான நடிகை மீண்டும் reentry செய்த படம் என்று நினைக்கிறேன். SPB sang this song with another female singer 🙂
Happy Thanksgiving. On this day of Thanksgiving, I thank each of you for making #365RajaQuiz, a part of your daily schedule. Thank you.
நேற்றைய புதிருக்கு அதிரடி வரவேற்பு இருந்தது. பொதுவாக, கடினம் என்பதை விட, எளிதாக உள்ளது போன்று தோற்றம் அளித்து, விடை கிடைக்காமல் அலைக்கழிக்கும் புதிர் கேள்விகளே உண்மையில் கடினம். அந்த வகையில், பதிலைக் கண்டுபிடித்தவுடன், நீங்கள் காட்டிய மகிழ்ச்சி, என்னை மிகவும் மகிழ்வித்தது என்றால் அது மிகையாகாது.
ஒரு சிறு sampleல் இருந்தே, உங்கள் reactionsஐ நீங்களே பார்த்துக்கொள்ளலாம்.
வட கரோலினாவில் உள்ள சார்லட் நகரில்,இருந்து இந்த க்ளூ வருகிறது. இங்கு வர சுமார் 4.5 மணி நேரம் பயணம். நண்பர் @VRSaran சொன்ன மாதிரி, நேற்று அட்லாண்டாவில் இருந்து சார்லட் வரும் வழியில், பாதி தூரம் வரை (2 மணி நேரத்துக்கு குறையாமல்) நேற்றைய புதிர் பாட்டு தான் பாடிக்கொண்டு வந்தது.
எத்துணை feel, எத்துணை energy, என்ன ஷெனாய் மற்றும் வயலின் தபேலா இசை! படத்தின் பெயர் அதிரடிப்படை . ஆனால், நேற்றைய பாடல், அதிரடியிலும் அதிரடி, நெத்தியடி தான் போங்கள் 🙂
இன்றையப் புதிர், ஒரு அழகான பட BGM. நிறைய நாட்கள் கழித்து, பட BGM வருகிறது. சுலபம் தான்.
காட்சி அமைப்பு அருமையானது. சந்தர்ப்ப சூழ்நிலையால் கதாநாயகி கடத்தப்பட்டு, எதுவும் செய்யமுடியாத நிலையில் இருக்கிறாள். வெளியுலகத்தில் என்ன நடக்கிறது என்றே தெரியாத பரிதாப சூழ்நிலை. ஆனால், she finally gets a reprieve to just take a shower. விரசமே இல்லாமல் படமாக்கப்பட்ட மிக அருமையான காட்சிகளில் ஒன்று இது. அதற்க்கு காரணம், இசைஞானியின் BGMம் கூட.
ஆக, இவ்வளவு நாள் அவளுக்கு கிட்டாத ஒரு பரிசு இன்று கிடைக்கிறது. அதாவது கதாநாயகி ஒரு வழியாக அழகிய குளம் ஒன்றில் குளிக்கிறாள். ஆனால் பாருங்கள், இவள் சாதாரணக் குளத்தில் குளிக்கவில்லை. மலைப்பிரதேச குளிர் சீதோஷனத்தில் குளிக்கிறாள்.
இவ்வளவு நாள், கடத்தலில் depressed ஆக இருந்த அவள் மனது, இயற்கையைக் கண்டவுடன், சும்மா மான் போல் துள்ளிக் குதிக்கிறது. இயற்கை அவளை தலைகீழாக திருப்பிபோடுகிறது. குயில்களின் கூ..கூ.. ஒலி, அவளுக்கு ஒரு சங்கீதமாக ஒலிக்கிறது. இதை இசைஞானி இளையராஜா ஒரு montage themeஆகவே, அவரின் இசையில் சேர்த்திருப்பார். கவனித்துக் கேட்டீர்கள் என்றால், இசை முழுதும் குயில்களின் கூ..கூ.. கூடவே வரும். அத்தோடு, அந்த தண்ணீரின் சத்தமும் 🙂
அந்த மலையின் குளிர், ஜில்லென்று இவளின் மேனியின் மீது ஏற, அவளுக்கு வெலவெலத்து போகிறது. அதைக் குறிக்கவே, நடுவிலும் (41-49 second marker) கடைசியிலும் (1:53-1:59 marker) percussion-beatsஐ அடித்து நொறுக்கியிருப்பார் ராஜா. அந்த மலப்பிரதேசத்தின் குளிர், எழில், அது தரும் தனிமை சுகம் என்று அனைத்தையும் குறிக்க, அந்த percussion மிக அழகாக உதவுகிறது.
Please checkout the timed-comment markers, I have added on the track 🙂
ஆனால் ஆரம்பத்தைப் பாருங்கள். அருமையான bass-guitarsஐ உபயோகித்திருப்பார். இந்த புதிரின் ஆரம்பமே அதில் தான். அத்தோடு அம்சமான புல்லாங்குழல் வேறு. ஜில் தண்ணீரின் ஸ்பரிசம், தூயமையான அவளின் உள்ளத்தையும், மென்மையான அவளின் உடலையும் தீண்ட, அந்த இடத்தில் Santoor and a montage set of group violins and flute start their fantasy journey. 🙂
வாழ்க்கையில் அதுவரை எதெல்லாம் அவளுக்கு சர்வ சாதாரணமாக இருந்ததோ, அது அவளின் சிறைவாசத்தில் luxuryஆக போய்விட, ஒரு குளியலில் அவள் மனது அவ்வளவு குதூகலப்படுகிறது. இதை இசையிலேயே காவியமாக வடித்துவிடுவது தான் சிறப்பே!
எத்துணை அழகு பாருங்கள். Try narrating these inner feelings via music from a young damsel’s viewpoint 🙂
Especially, pay attention to the way the group violins and flutes that have a childlike innocence in them, clearly adding justice to the poetic visuals with a splendid musical narration.
Note: This is an encoded sequence, censored for dialogues in between for the Quiz.
இன்று சார்லட்டில் இருந்து வாஷிங்டன் போக இருப்பதால், Tagging will be done in batch-mode. Enjoy your day.
So, please identify which movie, this BGM is. :))
Please leave your answers below in the COMMENTS section with your Twitter handle/username. For other discussions on Twitter, please use hashtag #365RajaQuiz.
If there is a problem with the plugin, please use this link
.
Clue: Please try to figure out the answer sincerely as the posted audio is the clue and hint you will ever need. But, if you need one more lifeline, then just select the box below,with your mouse, between the double-quotes to view the additional hint:
தேசியக்கவியின் பெயரைக் கொண்ட ராஜாவின் பக்தனான டைரக்டரும், மிகப்பிரபலமான பின்னணி பாடகரும்,பழம்பெரும் நடிகையும் பாடகியுமான ஒருவரும் நடித்த படம் இது. This movie is a fitting example of Stockholm-syndrome that blossoms into love.
அன்பர்களுக்கு வணக்கம். நேற்றைய புதிர், நிறைய பேருக்கு மிகவும் கடினமாக இருந்ததது என்பதை விட, எளிமையாக இருந்தும் கடினமாக இருந்தது என்பது தான் வேடிக்கை. இல்லையா? ஆனால், விடை தெரிந்தவுடன், நீங்கள் பரிமாறிக்கொண்ட மகிழ்ச்சியே எனக்கு மகிழ்ச்சியளித்தது. புதிரை கேட்டுப்பார்த்து, குற்றம் இல்லாமல் விடையளித்த அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
சிலர் கூகுளில் தேடி விடையைத் தந்தீர்கள். ஹும் 🙂 என் தவறு. முதலில் கூகுளில் தேடிப்பார்த்து underestimate செய்து அதையே lifelineஆக நான் கொடுத்தது, என்னுடைய முட்டாள்த்தனம் தான். 🙂 இனி, இந்தவகையான risky தவறு நடைபெறாது என்று பகிரங்கமாக சொல்லிக்கொள்கிறேன்.
I take constructive criticism very seriously. So, I want to thank and appreciate @SoundParty for his cogent suggestion. Here it is:
நேர்மையான கருத்து. நண்பருக்கு என்னுடைய நன்றி. மேலும், இவ்வகை தவறு இனி நடக்காது என்று மீண்டும் ஒரு முறை கூறிக்கொண்டு, நேராக இன்றைய புதிரில் ஆஜராவோம். சரியா?
Percussion-based themeஆகவே போகிறதா? கவலை வேண்டாம். நாளையில் இருந்து gear-shift செய்யப்படும். ஆனால், இன்றும் அருமையான percussion-based interlude. இது, tempoவிலும் styleலிலும் சற்று 110/365 – #365RajaQuiz – A softy prelude duet 🙂 மாதிரி இருக்கும்.
கேளுங்களேன்.
அருமையான percussion-beatன் மத்தியில், மெலிதான வயலின் மற்றும், மிகவும் அடக்கிவாசிக்கப்படும் flute வருகிறது. இந்தப் படத்தில் அனைத்து பாடல்களும் ஹிட். இந்தப் படத்துக்கு சற்று எதிர்பார்ப்பு அதிகம் இருந்தது. ஆனாலும் சரியாக போணியாகவில்லை. இந்தப் படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகம் இருந்ததற்கு காரணம், இதன் ஹீரோ, அப்போது தான் வேறு ஒரு பயங்கர ஹிட் படத்தில் நடித்து ஆட்டம் போட்டு வந்திருந்தார். அந்த கால கட்டத்தில், ராஜாவின் இசையில் இருந்து விலகி, மக்கள் வேறு சில மயக்கங்களில் இருந்த காலம் என்றும் சொல்லலாம். அதனால், இந்த படத்தில் வந்த பல பாடல்கள் கவனிக்கப்படாமல் போய்விட்டது. மேலும், ரேடியோவில் இருந்து டிவி பக்கம் மக்கள் சாய்ந்த காலம் வேறு.
ஆனால் பல பாடல்கள் நன்றாக இருந்தாலும், இந்த பாடல் தான் top hit இந்த albumல்.
ஆரம்பமே அருமையான ஒரு romantic hummingல் ஆரம்பிக்கும். இந்தப் பாடல் முழுவதும் bass-guitarsன் ஆளுமை அதிகம் இருக்கும். அதே போல, பாடல் முழுவதும் சாதாரண guitarsன் strumming உம் இருக்கும்.
சுலபம் தான்.
இந்த சுலபம், நேற்றைய கடுப்பைத் தணிக்க :))
Please leave your answers below in the COMMENTS section with your Twitter handle/username. For other discussions on Twitter, please use hashtag #365RajaQuiz.
Clue: Please try to figure out the answer sincerely as the posted audio is the clue and hint you will ever need. But, if you need one more lifeline, then just select the box below,with your mouse, between the double-quotes to view the additional hint:
மலரின் பெயரைக்கொண்ட இந்த நடிகை, ஆந்திர அரசியலிலும் காலை பதித்தவர். இவர் நடித்த படப்பாடல் தான் இது.
வணக்கம். நேற்றைய புதிரில் ஒரு முக்கிய மைல்கல் சாதனையை @ezharai அடைந்தார். நேற்றோடு, அவர் 100 பதில்களை அளித்து சதம் அடித்துவிட்டார். அவருக்கு நமது பாராட்டுக்கள். அவரைப்போலவே நீங்கள் அனைவரும் சதங்களைக் குவிக்க வாழ்த்துகள்!
நேற்றைய பாடலைக் கேட்டதில்லை என்று சொன்ன பலர் அந்தப் பாடலை மீண்டும் மீண்டும் கேட்டு அதைத் தங்கள் favorites listல் சேர்த்துக்கொண்டனர். மகிழ்ச்சியான செய்திதான். Enjoy.
நேற்றைய டூயட் பாடலில் எப்படி percussion இருந்ததோ, அதேபோல இன்றைய பாடலிலும் percussion ஆளுமைதான். நேற்றைய பாடலில் காதல்மட்டும் இருந்தது; இன்றைய பாடலில் காதலும் காமமும் உண்டு. நேற்றைய பாடலில் slow paced percussion. இன்றைய பாடலில் fast paced percussion. நேற்றைய மெலடி டூயட் பாடலில் மெலடி கருவியான Violin இல்லை. ஆனால், இன்றைய காதல் கிளுகிளுப்பு டூயட்டில், percussionஉடன் violins ஜோராக வரும். குருவிச் சத்தத்தோடு ஆரம்பிக்கும் இந்த இடையிசையில் வேக percussionஓடு தொடர்ந்து வரும் அந்த நீண்ட violin இசை சங்கமிப்பது வேக santoorல் 🙂 அந்த இடத்தில் எங்கிருந்தோ tabla நுழைந்துவிடுகிறது. இவை எல்லாமும் சேர்ந்து பாடலின் அழகை எங்கோ கொண்டுசேர்த்துவிடுகிறது. இல்லையா?
Have a nice weekend 🙂
Please leave your answers below in the COMMENTS section with your Twitter handle/username. For other discussions on Twitter, please use hashtag #365RajaQuiz.
Clue: Please try to figure out the answer sincerely as the posted audio is the clue and hint you will ever need. But, if you need one more lifeline, then just select the box below,with your mouse, between the double-quotes to view the additional hint:
This movie , produced by the legendary Kovaithambi under his flagship banner Motherland Movies, introduced an important lead actor.
நேற்றைய பாடல் புதிருக்கும், விமர்சனத்திற்கும் இருந்த வரவேற்பைக் கண்டு மிக்க மகிழ்ச்சியடைந்தேன். குழந்தைகளின் விசயங்களில் காட்டப்படும் ஈடுபாடு அனைவருக்கும் நலத்தையே பயக்கும். மேலும் மலேசியா வாசுதேவனின் அந்த குரல்… அப்பப்பா…. குறிப்பாக,
அடி ஆடு பூங்கொடியேஏஏஏ என்று நீட்டிக்கொண்டு போகும் style ஆகட்டும்,
பாசம் ஒரு தெய்வம் பேசடி கிளியேஏஏஏ என்னும் இடத்தில் காட்டும் கனிவின் உச்சமாக இருக்கட்டும்,
என் வாழ்க்கையே இந்தப் பூக்களை தினம் காக்கும் சேவை ஒன்றுதான் என்று சிலாகித்து உருகுவதாகட்டும்,
அமுதம் பொழியும் கார்கால மேகங்கள் என்று குரலிலேயே fantasylandக்கு அழைத்துச் செல்லும் பாங்காகட்டும்,
கடவுள் பாடும் ஆனந்த ராகங்கள், களங்கம் அறியா கடல் சங்குகள். இவை பார்க்கும் பார்வையிலே, பல பாவம் தீர்ந்துவிடும் என்று ultimateஆன ஒரு philosophical கருத்தை ஆர்ப்பாட்டமே இல்லாமல் காலத்துக்கு அடித்துச் சொல்லிவிட்டுப் போகும் ஆழமாகட்டும்….
முழுப் பாட்டையும் கேட்டு முடித்தவுடன், இளையராஜா, மலேசியா வாசுதேவன் கூட்டணி உங்கள் குழந்தைப் பருவத்தின் நினைவலைகளைக் கொண்டுவந்தார்களா, இல்லையா? 🙂
எத்துணை முறை கேட்டாலும், தெவிட்டாத பாடல்மட்டுமில்லை அது, ஓர் அமர காவியம். இம்மாதிரி சில காவியங்களால் மட்டுமே நமது ஆழ்மனத்தின் உணர்ச்சிகளோடு உரையாடல் நடத்தமுடியும்!
"பாட்டா ஸார் அது, அதெல்லாம் நம் வாழ்வின் பகுதிகள். இந்த மனுஷனுக்கு எதற்காக நன்றி சொல்வது என்று ஒரு கணக்கு உண்டா?" Amen @rozavasanth 109/365
இவையெல்லாம் மிகச் சிறிய sample tweets for the blockbuster 109/365. நீங்கள் ஒவ்வொருவரும் ட்வீட்கள் எழுதுவதும் பின்னூட்டங்கள் இடுவதும், இசைஞானியின் பாடல்களால் வாழ்வியலின் உண்மைகளையும் ஆத்மார்த்தமான உணர்வுகளையும் எப்படிச் சிலர் நுகர்கிறார்கள் என்று வெளிப்படையாகப் பகிர்ந்துகொள்ளமுடிகிறது. வெறும் பாடல்களைக் கேட்டோம், ரசித்தோம், பிடித்த இசையமைப்பாளர் என்று கொண்டாடினோம் என்றில்லாமல், இது ரொம்ப deep அம்மா என்று உணர்வுபூர்வமாக அழுத்தமாகவும் அமைதியாகவும் நாகரிகத்தோடும் கல்வெட்டாகப் பதிக்கமுடிகிறது. இல்லையா? 🙂 அதற்காக, முதலில் உங்களுக்கு எமது நன்றிகள்!
Please review the comments, where our “expert” fans have written some of the best commentary for that song. Thank you, folks.
இன்றைய புதிர் ஓர் அருமையான டூயட் பாடல். இதில் மெலடி தூக்கலாக இருக்கும்.
இந்த மெலடிப் பாடலிலும், மெலடி இசைக்கருவி Violinன் ஆளுமை இருக்காதது ஆச்சரியமே. அதுவும் இந்த preludeல் no violin 🙂
ஒரு சிறு percussion. அந்த measured percussionல் electronic flute மிக அழகாக நுழைகிறது. ஆனால், நன்கு நுட்பகமாக அணுகிக் கேட்டால், படுபயங்கர bass guitarsன் ஆதிக்கத்தை நன்கு கேட்டு ரசிக்கலாம். இசைஞானிக்கு bass-guitars என்ன ஆதார சுருதியா? இவரின் ஆரம்பப் பாடல்களில் இருந்து latest பாடல்கள்வரை, மிக அதிகமாக உபயோகித்தது bass-guitarsஆகதான் இருக்கும்போல. Around 17-second marker is where, you can hear the guitar interludes very prominently. That strumming will continue until the prelude gets over.
இந்த மெலடி கிளுகிளுப்பில், இசைஞானியின் innovation குறும்பு, இந்தப் பாடலில் எப்படி வெளிப்படும் தெரியுமா? உருமி மூலமாக. ஆம்! உருவிப்போடும் உருமி மேளத்தில் பார்த்தோமே, அதே உருமிதான். ஒரு மெலடி டூயட்… அதில் போய், உருமியை backgroundல் வைத்து உறும உறும உருகவைத்துவிடுவார் இசைஞானி.
இந்தப் பாடலை அவ்வளவு இயல்பாகவும், youthfulஆகவும் பாடிக் கலக்கியிருப்பார், S.P Balasubramaniam. பெண் பாடகி.. கேட்கவே வேண்டாம்… அடுத்து தூள் கிளப்பும் பாடகி.
இந்த அருமையான டூயட்டை கண்டுபிடிக்கலாம்தானே?
Please leave your answers below in the COMMENTS section with your Twitter handle/username. For other discussions on Twitter, please use hashtag #365RajaQuiz.
Clue: Please try to figure out the answer sincerely as the posted audio is the clue and hint you will ever need. But, if you need one more lifeline, then just select the box below,with your mouse, between the double-quotes to view the additional hint:
இனிய உள்ளங்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள். இன்றைய நாளின் மகிழ்ச்சி என்றும் உங்களுடையதாகட்டும்!
இங்கு மழை அடித்துப்பெய்துகொண்டிருக்கிறது. நடுவில் Internet connection பிரச்னைகள் வேறு. அதனால் சுருக்கமாக ஓர் அறிமுகம் எழுதிவிடுகிறேன்.
60/365போலவே, இன்றைய க்ளூவுக்கு ஒரே ஒருமுறைதான் நீங்கள் பதில் அளிக்கலாம். தவறாக இருந்தால், இரண்டாம் முறை அளிக்கும் பதில் நிராகரிக்கப்படும். என்ன, சரியா? (It’s been a while, we played this game :))
இந்தப் புதிரின் பாடலில் ஒரு பழைய பட effect இருக்கும். அதுவே இந்தப் பாடலை அன்றைய காலத்தில் ஹிட்டாக்கியது. இந்தப் படம் இன்றுவரை பேசப்பட்டு வருவதற்குக் காரணம், இதில் காட்டப்பட்ட tragedy கதைக்களமா, அல்லது இசைஞானி இளையராஜாவின் இசை ராஜ்ஜியமா என்று ஒரு பட்டிமண்டபமே போடலாம். படத்தின் ஹீரோ, ஒரு பலாப்பழம், வெளியே கரடுமுரடான தாதா டைப் rough and tough guy. ஆனால், இளகின மனசுக்காரன். பாசக்காரப் பய. மனைவிமேலும், குழந்தைமேலும் அவ்வளவு பாசம். பஞ்சாயத்து பண்ணுவதில் கில்லாடி. இருந்தும், அவன் பொஞ்சாதி அல்ப ஆயுசுல போயிடுவா. ஒருவித Godfather character இவனுக்கு. ஊர்ப் பஞ்சாயத்து. இவன் வாழ்க்கையில் வீசும் புயலுக்கு மத்தியிலே, பழைய பாடல் feelல் ராஜா அமர்க்களப்படுத்தியிருக்கும் சூப்பர் பாடல்தான் இது. கண்டுபிடிக்கலாம்தானே?
நீங்கள், உங்கள் குடும்பத்தினர், நண்பர்கள், உறவினர்கள், நான் என்று நாம் எல்லாரும் சிரித்தாலும் இன்று தீபாவளிதான் 🙂
பி.கு: Internet Connectivity issues regretted. Thanks for your understanding.
Please leave your answers below in the COMMENTS section with your Twitter handle/username. For other discussions on Twitter, please use hashtag #365RajaQuiz.
Clue: Please try to figure out the answer sincerely as the posted audio is the clue and hint you will ever need. But, if you need one more lifeline, then just select the box below,with your mouse, between the double-quotes to view the additional hint:
Although Maestro Ilaiyaraaja did NOT sing this song, the songs he sung in this film pretty much became iconic hits. Besides, the Director of this movie has a distinct name for his own style of film-making and his family has other movie talent :). A very important actor debuted in this movie!
Before we move to today’s quiz — 7th in Season-2, please take a look at the Ranking position for Season-1 (Clues 1 to 100). Please write to me, if there are any issues.
இது தான் சூளுரை! Super! வாழ்த்துக்கள் நண்பரே! நீங்களும், இறங்கி கலக்குங்கள் :))
இன்றைய புதிருக்குள் போவோம்.
வணக்கம் அன்பர்களே. நேற்றைய க்ளூ மிகவும் சுலபம் என்றும், எனது கணினியை hack செய்யவேண்டும் என்றும் இருவேறு கருத்துகள் நிலவியது ஆச்சரியம்தான். இருந்தாலும், பெரும்பான்மையானோரின் கருத்து, புதிர் சுலபமாக இருந்தது என்பதே. மகிழ்ச்சி 🙂
பண்டிகை நேரம் என்றாலே, சொந்த ஊருக்குப் பயணம் செய்வது, அண்டை அயலாரிடம் பலகாரப் பரிமாற்றம், புது உடை, பட்டாசு, மத்தாப்பு, வெடி, நண்பர்களுடன் விருந்து, etc., etc.,
சரியா?
ஆனால் சிலருக்கு, தீபாவளி, பொங்கல், கிறிஸ்துமஸ் என்பதெல்லாம் தனிமையிலேயே கழியும். எத்துணை முறை நாம் அவர்களை நினைத்துப் பார்த்திருக்கிறோம்? அது நம் எதிர் வீட்டு Flatல் வசிப்பவராகக்கூட இருக்கலாம். வேறு ஒரு மாநிலத்திலோ, நாட்டிலோ குடும்பத்தை விட்டுவிட்டு வயிற்றுப் பிழைப்புக்காக வந்தவராக இருக்கலாம். அல்லது, உடல்நலமில்லாமல் தனிமையில் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொண்டு நம்பிக்கை என்னும் ஒரே ஊன்றுகோலில் வாழ்கையை நகர்த்திக்கொண்டு இருப்பவராக இருக்கலாம். அல்லது, சிறையில் வாடுபவராக இருக்கலாம். அல்லது, மகன், மகள், பேரன், பேத்தி, ஒருவரும் இல்லாமல் தனிமை இருளில் வாடும் வயதானவர்களாக இருக்கலாம். அல்லது, terminal-condition என்று மருத்துவரால் அதிர்ச்சி diagnosis வாங்கியவராக இருக்கலாம். அல்லது, தாய் தந்தையரை விட்டுவிட்டுத் தனியே வேறு மாநில / நாட்டுப் பல்கலைக்கழகங்களில் தனிமையில் வாடும் மாணவராக இருக்கலாம். அல்லது, பல படங்களில் வருவதுபோல, வீட்டை விட்டு ஓடிய காதலன் / காதலியாக இருக்கலாம்…
எது எப்படியோ, தனிமையில் உழன்று வாழும் ஒவ்வொரு மனிதனுக்கும் இந்த தீபாவளி இன்பத்தையும் சந்தோஷத்தையும் கொண்டுவரவேண்டும் என்பதே நம் #365RajaQuizன் விருப்பம். யாரையும் சென்டிமெண்டில் மூழ்கடிக்கவேண்டும் என்பது நம் எண்ணம் அல்ல. ஆனால், ஒவ்வொரு பண்டிகையின்போதும், நமக்குத் தெரிந்து இம்மாதிரி யாரேனும் தனிமையில் இருந்தால், நம்மால் இயன்ற அளவுக்கு reach-out செய்வது மனிதாபிமானமான செயல்மட்டுமல்ல, சரியான செயலும்கூட. சரியா?
சரி. இப்போது புதிருக்கு வருவோம். இந்தப் புதிரில் வரும் பாடலும், நாயகன் தனிமையில் பாடும் ஒரு பாடல்தான். குழந்தைகள் தினம் வேறு இந்த வாரம் வருகிறது. எனவே, தீப ஒளித் திருநாளாம் இந்த பண்டிகை நாளிலே, தீபத்தின் ஒளியாக விளங்கும் நம் குழந்தைகளுக்காக இந்தப் பாடல் வருவதாக எடுத்துக்கொள்ளுங்கள். ஆரம்ப இசை, குழந்தைகளின் அந்த innocenceஐப் படம்பிடித்துக் காட்டும் இசை. அதற்குப் பக்கபலமாக வருவது, violin இசை. தனிமையின் இருளை உணர்த்தும் flute அதைப் பின்தொடர்ந்து நிறைய நேரத்துக்கு வருவது சிறப்பு. இறுதியில், ஆரம்பித்தமாதிரியே, அந்த childlike interlude வருகிறது.
இந்தப் பாடலை பாடிய பாடகருக்கு, நேற்றும், இன்றும், நாளையும், என்றென்றும் வெறித்தனமான ரசிகர்கள் இருக்கவே செய்வார்கள். ஒவ்வொரு உணர்வையும் செதுக்கிப் பாடும் அன்னார்க்கு வந்தனம்!
Please leave your answers below in the COMMENTS section with your Twitter handle/username. For other discussions on Twitter, please use hashtag #365RajaQuiz.
Clue: Please try to figure out the answer sincerely as the posted audio is the clue and hint you will ever need. But, if you need one more lifeline, then just select the box below,with your mouse, between the double-quotes to view the additional hint:
Lyricist for this song is Kavignar Vairamuthu. Director for this movie is SP. Muthuraman.
இந்தப் புதிருக்கு நீங்கள் எல்லாரும் அளித்து வரும் ஆதரவுக்கும் வாழ்த்துகளுக்கும் என்னுடைய நன்றிகளை மீண்டும் தெரிவித்துக்கொள்கிறேன். அடுத்த சீசன்-2ஐ வெற்றிகரமாகத் தொடங்குவோம். நீங்கள் இந்தப் புதிருக்குப் புதியவராக இருந்தால், தயவு செய்து “About” பக்கத்தை ஒருமுறை பார்த்துவிடுங்கள்.
100/365 was a fantastic hit as many had not heard it before and immediately fell in love with it. Maestro Ilaiyaraaja always rocks! Please read this beautiful article about how Maestro Ilaiyaraaja rocks on Shenai, a North-Indian instrument: பண்டிட் பாலேஷுடன் ஒரு நாள்!
இந்தப் புதிர் எப்படிப் பயணம் செய்கிறது, இந்த honor system எப்படி வேலை செய்கிறது என்பதை எல்லாம் நீங்கள் கவனித்துவந்திருப்பீர்கள் என்று நினைக்கின்றேன். தெரிந்த பாடல்களை உடனே ஞாபகப்படுத்திக்கொண்டு விடை அளிப்பது ஒரு பக்கம் என்றாலும், தெரிந்த பாடல்களை, மற்றவரோடு சேர்ந்து கேட்டு, அளவளாவி, சிலாகித்து, பின்னூட்டங்களை இட்டு மகிழ்வது என்பது இன்னொரு பக்கம். அல்லது, இந்தப் பாடலைக் கேட்டதே இல்லை என்றால், அந்தப் பாடலை இனிமேல் தினமும் கேட்க ஏதுவாகவும் இந்தப் புதிரை அணுகலாம். எது எப்படியோ, Options are galore. But, the only request will be to not share explicit clues and answers that may deter others, who strictly do not even use life-line clues, due to their personal preference. IF you are using Twitter, be careful when you type the answer to see if it is DM or not. I would rather encourage you to leave the answer here in WP itself. அவ்வளவுதான். என்ன, சரியா?
இன்று all tags for 101/365 will be delayed and deferred to get a snapshot of tag-count until 100/365.
1/365 மாதிரி 101/365உம் மங்கலகரமான வீணையோடு ஆரம்பிக்கலாம் என்று இந்த க்ளூவைக் கொடுத்திருக்கிறேன். நீங்கள் கேட்கும் இந்தப் புதிருக்கான க்ளூவை என்னுடைய பழைய Windows 98 Desktopல் அந்தகாலத்தில் experimentalஆக நல்ல Bass ஏற்றி, LP –> Cassetteமூலமாகப் பதிவு செய்திருந்த பாடலை encode செய்திருந்தேன். அதைதான் நீங்கள் இப்போது கேட்கிறீர்கள். இணையத்தில் எப்படி இருக்கிறது என்று நான் இன்னும் கேட்டதில்லை.
இந்தப் படம் ஒரு பெரிய நிறுவத்தின் பேனரின்கீழ் வந்தது. அதனால் பிரமாண்டம் கொஞ்சம் அதிகம். அந்தப் புண்ணியத்தால், இந்த படப் பாடல்கள் stereophonic soundல் பதிவு செய்யப்பட்டது. ஆகையால் நல்ல split-effect கிடைக்கும். கேட்டு ரசியுங்கள்.
க்ளூவைப் பார்ப்போமா?
ஒரு பூஜைக்கு ஏற்ற மங்கல அமைப்போடு வீணை ஆரம்பமாகிறது. ஆனால், கவனித்துக் கேட்டுப் பாருங்கள், அதோடு எத்துணை இசைக்கருவிகள் இந்த 40-நொடிப்பொழுதில் வந்து அசத்துகிறது என்று!
வீணை ஆரம்பமாக, அதனுடன் சந்தூர் லயிக்கிறது. இங்கே, அருமையான strumming of the guitars. அந்த strummingன் நடுவே, chorus பாப்பாக்களும், ஆண் பாடகரும் ஹம்மிங் செய்ய, பாடல் ஒரு தேவலோக overtone எடுக்கிறது. இல்லையா?
இசைஞானி சில சமயங்களில் எங்கே வீணை, எங்கே guitar என்பதுபோல ஒரு குறும்புத்தனத்தைத் தனது இசையில் காட்டுவார். இங்கே, அம்மாதிரி சேட்டை இல்லை என்றாலும், he rocks with distinct Veena and guitar interludes. We have seen similar accompaniments earlier — for example10/365.
இந்த டூயட்களுக்கு அவர் ஒரு தெய்விக வீணையை எப்படியெல்லாம் கையாண்டு களி ஏற்படுத்துகிறார் பாருங்கள். முத்தாய்ப்பாக இந்த sequenceக்கு வருவதே, அந்த violin sequenceதான். அதன் அழகே அழகு.
நான் கோயம்புத்தூர்காரன். தடுக்கி விழுந்தா ஊட்டி பக்கம்தான் அடிக்கடி போவேன். அப்போ அங்கே இந்த valley views ரொம்பப் பிடிக்கும். அதுமாதிரியான ஓர் இசைக்காட்சிதான் இந்த sequence. It starts on a high Veena interlude, falls into the valley of a flat-textured drums & flute-piece and goes pretty high on a long violin sequence.
என்ன கண்டுபிடித்துவிடலாம்தானே?
அமெரிக்காவில் உள்ள நண்பர்களுக்கு வாழ்த்துகள். தயவு செய்து வாக்களியுங்கள். அது உங்கள் தலையாய கடமை. 🙂
Please leave your answers below in the COMMENTS section with your Twitter handle/username. For other discussions on Twitter, please use hashtag #365RajaQuiz.
Clue: Please try to figure out the answer sincerely as the posted audio is the clue and hint you will ever need. But, if you need one more lifeline, then just select the box below,with your mouse, between the double-quotes to view the additional hint:
This movie’s core focus was about women’s cause. Had a big reception!