Tags

, , , , , , , , , , , , , , , , , , , , , ,

வணக்கம். இன்றுமட்டும் நம் புதிரில் ஒரு சிறு விதிமுறை மாற்றம். OK?: பதில் கூற இன்றுமட்டும் உங்களுக்கு ஒரே ஒரு வாய்ப்புதான். தவறாக இருந்தால், திருத்திக்கொள்ள வாய்ப்பு இல்லை. இது இன்றுமட்டும். நாளையில் இருந்து எப்போதும்போல பலமுறை பதில் சொல்ல வாய்ப்பு
(Multiple Attempts) உண்டு. சரியா? Are you ready for this challenge for today alone? So please be careful, when you tender your answer.

1980களின் பாடல் இது. One of the best hit love songs of all time. இன்றைய பாடலைக் கேட்கும்போதே, பரவசம் தொற்றிக்கொள்ளும். அருமையான காதல் பாட்டு. Interludeஐ கவனியுங்கள். எவ்வளவு இனிமையாக வயலினோடு ஆரம்பித்து வீணை மழையில் நனைத்து, 12ம் நொடிவரை சீராகப் பயணம் செல்கிறது! ஊட்டி குளிர் ஜில்லென்று நம்மை ஆட்கொள்வதுபோல் இருக்கிறது அல்லவா? மெல்ல கொடியிடையுடன் காதலி நடந்து வருவதுபோல நடை எடுக்கும் இசையில் 24ம் நொடியில் புல்லாங்குழல் வருகிறது. 30ம் நொடியில் இருந்து கிளம்பும் இந்த வயலின் இசை sequenceஐ கேட்காத தமிழ் மக்கள் இருக்கவே முடியாது என்று அடித்துச் சொல்லலாம். பின்னர் அது சந்தூர் இசையில் முடியும் அழகைப் பாருங்களேன்🙂

பார்த்துப் பதில் சொல்லுங்க. வழுக்கி விழுந்துடாதீங்க இந்த மெலடி மழையில்🙂

காதல் வெள்ளம் புரண்டு ஓடும் களம் இது. போதாக்குறைக்கு இந்தக் கதாநாயகிக்கு இன்றுவரை ரசிக சிகாமணிகள் உண்டு என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

கவனம், இன்று உங்களுக்கு ஒரே ஒரு வாய்ப்புதான். பலமுறை replay பண்ணிக் கேட்டுட்டு reply சொன்னாப் போதும். All the best!

Please leave your answers below in the COMMENTS section with your Twitter handle/username. For other discussions on Twitter, please use hashtag #365RajaQuiz.

Clue: Please try to figure out the answer sincerely as the posted audio is the clue and hint you will ever need. But, if you need one more lifeline, then just select the box below,with your mouse, between the double-quotes to view the additional hint:

மலைகளின் அரசி — நீலகிரியில் — தமிழ் திரையுலகின் மிக முக்கியமான முன்னணி நடிகர் நடித்தப் படம் & பாடல் இது.
This movie & song in particular was shot at the Queen of Hills — Nilgiris — featuring an iconic male star of all times of Tamil cinema.

NB: Enjoy the Continuous Play of all the clues so far.

Answer: En Vaazhvile (என் வாழ்விலே) from Thambikku Endha Ooru(தம்பிக்கு எந்த ஊரு) (1984)

கண்டிப்பாக இன்றைய பின்னூட்டங்களைப் படியுங்கள். அருமை நண்பர் @thachimammu கூறியது போல, தவிர்க்கமுடியாத காரணங்களால், பஞ்சு அருணாசலம் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க இசைஞானி இசைத்த ஹிந்தி सादमा (Sadma) படப்பாடலையே நேரடியாக பயன்படுத்தினார்கள்!🙂