Tags

, , , , , , , , , , , , , ,

நாய், மான், கிளி எல்லாம் முடிஞ்சாச்சு. இன்னிக்கு வெள்ளி. எல்லாரும் விட்டா போதும்னு குத்தாட்ட மூட்ல இருப்பீங்க. அதுக்கு ஏத்த மாதிரியான பீரியட் பாட்டு தான் இது. 70/80களில் வெளிவந்த ஒரு மாபெரும் ஹிட் படத்தின் முதல் பாடல் இது. Fusion என்று தாராளமாக சொல்லலாம். நன்றாக பாருங்கள், எத்தனை வித இசைக்கருவிகளை அநியாத்துக்கு விட்டு ஆட்டி இருக்கிறார் ராஜா — RAWவா JAW-droppingஆ சாத்தியிருப்பார் “ராஜா” :).

எது இருக்கிறது என்பதை விட எது இல்லை என்று ஆராய்வது நல்லது என்றே நினைக்கின்றேன். Trumpets, Flutes, Violins, Guitars என்று போகும் பாடலில், இதென்னடா உருமி? அட, இந்தக் குறும்புக்கார ராஜாவுக்குள் #NEPK “பிடிக்கல மாமு” பாடலில் வரும் சங்கதிக் குறும்பு எல்லாம் தொன்றுதொட்டே இருக்கிறது என்று showcase செய்யும் பாடல் இது. இந்த கிளப் டேன்ஸ் பாட்டுக்கு எங்க இருந்து உருமி வந்துச்சு? அதை அழகாக நுழைத்ததனாலேயே இந்தப் பாடல் அவ்வளவு அழகாக, விறுவிறுப்பு மேலும் எகிறி ஒலிக்கும். பாடலைக் காட்சியோடு பார்த்தால் புரியும். அவ்வகை instrumentation அந்தக் காலத்திலேயே அவர் உபயோகிப்பதை கண்டு, அதை இன்றைய #NEPV க்கு பொருத்தியும் பார்த்து என்சாய் செய்ய வாழ்த்துக்கள் 🙂

இது ஒரு சில அக்கிரமிகளை பொரி வைத்து பிடிக்கத் துணியும் பாட்டு. அந்தக் காலத்துல இப்படி ஒரு formulaவே வச்சிருந்தாங்க. முன் சீட்ல இருக்கறவன் குஷியா இருக்கணும்னு அனுராதா அம்மையார், ஜெயமாலினி அம்மையார், டிஸ்கோ சாந்தி அம்மையார்னு இவங்க எல்லாத்தையும் அந்தக் காலத்தில ஆட வச்சு அழகு பார்த்தது, தமிழ் கூறு நல்லுலகம். அதுக்கப்புறம், இதை பார்த்த நாயகிகள், அட, இதை நாங்களே செவ்வனே செய்வோமே என்று இறங்கி நடித்ததன் பலன், இந்த “பாம்கள்” இடம் தெரியாமல் போய்விட்டார்கள்.

அனால், பாடலைப் பாருங்களேன். கடந்த 4 நாள் மெலடி டூயட் போட்ட இசைஞானி தான் இந்தப் பாடலையும் போட்டிருக்கார்னு நினைக்கும்போது, என்ன சொல்றதுன்னே தெரியல. எப்படி தான் தோணுதோ. அப்பா! இந்த அருமையான குத்து பாட்டு குதூகலத்தோடு, இசைஞானி CD எடு, கொண்டாடுன்னு போகட்டும் உங்கள் வெள்ளி.

நாளை, மிக ஆற்புதமான பட BGMஓடு சந்திக்கின்றேன். அது கண்டிப்பாக உங்களை ஆக்கிரமிக்கும் 🙂 Have a nice weekend.

Please leave your answers below in the COMMENTS section with your Twitter handle/username. For other discussions on Twitter, please use hashtag #365RajaQuiz.

Clue: Please try to figure out the answer sincerely as the posted audio is the clue and hint you will ever need. But, if you need one more lifeline, then just select the box below,with your mouse, between the double-quotes to view the additional hint:

அந்தக் கால கவர்ச்சிப் புயல், அனுராதா அம்மையார், இப்பாடலுக்கு நடன சேவை புரிந்தார். (Hon’ble Anuradha Ma’am danced for this song.)

Answer: Ithu Rosaa Poovu, Konjam Lesaa Neevu (இது ரோசாப் பூவு, கொஞ்சம் லேசா நீவு.) from Oru Kaithiyin Diary(ஒரு கைதியின் டைரி) (1985).

Advertisements