Tags

, , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

நேற்றைய பாடல் புதிருக்கும், விமர்சனத்திற்கும் இருந்த வரவேற்பைக் கண்டு மிக்க மகிழ்ச்சியடைந்தேன். குழந்தைகளின் விசயங்களில் காட்டப்படும் ஈடுபாடு அனைவருக்கும் நலத்தையே பயக்கும். மேலும் மலேசியா வாசுதேவனின் அந்த குரல்… அப்பப்பா…. குறிப்பாக,

  1. அடி ஆடு பூங்கொடியேஏஏஏ என்று நீட்டிக்கொண்டு போகும் style ஆகட்டும்,
  2. பாசம் ஒரு தெய்வம் பேசடி கிளியேஏஏஏ என்னும் இடத்தில் காட்டும் கனிவின் உச்சமாக இருக்கட்டும்,
  3. என் வாழ்க்கையே இந்தப் பூக்களை தினம் காக்கும் சேவை ஒன்றுதான் என்று சிலாகித்து உருகுவதாகட்டும்,
  4. அமுதம் பொழியும் கார்கால மேகங்கள் என்று குரலிலேயே fantasylandக்கு அழைத்துச் செல்லும் பாங்காகட்டும்,
  5. கடவுள் பாடும் ஆனந்த ராகங்கள், களங்கம் அறியா கடல் சங்குகள். இவை பார்க்கும் பார்வையிலே, பல பாவம் தீர்ந்துவிடும் என்று ultimateஆன ஒரு philosophical கருத்தை ஆர்ப்பாட்டமே இல்லாமல் காலத்துக்கு அடித்துச் சொல்லிவிட்டுப் போகும் ஆழமாகட்டும்….

முழுப் பாட்டையும் கேட்டு முடித்தவுடன், இளையராஜா, மலேசியா வாசுதேவன் கூட்டணி உங்கள் குழந்தைப் பருவத்தின் நினைவலைகளைக் கொண்டுவந்தார்களா, இல்லையா? 🙂

எத்துணை முறை கேட்டாலும், தெவிட்டாத பாடல்மட்டுமில்லை அது, ஓர் அமர காவியம். இம்மாதிரி சில காவியங்களால் மட்டுமே நமது ஆழ்மனத்தின் உணர்ச்சிகளோடு உரையாடல் நடத்தமுடியும்!

இவையெல்லாம் மிகச் சிறிய sample tweets for the blockbuster 109/365. நீங்கள் ஒவ்வொருவரும் ட்வீட்கள் எழுதுவதும் பின்னூட்டங்கள் இடுவதும், இசைஞானியின் பாடல்களால் வாழ்வியலின் உண்மைகளையும் ஆத்மார்த்தமான உணர்வுகளையும் எப்படிச் சிலர் நுகர்கிறார்கள் என்று வெளிப்படையாகப் பகிர்ந்துகொள்ளமுடிகிறது. வெறும் பாடல்களைக் கேட்டோம், ரசித்தோம், பிடித்த இசையமைப்பாளர் என்று கொண்டாடினோம் என்றில்லாமல், இது ரொம்ப deep அம்மா என்று உணர்வுபூர்வமாக அழுத்தமாகவும் அமைதியாகவும் நாகரிகத்தோடும் கல்வெட்டாகப் பதிக்கமுடிகிறது. இல்லையா? 🙂 அதற்காக, முதலில் உங்களுக்கு எமது நன்றிகள்!

Please review the comments, where our “expert” fans have written some of the best commentary for that song. Thank you, folks.


இன்றைய புதிர் ஓர் அருமையான டூயட் பாடல். இதில் மெலடி தூக்கலாக இருக்கும்.

இந்த மெலடிப் பாடலிலும், மெலடி இசைக்கருவி Violinன் ஆளுமை இருக்காதது ஆச்சரியமே. அதுவும் இந்த preludeல் no violin 🙂

ஒரு சிறு percussion. அந்த measured percussionல் electronic flute மிக அழகாக நுழைகிறது. ஆனால், நன்கு நுட்பகமாக அணுகிக் கேட்டால், படுபயங்கர bass guitarsன் ஆதிக்கத்தை நன்கு கேட்டு ரசிக்கலாம். இசைஞானிக்கு bass-guitars என்ன ஆதார சுருதியா? இவரின் ஆரம்பப் பாடல்களில் இருந்து latest பாடல்கள்வரை, மிக அதிகமாக உபயோகித்தது bass-guitarsஆகதான் இருக்கும்போல. Around 17-second marker is where, you can hear the guitar interludes very prominently. That strumming will continue until the prelude gets over.

இந்த மெலடி கிளுகிளுப்பில், இசைஞானியின் innovation குறும்பு, இந்தப் பாடலில் எப்படி வெளிப்படும் தெரியுமா? உருமி மூலமாக. ஆம்! உருவிப்போடும் உருமி மேளத்தில் பார்த்தோமே, அதே உருமிதான். ஒரு மெலடி டூயட்… அதில் போய், உருமியை backgroundல் வைத்து உறும உறும உருகவைத்துவிடுவார் இசைஞானி.

இந்தப் பாடலை அவ்வளவு இயல்பாகவும், youthfulஆகவும் பாடிக் கலக்கியிருப்பார், S.P Balasubramaniam. பெண் பாடகி.. கேட்கவே வேண்டாம்… அடுத்து தூள் கிளப்பும் பாடகி.

இந்த அருமையான டூயட்டை கண்டுபிடிக்கலாம்தானே?

Please leave your answers below in the COMMENTS section with your Twitter handle/username. For other discussions on Twitter, please use hashtag #365RajaQuiz.

Clue: Please try to figure out the answer sincerely as the posted audio is the clue and hint you will ever need. But, if you need one more lifeline, then just select the box below,with your mouse, between the double-quotes to view the additional hint:

This movie debuted a new hero from Coimbatore.

NB: Enjoy the Continuous Play of all the clues so far.

Answer: Vatta Nilave (வட்ட நிலவே ) from Ilaiyavan (இளையவன் ) (2000)

Advertisements