Tags

, , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

வணக்கம்.

And here concludes our 1-YEAR journeyLIVE in Chennai, India. 🙂

இன்று நம் எல்லாருக்கும் கொண்டாட்டங்கள் சென்னையில் நடத்தப்படுவதால், சுருக்கமாக இந்தப் பதிவை எழுதி முடித்துக்கொள்கிறேன். இந்தப் புதிருக்கு Intro இருந்த மாதிரி, நாளை Epilogueஉடன் முடித்துக்கொள்வேன். அதில் 364/365 மற்றும் 365/365 குறித்த முடிவுகளும் இருக்கும். சரியா?

இன்றைய புதிருக்குள் போவதற்கு முன், முதலில் இது குறித்த சிறு போட்டி ஒன்றை நடத்தினோமே, ஞாபகம் இருக்கிறதா? அதாவது, What clue may appear in 365/365? அதில் எனக்குத் தெரிந்து சில நண்பர்கள் சரியாக கணித்து இருக்கிறார்கள். ஆச்சரியமாக இருக்கிறது அல்லவா? எனக்கும் தான். சரியாக பதிலைச் சொன்னவர்களின் பதிலை மட்டும் நான் இன்னும் Release செய்யலை. <em>போய் பார்த்துட்டு வந்துடறீங்களா?

Due to the festive occasion, we will relax our condition for our last clue 365/365. Today alone, we will solve the puzzle en masse 🙂 Discussions allowed 🙂

362/365 மற்றும் 363/365ல் ஒரு messageஉடன் இசைஞானியின் பாடல்களை இறக்கிவிட்டது போல், இன்றும் ஒரு strong message உடன் பாடல் வருகிறது. இந்தப் பாட்டு முழுவதுமே அதகளம் தான். 363/365லும், 364/365லும் இருந்த சிறு மென்சோக டச் கூட இதில் இருக்காது. அந்த அளவுக்கு இது அந்தக் காலத்து ராக்கம்மா கையத்தட்டு genre 🙂

கடைசி நேரத்தில் SoundCloud இதை பதிவேற்ற மறுத்துவிட்டதால், இதை Vimeoவில் ஏற்றிக்கொண்டு இருக்கிறேன்.

உங்களுக்கு பல பாடல்களை இந்த புதிர் நிகழ்ச்சி அறிமுகம் செய்தது போல, எனக்கு இந்தப் பாடலை சேர நாட்டு இசைஞானி ரசிகர் ஒருவர் 1999ல் அறிமுகம் செய்தார். அதுவும் கடைசியில் இசைஞானி Shot OK என்று சொல்வதை வெறித்தனமாக ரசிப்பார் அந்த ரசிகர். 🙂

எப்படி எப்படி ரசிக்கிறார்கள் பாருங்கள்! விந்தையோ விந்தை தான் 🙂

இன்றைய க்ளூவிலும் இசைஞானி இளையராஜாவின் குரலில் வரும் ஒரு சரணத்தின் பகுதியைத் தந்து இருக்கிறேன். 😉 அவரின் messageக்காக இந்த வரிகளை இணைத்தேன்.

இந்த ஒரு வருடமும் அருமையான ஒரு பயணத்தை மேற்கொண்டு வந்தோம். இணையம் என்றாலே அங்கு சகட்டு மேனிக்கு அடித்துக்கொள்வார்கள், ஒருத்தரை ஒருத்தர் கெட்ட வார்த்தைகளில் திட்டிக்கொள்வார்கள் என்றெல்லாம் ஒரு பிம்பம் வெளியுலகில் உண்டு. ஆனால், 1 நாள் அல்ல, 1 வாரம் அல்ல, 1 வருடம் — 365 நாட்களில், ஏறத்தாழ 15,000 பின்னூட்டங்கள் இடப்பட்டும், கணக்கிலடங்கா கீச்சுகள் கீச்சப்பட்டும், எத்துணை கண்ணியமாக இது வரை இந்த #365RajaQuiz நடந்து வந்திருக்கிறது என்பதை, மற்றவர்கள் பார்த்து, இப்படியும் சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள் என்று ஆச்சரியப்படும் அளவுக்கு நாம் நடந்து வந்த இந்தப் பயணம், நம் அனைவருக்குமே பெருமையைச் சேர்க்கும்.

அவ்வகையில், இந்தப் பயணத்தில் பங்கு பெற்ற உங்கள் அனைவரையும் பாராட்ட எனக்கு வார்த்தைகளே இல்லை. அதனால் — நன்றி 🙂

என் உளங்கனிந்த நன்றிகளை உரித்தாக்குகின்றேன்.

மேலும், எத்துணை எத்துணை பேர் நீங்களாக முன் வந்து என்ன என்ன விசயங்களை செய்து இருக்கின்றீர்கள் பாருங்கள்! @amas32 மற்றும் @n_shekar தொடங்கி @thachimammu @seevin @tcsprasan என்று ஏராள ஏராளமான நண்பர்கள் (தவறி யாரையாவது விட்டிருந்தால் மன்னிக்கவும்) தாமாக இந்த முடிவு விழாவை முன்னின்று நடத்த வேண்டும் என்றும் பல ஊர்களில் இருந்தும் சென்னைக்கு பயணம் செய்தும், இரவு நேரம் ஆகியும் Google Hangout மூலமாக இந்த நிகழ்ச்சியில் இணைத்துக்கொள்ளவும் வந்திருக்கும் உங்கள் அனைவரின் விருப்பத்தையும் காண அதிசயமாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறது.

#365RajaQuiz had been a phenomenon — as @Eschwis once observed on #Twitter. It is much more than a Quiz. I will touch these points in tomorrow’s Epilogue to formally wind this #365RajaQuiz edition 🙂

Thank you for entrusting me with this job. Out of sheer love, you all used to address me as Quizmaster 😉

That is one thing, I will miss for sure 🙂 Let’s start the party now!

நன்றி.

Have a nice week ahead.

Please leave your answers below in the COMMENTS section with your Twitter handle/username. For other discussions on Twitter, please use hashtag #365RajaQuiz.

Extensively noise-removed. Noise-gate applied. No tempo was altered.

Clue: Please try to figure out the answer sincerely as the posted audio is the clue and hint you will ever need. But, if you need one more lifeline, then just select the box below,with your mouse, between the double-quotes to view the additional hint:

This song is by Maestro Ilaiyaraaja for an unreleased movie 🙂

NB: Enjoy the Continuous Play of all the clues so far.

Answer: Later, tomorrow 🙂