1999ல் ஃபுளோரிடா பல்கலைகழகத்தில் இசைஞானி இளையராஜாவின் வலைதளத்தை நடத்திக்கொண்டிருந்த நேரம், பல நல்ல மனிதர்களின் நட்பு கிடைத்தது.

மேற்படிப்பை முடித்துவிட்டு அட்லாண்டாவிற்கு வந்திருந்த நேரம். பிற்காலத்தில் உயிர் நண்பராக உருவாகிய அருமை நண்பர் சுரேஷ் “தல… முகம்னு ஒரு படம்யா… நம்ம தலைவர் பின்னி இருக்கார்… BGM இசை அருமையா இருக்கு. ரெக்கார்ட் பண்ணி அனுப்பறேன்.. என்கோட் பண்ணி அப்லோட் செஞ்சுடேன்.”

சொன்னவரை, “இல்லடா, நீயே இந்த வாட்டி செய்… எப்படி செய்யறதுன்னு வேணா நான் சொல்லித் தரேன்” என்று அவருக்கு noise-removal, encoding techniques எல்லாம் சொல்லித் தந்து அவர் பதிவேற்றம் செய்து, பல இசைஞானி இளையராஜாவின் ரசிகர்களிடம் அந்த முகப்பு இசை பாராட்டைப் பெற்றது எல்லாம் என்னமோ நேற்று நடந்தது போல் இருக்கிறது.

இது 1999-2000.

Fast forward to 2012-2013.

#365RajaQuiz நடக்க ஆரம்பித்திருந்த நேரம்… காமேஷ் பாவரத்தினம் (@kameshratnam) மிகச் சரியாக இந்த “முகம்” படத்தின் BGM என்ன ஆனது. எப்படியாவது திரும்பவும் பதிவேற்றம் செய்ய முடியுமா என்றெல்லாம் தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருந்தார். நானும் என் நண்பர் சுரேஷிடம் கேட்டுப் பார்த்து சலித்தே போய்விட்டேன். ஏனென்றால், இந்தப் படத்தின் வீடியோ/சிடி/டிவிடி என்று ஒன்றுமே இல்லை. யாரிடமாவது இருந்தால் நலமே. எனக்குத் தெரிந்து யாரிடமும் இல்லாதது தான் துரதிர்ஷ்டமே! நண்பர் சுரேஷும் அந்தக் காலத்தில் VHSல் பதிவு செய்திருந்தது மட்டுமே எனக்கு நினைவிருக்கிறது.

நடுவில் Facebook மூலமாகவும் நண்பர்கள் சிலர், முகத்த கொஞ்சம் காட்டக்கூடாதானு ஒரே கெஞ்சல் தான்.

ஏதோ, ஒரு பழைய கோப்பில் இருந்து இந்த முகப்பு இசை மட்டும் சிக்கவே, ஒரு 2-3 மணி நேரம் உட்கார்ந்து ஒரே கிடையாக முடித்து பதிவேற்றமும் செய்து ஆகிவிட்டது.

இந்தப் படத்தின் சிறப்பே இசைஞானி இளையராஜாவின் முகப்பு இசை தான். படமும் ஒரு கலைப்படமாக ஞான ராஜசேகரன் இயக்கத்தில், தைரியமான கதாப்பாத்திரத்தில் நாசர் நடிப்பில், பி.சி. ஸ்ரீராம் கேமிராவில், கலைப்புலி தாணுவின் தயாரிப்பில் பயணிக்கும்.

இருந்தும் “முகம்” படத்திற்கு “முகம்” + முகவரி இல்லாமல் போனது மாபெரும் வருத்தமே.

ஏதோ, என்னால் முடிந்த ஒரு சிறு உதவி இது….Once again, #encoding makes a big difference. You will notice it especially at the sequence where percussion enters.

Enjoy!