Tags

, , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

அனைவருக்கும் வார இறுதி நன்றாக இருந்திருக்கும் என்று நம்புகிறேன். நேற்றைய பாடல் என்னவொரு மணிமுத்து என்று அறிந்து சிலாகித்த அனைவருக்கும் நன்றி🙂

இந்த வாரத்தின் முதல் பாடலாகப் புதிரில் வருவது, மிக பிரமாண்டமான காதல் டூயட். ஆரம்பமே அசத்தல், ஹீரோ குதிரையில் தேசிங்கு ராஜாமாதிரி வருவார். இந்தப் பாடலை நான் புதிருக்காகத் தேர்ந்தெடுத்ததற்குப் பல காரணங்கள். அதில் சில: ஆம், ராஜாவின் trumpet மற்றும் sax கருவிகளுக்குப் பலர் விசிறிகளாக இருப்பதுபோல, நானும். இந்தப் பாட்டில் அவர் கையாண்டிருக்கும் trumpets கண்டிப்பாக எல்லாருக்கும் பிடிக்கும். ஆனால், அதே trumpetsல் அவர் காட்டியிருக்கும் வேற்றுமை — அந்த dichotomy — அதுதான் எனக்கு மிகவும் பிடிக்கும். இந்தப் பாடல் ஆரம்பிக்கும்போது, படு பயங்கர வேகத்தில் கிளம்பும். ஓர் அதிரடி வேகம்தான் இந்தப் பாடலின் ஆரம்பம். Percussionஓடு trumpets ராஜ முத்திரையாக ஒலிக்கும். ஆனால், இந்த interludeஐப் பாருங்கள். அதே trumpet இங்கும் வருகிறது. ஆனால் எப்படி சாந்தமாக, தேனாக, melodiousஆக அடக்கி வாசிக்கப்படுகிறது என்று! It is this dichotomy that enhances the beauty of this song.

ராஜாவின் பாடல்களுக்கு அவருடைய பாடல்களே போட்டி. அதுவும், அதே படத்தில் அவர் இசை அமைத்திருக்கும் பாடல்களே போட்டி. இது நாம் அனைவரும் அறிந்த ஒன்று. அதையேதான் இங்கும் நீங்கள் பார்ப்பீர்கள். இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் பிரம்மாண்டமான ஹிட்.

இழையோடும் வயலின் இசையில், romanticஆக எப்படி ஒரு trumpet இசை. அதற்கு ஏற்றவாறு ஆர்ப்பாட்டம் இல்லாத triple-drums. பின்னர் வருவது, synthபோல தெரிகிறது. சரியா? ஆனால், அந்த guitar interludes எவ்வளவு அழகாகவும், மிடுக்குடனும் கடைசியில் வருகிறது பாருங்கள்!

இந்தத் துள்ளல் பாடலோடு இந்த வாரத்தை ஆரம்பிப்போம். இந்த வாரம் மீண்டும் ஓர் இனிய வாரமாக அமையட்டும்.

Please leave your answers below in the COMMENTS section with your Twitter handle/username. For other discussions on Twitter, please use hashtag #365RajaQuiz.

Clue: Please try to figure out the answer sincerely as the posted audio is the clue and hint you will ever need. But, if you need one more lifeline, then just select the box below,with your mouse, between the double-quotes to view the additional hint:

Hero and heroine will be shown as a King and a Queen by a Royal palatial swimming-pool in this sequence, while the entire song will feature grandiose sets that used to be the staple of high-budget movies of that period.

NB: Enjoy the Continuous Play of all the clues so far.

Answer: Kaathal Maharaani (காதல் மகாராணி) from Kaathal Parisu(காதல் பரிசு) (1987)