இசைஞானி இளையராஜாவின் பாடல்களை ஒவ்வொரு ரசிகரும் ஒவ்வொருவிதமாக அனுபவிப்பார்கள். நான் மட்டும் அதற்கு விதிவிலக்கா என்ன? வீட்டிலும், ரோட்டிலும், சில சமயங்களில் வேலையிலும் கூட இசைஞானியின் பாடல்களைக் கேட்காமல் இருக்கவே முடியாது. இருந்தாலும், அமெரிக்காவில் காரில் போகும் போது இசைஞானியின் பாடல்களை கேட்டுக்கொண்டே போவது விவரிக்க முடியாத ஒரு சுக அனுபவமாகவே மாறி 17 ஆண்டுகள் சடாரென்று கடந்து போய்விட்டது.

அந்தக் காலத்தில் “பயணக் கட்டுரை” என்று எழுத்தாளர்கள் வாரா வாரம் தொடர் கட்டுரைகளாக எழுதுவார்கள். லேனா தமிழ்வாணனின் பயணக்கட்டுரைகளை சிறுவனாக ரசித்துப் படித்ததுண்டு.

அது மாதிரி,இங்கு #365RajaQuiz மூலமாக பல நண்பர்களை நேரிலும் இணையத்திலும் சந்தித்து இருக்கிறேன். எப்படி மாஸ்டர் இப்படி ஒவ்வொரு பாட்டையும் தேர்வு செஞ்சுகிட்டே வர்றீங்க? ஏதோ ஒரு தொடர்பு இருக்கற மாதிரியே இருக்கே ன்னு அடிக்கடி அவங்க கேட்டதுண்டு. நான் விமர்சனங்களை எழுதும்போது அவ்வப்போது இவ்வகை காரில் பயணம் செய்த அனுபவங்களைக் குறிப்பிட்டு விளக்கியது உண்டு.

இனிமேல், அழகு சூழ் அட்லாண்டா + ஜார்ஜியாவில் ஆங்காங்கே பயணித்துச் செல்லும்போது, இசைஞானியின் பாடல்கள் ஒலித்துக்கொண்டே வரும் தருணங்களை ஒரு ஒளியும் ஒலியும் வலைப்பதிவாக நேரம் கிடைக்கும் போது எல்லாம் போடலாம் என்று இருக்கிறேன்.

There is a surreal feel behind it. What you hear is the raw audio on the drive. No part of the sound or video was touched. And I want it to be left that way 🙂

இவ்வித அனுபவப் பகிர்வு எனக்காகவும், என் நண்பர்களுக்காகவும்.

இது, அட்லாண்டாவில் இசைஞானி இளையராஜாவின்……

பயணங்கள் முடிவதில்லை — An Arul’s Travelogue.

Silver Comet Trail – இது என் வீட்டுக்கு அருகில் இருக்கும் ஒரு அருமையான இடம். Trailகளில் ஈடுபாடு கொண்ட அனைவருக்கும் இந்த இடம் தெரியும். ஆனால், பரபரப்புக்கு நடுவில் அட்லாண்டாவில் இப்படி ஒரு ஆள் ஆரவாரமற்ற இடம் இருக்கிறதா என்று ஆச்சரியப்படும் மக்கள் மிக அதிகம். இங்கு Single-lane bridge என்பது மிகவும் பிரபலம் (விஷயம் தெரிந்தவர்களுக்கு). பழைய கால மரத்தினால் செய்யப்பட்ட ஒற்றை வழிப்பாதையில் ஒரு வாகனம் மட்டுமே சென்று வர முடியும். கீழே ஒரு சிறிய ஆறு ஓடும். இந்த இடம் எனக்கும் என் மகளுக்கும் மிகவும் பிடிக்கும். சிறு வயதில், இம்மாதிரி இரவு நேரத்தில் நான் அவளை வைத்துக்கொண்டு ஓட்டிச் சென்றாலே, சட்டென்று உறங்கிவிடுவாள். அப்படி ஒரு இதயத்திற்கு இதமான இடத்தில், இசைஞானியின் “மெட்டி” படப் பாடலான “சந்தக் கவிகள் பாடிடும்” பாடலை ஒலித்துக்கொண்டே, சவாரி செய்வது blissful experience அன்றி வேறு என்னவாக இருக்க முடியும்?

வாருங்கள்….சில்வர் காமெட் டிரேயில் — இசைஞானியின் பயணங்கள் முடிவதில்லை.

பயணங்கள் தொடரும்….