Tags

, , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

வணக்கம்.

இன்றும் நேற்றைய அதே themeல் வரும் நம்பிக்கைத் துரோகப் பாடல் தான். என்றாலும், சோகத்தையும், வலியையும் வலியுறுத்த வரும் பாடலை, செம நையாண்டித்தனத்தோடும், ஜாலியாகவும் பாடுவதாக இந்தப் பாடல் வருவது தான் சிறப்பே.

நேற்று, வலியின் கோபத்தில் இசை தெறித்தது.

இன்று, வலியில் humor, இசையின் அமைப்பிலும் பாடல் வரிகளிலும் தெறிக்கும்.

இந்தப் படத்தில் அனைத்துப் பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட். ஆனால் படம், படு கேவலம்😦 இந்தப் படத்தில் வந்த மற்ற பாடல்கள் தர்ம ஹிட் ஆகவே, இந்தப் பாடலின் புரிதலும், அறிதலும், சற்று பின்னுக்குத் தள்ளப்பட்டுவிட்டதோ என்று எனக்கு தோன்றும்.

இதனாலேயே தான், இந்தப் படத்தின் பாடலை களம் இறக்க இத்துணை நாட்கள் ஆகின.

நேற்று சொந்தங்கள் காலை வாரின. இன்று, சொந்தக் காதலி காலை வாரிவிடுகிறாள். அதில் காயப்பட்ட நாயகனை ஆறுதல் சொல்லித் தேற்றுவது போல வரும் பாடல் தான் இது. ஆரம்ப தொகையறால இருந்து, பல்லவியில வரும் வரிகளில் இருந்து, சோகத்திலும் ஒரு அட்டகாசமான humor தெறிக்கும் வகையில் பாடல் வரிகளை அமைத்த பாடலாசிரியரை பாராட்டியே ஆக வேண்டும். (யாரு பாடலாசிரியர்னு எனக்கு தெரியல. தெரிஞ்சவங்க சொல்லுங்க. கேட்டுக்கறேன்.)

ஆனால் பாடினவரு…யாரு.. நம்ம தலைவர் தான். இசைஞானி இளையராஜாவின் குரலில் வரும் பாடல் இது. அதுவும் இந்த இடையிசைக்கு அடுத்து வரும் சரணத்தின் வரிகள், அந்தக் காலத்துலேயே பாடிட்டாங்கன்னாலும், இன்னிக்கு நடக்கும் பல விசயங்களோடு நன்றாகப் பொருந்தி போவதை நினைத்து வியக்காமல் இருக்க முடியவில்லை. பாடலின் வரிகளில் கம்பராமாயணம் எல்லாம் வரும். செம ஜாலியாக இருக்கும். அதை விட, முதல் சரணத்தின் கடைசியில், நமக்கு எதுக்கு சாமி இந்த தத்துவம் எல்லாம்னு இசைஞானி பாடிட்டே ஒரு தத்துவத்தை அடுத்த வரியிலேயே அவுத்துவுடுவார் பாருங்க, செம ரகளையா இருக்கும். That is why, this song is very unique — it is pathos — but, not exactly, because of all these elements that make it more of a humorous song tinged with acute, caustic, sarcasm🙂

இந்த இடையிசையில் ஆரம்பத்தில் கிடாரும், மென்மையான புல்லாங்குழலும். சோகத்தைப் பிழிய நடுவில் உறுமும் வயலின்கள். பின்னர் சந்தூர். இவ்வளவு தான். இந்த சோகத்தை, கலாசிப் பாடுவது போல் பாடி ஆத்திவிடுவார் இசைஞானி.

கண்டுபிடியுங்கள். கண்டுபிடிக்க முடிந்தால் இசைஞானியின் ஜாலி உங்களுடையது. கண்டுபிடிக்க முடியாவிட்டால், இந்த இடையிசையின் சோகம் உங்களுடையது🙂

Have a nice weekend!

Please leave your answers below in the COMMENTS section with your Twitter handle/username. For other discussions on Twitter, please use hashtag #365RajaQuiz.

Clue: Please try to figure out the answer sincerely as the posted audio is the clue and hint you will ever need. But, if you need one more lifeline, then just select the box below,with your mouse, between the double-quotes to view the additional hint:

This movie’s director was the son of a legendary movie-director.

NB: Enjoy the Continuous Play of all the clues so far.

Answer: Vaayakkatti (வாயக்கட்டி) from Solla Thudikkuthu Manasu (சொல்லத் துடிக்குது மனசு) (1988)