Tags

, , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

வணக்கம்.

நேற்றைய கடினமான புதிருக்கு, இதமாக ஒத்தடம் கொடுக்கும் வண்ணம் வரும் breather தான் இன்று 🙂

இன்றைய பாடலுக்கு விடையை ஆடிக்கொண்டும், விசிலடித்துக்கொண்டுமே தட்டிவிடுவீர்கள் என்று தெரியும். இருந்தும், இன்று வெள்ளிக்கிழமை என்ற ஒரு காரணத்தினால் மட்டும் இந்தத் துணுக்கு வரவில்லை.

என்னைப் பொறுத்த வரை, இந்த பாட்டை, கிண்டலாகவும், ஜாலியாகவும் ரசித்த அளவுக்கு, நுணுக்கமாக நுகரப்பட்டதா என்பது சந்தேகமே. This is one of the most complex songs to tune for the situation, I think.

  1. பாட்டின் ஆரம்பத்தில் இருந்து ஒரே சீராக செல்லும் இந்த rhythms தான் பாடலின் மொத்த அடையாளமே.
  2. இசைத்துணுக்கில் மட்டும் இல்லாமல், பாடலின் மொத்ததிலும், அதிலும், அந்த சரணத்தில் அட்டகாசமாக வருவது bass-guitars. Simply, superb bass-guitars.
  3. நாயகனுக்கு அவ்வளவாக ஆட வராது என்று தெரிந்தே, நாயகிக்கும் அவளின் தோழிகளுக்கும் மெதுவாக அப்படியும், இப்படியுமாக ஆடுவதற்கு ஏதுவாகவே, rhythmic patterns அமைக்கப்பட்டிருக்கும்.
  4. Flutesல் அந்த சூழலுக்கு ஏற்ற தட்ப-வெப்ப நிலைகளை, இசையாலேயே அழகாக மாற்றி அமைத்திருப்பார், ராஜா!
  5. Just see, how many instruments, he is roping in for the score. Right from the bass-guitars, to mild percussion, group violins, shenai! Just amazing.
  6. That too, in the 2nd BGM, one can notice, how he introduces a classical group-violin arrangement, to impart a classic touch to the overall song!

இந்த படத்தை எடுத்த டைரக்டருக்கு, படம் எடுக்க மிகவும் பிடித்த இடம் — ஊட்டி இல்லை — குன்னூர் 🙂 அதுவும் இந்த படம் எடுக்க இருந்த சமயம், இந்த படத்துக்காகவே ஒரு தனி மர-வீட்டைக் கட்டி, படம் எடுத்தார்கள். அந்த வீடு கட்டப்பட்டுக்கொண்டிருந்தபோது, நான் நேரில் போய் பார்த்து அசந்துபோனேன். குன்னூரில் இருந்து கோத்தகிரி செல்லும் சாலையில், அட்டடி என்று ஒரு கிராமம் உண்டு. அதைத் தாண்டி, கண்ணாடிப்பாறை என்று வெளியுலகுக்கு அதிகம் தெரியாத இடத்துக்கு அருகில் இந்த வீட்டைக் கட்டி படம் எடுத்ததாக நினைவு. Dolphin’s Nose என்னும் இன்னொரு சுற்றுலாத்தலத்துக்கு மிகவும் சமீபத்தில் தான் இந்த வீட்டைக்கட்டி செட் போட்டு எடுத்தார்கள். படத்தில் ஆகா ஓகோ என்று வந்திருந்தது. ஆனால் நேரில் பார்க்க, மிகவும் சாதாரணமாகவே இருந்தது. சினிமா மாயையை நேரில் உணர்ந்த சில நல்ல தருணங்கள் அவை 🙂

இதை ஏன் சொல்கின்றேன் என்றால், “வீடு” “லொகேஷன்” என்று வந்த சில தமிழ் படங்கள் என்று SQL செய்யாமால், நினைத்துப் பார்த்தீர்கள் என்றால், இந்தப் படம் கண்டிப்பாக உங்கள் கண் முன் வந்து நிற்கும். அதே போலத் தான், குன்னூர் பிரியனாக வரும் டைரடக்கர்.

இவை எதுவும் உதவவில்லை என்றால், இந்த பாட்டின் சூழலும், அதை பாடி ஆடிய நடிகையும் உங்களைக் காக்கட்டும்.

வரட்டுமா?

Please do comment extensively on the musical arrangement of this song. This is fabulous piece of composition, which is why I have woven 2 BGMs together, through Goldwave, for an effective end-result.

Please leave your answers below in the COMMENTS section with your Twitter handle/username. For other discussions on Twitter, please use hashtag #365RajaQuiz.

Widget problems? Please try the direct link.

Clue: Please try to figure out the answer sincerely as the posted audio is the clue and hint you will ever need. But, if you need one more lifeline, then just select the box below,with your mouse, between the double-quotes to view the additional hint:

This song has a strong similarity in its lyrical composition to what we saw in 32/365. The actress, who choreographed in this song, was one of those high-profile actresses, who ended her life under tragic circumstances.

NB: Enjoy the Continuous Play of all the clues so far.

Answer: Jingaan Jinukku Dhaan (ஜிங்கான் ஜினுக்கு தான்) from Veetla Visheshanga (வீட்ல விசேஷங்க) (1994)

Advertisements