Tags

, , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

வணக்கம்.

குஜாலுக்காக மஜாவாக காத்துக்கொண்டிருக்கும் மக்களே 😉 உங்களுக்கும் ஒரு ஸ்பெஷல் வணக்கம்.

பாடலைப் பார்ப்பதற்கு முன்னர், முதலில் கொஞ்சம் பாடத்தைப் படிப்போம். ஒரு செய்யுள் பாடலின் முதல் வரியைத் தான் இன்றைய titleஆக கொடுத்து இருக்கேன். அந்தப் பாட்டைப் பார்த்துவிடுவோமா? இது நாலடியார் செய்யுள். (குஜாலுக்கும் நாலடியாருக்கும் ஏணி வைத்தாலும் எட்டாது. இருந்தும் இவை இரண்டுக்கும் முடிச்சு போடுறீங்களே மாஸ்டர்னு என்னை அடிக்க வந்துடாதீங்க…சும்மா ஜாலிக்குத் தான் ;))

கல்வி கரையில கற்பவர் நாள்சில;
மெல்ல நினைக்கின் பிணிபல – தெள்ளிதின்
ஆராய்ந்து அமைவுடைய கற்பவே நீரொழியப்
பாலுண் குருகின் தெரிந்து.

அதாவது, கல்வி அளவில்லாதது. பரந்து இருப்பது. கரைகள் அவற்றுக்கு இல்லை. இப்படி, விசாலமாக இருக்கும் கல்வியைக் கற்பதற்கு நமக்கு இருக்கும் நாட்களோ சில தான். அந்த சில நாட்களிலும் பிணி, நோய் என்று போய்விடுகிறது. இதை உணர்ந்த பெரியவர்கள், நீரைப் பிரித்து பாலை மட்டும் உண்ணும் அன்னப் பறவையைப் போல, தேவையான நூல்களை மட்டும் தேர்ந்தெடுத்து படிப்பார்களாம்.

எப்படி? இதைத் தான் சமண முனிவர்கள் எழுதி இருக்காங்க.

முதலில் இன்றையப் பாடல் முதலிரவுப் பாடல். மேலே குறிப்பிடப்பட்டுள்ள பால் சொம்புடன் நாயகி வருவதாகவும், அவளுடன் நாயகன் நாக்கை சுழற்றியடித்து பாடுவதாகவும் களம் வருகிறது. So, it matches the செய்யுள்’s last line, no yaar? 😉

இலக்கியம் தானே? என்னுடைய அர்த்தமும் இதில் பொருந்துதான்னு இப்ப பாருங்க…

அதாவது, கலவும் ஒரு விதமான கல்வி தானே. திருவள்ளுவரின் மூன்றாவது பாலே இதைப் பற்றியது தானே? கணவனும் காதல் மனைவியரும் அன்பு பாராட்டும் அந்தக் கலவும் கல்வி தானே? அதில் உள்ள பொருளும், சுவையும், இன்பமும் கரைகள் இல்லாதது தானே? அந்த கலவு ஒழுக்கத்தில் ஒருவரின் மனதை இன்னொருவர் புரிந்து கொண்டு ஏர் பூட்டி நடையைப் போட கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது தானே? இப்படி கற்றுக்கொள்ள பல விசயங்கள் இந்தக் கல்வியில் இருக்க, மாமா சோறு கொணாந்திருக்கேன் என்று பாக்யராஜின் முந்தானை முடிச்சு ஒபனிங் சீன் போல பாட்டி-தாத்தாவாக நாம் மாற, நாட்களோ சில தானே இருக்கிறது? ஆக, இந்தக் காதல் கல்வியிலும் கற்பதற்கு நிறைய இருக்கிறது. இதை இளவட்டங்கள் சரியாக பயன்படுத்திக்கொள்ளாமல் வயதான காலத்தில் வம்பிழுத்து நொந்து நூடுல்ஸ் ஆகும் விசயங்களை எல்லாம் நாம் தினமும் படித்துக்கொண்டு தானே இருக்கிறோம்? இல்லையா? ஆக, இப்படி சில நாட்களே உள்ள நிலையில் நோய், பிணி என்று பழநி மலை சித்தர் வைத்தியக்கடைகளைத் தேடி செல்லும் நிலையில் தானே இருக்கிறது நம் வாழ்க்கை? அப்படி எல்லாம் இல்லாமல், தேவையான விசயங்களையும், பாடல்களையும்(??) கேட்டு, பார்த்து, ரசித்து வாழ்க்கையை அன்னப் பறவை போல — அதாவது — Aquafina and Dasani and Bisleri வந்தக் காலத்திலும் கூட பால் சொம்பைத் தேடி நுகரும் பழக்கம் கொண்ட “அண்ண”ன் மார்கள் போல் இருக்கவேண்டும்.

இது என் தெளிவுரை. இதுவும் சரின்னு ஏன் எடுத்துக்கொள்ளக்கூடாது? (கோனார் நோட்ஸ்.. கவனிங்கப்பா.. ;)) )

நன்றி, முனிவர்களே…உங்களால் எனக்கு 342/365க்கு கரு கிடைத்தது 🙂

பாடங்களைத் தேடிப் போகலாமானு நீங்க யோசிப்பது போலவே, எந்த நீதிமன்றத்தைத் தேடிப்போய் ஆஜராக வேண்டும் என்ற கிலியில் இந்த ஹீரோ இருப்பது தான் வேடிக்கையிலும் வேடிக்கை. இவருக்கு கிறக்கம் ஏறினால், நாக்கு மடிக்கப்பட்டு, ஒரு சுழற்று சுழற்றி அப்படி ஒரு லுக் விடுவார் பாருங்கள். ஆகா priceless. அதனால் தான் இன்று அவருடைய நாக்கை thumbnailஆக பதிவேற்றம் செய்து, தமிழ்கூறு நல்லுலகுக்கு அர்ப்பணிக்கின்றேன்.

ஏதோ என்னால் முடிந்தது… தயவு செய்து நீங்களும் நன்றாக படித்து முன்னேறுங்கள். வாழ்க்கை வாழ்வதற்கே.

இந்தப் பாடலில் இந்த ஹீரோவின் டான்ஸ் மூவ்மென்ட்ஸ் இருக்கிறதே…ஆகா. செம..

இன்று முதல் ஞாயிறு வரை பயணத்தில் இருப்பேன். முடிந்த போது பதில் அளிக்கிறேன். If I am MIA, that is what it is. Have a nice weekend.

நன்றி.

Please leave your answers below in the COMMENTS section with your Twitter handle/username. For other discussions on Twitter, please use hashtag #365RajaQuiz.

Clue: Please try to figure out the answer sincerely as the posted audio is the clue and hint you will ever need. But, if you need one more lifeline, then just select the box below,with your mouse, between the double-quotes to view the additional hint:

Movie’s title will have an animal in it. Hero was issued an arrest warrant by a Chennai court just recently, although, he had appeared before the Nagerkoil Court and so the warrant was rescinded. (FYI, that is Chennai and Nagerkoil in a LL clue ;))

NB: Enjoy the Continuous Play of all the clues so far.

Answer: Pallikoodam Pogalaama (பள்ளிக்கூடம் போகலாமா) from Koyil Kaalai (கோயில் காளை) ()

Advertisements