Tags

, , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

After a rowdy, vengeful song yesterday, let us move further up the timeline and nourish ourselves with 100% pure, Carnatic Classical Music.

இதில் வரும் வீணை, மிருதங்கம், வயலின் இசைக்கலவை நம் எல்லாரையும் கட்டிப்போட்டுவைக்கும். அதனாலேயே, இதை encode செய்வதில் சற்று சிரமப்பட்டேன்.

Whenever you get to encode stereo sound, software tools like SoundCloud’s built-in Adobe encoder can teeter. இந்தப் புதிரின் இசையில் வரும் வீணையை, அதனூடே வரும் மிருதங்கம் அமுக்கிவிட, முடிவில் வரும் சந்தூர்மட்டும் தேறியது. எனக்குப் பெருத்த ஏமாற்றம். ஏன் இப்படிப் பதிவில் சொதப்பல் என்றே எனக்குப் புரியவில்லை.

அரை மணி நேரப் போராட்டத்துக்குப்பின் அமைதியாக யோசித்தேன். அந்த வீணையின் கொஞ்சும் ஒலியானது ஏறி, இறங்கி, கிறங்கி, மீண்டும் ஏறுவதெல்லாம் live encoding softwareஆல் தாக்குப்பிடிக்கமுடியவில்லைபோலிருக்கிறது. We can expect such things for stereophonic sound. சரி, ஏன் நாம் offline modeல் பதிவு செய்து, ஒரு கோப்பாக வைத்து, அதில் transformationsஐ அமைதியாக அனுமதித்தால் நல்லதொரு தீர்வு கிடைக்கலாம் அல்லவா என்று யோசித்து எடுத்தேன் எனது Goldwaveஐ. அதுதான் காப்பாற்றியது. பின்னர் அந்த ஒலிக்கோப்பை mp3க்கு மாற்றிப் பின்னர் வலையில் ஏற்றினேன். இதில் நிறைய பேர் ஆர்வம் காட்டுவதால், இதைப் பகிர்வதன் மூலம் எவரேனும் அவ்வகைப் பாதையில் பயணப்பட அடி எடுத்து வைத்தால், உபயோகப்படட்டும் என்பதறக்காகவே இதைச் சுட்டுகிறேன்.

கொஞ்சும் வீணையின் ஒலியும், அதிர்கின்ற மிருதங்கமும், யாசிக்கிற புல்லாங்குழலும், கெஞ்சுகிற சந்தூரும் இசைஞானியின் original அளவுக்கு encodingல் distortion இல்லாமல் வந்திருக்கிறதா என்று கேட்டுவிட்டுச் சொல்லுங்கள்.

இன்றைய புதிர்ப் பாடல் விரகதாபத்தின் உணர்வுகளை அருமையாகப் பிரதிபலிக்கும்விதத்தில் அமைந்துள்ளது. தலைவன் காமத்தால் வாடியிருக்கிறான். அவனுடைய பிணிக்கு மருந்தாக இருப்பது சிறுவயதில் இருந்தே அவனுடன் நட்புடன் பழகும் தோழி. அவளுக்கு இவன் மேல் அப்படி ஒரு எண்ணம் இல்லை. ஆனால் அவனுக்கு அவளை மறக்க முடியவில்லை. பக்கத்து வீட்டில் இருக்கும் ஒரு மணம் முடிந்த சீமாட்டிக்கோ இவன் மேல் ஒரு கண். அவள் மேல் நாட்டம் இல்லாமல் இவன் புத்தகமும் கையுமாக நடை போட, பாடாத தேனீக்கள், உலாவாத் தென்றல், பசியாத நல்வயிறு பார்த்திராத, அறிந்திடாத இவன் மீது காமம் கொண்டுள்ள அண்டை வீட்டு சீமாட்டி, கூடலுக்காகவும், இவனின் ஆசைத் தழுவலுக்காகவும் ஏங்குகிறாள். இவன் கண்டுகொள்வதாகத் தெரியவில்லை. இரவில்கூட கிணற்றுப்பக்கம் போய் நீர் வாரி இறைத்துத் தன்னுடைய தாபத்தைத் தணிக்கப் பார்க்கிறாள். இதைப் பார்க்கும் இவனுக்கோ குற்ற உணர்ச்சி மேலிடுகிறது. இருந்தாலும் ஜடமாக இருக்கிறானேதவிர, அவளுடைய துயர் துடைக்காமல், அவளை இன்னும் மனம் உடையச் செய்கிறான்.

இது தாங்க situation.

இப்போது, திரும்ப இந்த இசையைக் கேளுங்கள். பின்னர் அமைதியாக எல்லாரும் யோசிக்கலாம். இசைஞானி இளையராஜா அமைத்திருக்கும் இந்த இசைக் காவியம், இந்த உணர்வுகளை எல்லாம் துல்லியமாகக் கொண்டுவருகிறதா இல்லையா? அந்த வீணை, தொடர்ந்து வரும் மிருதங்கம் இதெல்லாம், அவளின் சூட்டைக் காட்டினாலும், அந்த ஒரு பரிதாப noteல் முடியும் Santoor இருக்கிறதே அது தலைவனின் guilt feelingஐ accurateஆகக் காட்டும். படத்தில் பாருங்கள், புரிந்துகொள்வீர்கள்.

இப்படி உணர்வுகளுடன் விளையாடி இசை மீட்டுவதில் இசைஞானி கில்லாடி. வெறும் பாடலை நாம் கேட்கும்போது, இது நல்ல மெலடி, இது நல்லா இருக்கு என்றுமட்டும் நிறுத்திக்கொள்கிறோம். ஆனால், இசையின்மூலம் என்ன உணர்ச்சிகளை இசைஞானி எடுத்து இயம்புகிறார் என்று ஒரு நொடி யோசிக்கும்போதுதான், இந்த geniusன் இன்னொரு அவதாரமே நம் கண் முன்னால் தாண்டவம் ஆடுவதை நாம் ரசிக்க முடிகிறது.

கர்நாடக சங்கீதமெல்லாம் எனக்கு ஒன்றும் தெரியாது. ஆனால், இந்த இசையில் என்னால் பல நல்ல உணர்ச்சிகளை உணரமுடிகிறது, ஒவ்வொரு முறையும் இந்த interludesஐக் கேட்கும்போது, மகுடிக்கு மயங்குகிற பாம்பைப்போல் ஆகிவிடுகிறேன். நீங்கள்?

Please leave your answers below in the COMMENTS section with your Twitter handle/username. For other discussions on Twitter, please use hashtag #365RajaQuiz.

Clue: Please try to figure out the answer sincerely as the posted audio is the clue and hint you will ever need. But, if you need one more lifeline, then just select the box below,with your mouse, between the double-quotes to view the additional hint:

Although this actor starred in this memorable movie, he did not get noticed until he appeared in Sun TV’s “Kolangal” Serial, a decade ago.

NB: Enjoy the Continuous Play of all the clues so far.

Answer: Sollayo Vaai Thirandhu (சொல்லாயோ வாய் திறந்து) from Mogamul(மோகமுள்) (1993)

Advertisements