Tags

, , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

வணக்கம்.

அமெரிக்காவில் உள்ள நண்பர்களுக்கு இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள். Wish all the Americans, a happy 4th of July. Happy Independence Day!

நேற்று வந்த 340/365க்கு கிடைத்த அமோக வரவேற்பு புல்லரிக்க வைத்தது.

பொதுவாக, இங்கே #365RajaQuizல் பல பாடக-பாடகியருக்கான ரசிகர் பட்டாளம் இருக்கிறது. மலேசியா வாசுதேவன் பாடலைத் தொடர்ந்து உடனே ஒரு அருமையான SPB பாடல் வருவது almost மரபாகவே ஆகிவிட்டது 🙂

அது மட்டும் அல்ல. நேற்றைய பாடலைப் போல இதிலும் வீணையின் மீட்டல் அதிகமாக இருக்கும்.

SPBஐ பிடிக்காதவர்கள் என்று நான் இது வரை யாரையும் கண்டதில்லை 🙂 உண்மை!

ஆனால், இன்று வேண்டும் என்றே நான் இந்தப் பாடலைத் தர ஒரு point இருக்கிறது. எப்படி மலேசியாவை ஒரு மாதிரி ஓரங்கட்டப் பார்த்தார்களோ, அந்தக் காலத்தில் கர்னாடக சங்கீத பாடல்களை பாலுவால் பாட முடியாது என்று ஒரு stereotypeஐ நம் ஆட்கள் அடித்து ஊத்திக்கொண்டு இருந்தார்கள். வேதனை என்னவென்றால் KV மகாதேவனின் சங்கராபரனம், இசைஞானி இளையராஜாவின் சலங்கை ஒலி, காதல் ஓவியம் என்று பக்கா கர்னாடக சங்கீதத்தில் நிறைந்த பாடல்களை பட்டி தொட்டி எல்லாம் பாடி பிரபலம் ஆகியிருந்தாலும், சிலர் அதைப் பற்றி எல்லாம் கவலைப் பட்ட மாதிரி தெரியவில்லை.

இருந்தாலும் இசைஞானி இளையராஜா, பாலுவுக்கு பல தரப்பட்ட கர்னாடக சங்கீத பாடல்களை அள்ளி வழங்கிக்கொண்டு தான் இருந்தார்.

இதோ ஒரு எடுத்துக்காட்டு.

அருமையான காதல் பாடல். சங்கீத ஸ்வரங்களுடன் சேர்ந்து ஆலாபணை பாடும் அட்டகாசம்! பெண்ணின் ஏக்கப் பாடல்கள் பலவற்றை இங்கு புதிரில் பார்த்துவிட்டோம். இது ஆணின் காதல் ஏக்கத்தைப் பற்றியது 🙂 கவிஞர் வைரமுத்து பாடலை எழுதி இருப்பார். நல்ல வரிகள்.

நிற்க — இது வேற்றுமொழியில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பாடல்.

இதோ ஒலித்துணுக்கு. இரண்டு interludes இணைக்கப்பட்ட ஒலிப்பேழை. You will love the high-quality of the sound with split parallel tracks of SPB’s 🙂

இங்கு கண்ணை மூடிக்கொண்டு கேட்டால் சங்கீத மழையில் நனைந்த ஒரு feel சத்தியமாக ஏற்படும். என்ன பாட்டுய்யா இது! அப்பப்பா 🙂

இந்தப் புதிரில் இத்தோடு நிறுத்தி இருந்தால், கண்டுபிடிக்க சிலருக்கு கடினமாக இருக்கும். அதனால் நேற்று மாதிரி preludeஐயும் கொடுத்துவிட்டால் கண்டுபிடிக்க மிகவும் எளிதாகிவிடும். நிறைய மனப்போராட்டத்துக்குப் பின், அதையும் கொடுத்துவிடலாம் என்று முடிவு எடுத்து இருக்கிறேன். இந்த சலுகையை தயவு செய்து இனி வரும் சில புதிர்களில் எதிர்பார்க்க வேண்டாம். சரியா? 😉

நன்றி.

Have a nice week ahead.

Please leave your answers below in the COMMENTS section with your Twitter handle/username. For other discussions on Twitter, please use hashtag #365RajaQuiz.

All internet sources are horrible for this sound-track. I had the “original” track in the “original” language, which I have used here. I also have a decent “Tamil” version of the song in the tape, which is very close in quality to this original. No difference between the languages. No tempo altered. Only noise-gate was used.


Clue: Please try to figure out the answer sincerely as the posted audio is the clue and hint you will ever need. But, if you need one more lifeline, then just select the box below,with your mouse, between the double-quotes to view the additional hint:

In English, if you take the first letter from each of the words from this movie’s title and join together, it will be a palindromic abbreviation for the “distress signal” (International Morse Code).

NB: Enjoy the Continuous Play of all the clues so far.
Answer: Yaarodu Yaaro (யாரோடு யாரோ) from Salagayil Oru Sangeetham (சலங்கையில் ஒரு சங்கீதம்) (1985)

Advertisements