Tags

, , , , , , , , , , , , , , , , , , , , , ,

வணக்கம் சென்னை.

ஆமாம். விடுமுறையில் வந்து இறங்கியபோது 133/365யில் கொங்குநாட்டு பெருமையை பாடும் பாடலை போட்டோம். விடுமுறை முடிந்து கிளம்பும்போது, சென்னை வழியாக கிளம்புவதால், ஒரு அருமையான சென்னை-based பாடல். மற்ற ஊர்கள் எல்லாம் வராதான்னு கேட்க படாது. எங்கு முடியுமோ, அங்கு கொண்டு வரலாம். சரியா? :))

இந்த பாடல் எத்துணை பேருக்கு தெரியும் என்று எனக்கு உண்மையில் assess செய்ய முடியவில்லை. அதற்கு காரணங்கள் பல. வானொலியில் கேட்டு பழகியவர்களுக்கு, இந்த பாடல் சட் என்று நினைவுக்கு வரும். மற்றவர்களுக்கு எப்படி என்று என்னால் யூகிக்க முடியவில்லை. ஏனென்றால், எனக்கு தெரிந்து இந்த பாடலை பற்றி அதிகம் யாரும் discuss செய்ததும் இல்லை. இந்த pointஐ பற்றி, சற்று பின்னூட்டத்தில் சொல்லுங்களேன் நன்றி. உங்கள் experience of this song, எப்படி? ஏற்கெனெவே கேட்டதுண்டா?

இந்த பாடல் ஒரு அருமையான slow-paced melody. சற்று கிண்டலாகவும் lyrics இருக்கும். இந்த படத்தில் வேறு ஒரு பாடல் செம ஹிட். சமீபத்தில் கோவையில் இசைஞானி இளையராஜாவிடம் நடந்த நேரிடை உரையாடலின்போது, அந்த ஹிட் பாடலை பற்றி ஒருவர் கேள்வி கேட்க, ராஜா அதைப் பற்றி விளக்கினார். ஆனால், அந்த சமயம் வேறு ஒரு distraction எழுந்ததால், என்னால் அதை கவனித்து கேட்க முடியவில்லை. Bottom-line is, there is another super-duper hit song in this movie that may have eclipsed this equally good number that has come today.

இளம் கதாநாயகி, கதாநாயகனுக்கு பேப்பர்-ராக்கெட் விட்டு, அதில் propose செய்கிறாள். நான் உன்னை காதலிக்கிறேன், நீ என்னை விரும்புகிறாயா?ன்னு. உடனே, ஊட்டி மலை காடுகளில், சென்னை பற்றிய இந்த பாடல் வருவதாக நினைவு. என்ன டைரக்டர் டச்சு! அடடா…அப்படியே புல்லரிக்கும்.

ஆனா, அதை எல்லாம் நான் அதிகம் கண்டுகிட்டதில்ல. இந்த பாட்டை பாடினது, நம்ம மலேசியா வாசுதேவன் அண்ணன். பின்னி படல் எடுத்திருப்பார். வேகமான பாடல்களில், ரணகளப்படுத்தும் அவரது ஸ்டைல், நிதானமான பாடல்களில் விவேகமான அடக்கத்தை வெளிப்படுத்தும். இந்த பாடல் எனக்கு மிகவும் பிடித்திருக்க மற்றுமொரு காரணம்: orchestration. இந்த sequence ஐ கேட்டு பாருங்கள். அருமையான Wind instruments — clarinet and trumpet — களின் நடுவே, செம romanticஆக வரும் guitar.

The guitar-sequence at 25-second marker is enough for me to enjoy this song always. Such a simple touch, with, an awesome effect. ஆரம்பத்தில் வரும் group-violinsஉம், mild-percussionஉம் , படு உற்சாகத்தோடு interludeக்கு அழகு சேர்க்கும். நடுவில் அந்த 20 to 25-second marker இடங்களில், ஏதோ கோயம்பேடு பஸ் ஸ்டாண்டு பக்கம் போய் நின்று பேருந்து ஒலிப்பான் ஒலிகளை கேட்கும் ஒரு effect கிடைக்கும். ஆனால், அதை அடுத்தே வரும் அந்த guitar interlude தான், romanceன் உச்ச்ம்.

இப்ப புரிகிறதா, எதற்கு இந்த sceneன் situationஐ விளக்கினேன் என்று?

சென்னையில் சந்தித்த அனைத்து Tweeplesக்கும் எனது நன்றி, குறிப்பாக @amas32-@n_shekar தம்பதியினருக்கும், இதை coordinate செய்த ஜிரா உட்பட, வந்திருந்த அனைத்து நண்பர்களுக்கும்.

துபாயில் இருந்து signing-off.

Please leave your answers below in the COMMENTS section with your Twitter handle/username. For other discussions on Twitter, please use hashtag #365RajaQuiz.

Clue: Please try to figure out the answer sincerely as the posted audio is the clue and hint you will ever need. But, if you need one more lifeline, then just select the box below,with your mouse, between the double-quotes to view the additional hint:

Malaysia Vasudevan’s song on Chennai, appeared in this 2nd movie of this Director, who miscalculated that naming his 2nd movie after a ‘bird'(as he did in his 1st) will bring him success. Needless to say that this 2nd movie of his was a huge flop.

NB: Enjoy the Continuous Play of all the clues so far.

Answer: Mayilapore Pakkam (மயிலாப்பூர் பக்கம்) from Kokkarakko (கொக்கரக்கோ) (1983)

Advertisements