Tags

, , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

அமெரிக்க தேர்தல் முடிந்துவிட்டது. அதிபர் ஒபாமா மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த சரித்திர நிகழ்வின் நிழலின் கீழ் இந்த பதிவு வருகிறது. இங்க நாங்க தான் இந்த அளவுக்கு அளப்பறன்னு நெனச்சேன். அட, அங்க புது டில்லியிலும் நிறைய பேர் ஆர்வமா இருந்திருக்காங்கன்னு பாக்க ஆச்சரியமா இருக்கு.

நேற்று வீணையும் மிருதங்கமும் கொண்ட புதிர் கேள்வியில் ஒரு அருமையான டூயடோடு ஆரம்பித்தோம். இல்லையா? அதே போல, இன்றும் ஒரு வீணை மற்றும் மிருதங்கம் கொண்ட டூயட். சில நாட்களுக்கு முன்னர், நானும், நண்பர்கம் @rozavasanth and @raaga_suresh, ஏதேச்சையாக கீச்சிக்கொண்டிருந்தபோது, இசைஞானியின் பாடல்களில் மிருதங்கம் அங்கம் வகிக்கும் பாடல்கள் அனைத்தும் ஹிட்டாக உள்ளதே என்று வியந்தோம். அதற்கு சாட்சியாக நேற்று 101/365 வந்தது. இன்றும் மற்றொன்று வருகிறது. கேட்டுவிட்டு சொல்லுங்கள்.

இது ஒரு மென்மையான காதல் டூயட். சற்று வேகமாக வரும். இதில் கவனித்துப்பாருங்கள்….மெலிதான bass-guitarல் ஒரு கொட்டாங்குச்சி வயலின் போன்ற interludeல் தூக்கலாக மிருதங்கத்தின் தாளம். நேற்றைய இசை போலவே இன்றும் வீணை…இதைவிட ஒரு சொர்க்கலோகம் இருக்கவே முடியாது. அதில் அழகாக இழைத்திருக்கும் fluteன் நேர்த்தியைப் பற்றியும் இந்த இடத்தில் குறிப்பிட்டே ஆகவேண்டும்.

இந்த பாடலை நான் முதன் முதலில் கேட்டது கோயம்புத்தூர் அகில இந்திய வானொலி. அதுவும், முதன் முதலாக உதகமண்டலத்தை கடந்து, முதுமலை – மசினகுடி வன மலைப்பாதையில் சேரன் போக்குவரத்துக்கழக பேருந்தில் பயணம் செய்துகொண்டிருந்தபோது, வானொலியின் signal சரியாக வராததால், விட்டு விட்டு கேட்ட மாதிரி ஒரு ஞாபகம். பின்னாளில் அதிக முறை வானொலியிலே கேட்டு ரசித்து மனத்தில் பதிவேற்றியது.

என்ன கண்டுபிடிக்க முடிகிறதா? இது என்ன ராகம்?

Please leave your answers below in the COMMENTS section with your Twitter handle/username. For other discussions on Twitter, please use hashtag #365RajaQuiz.

Clue: Please try to figure out the answer sincerely as the posted audio is the clue and hint you will ever need. But, if you need one more lifeline, then just select the box below,with your mouse, between the double-quotes to view the additional hint:

This song featured Banupriya.

NB: Enjoy the Continuous Play of all the clues so far.

Answer: Sevvanthi Pookalil (<emசெவ்வந்தி பூக்களில்) from Mellap Pesungal (மெல்லப் பேசுங்கள்) (1983)