Tags

, , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

வணக்கம்.

கற்றது கைம்மண் அளவு. கல்லாதது உலகளவுன்னு சொல்லுவாங்க. இந்த சின்ன விசயத்தை புரிஞ்சுகிட்டா வாழ்க்கையே எவ்வளவு நல்லா இருக்கும்! பாருங்க, இந்த #365RajaQuizல உங்க ஒவ்வொருத்தருக்கும் ஏதாச்சும் ஒரு விசயம் புதுசா கத்துகிட்டிருப்பீங்க. அது புது பாட்டா இருக்கலாம். புது வித இசையா இருக்கலாம். பாடல் வரிகளில் இருந்து இசையை மட்டும் அதிகமாக கேட்டு கேட்டு ரசிக்கும் பழக்கம் புதிதாக அரும்பி இருக்கலாம். இன்னும் பல விதமான experiences அவரவருக்கு இருக்கும். எனக்கும் அப்படி நிறைய நிகழ்வுகள் நடந்தது உண்டு.

இன்றைய பாடல் அதற்கு ஒரு excellent proof.

1999ல் இணையத்தில் அதிகம் இசைஞானிக்கு என்று அவருடைய அபூர்வமான பழைய பாடல்கள் இல்லாத நிலையில், என்னிடம் இருந்த சில கலெக்‌ஷன்களை என்கோட் செய்து செய்து பதிவேற்றினேன். டைரக்டாக பதிவு செய்து ஏற்றாமல் என்கோடிங் செய்து ஏற்றியதால், உடனடியாக கவனிக்கப்பட்டேன். ஆனால் அதற்காக எல்லாம் யோசித்து எதையும் செய்யவில்லை. ஒன்றைச் செய்தால், அதைச் சரியாக செய்யணும் அப்படின்னு எப்பவுமே ஒரு உந்துதல் உண்டு.

I can never hold back anything that I can do it well, regardless of whether it is gratis or not. Encoding is painstaking, but, I realized the fruits of such an effort 14 years ago!

ஆக, நான் இப்படி செய்து கொண்டிருப்பதைக் கண்டவுடன், சிலர் எனக்கு அவர்களின் ஒலிநாடாக்களை அனுப்பி வைத்து, ரெக்ஸ், இது என்னிடம் இருப்பதை விட உங்களிடம் இருப்பது தான் சரி. இதில் ஒரு படத்தின் பாடலை உங்களுக்கு அனுப்பி வைத்திருக்கிறேன். அப்படி ஒரு படம் இருப்பது கூட நிறைய பேருக்கு தெரியாது. நிறைய இரைச்சலும் இருக்கிறது. நீங்க தான் சுத்தம் செய்து மேலே ஏற்றி உதவணும்னு சொன்னாங்க. என்னடா இதுன்னு திறந்து பாட்ட போட்டா ஒரே வித்தியாசமா இருந்துச்சு. முதலில் ஒன்னும் உறைக்கல. சரி, இது ஏதோ elitist கோஷ்டி போலிருக்கு 😉 அப்படின்னு நெனச்சுட்டு இருந்தா, மெல்லமா, இந்தப் பாட்டின் கிடார் என்னை என்னமோ செய்ய ஆரம்பிச்சது. அடேங்கப்பா, இந்தப் பட பாட்டுகள் எல்லாமுமே ஒரு மாதிரி இருக்கேன்னு மெதுவா கேக்க கேக்க, இது மத்த வெறித்தனமான ராஜா ரசிகர்களின் விருப்ப ஆல்பம் ஆன மாதிரி எனக்கும் விருப்ப ஆல்பம் ஆனது 🙂

அதாவது, இந்தப் படத்தின் பாடல்களை நான் அகில இந்திய வானொலி நிலையத்தில் கேட்டதே இல்லை :). நீங்கள் இங்கு #365RajaQuizல் பல அரிய பாடல்களை முதல் முறையாக கேட்டு ரசித்தது போல, எனக்கும் lateஆக 1999ல் அறிமுகமாகிய பாடல் தான் இது. என்னுடைய முந்தைய இணைய stintல் மற்றவர்கள் மூலமாக நானும் புதிதாகக் கற்றுக்கொண்ட பாடல் 🙂

ஆரம்ப காலத்தில் இந்த #365projectக்குள் இழுத்துவிடப்பட்ட போது, @nchokkanஇடம் நான் சொன்னேன், எனக்கு தனிப்பட்ட பல விசயங்களுக்கே நேரம் இல்லாததால், இதை எப்படி செய்வது என்றே தெரியலை சொக்கன். பாட்டை என்கோடிங் செய்யவே நேரம் பிடிக்குமே, அப்புறம் எப்படி? என்றேன்.

அதற்கு அவர் பலமாக ஒரு எதிர்கேள்வி கேட்டார். அது என்ன, encoding? 🙂

சரியாப்போச்சுன்னு தலைல கைய வச்சுகிட்டு, அவருக்கு விளக்கினேன். பாவம், அவருக்கு அது அதிகமாக புரியவில்லை. சரி செயல்முறையில் செய்துகாட்டலாம் என்று உடனடியாக ஒரு பாடலை ஒலிப்பதிவு செய்தேன் — without encoding. என்னுடைய iPhoneல் SoundCloud app மூலமாக ஒரு துணுக்கை ஒலிப்பதிவு செய்து மேகத்தில் ஏற்றி, இது ஓகேவா? என்றேன்.

என்னங்க ரெக்ஸ், ஒலியின் தரம் சரியாக இல்லையேன்னு சொல்லுவார்னு பாத்தா, அவரோ, நல்லா இருக்கே..இப்படியே போட்டுடுங்க. அவ்வளவு தான். ரொம்ப யோசிக்காதீங்க. உடனே ஆரம்பிங்க என்றார்.

அந்த ஒலித்துணுக்கு — 365 days old — இதோ 🙂

அந்த நிகழ்வைக் குறித்த பதிவு இதோ: https://365rajaquiz.wordpress.com/2012/07/28/track0/

ஆக, சொக்கனே சொல்லிட்டாரு, இது போதும்னு, அப்புறம் நமக்கேன் மெனக்கெடல் என்று காரில் போகும் போதும், வரும் போதும் க்ளூக்களை பதிவு செய்து க்விஸ் நடத்தினேன்.

அதே ஒலிக்கீற்றை encode செய்திருந்தால் எப்படி இருக்கும் என்று கேட்கத் தோன்றுகிறதா? அப்படி என்றால், இதைச் சுட்டவும்:

இப்போது சொக்கனுக்கு மட்டுமல்ல…உங்கள் அனைவருக்குமே With and Without Encoding என்றால் என்ன என்ற வித்தியாசம் இந்த ஒரே ஒரு Trackல் — Track-0வில் புரிந்து இருக்கும். That is the difference, I want you folks to take with you, after #365RajaQuiz is over. If that happens, my mission is accomplished 🙂

ஆனால் எப்போது எனக்கே என்று நான் காலம் காலமாக அமைத்துக்கொண்ட பாணிக்கு உண்மையானவனாக என்கோடிங் செய்ய ஆரம்பித்து, அபூர்வமான பாடல்களையும் , பின்னணி இசையாக பூவிழி வாசலிலேவையும் இறக்கிவிட்டேனோ, 1999ல் மக்கள் கவனித்த மாதிரியே, #365RajaQuizலும் வரும் ஒலியின் தரத்தைக் கவனிக்க ஆரம்பித்தார்கள்.

அதில் ஒரு நாள், சாதாரணமாக ஒரு ஒலித்துணுக்கை பதிவேற்றியதற்கு சில நண்பர்கள் அற்புதமான ஒலித்தரம் என்று பின்னூட்டம் இட, அப்போது எனக்கு என் மனசாட்சி உறுத்தியது. Once you set an expectation, you better be truthful to it என்று எனக்குள் ஒரு குரல் பலமாக ஒலிக்கவே, இனி test-track போல பழைய பாடல்கள் எல்லாம் இரைச்சலோடு இருந்தால், அவற்றை encode செய்யாமல் பதிவேற்றம் செய்வது என்பது unethical என்று எனக்கு நானே சொல்லிக்கொண்டு இழுத்துப்போட்டு வேலைகளை செய்ய ஆரம்பித்தேன்.

ஒரு 50 நாட்கள் சென்றிருக்கும். சொக்கன் என்னிடம் ஆவலோடு தொடர்புகொண்டு ஒரு முக்கிய வினாவை எழுப்பினார். இவ்வளவு நேரம் செலவழித்து க்விஸ் நடத்துறீங்களே.. இன்னும் முடிக்க 300 நாளுக்கு மேல இருக்கே ரெக்ஸ், முடியுமா? எவ்வளவுக்கு எவ்வளவு வேலைய குறைக்க முடியுமோ, பாத்து பண்ணுங்க. நீங்க முடியலைன்னு கைவிட்டுட்டா, அது தானே பெரிய ஏமாற்றமா இருக்கும்!னு உண்மையான கவலையோடு கேட்டார்.

அவர் சொன்னது 100க்கு 100 சரி. அதை நானும் உணர்ந்தே இருந்தேன். என்னைப் பொறுத்த வரை, இந்த #365RajaQuizஐ எந்த வித எதிர்ப்பார்ப்புமே இன்றி, திடீரென்று இழுத்துவிடப்பட்டதால் உடனடியாக யோசிக்கக் கூட நேரமில்லாமல் நுழைந்தேனே அன்றி, பெரிய கொள்கை பிடிப்பெல்லாம் இல்லை.

ஆனால், எனக்கு ஒரு பழக்கம் உண்டு :). I will take an assignment and if it were to be tough, I will inject a killer-instinct to schlep harder. I am not the kind to give-up. 🙂 So, I had to keep a motivational aspiration, wherein, I can get over the quotidian mundaneness that ranges from varying moods to just plain ennui. Is there anybody, who is immune to that? Nobody :).

Right?

I knew from Day-1 that, either I compromise on the quality of this journey, or, I give-up 🙂 The only way to have both is to have a killer-instinct. That is where, from Day-1, I told myself, I will organize this #365RajaQuiz in honor of my daughter Rhea.

Many of you have asked me, how I could do this, every single day?

Simple: I did to you, what I did to my daughter each night 🙂 I did NOTHING different. Just as I used to pick songs carefully, make her focus on certain instruments, I adopted that same approach, with some variations — including some matters alien to children ;), but, nevertheless with the same mild-mannered, enthusiastic, and motivating spirit. I kept an unassuming dialect with a simplistic tone, while leaving the pedantic aspects to our experts, so that neither you nor I were ever bored. 🙂

Which Father will be bored of his child? I am glad, I had her as my focus to get this journey done amid so much of personal and professional workload :). Of course, there were days, I didn’t want to do anything other than just sleep 🙂 There were many days, wherein I had to wake up at 4 AM to get the clue up. Besides, 2 computers had to be replaced. Even, when I survived a major accident in April 2013, within a couple of hours, I recovered (with some heavy bruises and swollen feet, of course) and started encoding for the next day clue 🙂 And much more.

Due to my travel to India twice a year, running the Quiz without a break became a logistical nightmare. Without a killer-instinct, I don’t think I could have persisted this grueling journey even for a few days. I may have proven @NChokkan’s concerns right. Glad, I didn’t succumb. I needed something that I love more, to tackle the realistic leviathan of running this #365RajaQuiz for 365 days, without any break.

When I signed-up for this #365RajaQuiz originally, the scope included just 30-second recording (note there was no expectation for encoding) and 3-4 lines about the audio clue. That is it. No tagging, ranking, reporting, nothing 🙂 Just see where we are now and how this #365RajaQuiz has come so far, with so many chores, every single day. 🙂

And then there was always another factor that helped me in my killer-instinct, in addition to my lovable daughter: YOU. I take people, very seriously. I don’t expect plaudits. Folks know, how many interesting and stinging comments have come my way too ;). Yet, I always knew that this journey will have to be continued until its end, no matter what 🙂 In order to insulate myself from any folderol, I clearly told myself that I will NOT get emotional or personal. Every criticism was dealt with perfect calm and poise. While I am sorry that there may have been a minuscule, whose expectations I couldn’t fulfill, there were many other folks, to whom this #365RajaQuiz was a daily part of their lives. How can I even be lukewarm? 🙂

I am not stating another obvious thing here for obvious reasons: It’s Maestro’s music that brings all of these together. Without his music, can I even imagine spending so much time for anybody else’s music? I am afraid, I can’t. It is just because, I am more firm-rooted in Maestro Ilaiyaraaja’s than anybody else! Without his music and his oeuvre, I can’t imagine what life will be like. So, I obviously don’t keep mentioning about this ad nauseam because it is like stating the obvious again and again 🙂 Rather, I take that as a given and focus on other aspects of everyday life to see, what fueled my focus for this journey. That is all. 🙂

In #365RajaQuiz — NOT even a SINGLE comment has been censored or blacked out! That speaks volumes of tolerance and respect to dissent! And that is because, I promised that that will be the case from Day-1 🙂

சாரி…ரொம்ப பேசிட்டேனோ…என்னை அறியாமல்?

காரணம் இருக்கிறது.

இன்றைய பாடலை கவனித்துக் கேட்டீர்கள் என்றால் புரியும். சமீபத்தில் கூட இதன் ஒலித்தகட்டை அன்பளிப்பாக பெற்று அதைக் கேட்டேன். நன்றாகவே செய்து இருந்தார்கள் என்றாலும், நான் விரும்பிய கிடாரின் ஒலியின் ஆழம் அதில் சற்று குறைவாகவே இருந்தது. அதனால், இன்று நான் மீண்டும் encodingல் நுழைய வேண்டியதாயிற்று. இன்று அரங்கேறும் இந்தப் பாடல் துணுக்கின் ஒலி வடிவத்தைக் கேட்கும்போது, இது மட்டும் உங்கள் மனத்தில் ஆழமாகப் பதிந்தால், நான் மகிழ்வேன். அதாவது — quality of sound matters. That is it 🙂

Lead Guitars and Bass Guitars உறுமும் அந்த அழகான இசையை நீங்களும் அனுபவியுங்கள். அந்த கிடாரின் ஒலியின் வேறுபாட்டை, மற்ற ஒலி நாடா அல்லது ஒலி தகட்டுகளிலும் கேட்டுப் பாருங்கள். அப்போது நான் சொல்வது புரியும். Electric guitars மற்றும் group violins என்று பயணிக்கும் இந்தப் பாடலின் இறுதியில் வரும் அந்த கிடார் தான் இந்தப் பாடலில் என்னை சொக்க வைக்கும் பகுதி.

ஒரு விதத்தில் இது மடை திறந்து ஓடும் நதி என நான் என்று பாடப்பட வேண்டிய பாடல் தான். ஆனால் ஒரு வித melodic melancholyஆக இசைஞானி இளையராஜாவின் ஆரம்ப நாட்களின் சோகத்தின் வலியை உணர்த்தும் விதத்தில் அமையப்பெற்று இருக்கும்.

நேற்றையப் பாடலில் இசைஞானி உங்களைப் பார்த்து அழைப்பது போல இருக்கும் என்றேன். அவரின் ஆரம்ப வலியை உங்களோடு பகிர்ந்துகொள்ளும் வகையில் இந்தப் பாடல் இருக்கும் என்பது கூடுதல் க்ளூ.

This day is a pretty important day for me. Besides, it is the antipenultimate day for our #365RajaQuiz 🙂

இன்னும் இரண்டே நாளில் உங்கள் அனைவரியும் Google Hangout மூலமாக நேரில் சந்திக்க ஆவலாக இருக்கிறேன். மிக்க நன்றி.

நன்றி.

Have a nice week ahead.

Please leave your answers below in the COMMENTS section with your Twitter handle/username. For other discussions on Twitter, please use hashtag #365RajaQuiz.

Repeatedly and extensively noise-removed before noise-gate passes were applied. No tempo was altered, although, SoundCloud processing may have modified the pace at a few places, over which I have no control.

Clue: Please try to figure out the answer sincerely as the posted audio is the clue and hint you will ever need. But, if you need one more lifeline, then just select the box below,with your mouse, between the double-quotes to view the additional hint:

This actress is very busy on TV, these days. Lyricist Vairamuthu, would have brought out the pang of a musician, so well, in this song!

NB: Enjoy the Continuous Play of all the clues so far.

Answer: En Gaanam (என் கானம்) from Eera Vizhi Kaaviangal (ஈர விழிக் காவியங்கள்) (1982)

Advertisements