வணக்கம். நேற்றைய bonus trackல், விமர்சனமே இல்லாமல் அடுக்கு மல்லிகையைத் தொடுத்து இருந்ததற்கு சுவையான பின்னூட்டங்களும் கீச்சுகளும் வந்தன.

This is just a teaser. This is NOT the actual 364/365. This is just for you to test yourself without any clues 🙂

விமர்சனமும் இல்லாமல், அருமையான பாடல்களில் ஒன்றான இதை இறக்கி இருந்தால், ஒரு முறையோ இரு முறையோ கேட்டுவிட்டு அடையாளம் தெரியாமல் போய் இருப்பார்கள். இது மாதிரி சங்கதிகள் நடக்காமல் போய் இருக்கும். இங்கு பாருங்கள்.

இந்த மலேசியா அண்ணேனின் பாடலை இறக்க முடியவில்லை என்று எனக்கு மிகுந்த வேதனை. இது மாதிரி பல பாடல்களை இறக்க முடியாமல் போவதும் ஒரு வேதனை தான். இந்த இசைத் துணுக்கை கேட்டீர்கள் என்றால், வேறொரு உலகத்துக்கு போவது நிச்சயம். சாதாரண தாளத்திலும், ரயிலில் போவது போன்ற வயலினிலும் வரும் இந்த இசை நம்மை எங்கோ அழைத்துச் செல்லும். சந்தூர் எப்படி அந்த வயலினுக்கு இடம் கொடுக்கிறது பாருங்கள்.

மலேசியா அண்ணன் அப்படி உருகி உருகி பாடியிருப்பார். Miss you Malaysia Annen 😦

இந்தப் பாட்டெல்லாம் இணையத்தில் இருக்கிறதா என்றே தெரியாது. அதனாலேயே நான் கொடுக்கவில்லை. மிகவும் கடினமாக இருக்கலாம் என்ற எண்ணத்தில். தர்ம அடி வாங்கின ஒலித்துணுக்கை முடிந்த அளவுக்கு சீராக்கினேன். இதோ.

என்ன பாட்டு? சொல்லுங்க பார்ப்போம்? 🙂


Answer: Kandene Kandene (கண்டேனே கண்டேனே) from Kannitheevu (கன்னித்தீவு) (1980)

Advertisements