Tags

, , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

வணக்கம்.

Did you check out a bonus track? 🙂 This is just for fun. No tags, scoring, OK? 🙂

அப்புறம், நம் இறுதி க்ளூவுக்கு என்று ஒரு Drumrollம் தயார் செய்தாயிற்று 🙂


இன்று களம் இறங்கும் பாடலுக்கு விமர்சனம் எழுத முடியாமல் ஒரு வழியாக காலை 4:30 மணிக்கு எழுதுகிறேன். இது எனக்கு மிகவும் பிடித்த பாடல். என்ன காரணம் என்று சொன்னாலும் அது முழுமையான காரணமாக இருக்காது.

Malaysia Vasudevan

Malaysia Vasudevan

இந்தப் புதிரை நடத்த ஆரம்பித்த போது, எனக்கு என்றுமே மலேசியா அண்ணனின் பாடல்கள் பிடிக்கும் என்ற உணர்வோடு தான் நுழைந்தேன். இன்று #365RajaQuizன் முடிவில், இவருக்குத் தான் நான் எப்படி ஒரு ரசிகனாக இருந்திருக்கிறேன் என்ற புரிதலோடு வெளியேறுகிறேன். இவரைப் பற்றிய clichesஐ நொறுக்கித் தள்ள வேண்டும் என்ற ஒரு வெறி இருந்தது என்பது உண்மை தான். பல ரசிகர்கள், எனக்கு இவரின் பாடல்கள் அவ்வளவாக கேட்காமலேயே ஒதுக்கியே வைத்திருந்தேன். இந்தப் புதிரின் மூலமாக இவருடைய பல பாடல்களுக்கு நானும் விசிறியாகிவிட்டேன் என்ற ரீதியில் எழுதி இருந்தார்கள். As a Quizmaster, tell me, what else do I need to be contented, when exiting the stage? 🙂

மலேசியா வாசுதேவனின் குரல், அடிபட்ட, நொறுக்குண்ட, சாமானியப் பயபுள்ளவ குரல். நீங்களும் நானும் பாடினா எப்படி இருக்குமோ, அப்படி எல்லாம் பாடியவர்.ஆட்டுக்குட்டி முட்டையிட்டுல இருந்து வெட்டி வேரு வாசம் வரைக்கும், சொக்குப்பொடி கக்கத்துல இருந்து இதழ் எங்கும் வரைக்கும் பாடக்கூடிய மிக sophisticated பாடகர்.

இவருடைய பல அருமையான ஹிட் பாடல்களை, இந்தப் புதிரில் அவிழ்த்துவிட்டதில் எனக்கு பெருமகிழ்ச்சியே.

எங்கு துளைகள் இருந்ததோ, அங்கு என்னால் முடிந்த அளவுக்கு அடைப்புகளை அடைத்துவிட்டாயிற்று. இனிமேல், பலர், இதை குறித்து எல்லாம் பிரமாதமாக விவாதித்தும் ஆராய்ந்தும் பேசியும் மகிழ்வார்கள். வேறு என்ன வேண்டும் நமக்கு! வேலை முடிந்தது. அவ்வளவு தான் 🙂

இந்தப் பாடலை எனக்கு இசைஞானி இளையராஜாவின் சுகமான ராகத்துக்கு எவ்வளவுக்கு எவ்வளவு பிடிக்குமோ, அதற்கு ஒரு விதத்திலும் குறையாமல் பாடல் வரிகளை தீட்டிய அவரது தம்பி கங்கை அமரனுக்காகவும் மிகவும் பிடிக்கும். ஏனென்றால், ரிக்கார்டு லேபிளைப் பார்த்து தான் இவர் எழுதினார் என்று நீங்கள் சத்தியமாக நம்பியே ஆகவேண்டும். இல்லையென்றால், அடித்துப்போட்டாலும் இது கவியரசர் கண்ணதாசன் எழுதியது என்று நீங்கள் சொல்லக்கூடும். அத்துணை விசயம் நிறைந்த பாடல் இது.

Gangai Amaran

ராஜபார்வையில் கவிஞர் கண்ணதாசன் எழுதிய அழகே அழகு தேவதை மிகவும் பிரபலம். அதில் ஒரு இடத்தில் பார்வை இல்லாத நாயகன், நாயகியின் உடலை மீட்டும் அழகை வர்ணிப்பதை சிலேடையாக கவிஞர் பாடியிருப்பது A-1. அதற்கு சற்றும் குறைவில்லாத வகையில் கங்கை அமரன், இரண்டாம் சரணத்தின் முடிவில் பாடியிருக்கும் சங்கதியைக் கேட்டுப்பாருங்கள் புரியும்.

அது மட்டுமல்ல.

இது மாலை நேரம். நாயகனும் நாயகியும் கூடி உறவாடத் துடிக்கிறார்கள். (I hope our experts will shed more light on this raaga 😉 ) அதற்கு இசைஞானி சரியான மெட்டும், இசைக்கருவிகளையும் கையாள்கிறார் ஒரு பக்கம் என்றால், கங்கை அமரன் என்ன செய்கிறார்?

  1. நெடில் – பாடல் முழுவதும் சொற்களில் நெடில் அதிகம் இருப்பதைக் கேட்டு ரசிக்கலாம். மாலையில் நிழல் மட்டும் நீண்டு இருப்பது இல்லை. மாலை வேளையும் தான் நீண்டுக்கொண்டே போகும். இந்தத் தருணத்தை வெறுத்து, இரவு வேளைக்காக இரு இளம் உள்ளங்கள் வாடுவதை, அட்டகாசமான வரிகளால், சொற்களால் இந்தப் பாடலை அலங்கரிப்பார் கங்கை அமரன்! ஆக, இந்த நெடில் matterஐ நன்கு கவனியுங்கள்!
  2. தம்தன தம்தன தாளம் – இந்தப் பாடல் தம்தன தம்தன தாளம் மாதிரியே இருக்கும். ஆனால் ஏனோ, அது மாதிரி இது அதிகம் பேசப்படாதது ஏன் என்று எனக்குள் ஒரு கோபமே உண்டு.
  3. மலேசியா வாசுதேவன் – பல வெற்றிப் பாடல்கள் — குறிப்பாக டூயட்களில் – அதென்னவோ தெரியல, இசைஞானி இளையராஜாவுக்கு அப்படி என்ன மலேசியா அண்ணனின் magic touch மீது அளவில்லாத நம்பிக்கை இருந்ததோ, படு பயங்கரமான காலாத்தால் அழியாத டூயட் பாடல்களில் அவரை நிதானமாக இறக்கிவிடுவார். அதாவது, இரணடாம் சரணத்தில், அல்லது, முதல் சரணத்தில் என்று நிதானமாக அவிழ்த்துவிடுவார். அண்ணனும் சும்மா பூந்து ஆடுவார். He’s a music-director’s play-child. அண்ணனைப் பற்றி எழுதும் போதே, கண்கள் எல்லாம் பனிக்கின்றன 😦 ஆயிரம் மலர்களே மலருங்கள் பாடல் நினைவிருக்கிறதா? அதில் மலேசியா அண்ணனின் entryஐ நன்கு கவுனியுங்கள்!

    அண்ணன் takeoff செய்யும் இடமே பாடலின் கடைசி சரணத்தில் தான். அது மாதிரி, இந்தப் பாட்டுலயும் அண்ணன் பல்லவிக்குள்ள வராம மெதுவா சரணத்துல நுழைவார்! முதல் சரணத்துல அண்ணன் காதல் ஏக்கத்துல entry கொடுப்பார் பாருங்க…ஆகா. அதுவும் கங்கை அமரனின் நெடில் வார்த்தைகளில், அண்ணன், பொங்கும்னு ஆரம்பிக்கும் போது, அப்படி ஒரு ordinary guy next doorஆ இருக்கும் அவர் குரல். ஆகா. வேஏஏஏஏஏகம்னு பாடும்போதும் சரி, வாஆஆஆஆஆஆஆடுதுனு இழுத்துப் பாடும் போதும் சரி, பின்னி இருப்பார்ங்க. ச்ச…அதே மாதிரி அவர் ராஆஆஆஆஆகம்னு இழுத்துப்பாடுவதையும் பாஆஆஆஆடுதுனு இழுக்கும்போது, ஏன் பைத்தியக்காரனுக மாதிரி எங்கள மாதிரி சில பிரியர்கள் இவரின் பிரிவை வருந்தி அவர் பாடல்களை மேலும் மேலும் ரசிக்கிறோம்னு புரிஞ்சுக்குவீங்க. 😦 இது சும்மா செண்டிமண்ட் விசயமே இல்ல. அண்ணனுடைய ஒவ்வொரு பாடலும் கில்லி… அதே மாதிரி இரண்டாம் சரணத்தில், நெடிலை ரொம்பவும் நீட்டாம, மிகவும் கண்ணியமாக double-meaningல் decentஆக பாடியிருப்பார். இவருடன் பாடும் பெண் பாடகியும் சாதாரணமானவர் அல்லவே. பின்னி இருப்பார்.

  4. ராகம் – நம்ம ராகா கில்லாடிகள் @prasannaR_, @maestrosworld, @kaarthikarul இருக்க நமக்கு என்ன கவலை. பின்னி அடிப்பாங்க பாருங்க. அந்த மாதிரி கர்னாடக சங்கீதம் பின்னும் பாடல் தான் இது.
  5. வீணை — ஒவ்வொரு சீசனும் ஆரம்பிக்கும் போது,வீணை செண்டிமெண்ட்டோடு ஆரம்பித்தேன். முடியும் தருவாயிலும் அதுவே 🙂 இங்கே முதல் இடையிசையில் பாருங்கள். எவ்வளவு அழகாக வயலின்களோடும், சந்தூரோடும், மிருதங்கத்தோடும், கோரஸ் பாப்பாக்களோடு போட்டி போட்டுக்கொண்டு மீட்டி எடுக்கிறது என்று! புல்லாங்குழலோடு கடைசியில் அடித்து நொறுக்கிக்கொண்டு போவதைப் பார்த்தீர்களா?
  6. கோரஸ் பாப்பாக்கள் – எத்துணை அழகாக கோரஸ் பாப்பாக்கள் பாடி இருக்கிறார்கள் பாருங்கள். இந்தப் பாடலில் அவர்களின் பங்களிப்பு அளவிடமுடியாதது.
  7. அம்சமான feeling! – சந்தோஷமான டூயட். ஆனா, இந்தப் பாட்டை கேக்கும் போது உங்களையும் அறியாமல், கண்களில் இருந்து நீர் எட்டிப் பார்க்கலாம். அது ஆனந்தக் கண்ணீரா, சோகக் கண்ணீரா என்றெல்லாம் கேட்டு உங்கள் உணர்வுகளைக் கொச்சைப்படுத்த மாட்டேன்! ஆனால் உண்மை அது தான் 🙂

நேற்று 363/365ஆல் ஒரு வித சோகத்துக்குள் போனவர்களுக்கு நாளை 365/365க்குள் நுழைய ஏதுவாக இருக்கும் bridge-song என்றால் இது தான். ஏனென்றால், சோகத்தில் இருந்து மகிழ்வான, வேகமான விசயங்களுக்குள் நம்மை அழைத்துச் செல்லும் பாடலாக இது இருக்கும். மகிழ்ச்சிக்கும் நடுவே சோக melancholy இதில் இருப்பது, கூடுதல் சுகம். செம!

மலேசியா வாசுதேவனைப் பற்றி அவ்வளவாக உயரிய கருத்துக்கள் இல்லாதவர்கள், நின்று திரும்ப்பிப் பார்க்க வைக்கும் க்ளூவாக இதை இறக்குகின்றேன். Miss you Malayasia Vasudevan 🙂

Thanks for all your support. Enjoy. See you tomorrow.

நன்றி.

Have a nice week ahead.

Please leave your answers below in the COMMENTS section with your Twitter handle/username. For other discussions on Twitter, please use hashtag #365RajaQuiz.

Extensively noise-removed. Noise-gate applied. No tempo was altered.

Clue: Please try to figure out the answer sincerely as the posted audio is the clue and hint you will ever need. But, if you need one more lifeline, then just select the box below,with your mouse, between the double-quotes to view the additional hint:

Hero of this movie was the villain of a Rajinikanth movie, in which all the songs were sung by Malaysia Vasudevan.

NB: Enjoy the Continuous Play of all the clues so far.

Answer: Later, tomorrow 🙂

Advertisements