Tags

, , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

நேற்றைய புதிர் சுலபம் என்று, பதில்கள் வந்த வேகத்தில் இருந்தே தெரிந்தது. SPB-SJவின் டூயட் பாடல்களில், பலருக்கு மிகவும் பிடித்ததும் கூட என்று தெரிகிறது.

இன்றைய புதிர் பாடல் அருமையான ஒரு fantasy song. இதைப் பாடியவர் இசைஞானி இளையராஜா. இதை நான் முதலிலேயே சொல்லிவிட்டதற்கு ஒரு காரணம் இருக்கிறது.

பொதுவாக, voice மாற்றி ஒரு வித குறும்புத்தனமாக பாடுவது என்றால், இசைஞானி உடனடியாக தேடுவது மலேசியா வாசுதேவன் அண்ணனாகத் தான் இருக்கமுடியும் என்பது என் தனிப்பட்ட கருத்து. இதற்கு நிறைய பாடல்களை எடுத்துக்காட்டாக காட்டலாம். ஆனால் மலேசியா அண்ணன் இல்லாத / பாட முடியாத காலங்களில், அந்த கம்பீரமான குரலையும், நெளிவு சுளிவுகளுடன் குரலையே மாற்றி படுபயங்கர குறும்புத்தனத்தோடு பாடும் லாகவத்திலும், மலேசியா அண்ணனின் இழப்பை ஈடு செய்ய இசைஞானி இளையராஜா தான் முயன்றார் என்றால் அது மிகையாகாது. இதனாலேயே இசைஞானி இளையராஜாவின் குரலை ரசிப்பவர்கள், பெரும்பாலும் மலேசியா அண்ணனின் குரலை ரசிக்கின்றார்களோ என்று நான் தனிமையில் நிறைய யோசிப்பது உண்டு. Again, it is just something I used to ruminate by myself🙂

இன்றைய புதிருக்கும் நாளைய புதிருக்கும் இருக்கும் connecting leitmotivஏ அது தான்.

அதாவது, இன்றைய புதிர் பாடலை, சேட்டைத்தனத்தோடும், குறும்போடும், ஜாலியாக அனுபவித்து பாடியிருப்பவர் இசைஞானி இளையராஜா என்றால், நாளை 120/365ல் பாருங்கள், இசைஞானி chorusல் ஒதுங்கிக்கொண்டு மலேசியா வாசுதேவன் அண்ணனை main leadல் பாட வைத்து அழகு பார்ப்பார். அப்போது நீங்களே புரிந்து கொள்ளலாம்.

20121124-002138.jpg
Charlotteல் இருந்து Washington வரும் வழியில் Appalachian Mountain Ranges வரும். சுமார் 7 மணி நேர கார் பயணத்தில், 4 மணி நேரம், இந்த பாடல் தான் continuous-loopல் வந்தது. அதற்கு பல காரணங்கள் என்றாலும், இந்த interlude sequenceஏ முதற்காரணம்.

என் மனத்தை இந்தப் பாடலில் இழந்துவிட்டேன். இந்த பாடலில் இசைஞானி பாடியிருப்பது போன்று, மிக சொற்பமான பாடல்களிலேயே பாடியிருக்கிறார் என்று அடித்து சொல்லலாம். இந்த பாடல் ஒரு அருமையான rhythmic patternல் synth உதவியுடன் fantasy பயணம் இனிதே அரங்கேற ஆரம்பிக்கிறது. அருமையான melody இசை இது. கண்ணை மூடிக்கொண்டு, இந்த interludeஐ மட்டுமே கேட்டுக்கொண்டு இருக்கலாம். அப்படி ஒரு innocence தெறிக்கும், மென்மையான soothing இசை. The best highlight for me in this entire interlude is from the point at 24-second marker till the end. Plain, awesome!🙂

என்ன, இப்போது கண்டுபிடித்துவிடலாம், இல்லையா? கண்டுபிடுத்தவுடன், நாளை என்ன பாடல் புதிரில் வரும் என்று உங்களுக்குள் ஒரு bet வைத்துக்கொண்டு இன்னும் 24 மணி நேரம் காத்திருங்கள். In the meanwhile, நான் கொஞ்சம் அமெரிக்காவின் ஜனநாயக தலைமையகமான வாஷிங்டன் நகரில் சில சுற்றுகளை முடித்துவிட்டு வந்துவிடுகிறேன்🙂

Please leave your answers below in the COMMENTS section with your Twitter handle/username. For other discussions on Twitter, please use hashtag #365RajaQuiz.

Clue: Please try to figure out the answer sincerely as the posted audio is the clue and hint you will ever need. But, if you need one more lifeline, then just select the box below,with your mouse, between the double-quotes to view the additional hint:

This movie won 2 national awards in India, while also earning the privilege of being the only other Tamil movie to be screened at the most coveted International Film Festivals in the American Continent.

NB: Enjoy the Continuous Play of all the clues so far.

Answer: Kuthikira Kuthikira (குதிக்கிற குதிக்கிற ) from Azhagarsaamiyin Kuthirai(அழகர்சாமியின் குதிரை) (2011)