Tags

, , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

வணக்கம்.

Happy Thanksgiving. On this day of Thanksgiving, I thank each of you for making #365RajaQuiz, a part of your daily schedule. Thank you.

நேற்றைய புதிருக்கு அதிரடி வரவேற்பு இருந்தது. பொதுவாக, கடினம் என்பதை விட, எளிதாக உள்ளது போன்று தோற்றம் அளித்து, விடை கிடைக்காமல் அலைக்கழிக்கும் புதிர் கேள்விகளே உண்மையில் கடினம். அந்த வகையில், பதிலைக் கண்டுபிடித்தவுடன், நீங்கள் காட்டிய மகிழ்ச்சி, என்னை மிகவும் மகிழ்வித்தது என்றால் அது மிகையாகாது.

ஒரு சிறு sampleல் இருந்தே, உங்கள் reactionsஐ நீங்களே பார்த்துக்கொள்ளலாம்.

வட கரோலினாவில் உள்ள சார்லட் நகரில்,இருந்து இந்த க்ளூ வருகிறது. இங்கு வர சுமார் 4.5 மணி நேரம் பயணம். நண்பர் @VRSaran சொன்ன மாதிரி, நேற்று அட்லாண்டாவில் இருந்து சார்லட் வரும் வழியில், பாதி தூரம் வரை (2 மணி நேரத்துக்கு குறையாமல்) நேற்றைய புதிர் பாட்டு தான் பாடிக்கொண்டு வந்தது.

எத்துணை feel, எத்துணை energy, என்ன ஷெனாய் மற்றும் வயலின் தபேலா இசை! படத்தின் பெயர் அதிரடிப்படை . ஆனால், நேற்றைய பாடல், அதிரடியிலும் அதிரடி, நெத்தியடி தான் போங்கள் 🙂


இன்றையப் புதிர், ஒரு அழகான பட BGM. நிறைய நாட்கள் கழித்து, பட BGM வருகிறது. சுலபம் தான்.

காட்சி அமைப்பு அருமையானது. சந்தர்ப்ப சூழ்நிலையால் கதாநாயகி கடத்தப்பட்டு, எதுவும் செய்யமுடியாத நிலையில் இருக்கிறாள். வெளியுலகத்தில் என்ன நடக்கிறது என்றே தெரியாத பரிதாப சூழ்நிலை. ஆனால், she finally gets a reprieve to just take a shower. விரசமே இல்லாமல் படமாக்கப்பட்ட மிக அருமையான காட்சிகளில் ஒன்று இது. அதற்க்கு காரணம், இசைஞானியின் BGMம் கூட.

ஆக, இவ்வளவு நாள் அவளுக்கு கிட்டாத ஒரு பரிசு இன்று கிடைக்கிறது. அதாவது கதாநாயகி ஒரு வழியாக அழகிய குளம் ஒன்றில் குளிக்கிறாள். ஆனால் பாருங்கள், இவள் சாதாரணக் குளத்தில் குளிக்கவில்லை. மலைப்பிரதேச குளிர் சீதோஷனத்தில் குளிக்கிறாள்.

இவ்வளவு நாள், கடத்தலில் depressed ஆக இருந்த அவள் மனது, இயற்கையைக் கண்டவுடன், சும்மா மான் போல் துள்ளிக் குதிக்கிறது. இயற்கை அவளை தலைகீழாக திருப்பிபோடுகிறது. குயில்களின் கூ..கூ.. ஒலி, அவளுக்கு ஒரு சங்கீதமாக ஒலிக்கிறது. இதை இசைஞானி இளையராஜா ஒரு montage themeஆகவே, அவரின் இசையில் சேர்த்திருப்பார். கவனித்துக் கேட்டீர்கள் என்றால், இசை முழுதும் குயில்களின் கூ..கூ.. கூடவே வரும். அத்தோடு, அந்த தண்ணீரின் சத்தமும் 🙂

அந்த மலையின் குளிர், ஜில்லென்று இவளின் மேனியின் மீது ஏற, அவளுக்கு வெலவெலத்து போகிறது. அதைக் குறிக்கவே, நடுவிலும் (41-49 second marker) கடைசியிலும் (1:53-1:59 marker) percussion-beatsஐ அடித்து நொறுக்கியிருப்பார் ராஜா. அந்த மலப்பிரதேசத்தின் குளிர், எழில், அது தரும் தனிமை சுகம் என்று அனைத்தையும் குறிக்க, அந்த percussion மிக அழகாக உதவுகிறது.

Please checkout the timed-comment markers, I have added on the track 🙂

ஆனால் ஆரம்பத்தைப் பாருங்கள். அருமையான bass-guitarsஐ உபயோகித்திருப்பார். இந்த புதிரின் ஆரம்பமே அதில் தான். அத்தோடு அம்சமான புல்லாங்குழல் வேறு. ஜில் தண்ணீரின் ஸ்பரிசம், தூயமையான அவளின் உள்ளத்தையும், மென்மையான அவளின் உடலையும் தீண்ட, அந்த இடத்தில் Santoor and a montage set of group violins and flute start their fantasy journey. 🙂

வாழ்க்கையில் அதுவரை எதெல்லாம் அவளுக்கு சர்வ சாதாரணமாக இருந்ததோ, அது அவளின் சிறைவாசத்தில் luxuryஆக போய்விட, ஒரு குளியலில் அவள் மனது அவ்வளவு குதூகலப்படுகிறது. இதை இசையிலேயே காவியமாக வடித்துவிடுவது தான் சிறப்பே!

எத்துணை அழகு பாருங்கள். Try narrating these inner feelings via music from a young damsel’s viewpoint 🙂

Especially, pay attention to the way the group violins and flutes that have a childlike innocence in them, clearly adding justice to the poetic visuals with a splendid musical narration.

Note: This is an encoded sequence, censored for dialogues in between for the Quiz.

இன்று சார்லட்டில் இருந்து வாஷிங்டன் போக இருப்பதால், Tagging will be done in batch-mode. Enjoy your day.

So, please identify which movie, this BGM is. :))

Please leave your answers below in the COMMENTS section with your Twitter handle/username. For other discussions on Twitter, please use hashtag #365RajaQuiz.

If there is a problem with the plugin, please use this link

.

Clue: Please try to figure out the answer sincerely as the posted audio is the clue and hint you will ever need. But, if you need one more lifeline, then just select the box below,with your mouse, between the double-quotes to view the additional hint:

தேசியக்கவியின் பெயரைக் கொண்ட ராஜாவின் பக்தனான டைரக்டரும், மிகப்பிரபலமான பின்னணி பாடகரும்,பழம்பெரும் நடிகையும் பாடகியுமான ஒருவரும் நடித்த படம் இது. This movie is a fitting example of Stockholm-syndrome that blossoms into love.

NB: Enjoy the Continuous Play of all the clues so far.

Answer: Guna (1991)

Advertisements