Tags

, , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

அன்பர்களுக்கு வணக்கம். நேற்றைய புதிர், நிறைய பேருக்கு மிகவும் கடினமாக இருந்ததது என்பதை விட, எளிமையாக இருந்தும் கடினமாக இருந்தது என்பது தான் வேடிக்கை. இல்லையா? ஆனால், விடை தெரிந்தவுடன், நீங்கள் பரிமாறிக்கொண்ட மகிழ்ச்சியே எனக்கு மகிழ்ச்சியளித்தது. புதிரை கேட்டுப்பார்த்து, குற்றம் இல்லாமல் விடையளித்த அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

சிலர் கூகுளில் தேடி விடையைத் தந்தீர்கள். ஹும்🙂 என் தவறு. முதலில் கூகுளில் தேடிப்பார்த்து underestimate செய்து அதையே lifelineஆக நான் கொடுத்தது, என்னுடைய முட்டாள்த்தனம் தான்.🙂 இனி, இந்தவகையான risky தவறு நடைபெறாது என்று பகிரங்கமாக சொல்லிக்கொள்கிறேன்.

I take constructive criticism very seriously. So, I want to thank and appreciate @SoundParty for his cogent suggestion. Here it is:

நேர்மையான கருத்து. நண்பருக்கு என்னுடைய நன்றி. மேலும், இவ்வகை தவறு இனி நடக்காது என்று மீண்டும் ஒரு முறை கூறிக்கொண்டு, நேராக இன்றைய புதிரில் ஆஜராவோம். சரியா?


Percussion-based themeஆகவே போகிறதா? கவலை வேண்டாம். நாளையில் இருந்து gear-shift செய்யப்படும். ஆனால், இன்றும் அருமையான percussion-based interlude. இது, tempoவிலும் styleலிலும் சற்று 110/365 – #365RajaQuiz – A softy prelude duet :) மாதிரி இருக்கும்.

கேளுங்களேன்.

அருமையான percussion-beatன் மத்தியில், மெலிதான வயலின் மற்றும், மிகவும் அடக்கிவாசிக்கப்படும் flute வருகிறது. இந்தப் படத்தில் அனைத்து பாடல்களும் ஹிட். இந்தப் படத்துக்கு சற்று எதிர்பார்ப்பு அதிகம் இருந்தது. ஆனாலும் சரியாக போணியாகவில்லை. இந்தப் படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகம் இருந்ததற்கு காரணம், இதன் ஹீரோ, அப்போது தான் வேறு ஒரு பயங்கர ஹிட் படத்தில் நடித்து ஆட்டம் போட்டு வந்திருந்தார். அந்த கால கட்டத்தில், ராஜாவின் இசையில் இருந்து விலகி, மக்கள் வேறு சில மயக்கங்களில் இருந்த காலம் என்றும் சொல்லலாம். அதனால், இந்த படத்தில் வந்த பல பாடல்கள் கவனிக்கப்படாமல் போய்விட்டது. மேலும், ரேடியோவில் இருந்து டிவி பக்கம் மக்கள் சாய்ந்த காலம் வேறு.

ஆனால் பல பாடல்கள் நன்றாக இருந்தாலும், இந்த பாடல் தான் top hit இந்த albumல்.

ஆரம்பமே அருமையான ஒரு romantic hummingல் ஆரம்பிக்கும். இந்தப் பாடல் முழுவதும் bass-guitarsன் ஆளுமை அதிகம் இருக்கும். அதே போல, பாடல் முழுவதும் சாதாரண guitarsன் strumming உம் இருக்கும்.

சுலபம் தான்.

இந்த சுலபம், நேற்றைய கடுப்பைத் தணிக்க :))

Please leave your answers below in the COMMENTS section with your Twitter handle/username. For other discussions on Twitter, please use hashtag #365RajaQuiz.

Clue: Please try to figure out the answer sincerely as the posted audio is the clue and hint you will ever need. But, if you need one more lifeline, then just select the box below,with your mouse, between the double-quotes to view the additional hint:

மலரின் பெயரைக்கொண்ட இந்த நடிகை, ஆந்திர அரசியலிலும் காலை பதித்தவர். இவர் நடித்த படப்பாடல் தான் இது.

NB: Enjoy the Continuous Play of all the clues so far.

Answer: Kaadhal Vaanile (காதல் வானிலே) from Rasaiyya (ராசைய்யா) (1995)