Tags

, , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

தீபாவளிக்கு கொடுக்கப்பட்ட க்ளூ என்னும் வலையில் சிக்கிய மீன்கள் பல. மக்களே, கோபம் வேண்டாம் 🙂 ஒரு ஜாலிக்காக அப்படி செய்தேன். ஆனால் இம்முறையும் தடுக்கி விழுவார்களா என்று நினைத்த மாதிரி, சில பேர் தடுக்கித் தான் விழுந்தனர். I hope the experience was very much fun. We received a lot of Tweets — often from those, who fell for the trap! 🙂 Nevertheless, they all took it very humorously by smiling over their foibles.

நேரில் கண்டால் எனக்கு பொது மாத்து எல்லாம் கொடுத்துவிடாதீர்கள். இந்த வலையில் சிக்கிய நம் நண்பர் ஒருவர், சுவிட்சர்லாந்து வக்கீல் நோட்டீஸ் அனுப்பறேன் பாருங்கள் என்று பகிரங்கமாக மிரட்டும் அளவுக்கு, ரகளையோ ரகளை. 🙂

கண்டிப்பாக இந்த தீபாவளியை, இந்த சிரிப்பு வெடி மூலமாக நடத்தி முடித்ததில் பெருமகிழ்ச்சி.

இதில் இன்னும் வேடிக்கை என்னவென்றால், பதில் சரியாக சொன்ன அன்பர்கள் கூட, பதிலைப் போட்டப் பிறகு, பயப்பட ஆரம்பித்துவிட்டனர். செம ரகளை போங்கள். 🙂


இன்று குழந்தைகள் தினம். பிள்ளைப் பொன்வண்டுகள். உலகத்தில் பல உள்ளங்கள், என்றும் குழந்தைக்கு புது எண்ணங்கள். என்றும் கண்ணன் பிம்பங்களே.

சரி. இப்படி எல்லாம் பாடல்கள் எல்லாம் பாடிக்கொண்டு தான் இருக்கிறோம். பத்தோடு பதினொன்றாக, “happy children’s day” என்றும் status-update எல்லாம் கூட போட்டாகிவிட்டது. ஆனால் இன்று குழந்தைகளின் நிலை என்ன? அவர்கள் எப்படி இருக்கிறார்கள்? ஒவ்வொரு நாளும் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளை நாம் செய்தித்தாள்களிலும் ஊடகங்களின் வாயிலாகவும் பார்த்துக்கொண்டு தானே வருகிறோம்? குழந்தைகளுக்கு எதிராக commercialized economyஆக, எது வேண்டுமானாலும் அவர்களுக்கு marketing செய்யலாம், அவர்களை ஒரு செயற்கை போதையில் தள்ளி, அது இல்லை என்றால், வாழ்க்கை இல்லை என்ற நிலைக்கு கொண்டு போய், நிரந்தரமாக அவர்களை வஸ்துகள் மீது வெறித்தனமான போதையில் விட்டுவிடும் அளவுக்கு தானே modern capitalism அவர்களை வைத்திருக்கிறது?

இந்த புத்தகத்தை யாரேனும் வாசித்து இருக்கின்றீர்களா? இம்மாதிரி கசடு அங்கே இந்தியாவிலும் mainstream ஆக ஆரம்பித்து பல காலம் ஆகிறது.

Born to Buy
(Born to Buy: The Commercialized Child and the New Consumer Culture [Paperback])

இது ஒரு புறம் என்றால், குழந்தைகளோடு நாம் உண்மையில் நன்றாக நேரத்தை செலவு செய்கின்றோமா என்று கேட்டுக்கொள்ள கடமைபட்டுள்ளோம். முன்னேற்றம் என்ற போலியான போர்வையின் கீழ், cellphone & gadgetryஐ நோண்டிக்கொண்டே, குழந்தைகளின் தேவையைக் கூட உதாசீனம் படுத்திய வண்ணம் multitasking செய்கிறோம். ஆயாக்கள், வேலையாட்களிடம் குழந்தைகளை outsourcing செய்கிறோம். அல்லது, உயிரற்ற, தீபாவளி நோம்பிக்காசு கொடுக்கவேண்டியிருக்காத ஜடமான தொலைக்காட்சி என்னும் baby-sitterகளிடம் குழந்தைகளை விட்டுவிட்டு, நாம் பாட்டுக்கு நம் வேலையை பார்க்கப் போகிறோம். அல்லது, இன்னும் மோசமாக அவர்களின் வாயை அடைக்க electronic pacifiersஆக, TiVo, Video-Games என்று ersatz நிவாரணிகளை அள்ளித்தெளிக்கிறோம்.

கூட்டிகழித்துப் பார்த்தால், இன்றைய குழந்தைகள், அன்றைய innocence மற்றும் childlike freedomஓடு இருக்கிறார்களா என்ற கேள்வியை மட்டும் இங்கே வைக்க விரும்புகிறேன்.

மேலும், இன்று குழந்தைகளை வக்கிரப் பொருட்களாக பார்க்கும் தீய சக்திகள், அவர்களுக்கு எதிராக கட்டவிழ்த்துவிடும் பலாத்காரம் போன்ற அசிங்கங்களும் அன்றாடம் செய்திகள் வாயிலாக நாம் அறிகிறோம்.

நான் பார்த்த வரையில், ஒவ்வொரு குற்றவாளிக்கும், போதைக்கு அடிமையான வழிதவறிய ஆடுகளுக்கும் பின்னால் பல பொல்லாத குழந்தைப்பருவ விசயங்கள் புதைந்து இருக்கும்.

இன்றைய கால கட்டத்தில் குழந்தைகள் தங்கள் உறவினர்களாலேயே கடத்தப்பட்டு, ஒரு நாடு விட்டு இன்னொரு நாட்டுக்கு traffic செய்யப்படும் கொடுமைகளும் நடந்துகொண்டு தான் இருக்கின்றன.

Parental Kidnapping in America.
(Parental Kidnapping in America: An Historical and Cultural Analysis [Paperback])

இப்படி பேசிக்கொண்டே போகலாம். இன்றைய நாளில், வெறும் மேற்போக்காக, “Happy Children’s Day” என்று சொல்லாமல், இதை பற்றி எல்லாம் சிந்தித்து செயல்பட்டோமே என்றால், அன்று தான் உண்மையில் “Happy Children’s Day.”

Remember this: at every point, children are short-changed because they are treated as objects – chattels – to have no voice for themselves. This must change. Every right-thinking adult must do his or her part to further the rights of children, so that they can be freed of all malaise and abuse to retain their childlike innocence and freedom to grow healthily.


இன்றைய பாடல், மேற் சொன்ன விமர்சனங்களை பொய்ப்பிக்கும் வண்ணம், குழந்தைகளுக்காகவே பாடப்பட்டது. இந்தப் பாடல் எனக்கு சிறு வயதில் இருந்தே மிகவும் பிடிக்கும். அதுவும் இந்த interlude sequence மிகவும் பிடிக்கும். ஆரம்பத்தில் santoorல் ஆரம்பிக்கும். பின்னர் வருவது ஒரு வித mild percussionஆ அல்லது trampolineஆ என்று தெரியவில்லை, சும்மா “ஜில் ஜில்” என்றே கூட வரும். இதில் கூடவே, வரும் வயலின்கள், மற்றும் புல்லாங்குழல் இசை. அதில்மீண்டும் மேல் எழும்பி வரும் santoor என்று, இசை பாட்டுக்கு ஒரு சவாரி போல போய்க்கொண்டே இருக்கும். இது குழந்தைகளின் பாடல் என்ற காரணத்தாலோ என்னவோ, ஒரு வித fantasy feel இந்த sequenceலும் சரி, பாடல் முழுக்கவும் சரி, இருந்துகொண்டே இருக்கும்.

பாடலின் வரிகள், வைர வரிகள். அதிலும் இந்தப் பாடலில்.ஒரு particular phrase of words பாசத்தை குறித்து வந்த வண்ணம் இருக்கும்,

இம்மாதிரி பாடல்களில் எல்லாம் குழந்தைகளின் உணர்வுகளும், அவர்களின் உணர்ச்சிகளையும் பாங்குடனே, அழகுடனே சொன்னார்கள். இன்று “7C” என்பது போன்ற ஒன்றுக்கும் உதவாத, உபத்திரவமான டிவி சீரியல்களை பார்த்து தானே நம் குழந்தைகள் இன்னும் அதிகம் bullying மற்றும் குறும்பு செய்வது எப்படி என்று கற்றுக்கொள்கிறார்கள்?

இந்த மாதிரியான மென்மையான இசை, அர்த்தமுள்ள பாடல் வரிகள் எல்லாம் இன்று ஏன் வருவதில்லை?

இதைப் பாடிய அந்த உன்னத பாடகரின் தந்தையுள்ளத்தை, என் மூச்சு உள்ளவரை எண்ணிப் பார்ப்பேன். மலேசியா வாசுதேவன், நம் அனைவருக்கும் விட்டுச் சென்ற signature songsல் இது ஒன்று என்று தாரளமாக சொல்லலாம். இந்தப் பாடலை நாள்தோறும் என்ன, காலம் முழுக்க கேட்கலாம். அந்த அளவுக்கு ஒரு படுபயங்கர feel இருக்கும். ஒரு வித compunction தெறிக்கும் அவரின் குரல் renditionல். படம் பார்த்தவர்களுக்கு அது ஏன் என்று புரியும். சிறு வயதில் பார்த்ததோடு நான் இந்த படத்தை இன்னும் பார்க்கவில்லை. அதனால், இத்துடன் நிறுத்திக்கொள்கிறேன் :).

இந்தப் பாடலில் இரண்டு வரிகள் வந்த வண்ணம் இருக்கும் (repeat). அது என்ன என்று பின்னூட்டத்தில் நீங்கள் சொல்லுங்கள். நான் சொன்னால், அப்புறம் இது புதிராக இருக்காது…விடையாக மாறிவிடும் 🙂

இனிய குழந்தைகள் தினம், ஒவ்வொரு நாளும் நம்முடைய கைகளில். அந்த gadgets, smart-phones, TV கழிவுகளை தூர வீசிவிட்டு, உச்சி முகர்ந்து, அவர்களுக்கு முத்தங்களோடு “Happy Children’s Day” என்று சொல்லலாமே 🙂

Please leave your answers below in the COMMENTS section with your Twitter handle/username. For other discussions on Twitter, please use hashtag #365RajaQuiz.

Clue: Please try to figure out the answer sincerely as the posted audio is the clue and hint you will ever need. But, if you need one more lifeline, then just select the box below,with your mouse, between the double-quotes to view the additional hint:

This movie was one of the earliest movies of the time to have been simultaneously shot in both Telugu and Tamil.

NB: Enjoy the Continuous Play of all the clues so far.

Answer: Adi Aadu Poongodiye (அடி ஆடு பூங்கொடியே) from Kaali (காளி ) (1980)

Advertisements