362/365 – #365RajaQuiz – “Won’t you be there, with me?”

Tags

, , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

வணக்கம்.

என்ன? இன்னும் மூணு நாள் தானேன்னு முணுமுணுத்துட்டு இருக்கீங்களா? 😦

இன்று முதல்365/365 வரை, 22-24 hours only will be given to answer the clues. On the final day, 365/365 will be released ahead of the original timing. It will be released, when the Valedictory functions start in Chennai/Madras, India around 11 AM Indian Standard Time. For the final 365/365 alone, we can allow only around 15 hours or so, as I need to complete the tagging and run the final reports to publish the results.

Please take a moment to review ALL of your tag positions NOW! Please do NOT wait until the final hour for any corrections. Thanks in advance 🙂


இன்று முதல், இனி வரும் மூன்று நாட்களுக்கும் tie-breakers தான். ஒரு முறையாவது பாடலைக் கேட்டவர்களுக்கு, வரும் அனைத்து க்ளூக்களும் breathers தான். அப்படி இல்லாதவர்களுக்கு சற்று தேடுதல் வேட்டை தேவைப்படும். இறுதி நாட்கள். இதில் உங்கள் முழு வேகத்தையும் காட்டி tag வாங்கினால், அது ஒரு விதத்தில் மகிழ்ச்சி தானே? யோசித்துப் பாருங்கள். புகுந்து கலக்குங்கள்.


இன்று வரும் மெலடி பாடலை கேட்டு இருக்கின்றீர்களா? பெண்ணின் ஏக்கப் பாடல்களில் ஒன்று. செம பாட்டு. பாட்டின் வேகமே இப்படித் தான் இருக்கும். ஆரம்பம் முதல், இறுதி வரை Passenger Train வேகத்தில் தான் போகும். அருமையான பாட்டு. இதமான percussion மற்றும் synth. அதனுடன் flutes. தபலாவின் இதமும் உண்டு.

பாடலின் ஆரம்ப வரி, இசைஞானி நம்மைப் பார்த்து கேட்பது போலவே இருக்கும். ;)) புதிரின் இறுதியில் இதை இறக்க முடிவு செய்ததற்கு அதுவே முதன்மையான காரணம்! 🙂

நன்றி.

Have a nice week ahead.

Please leave your answers below in the COMMENTS section with your Twitter handle/username. For other discussions on Twitter, please use hashtag #365RajaQuiz.

Clue: Please try to figure out the answer sincerely as the posted audio is the clue and hint you will ever need. But, if you need one more lifeline, then just select the box below,with your mouse, between the double-quotes to view the additional hint:

The character of the protagonist of this movie is a robber, who is reformed by his love. So, this movie is named after an author of olden times, who used to be robber, before he was reformed to write his magnum opus. The lyricist of this movie happens to have a pen-name that is the name of a character in that magnum opus of this author.

NB: Enjoy the Continuous Play of all the clues so far.

Answer: Kooda Varuveeya (கூட வருவியா) from Vaalmiki (வால்மீகி) (2009)

361/365 – #365RajaQuiz – Stereo Experiments

Tags

, , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

வணக்கம்.

நேற்றைய 360/365ல் 3 போனஸ் டிராக்குகளை பதிவேற்றி இருக்கிறேன். கேட்டு மகிழுங்கள்.


பல தனிப்பட்டக் கருத்துகள் இந்த 360+ நாட்களில் அதிகம் வந்திருக்கிறது. அதிகம் அதை பகிர்ந்து கொண்டது இல்லை. கீச்சில் கூட அவர்கள் ரசித்து, சிலாகித்து கீச்சுவதை அதிகம் RT செய்வேனே ஒழிய, நன்றியும் வாழ்த்தும் கூறி வருவதை என் திருப்திக்கு favorite மட்டும் செய்வேன். RT செய்வதில்லை 🙂 .

இருந்தாலும், இரு வாரங்களுக்கு முன்பு, ஒரு தம்பதியரிடம் இருந்து இப்படி ஒரு மடல் எனக்கு வந்ததும், இதை உங்கள் அனைவரோடும் பகிர்ந்துகொள்ளட்டுமா என்று கேட்டேன். அதற்கு அவர், தாராளமாக என்று பதில் அனுப்பினார்.

What I loved about this short email was that it was very simple, innocent, and profoundly heartfelt! I don’t know how to explain, but, I thought, may be different people are experiencing #365RajaQuiz in various ways. So, the next time — whether we all come across something simple or are impelled to do something simple — we shall never doubt its power. 🙂 Every simple act, has a profound effect on people, whom we may not know. Nevertheless, those acts have the power to touch, beyond what any of us could have imagined. Truth be said, I never expected this on 1/365. I was always very focused on what I should be doing everyday. Period. But, even I am quite taken aback by all the positive reactions from folks, whom I have not seen, met, or even spoken with. I am a lover of simplicity. I hate pretense 🙂 So, anything that is simple, touches me and moves me.

அதனால், இதோ — am pasting it in verbatim :):

உங்களோட இந்த முயற்சி பல பேருக்கு சந்தோஷத்தை தந்து இருக்குன்னுத்தான் சொல்லனுமுங்க. எங்க கணவர் இந்த போட்டியில் சேர்ந்த பிறகு மிகவும் உற்சாகமா ஆயிட்டாங்க, புது நண்பர் வட்டம், பிடித்த விஷயத்தில் அக்கபுர்வமான விவாதம் மற்றும் கண்டுபிடிப்பு, தினமும் ஒரு புது விஷயத்தை தெரிந்துக்கொள்வது அல்லது அதற்கான தேடல் என்று சகலமும் இதிலே இருக்கு இல்லங்கிகளா?
அதனாலேயே மாலை மணி 4;30 ஆன போதும் எந்த ஊரிலே, எந்த வேலையிலே இருந்தாலும் சரி ஓட்டமா ஓடி கம்யூட்டர் முன்னாடி உட்கார்ந்திடுவாங்க, இதுவரையில் இந்தளவுக்கு அவரே எந்த விஷயமும் 365….quiz மாதிரி பாதிச்சது இல்லிங்க, அப்படி சொன்னத்தான் அது சரி.

நானும் அவரிடம் , போட்டியில் ஜெயிக்கிறவங்களுக்கு ரெக்ஸ் என்ன தருவாங்கன்னு? அட்லாண்டாவில் இருந்து வருவாங்களா என்று எல்லாம் கேட்பேனுங்க…அதுக்கு பரிசெல்லாம் ஏதுக்கு ? இவ்வளவு முன்முயற்சி எடுத்து நமக்கெல்லாம் ஒரு மனசுக்கு பிடித்த வேலைய தினமும் அலுக்காம சிரமப்பட்டு தர ரெக்ஸ்க்குதான் நாமே நன்றி சொல்லனும்….என்று சொல்லுவாங்க.

போட்டிய விடுங்க, இந்த அனுபவம் இருக்கே அதுதானுங்க சிறப்பு.

இசையென்றால் இளையராஜா, அவங்களோட இசையே 365 நாட்களுக்குள் அடக்கிடமுடியாதுதான், இருந்தாலும், இந்த போட்டியில் கலந்துக்கொண்ட உணர்வு மிக்க அவங்களோட ரசிகர்கள், இந்த 365 நாட்களும் இளையராஜாவின் இசையில் வாழ்ந்தாங்கன்னுத்தான் சொல்லனும். இந்த நிகழ்ச்சியின் மூலம் அவரைப்பற்றி மேலும் தெரிந்துக்கொள்ளவும், ஒரு நாளுக்கு குறைந்தது 10 – 20 பாடல் வரை கேட்கும் வாய்ப்பு இந்த நிகழ்ச்சி அவங்களுக்கு வழங்கியிருக்கு……அவரின் இசைபயணத்திற்கு ரசிகர்களின் மரியாதை செலுத்தும் ஒரு வித வடிவமாதான் நான் இதே பார்க்கிறேன்……………..

…அதனாலே எங்களோட நன்றிகளை தயவு புரிந்து ஏத்துக்கோங்க……உங்களின் இந்த முயற்சிக்கு எங்களின் வாழ்த்துக்களுங்க……

After I read the aforementioned note, I didn’t know what to write back. That simplicity of the tone, an innocent dialect…I mean, it moved me profoundly. I just thanked both of them. I am glad to learn that many folks like them may have formed deep bonds with each other, through these 360 days 🙂 வாழ்க வளமுடன்.

Please share such stories, if you can. I will be eager to learn more about such friendships forged 🙂


இன்றைய பாடல், சுலபமான பாடல் தான். அந்தக் காலத்தில் technology இசைஞானிக்கு மெதுவாகத் தான் உதவ ஆரம்பித்தது. அதில் ஒன்று stereophonic recording. ஆனால், sound engineer ஒரு பக்கம் இருந்து இன்னொரு பக்கம் கூடு விட்டு கூடு தாவுவது போல போய் போய் வந்தால் தான் மக்களுக்கு ஆச்சரியமாக இருக்கும் என்று நினைத்தாரோ என்னவோ, அப்படித் தான் ஆரம்ப காலத்தில் ஒலிப்பதிவு செய்து இருப்பார்கள். சிரிப்பாக இருக்கிறதா?

இன்றைய பாடலைக் கேளுங்கள். குறியீடுகள் பல போட்டு இருக்கிறேன். பாருங்கள்.

இந்தப் பாட்டு அட்டகாசமான ஹிட். ஆனால், இதில் நடித்தவுருக்கு இந்தப் பாட்டு கொஞ்சம் டூ மச் என்று நிறைய பேர் கிண்டல் செய்வதைக் கண்டு இருக்கிறேன் 🙂

அடிக்கடி நான் சொலவது போல, நல்ல ஒலித்தரத்தில் சிலப் பாடல்களைக் கேட்டால், அவை என்றும் நம்மிடையே ஒரு பிணைப்பை ஏற்படுத்திவிடும். அந்த வகையில், இந்தப் பாடலை Stereo splitல் கேட்டு இருக்கின்றீர்களா என்று எனக்குத் தெரியாது. அதனால், இன்று இந்தப் பாடலை எனது ஒலி நாடாவில் இருந்து பதிவு செய்து ஏற்றி இருக்கிறேன். In one way, this can be also about a technical matter I wanted to explain to you folks. அதாவது, ஆரம்பத்தில் ப்ர்ர்ர்ர்ர்க் ப்ர்ர்ர்ர்க் என்று ஒரு சத்தம் கேட்கிறது அல்லவா? அது ஒன்றுமே செய்ய முடியாது. ஒரு பாட்டு பலமாக அடி வாங்கி இருந்திருந்தால் — பயங்கர ஹிட் ஆகி அடிக்கடி LPஐ ஓட்டி இருந்தால், அந்த needle பட்டு பட்டு, பாடலின் ஒலியுடன் அந்த damaged noise integrate ஆகிவிடும். அவற்றை பிரித்தல் இயலாது. அதைச் சுட்டிக்காட்டவே வேறு ஒரு பாடலைத் தவர்த்து இதை பதிவேற்றினேன். அதே போல, இதை கோவை ராயல் எலக்ட்ரானிக்ஸில் பதிவு செய்யச் செல்லும்போது, அந்தக் கடைக்காரர் வேறு ஒரு மோனோ சவுண்டில் வேறு ஒரு காசெட்டில் இருந்து இந்தப் பாடலை பதிவு செய்து தரவா என்று கேட்டார். ஏன் என்றால் அதில் ப்ர்ர்ர்ர்ர்க் ப்ர்ர்ர்ர்க் ஒலி இருக்காது என்றார். ஆனால், இங்கே தான் ஒன்றை நீங்கள் நன்கு கவனிக்க வேண்டும். நான் சொன்னேன், இல்லை LPல இருந்தே போட்டுடுங்க. அப்போது noise removal எல்லாம் எனக்கு தெரியாது. கணினியைக் கூட வைத்துக்கொண்டது இல்லை. கல்லூரி லேபில் தான் கணினியை உபயோகித்தது உண்டு. ஆனால் LPல் பதிவு செய்தது எவ்வளவு நல்லதாக போய்விட்டது பாருங்கள். இல்லை என்றால், இந்த மாதிரி ரசித்துக் கேட்க முடிந்து இருக்காது. உங்களுக்கும் அதை பதிவேற்றி காட்டி இருக்க முடியாது.

அந்த ப்ர்ர்ர்ர்ர்க் ப்ர்ர்ர்ர்க் இரைச்சல் முடிந்த அளவுக்கு முதல் இடையிசைக்கு அருகே போகும்போதே அடக்கிவிட்டேன். Not a big deal. I hope you all like it.

இந்தப் பாடலால் எனக்கு இணையம் மூலம் அறிமுகமான நண்பர், 14 வருடங்களுக்கும் மேலாக எனக்கு நெருங்கிய நண்பராக இருக்கிறார். சிறு உபாதைகள் அவரை உரசிப்பார்த்துக் கொண்டிருக்கும் இந்தத் தருணத்தில், அவருக்கு ஆறுதலாகவும், அவர் நினைவாகவும் இதை பதிவேற்றம் செய்தேன். அதே போல இன்னும் இரண்டு உயிர் நண்பர்கள் எனக்கு இசைஞானியின் இணையதளத்தின் மூலம் அறிமுகமாகி, 14 வருடங்களுக்கும் மேலாக நெருக்கமாக பயணித்துக் கொண்டு இருக்கிறோம்.

#365RajaQuizலும் எனக்கும் சரி உங்களுக்கும் சரி, இம்மாதிரி நட்பு உறவுகள் பெருகி, வாழ்வாங்கு வாழ வேண்டும் என்று வாழ்த்தி விடை பெறுகிறேன். Have a nice day.

நன்றி.

Have a nice week ahead.

Please leave your answers below in the COMMENTS section with your Twitter handle/username. For other discussions on Twitter, please use hashtag #365RajaQuiz.

Extensively noise-removed. Noise-gate applied. No tempo was altered. Enjoy the bass and the clear sounds as present in the original LP to appreciate the lead-guitars better 🙂

Clue: Please try to figure out the answer sincerely as the posted audio is the clue and hint you will ever need. But, if you need one more lifeline, then just select the box below,with your mouse, between the double-quotes to view the additional hint:

Lyricist was Kaviarasar Kannadasan.

NB: Enjoy the Continuous Play of all the clues so far.

Answer: Engengo Sellum (எங்கெங்கோ செல்லும்) from Pattakathi Bhairavan (பட்டாகத்தி பைரவன்) (1979)

360/365 – #365RajaQuiz – Immaculate (BGM 4 tracks + BONUS tracks)

Tags

, , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

வணக்கம்.

As a last minute addition, I am adding BONUS tracks from this movie. FYI.

எல்லா நல்ல விசயங்களுக்கும் ஒரு முடிவுக்கு வருவது போலத் தான் நம் #365RajaQuizல் பின்னணி இசைக்கு என்று இறுதியாக இது களம் இறங்குகிறது.

எனக்கு மிகவும் பிடித்த, நெருக்கமான பின்னணி இசைதான் இன்று. அடிக்கடி நான் கீச்சியதைப் பார்த்து இருப்பீர்கள். எத்துணையோ என்கோடிங் செய்தாலும் முதல் பின்னணி இசை (7/365) ஒலிவடிவத்தை என்கோடிங் செய்த அந்த அனுபவம் போகவே போகாது என்று. அதன் இசை அப்படி!முதன் முதலாக வந்த 7/365 பூவிழி வாசலிலே போல, இதுவும் ஒரு திகில் படத்தின் பின்னணி இசை தான். அதில் என் உள்ளத்தை கொள்ளைக் கொண்ட மாதிரியான இசை சங்கதிகள் நிறைந்த பின்னணி இசையை நான்காக பிரித்து எடுத்து, உங்கள் முன் இறக்குகின்றேன். அதை தனித்தனியாகப் பிரித்துக் கேட்டு, லயித்து விடையை அளித்தால் போதும். 🙂

ஒவ்வொரு பின்னணி இசையையும் கேட்கும் போது, இது என்ன படம் என்று நினைத்து கேட்காதீர்கள். அதில் இருக்கும் பாவமும், உணர்வும் எப்படி இருக்கிறது என்பதை நன்கு ரசித்தால், விடை தானாக வரும். அதற்கு உதவத் தான் இந்த விமர்சனமும், LL க்ளூவும் இருக்கிறதே. வேறு என்ன வேண்டும். சொல்லுங்கள்? 🙂

First, let me give a very important clue. That goes straight into the reason behind the title Immaculate. It is personal to me :). But, in this sequence (4th track), where the heroine wears the dress the hero gives, she looks spotlessly beautiful. Maestro also gives such a beautiful Western classical based background score. At that point, the hero looks at her and says, Immaculate. I don’t know if the director placed it there as a pun for the score as well. I will leave it to your imagination 🙂

TRACK 1

வாருங்கள், முதல் பின்னணி இசைக்குள் போவோம். One word: What Fyodor Dyostoyevsky may have achieved with his Crime and Punishment magnum opus in making the reader wonder, whether the protagonist Raskolnikov was a good or a bad man, Maestro Ilaiyaraaja achieves the very same effect in this movie’s background score. Is the protagonist a villain? Is he a perpetrator or a victim? That is the core theme behind, how he mixes a soothing melody amid an eerie backdrop! இதுக்கு மேல சொல்ல முடியல. பயங்கர உணர்ச்சிகரமா இருக்கு 🙂

அதற்கு முன்னர், இந்தப் படத்தின் ஒரு முக்கிய க்ளூவை கொடுத்துவிடுவோம். சரியா? 🙂 protagonist ஒரு மன நோயாளி. மிருகத்தின் உள்ளேயும் ஒரு குழந்தை உட்கார்ந்துக் கொண்டு இருக்கிறது. இவனின் இந்த இரட்டை நிலையை நன்கு பிரதிபலிக்கும் விதமாக, இந்தப் படத்தின் பின்னணி இசை எப்படிப்பட்ட உணர்வுகளை உள்ளே வைத்திருக்கிறது என்று பார்ப்பீர்கள். பயங்கரத்தை உறைய வைக்கும் விதமாக ஒரு பயங்கர eeriness அதற்கு நேர் எதிரான melodyல் ஊர்ந்து வரும். (இவருக்கு எப்படி தான் இப்படி எல்லாம் யோசிக்க வருகிறதோ. நம் BGM பயணம் ஆரம்பித்த 7/365யிலும் இதே யுக்தியை இசைஞானி கையாண்டிருந்ததை நாம் ரசித்தோம், அல்லவா? அதே ஸ்டைல். அதே டெக்னிக். செம!)

அடிக்கடி நான் நெருங்கிய நண்பர்களிடம் சொல்வது உண்டு. நிறைய பேர் மெலடி எல்லாம் போட்டிருக்கலாம், போடலாம். ஆனால், இவரின் இசையில் உள்ளே பொதிந்து இருக்கும் ஆழமான உணர்வுகள், மெலடி, அடிதடி, ஆட்டம், பாட்டம்,கொண்டாட்டம், சோகம் என்பதை எல்லாம் தாண்டி நம் உள்ளத்தினுள் நமக்கே தெரியாமல் இருக்கும் உறவு நிலையையும் sub-conscious mindஐயும் தட்டி எழுப்பி உரையாடலையே நடத்தும் விதமாக அமைந்திருப்பது தான், இவரின் பின்னணி இசையின் பெருமைக்கும், பாடல்கள் பல நூற்றுக்கும் இருக்கும் பெருமையே.

இது தான் இந்தப் படத்தின் முக்கிய பின்னணி இசையே. இதையே, மெதுவாகவும், மென்மையாகவும், Jazzyகலந்த ஒரு eeriness உடன் நான்காவது ஒலிப்பேழையில் கேட்டு மகிழலாம். இப்போதைக்கு முதலாவதாக வரும் இசையைக் கேட்போமே. இங்கு பாருங்கள், இந்த பின்னணி இசையின் டியூன் மிகவும் சாதாரணமானது தான். ஆனால், அங்கு தான் இசைஞானி தன் முழுத்திறமையையும் வெளிக் கொண்டு வருகிறார். திகில் படம் என்ற காரணத்துக்காக தியேட்டரை விட்டு ஆபரேட்டரையே துரத்தும் அளவுக்கு அதிரடி இசை எல்லாம் இல்லை. அங்கே, இந்தப் படத்தை நான் அரைக்கால் டவுசர் போட்ட காலத்தில் பார்த்தது தான். இது வரை இன்னும் பார்க்கக் கொடுப்பினை இல்லை — என்கோடிங் செய்ய வேண்டி நான்காம் டிராக் சம்பந்தப்பட்ட காட்சிகளைத் தவிர 🙂 . நல்ல பிரிண்டில் வி.சி.டியும் இல்லை, டிவிடியும் இல்லை. தேடிக்கொண்டே இருக்கிறேன்.ஆனால், இந்த இசை அப்படியே மனதினுள் ஆழமாகப் பதிந்து இருக்கிறது. வயலின்கள் ஆளுமை அதிகம் செய்யும் இந்த சீக்வென்ஸில், அவை சீறிக்கொண்டே போவது போல இருந்தாலும், ஒரு முழு வட்டத்தை அடித்துக்கொண்டு மீண்டும் தொடக்க நிலைக்கே வந்து நிற்கிறது பாருங்கள். அங்கே, உங்களையும் அறியாமல், “என்னடா நடக்குது இங்கே” என்று எழுந்து உட்காரும் நிலை ஏற்படும்.


TRACK 2

சோக வயலின் ஒன்று நீண்டு வருவது போல் இருக்கிறதா? Just wait and see the guitars take over. அங்கே பாஸ் கிடாரும் ஒளிந்துக் கொண்டு லீட் கிடாருக்கு எப்படி உதவி வருகிறது என்று பாருங்கள். அதே போல Synthம் அதற்கு உதவி புரியும் அந்த பாவமான புல்லாங்குழலையும் கேட்டுப் பாருங்கள். உங்களுக்கே மனம் இளகிப் போய்விடும். அருகில் டாக்டர் இருந்தால் Oxytocinன் அளவு எவ்வளவு என்று பார்த்துவிடச் சொல்லுங்கள். 🙂


TRACK 3

இது ஜாலி ரோமாண்டிக் இசை. வெறும் புல்லாங்குழல் மற்றும் பாஸ் கிடார் போதும் இந்த மனுஷனுக்கு. எப்படி பொளந்து கட்டி இருக்கார் பாருங்க. ஏங்க, இந்த இரண்டு இசைக்கருவிகளையும் light percussionஐ பின்னாடி வைத்துக்கொண்டு எப்படி ஒரு sequence போட்டு முடித்துவிடுகிறார் பாருங்க. என்னத்த சொல்ல 🙂 Just take a precious moment to think of just this fact alone, before you move on to the next 🙂


TRACK 4

அவன் இவளுக்கு ஒரு மாடர்ன் உடை வாங்கிக் கொண்டு வந்து கொடுக்கின்றான். அணிந்து கொண்டு வரும்படி சொல்கிறான். அவளும் வேண்டா வெறுப்புடன் வந்து நிற்கிறாள். இவனுக்கு ஒரு வித fetish. மேற்கத்திய உடையை அணிந்து அவள் வரவேண்டும் என்று. அவளும் தேவதை போல் வந்து நிற்கிறாள். அதற்கு நம் இசைஞானி எவ்வளவு பொருத்தமாக Western Classicalஐ தந்து அசத்தி இருக்கிறார் பாருங்கள்! அதைத் தொடர்ந்து மேலே முதல் டிராக்கில் வந்த அதே சீக்வென்ஸ் தான் இங்கும். ஆனால் முதல் சீக்வென்ஸில் வேகமாக வந்த வயலினுக்கு பதில், இங்கே கிடார். எப்படி இருக்கிறது பாருங்கள்! குறிப்பாக பாஸ் கிடாரும், லீட் கிடாரும் will leave a lump in our throat. அருமையான, கடினமான சீக்வென்ஸ். இங்கே அவனின் அசுரத்தனத்தையும் காட்ட வேண்டும், அவனுடைய பரிதாப நிலையை பிரதிபலிக்கும் விதமாக இருக்க வேண்டும். இது மாதிரி எல்லாம் இசைஞானிக்கு முன்பும் சரி, பின்பும் சரி யாரும் போட்டதாகத் தெரியவில்லை. இவர் எப்படி இதை எல்லாம் யோசிக்கிறார்? பைசா பண்ணுவதை மட்டுமே குறிக்கோளாக வைத்திருந்தால், இவர் இந்நேரம் இவைகளை recycle செய்து இன்னொரு 4,000 பாடல்களை சுலபமாக போட்டிருக்கலாம். மிக, மிக கடினமான சீக்வென்ஸ் இது.

This movie is one of the iconic movies of the contemporary Tamil film movie industry for the dark suspense it had till the end.

Have a nice week ahead.

BONUS TRACKS

LOSING INNOCENCE

SARCASTIC CARNATIC

MATTER

Please leave your answers below in the COMMENTS section with your Twitter handle/username. For other discussions on Twitter, please use hashtag #365RajaQuiz.

These sound tracks had to be worked pretty hard to remove noise. No good original video or sound track is available. I have done my best to suppress and eliminate noise, while concentrating on the bass more to highlight the bass chords. Noise removed and noise-gate applied. No tempo was altered.

BONUS TRACKS

LOSING INNOCENCE

SARCASTIC CARNATIC

MATTER

Clue: Please try to figure out the answer sincerely as the posted audio is the clue and hint you will ever need. But, if you need one more lifeline, then just select the box below,with your mouse, between the double-quotes to view the additional hint:

This was in part inspired from a Hollywood movie and probably the one to broach the subject of Oedipus complex and Stockholm Syndrome , in a light, tangential manner. This 1-worded movie also had one of the most prominent songs of K.J. Yesudoss.

NB: Enjoy the Continuous Play of all the clues so far.

Answer: Moodupani (BGM) (மூடுபனி (பின்னணி இசை)) from Moodupani (BGM) (மூடுபனி (பின்னணி இசை)) (1980)

Fun Contest: Enter your Guesses for 365/365 – #365RajaQuiz

Let us have a fun contest to close our #365RajaQuiz 🙂

What song do you think, will feature in 365/365?

Kudos to @stallionstorms and @rmdeva for accurately picking 1 song out of 4500+ songs of Maestro Ilaiyaraaja. Close to the final day, @seevin, @tcsprasan, and @vrsaran also guessed the same song.

Enter your choices here in the comments section. On July 28, 2013, Sunday, we will announce the result LIVE from Chennai, India and Atlanta, USA, during our meeting to celebrate the official close of #365RajaQuiz.

You can enter as many choices as you want. We just want to see, if your expectation matches what I have selected for 365/365. Come on, let us inject some fun into our closing.

Don’t worry, I am giving you a lifeline clue too 🙂

This will feature both male and female singers 🙂

359/365 – #365RajaQuiz – தமிழே, உனை ஒரு நாளும் மறவேன்!

Tags

, , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

வணக்கம்.

புது வாரம் மலரும் இத்தருணத்தில், #365RajaQuizன் 365 நாள் பயணத்தில், இன்று இறுதி வாரமும் தொடங்குகிறது. இது வரை #365RajaQuizன் ஆதரவாளர்களாக வலம் வந்த உங்கள் அனைவருக்கும் என் நன்றிகளை உரித்தாக்குகின்றேன். இன்னொரு வாரம் புலர்ந்துவிட்டது என்று இனிமேல் இந்த #365RajaQuizன் தளத்தில் இருந்து வாழ்த்த முடியாவிட்டாலும், என்றும் மனதளவில் வாழ்த்திக்கொண்டு தான் இருப்பேன். 🙂 தமிழும் இசைஞானியின் இசையும் உள்ள வரையில் முடிவு என்பது ஏது.சரி தானே?

Pulavar Pulamaipithan

இன்று வரும் பாடலும், 358/365 போல என் வாழ்வோடு ஒன்றிவிட்ட பாடல். It is deeply and intensely personal. அதனால், இதனை நேற்றைய பாடலை விடவும் சிரத்தை எடுத்துக்கொண்டு encode செய்து முடித்தேன். நீங்கள் இந்தப் பாடலை YouTubeலோ, இணையதளத்தில் வேறு இடங்களில் கேட்டிருந்தாலும், இந்தப் பாடலின் கொடுமையான இரைச்சலில் மூழ்கிப் போன அருமையான சந்த ஒலிகளை ரசிக்கமுடியாமல் போய் இருக்கலாம் 😦 . அதனால் இதை encode செய்ய இன்னும் challengingஆக இருந்தது. என்னுடைய இந்தத் துணுக்கில், இந்த இடையிசையில் வரும் சந்தூர் டிங்டிங்டிங்ங்ங்ங்ங்ங் என்று ஆழமாக ஒலிப்பதைக் கவனிக்கலாம். அதே போல, தபேலா மற்றும் மத்தளம் வரும் இடங்களில் டும்டும்டும்டும் (~ 13 to 30 second marker) தெளிவாக கேட்கலாம். அதே போல நாயனத்தையும், நாகஸ்வரத்தையும் முன்னிலைப்படுத்தி வரும் பாடலில் இவர் எங்கே bass guitar எல்லாம் உபயோகித்திருக்கப்போகிறார் என்று நினைப்பவர்கள், சற்றே நிற்க. Encoding செய்துள்ள இந்த ஒலிப்பேழையைக் கேளுங்கள்……என்ன…bass-guitar clearஆ இருக்கா? இப்ப போய் வேறு எங்க வேணும்னாலும் கேளுங்க.

My point? Do NOT avoid old, ‘period’ songs! 🙂 With additional effort and careful noise-removal, such songs can give an out-of-the-world experience to a modern, headphones generation! That is the simple message, I want to submit to the audience, in this final week of our 365-day journey! 🙂

இந்தப் பாடலை என் மகளுக்கு 2 முதல் 3 வயது வரை தாலாட்டு பாடலாக ஒவ்வொரு இரவும் இசைத்ததுக் காட்டியது உண்டு. என்னுடைய iPhoneல் இருந்த ஒரே பாடல், அப்போது, இது மட்டும் தான். இதில் நகைச்சுவையான விசயம் என்னவென்றால், என்னை அறியாமல் இரண்டாம் சரணம் வரும்போதே நான் உறங்கிவிடுவேன். மகளோ, அப்பா…அப்பா..once more என்பாள். இந்தப் பாடலை நான் சிறுவயதில் நிறைய ரசித்துக் கேட்டது உண்டு.

அகில இந்திய வானொலி, கோயம்புத்தூர் வானொலி நிலையத்தில் அடிக்கடி இதை ஒலிபரப்புவார்கள். நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி நாட்களில் எல்லாம், இதை வெகுவாக ரசித்து, உள்வாங்கி internalize செய்தே விட்டேன். இந்தப் பாடலைக் கேட்டால் பிணத்துக்கு கூட தமிழ் மீது ஒரு பற்று வரும்! பாடல் வரிகளையும், இசையையும் பிரிக்க முடியாத organic கலவையான இந்தப் பாடலுக்கு அம்மாதிரியான inspirational power உண்டு 🙂 அந்தக் காரணத்தினால், எப்போதுமே இந்தப் பாடல் எனக்கு கொள்ளைப் பிரியம்.

அதை ஒரு நாள் தனியாக நான் கேட்டுக்கொண்டிருக்க மகளுக்கும் இந்தப் பாட்டு பிடித்துவிட்டது. தனிக்காட்டு ராஜாவில் I want அக்கா song என்று எப்படி ராசாவே உன்னத்தான் எண்ணித்தான் பாடலை கேட்டு ரசிப்பாளோ, இந்தப் பாட்டை, I want தம்பி song (பாடலில் ஒரு இடத்தில் “தம்பி” என்று ஒரு சொல் வரும் :)) என்று கேட்டு ரசிப்பாள். அதுவே தாலாட்டு பாடலாக மாற, அவளுக்குள்ளும் இந்தப் பாடல் ஒருவித சுகத்தையும், ஆறுதலையும் தந்து இருந்ததைக் கண்டு ஆச்சரியப்பட்டேன். என்ன விந்தை இது என்று. அதுவும், ஒரு முறை இந்தப் பாடல் பாடி முடிக்கும் முன்பே என்னையும் அறியாமல் அது என்னை உறங்க வைத்துவிடும். என் மகளோ, இந்தப் பாட்டை repeatல் கேட்டே ஆகவேண்டும் என்று பல முறை பாட வைப்பாள். அப்போது தான் முதன்முறையாக iPhoneல் எப்படி அந்த loop modeல் பாட வைப்பது என்று கூட கற்றுக்கொண்டேன். (I do not listen to songs on mobile and PC devices, normally :))

Music may be in the genes. Does musical-appreciation also flow through the genes? That is what my daughter made me realize, at several levels. 6 years after, when I played the original CD that was recorded for her as a 3-month old baby was Kuyil Paatu (Ilaiyaraaja version). She immediately latched on to it. She did NOT want to play any other song. When I played the joyful version of Swarnalatha, she asked me to just keep playing IR’s version in repeat mode. இம்மாதிரி பல அனுபவங்கள். சுகமானதும் கூட.

அப்படி என் வாழ்வில் ஒரு தகப்பன் – மகள் பாடல் என்ற அந்தஸ்தைப் பெற்ற பாடல் தான் இது, albeit, it has nothing to do with filial theme 🙂

Today’s song is pedagogical in nature!

பாடலில் குருவாக ஒருவர் பாட, சிஷ்யர்(or சிஷ்யை) பாடிக்கொண்டே வருவது போல முழு பாடலும் போகும். இதில் நாகஸ்வரம் வருகிறதே….இது ஏதோ, போட்டு ஆகவேண்டும் என்று இசைஞானி போடவில்லை. படத்தைப் பார்த்தோருக்கு இது ஏன் என்று நன்கு விளங்கும்! ஒவ்வொரு இசைக்கருவியையும் அளந்து அளந்து போட்டிருப்பார். ராகமும், இசையும்,மெலடியும், தாளமும், இந்தப் பாடலை evergreen classicஆக ஆக்கி இருக்கிறது.

நிற்க.

இசை எந்த அளவுக்கு ஒரு ரசிகனை கட்டி இழுத்துப்போடுமோ, அதே அளவு, அருமையான பாடல் வரிகளைக் கொண்ட பாடல்கள் பாடலாசிரியர்களை முன் கொண்டு வந்து நிறுத்திவிடும்.

இந்தப் பாடலை எழுதியவர், சந்தக் கவி என்று சொந்தம் கொண்டாடும் அளவுக்கு சந்தத்துக்கு சிறப்பாக எழுதக் கூடிய புலவர் புலமைப்பித்தன்.

இந்தப் பாடலைக் கேட்டால் தமிழ் மொழி மீது பீடும், பெருமையும், உவகையும், காதலும், அன்பும், பற்றும், ஏன் வெறியே கூட வந்தே விடும். தமிழ் இசையின் பெருமையையும், தமிழின் அருமையையும், இரண்டே சரணத்தில் அணுகுண்டு அளவுக்கு ஆற்றலை ஒளித்து வைத்தாற் போல எழுதி தள்ளிவிட்டு போய் இருப்பார் புலவர் புலமைப்பித்தன். அதற்கு ஏற்றவாறு இசைஞானியின் 2nd half of each Saranamஐ கவனியுங்கள்…உச்ச ஸ்தாதிக்கு இழுத்துக்கொண்டு போக போக, அதற்கு பதிலடியாக புலமைப்பித்தனின் strong words of love for Tamil அங்கு வெளிப்படும்.

சுருக்கமாக சொன்னால், பாடலைக் கேட்டு உவகை அடையலாம். மகிழலாம். பெருமைப் படலாம். ஆனால் நான் குறியீடு செய்துள்ள இடத்தில் வினவியது போல, இரண்டு இடையிசையின் இறுதியில் வரும் அந்த சொற்ப வினாடிகளில், புல்லாங்குழலும் சந்தூரும் இசைக்கும் அந்தத் தருணங்களில் உங்களையும் அறியாமல் கண்கள் பனிக்கவில்லை என்றால் சொல்லுங்கள் பார்ப்போம். 🙂

அது தான் இந்தப் பாட்டின் சிறப்பே.

அது தான் இந்தப் பாட்டின் சந்தத்துக்கும், இசையின் மெலடிக்கும் உள்ள சிறப்பே.

A song like this, that is palatable to a child, clearly vouches for its pristine purity.

Soulful!

தமிழும் இசை(ஞானி)யும் இருந்தால் மரணம் ஏது?

நன்றி.

Have a nice week ahead.

Please leave your answers below in the COMMENTS section with your Twitter handle/username. For other discussions on Twitter, please use hashtag #365RajaQuiz.

Very extensively noise-removed, as the original sound for this track is very limited in its quality. Several passes at multiple locations had to be done before noise-gate could be applied. Audio quality on YT and other sites are poor for this entire album. Please let me know, if a better source exists.

Clue: Please try to figure out the answer sincerely as the posted audio is the clue and hint you will ever need. But, if you need one more lifeline, then just select the box below,with your mouse, between the double-quotes to view the additional hint:

Nathaswaram legends M.P.N Sethuraman and M.P.N Ponnuswamy played the Nadhaswaram for this song, while Pulavar Pulamaipithan penned all the lyrics for this movie!

NB: Enjoy the Continuous Play of all the clues so far.

Answer: Amudhe Thamizhe (அமுதே தமிழே) from Koyil Puraa (கோயில் புறா) (1981)

358/365 – #365RajaQuiz – When legends come together…

Tags

, , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

வணக்கம்.

முதலில் இதைப் பார்த்துவிட்டு வந்துவிடுங்கள். 58/365.

அப்படியே, இவற்றையும் பார்த்துவிட்டு வந்துவிடுங்களேன்: 55/365 – #365RajaQuiz – காத்திருந்த காதலி, பிறகு 58/365 – #365RajaQuiz – காதலி விடு தூது., அப்புறம் 59/365 – #365RajaQuiz – காதலி விடு (கொலவெறி) தூது, or my favorite 88/365 – #365RajaQuiz – இது, சிறகடித்து பறக்கும் சந்தூர் காதல்!

எத்துணை எத்துணை பெண்களின் காதலன் / தலைவன் பற்றிய ஏக்கப்பாடல்களை அள்ளி அள்ளி தெளித்து இருக்கிறோம். இன்றும் அது மாதிரி ஒரு ஏக்கப்பாட்டு. இது என்னுடைய விருப்பம் 🙂 உங்களில் பலருக்கும் ஏதோ ஒரு விதத்தில் இந்தப் பாடல் விருப்பப் பாடலாக இருக்கும் என்பதில் ஐயமே இல்லை. பின்னூட்டத்தில் பார்க்கத் தானே போகிறோம். 🙂

This song is a classic case-in-point for what happens, when several legends come together 🙂

  1. இசைஞானி இளையராஜா இசை. குறிப்பாக, இந்தப் பாட்டை அகில இந்திய வானொலி நிலையத்தில் அடிக்கடி காலையில் கேட்ட ஞாபகம். இந்தப் படத்திலேயே இருக்கும் மற்ற பாடல்களும் செம ஹிட் என்பதால், எல்லா பாட்டுமே அடிக்கடி வரும். அப்படி ஒரு ஆல்பம். இருந்தாலும், என்ன பாட்டுய்யா இது. இதுல ஏதோ கர்னாடக ராக சங்கதி செமையா இருக்கப்போகுது — நம்ம @PrasannaR_ மற்றும் @KaarthikArul and other friends கலக்கி அடிக்கப்போறாங்கோ 🙂 !
  2. காலத்தை விஞ்சிய, அந்தக் காலகட்டத்துக்கு மிகவும் முன்னோக்கி இருந்த இயக்குநர்!
  3. கேமராவில் ஓவியங்களைத் தீட்டும் வித்தகர்!
  4. பாடிய பாடல்கள் குறைவு என்றாலும், இவரின் குரலுக்கு இன்றளவும் ரசிகர்கள் லட்சோப லட்சம்!
  5. பல அருமையான பாடல்களை எழுதி குவித்த பாடலாசிரியர்!
  6. இறுதியாக, எனக்கு மிக, மிக பிடித்த நடிகை 🙂 ! வயதில் சிறியவராக இருந்தாலும், அப்போதே உயரிய விருதுகளை வாங்கியதை விடுங்கள், மக்கள் மத்தியில் ஏகோபத்திய பாராட்டை வாங்கியதையும் விடுங்கள், அவரின் emoting capabilityஐ பார்த்து இருக்கின்றீர்களா? பல படங்களைப் பார்க்க வேண்டாம் — இந்த ஒரு பாடல் போதும் 🙂 !

ஒரு சிறிய flashback. டவுசர் போட்ட காலத்தில், இவரைப் பற்றி நிறைய பேர் சிலாகித்து பேசியதை எல்லாம் புரிந்துகொள்ளாமல் பார்த்ததுண்டு. ஒரு முறை இவர் நடித்த வேறு ஒரு படத்தை டில்லி தூர்தர்ஷன் வெள்ளி இரவு ஒன்றில் ஒளிபரப்பியது. அப்போதும் அதே போல, ஆகா, இவர போல வருமான்னு பெருசுக முணுமுணுத்தார்கள். எனக்கு ஒன்றுமே புரியவில்லை. பார்த்தால், சாதாரணமாக அல்லவா இருக்கிறார். இதற்கு போயா இப்படி ஒரு பில்டப்பு என்று நினைத்தது உண்டு.

கல்லூரிக்கு சென்ற பின்னர் தான், நினைவு தெரிந்து, இன்றைய பாடலை படத்தோடு பார்க்கும் வாய்ப்பு கிட்டியது. அப்படியே ஆடிப்போய் உட்கார்ந்துவிட்டேன். What a brilliant emoting man! அடேங்கப்பா. உடனே எனக்குள் இருக்கும் inquisitive mind பல கேள்விகளை கேட்டு தொலைத்தது! இப்படி தான் முகபாவம் இருக்கணும்னு டைரக்டர் சொல்லி கொடுத்து இவங்க இப்படி எல்லாம் நடிக்கறாங்களோ? அப்படின்னு ஒரு கேள்வி. இல்ல, இந்த கேமராமேன், இயற்கையை பின்புலமா வச்சு இவர நடக்கவும், ஓடவும் வுட்டு இப்படி நல்லா எடுத்து தள்ளி இருக்காரோ? என்றும் ஒரு யோசனை. இல்ல, எடிட்டர் சரியான சீன்களை இணைத்து, இதற்கு ஒரு அருமையான வடிவத்தை தந்திருக்கிறாரோ என்றெல்லாம் பல விதமான யோசனை.

பின்னர் தேடி தேடி ஒரு VCD வாங்குவதற்குள், இங்கு அமெரிக்கா வந்துவிட்டேன். ஒவ்வொரு முறையும் இந்தப் பாட்டையும், இந்தப் படத்தையும் பார்க்கும் போது, நான் டவுசர் போட்ட காலத்தில் பெருசுக சிலாகிச்சத போல நானும் பேண்ட் போட்டு சிலாகிக்க ஆரம்பிச்சேன். இந்த மாதிரி ஒரு நடிகை தமிழ் சினிமாவில் கண்டிப்பாக இல்லவே இல்லை! (Just my personal opinion :))

There is the extremities of over-acting and no-acting and a larger mass that is of mediocrity in between.

ஆனா, இவங்க இருக்காங்களே..அடேங்கப்பா… Modern lookஆ இருக்கட்டும், கிராமத்துப் பொண்ணு lookஆ இருக்கட்டும், traditional lookஆ இருக்கட்டும், பின்னி எடுப்பாங்க. இத்துணைக்கும் பல கோணங்கள்ல மேக்கப்பும் இருக்காது. குதூகலம், சந்தோஷம், ஒரு வித சோகம் என்று எல்லா உணர்ச்சிகளையும் அவ்வளவு இயற்கையா சிந்துவாங்க.

ஒன்னுல கூட ஓவர்-ஆக்டிங்னு சொல்லவே முடியாத மாதிரி செஞ்சிருப்பாங்க.

இந்தப் பாட்டையே எடுத்துக்கோங்களேன். கல்யாணம் ஆகப்போகுதுன்னு உள்ளே ஒரு பரவசம்.அதுவும் அவளின் காதலனையே அவள் மணம் முடிக்கப்போவதாக எண்ணி பூரிக்கிறாள்.

இங்கே தான் என்னுடைய favorite director வர்றார். இவரை மட்டும் நேரில் பார்க்க முடிந்தால் அப்படியே சாஷ்டாங்கமாக விழுந்து வணக்கம் வைத்துவிட்டு போய்க்கொண்டே இருப்பேன். அவ்வளவு பிடிக்கும். இவர், இந்த நடிகையிடம் என்ன சொல்லி இந்தப் பாடலில் நடிக்கச் சொல்லி இருப்பார் என்றே தெரியவில்லை. இவருக்கு வாயசைப்பு அவ்வளவாக பிடிக்காது. He strives for realism in his portrayals.

ஆக கல்யாணம்+காதல் ஏக்கத்தை, வாயசைப்பு இல்லாமல் முகபாவத்திலேயே இந்த நடிகை — அந்த இளவயதில் — நடித்து காட்ட வேண்டிய சூழ்நிலை. பின்னி எடுத்திருப்பாங்க. I am sure, she gave way more than what the Director may have even imagined 🙂

குறிப்பாக, இவர் தனது கண்களாலும் உதடுகளாலும் அந்த உணர்ச்சிகளை சிந்துவதை கவனித்துப் பாருங்கள். சிறு துளி ஆபாசம் இல்லாமல், அத்துணை இயற்கையாகவும், பொங்கி வரும் அந்த உணர்ச்சிகளை அடக்க முடியாதவளாக தடுமாறுபவராகவும் நடிப்பில் PhD வாங்கும் அளவுக்கு கொட்டி இருப்பார்.

இங்கே கேமராமேன் இருக்கிறாரே…அவருக்கும் ஒரு பொக்கே கொடுத்தே ஆகவேண்டும். பிடித்தமான ஊட்டி மலையிலும் சிறு கிராமத்திலும் கேமராவை சுழற்றி அடித்து, இயற்கையை வெள்ளித்திரைக்கு கொண்டு வந்துவிடுவார். இந்த நடிகையை நடக்கவும், ஓடவும், பூக்களை ஊதவும் விட்டு, அழகு பார்த்து, க்ளிக்கிக் கொண்டார்.

எடிட்டர் வேறு, சரியான விஷுவல்ஸை ராஜாவின் இசைக்கு ஏற்றவாறு தைத்து இருப்பார்.

Brilliant song. ச்ச!

இங்கே இசைஞானி ஜலதரங்கம் போல ஏதோ இசைக்கருவியை உபயோகித்து இருப்பார். புல்லாங்குழலும் Bass Guitarsம் பின்னி எடுக்கும் என்றால், அது என்னடா இந்தப் பாட்டுல மிருதங்கம் அடிச்சு தூள் கிளப்புதுனு பார்க்கும் போது தான் தெரியுது, இதுல கர்னாடக சங்கீதமும் – தெம்மாங்கு பாட்டின் சங்கதிகளும் ஒன்றாக mingle ஆகி பின்னி எடுக்குது என்று.

ஆரம்பத்தில் இருந்தே, இந்தப் பாடலுக்கு இந்த நடிகை கொடுக்கும் முகபாவம் வேறு, பாட்டின் இசை சங்கதிகளுக்கு 100% பொருந்தி போகும். எப்படி தான் இப்படி conceive செய்தார்களோ. அவரின் வாயை அவர் pout செய்யும் அழகு..ஆகா.. கோடியில் ஒருத்தருக்கு தான் பொருந்தி வரும்.

She will sport a melancholic look at several scenes in this song — immediately juxtaposed with absolute frolic and exuberance. Excellent hodgepodge of human emotions. புல் தரையில் படுத்து வானத்தை பார்க்கும் விதமாக இருக்கட்டும். நின்றுக்கொண்டே சிலாகிக்கும் விதமாகட்டும், ஒரு சாதாரண புடவையில், பின்னாடி ஆடுகள் மேயுந்துக்கொண்டும், முன் பக்கத்தில் ஒரு சிறு ஆறு ஓடிக்கொண்டும் இருப்பது எல்லாம் விஷுவல் ட்ரீட்.

மழை பெய்யும் போது, அதில் நனைந்துக்கொண்டே அதை அள்ளி எடுத்து முகத்தில் தெளித்துக்கொள்ளும் போது, குழந்தையாகவும், அந்த சீன் முடிய முடிய ஒரு குக்கிராமத்து சாலையின் ஓரத்தில் சுங்குடிப் புடவையில் ஓடும்போது அந்த கிராமத்துப் பெண்ணுகே உரிய innocenceஆகட்டும், மலர்களின் நடுவே மலர்ந்த முழு நிலவு போல லயித்து நிற்கும் குமரியாக இருக்கட்டும், பூக்களை ஊதி அவற்றை ரசிக்கும் அந்தக் குழந்தைத்தனமாகட்டும், நீராடிக்கொண்டே அதில் அவனின் நினைவுகள் தன்னை சூழ ஒரு புன்சிரிப்பை உதிர்த்துக்கொண்டு ஏதோ ஒரு யோசனையாக அவளின் மயிரை அவளே கோதிவிடும் லாவகம் ஆகட்டும், ne plus ultra! ஒன்றும் சொல்வதற்கு இல்லை.

பாடலைப் பாருங்கள்! இந்த டைரக்டர் மற்ற சோதாக்கள் போல இல்லை. இசைஞானியின் இசைக்கு ஏற்றவாறு பாடலை படமாக்குபவர்களில் வல்லவர்கள் குறைவு. ஆனால், அதில் இவர் கண்டிப்பாக மேலே இருப்பார்.

ஒரு இடத்தில் (இரண்டாவது சரணத்தின் இறுதியில்) இந்த நடிகை, நீராடிக்கொண்டே, முடியை எல்லாம் கோதிவிட்டுக்கொண்டு ஒரு rocky movement கொடுப்பார்…Swing ஆடுவது போல — அவர் செய்யும் அந்த மூவ்மெண்டின் போது, அந்த வார்த்தை வரும் பாருங்க…priceless feel. இது மாதிரி எக்கச்சக்க விசயம் இருக்குது, இந்தப் பாட்டுல. ஏரியில் குளித்துவிட்டு தண்ணீர் சொட்ட, அவளின் காதலனை நினைத்துக்கொண்டே முடியை இழுத்துக்கொண்டு ஆஆ என்று வாயை momentaryஆகத் திறந்து புன்முறுவல் பூப்பார் பாருங்க…another priceless feel… அதே போல, ஏரியில் இருந்து வெளியே வந்து ஈரம் காய்ந்த பிறகு மேக்கப் இல்லாமல் இடது கையாலேயே முடியைக் கோதிவிட்டுக்கொண்டு ஒரு மாடர்ன் லுக்கை வீசுவார் பாருங்க..ஆகா.. மங்கலகரமான அழகு!எதார்த்தம் கலந்த அழகு.

இவரின் melancholic முக அமைப்புக்கு இசைஞானியின் இசை 100% பொருத்தம். ஆகா..கூர்ந்து கவனியுங்கள், சரணத்தில் ஒரு விதமான violins வந்துக்கொண்டே இருக்கும். அப்படியே நம் இதையத்தையே சுண்டி இழுக்கும் ஒரு effect இருக்கும். ஆரம்பத்திலும் சரி, பாடல் முழுவதும், தபேலாவும் மிருதங்கமும், இவளுக்குள் நடக்கும் அந்த உணர்ச்சிப் பெருக்கை அட்டகாசமாக காட்டிவிடும். அதே போல, இந்தப் பாடல் முடிவடையும் விதமும் unconventionalஆக இருக்கும். தபேலாவும், மிருதங்கமும் போட்டி போட்டுக்கொண்டு, அந்த ஜலதரங்கம் போன்ற இசைக்கருவியோடு சேர்ந்து பயணித்து முடிவடையும்.

இந்த நடிகைக்கும் சரி, இந்தப் பாட்டுக்கும் சரி, 100% பொருந்தி வரும் பாடகி தான் பாடி இருக்கார். இவரும் இந்த நடிகை மாதிரி தான். குறைந்த அளவே பாடினாலும், நிறைவாக மக்களின் மனதில் சேர் போட்டு அமர்ந்து கொண்ட பாடகி. ஒவ்வொரு பாடலும் மணி! அதுவும் இந்தப் பாடலில், இசைஞானியின் உணர்வுகளை, அந்த நடிகையின் வாயசைப்பே இல்லாத emotionsஐ இவரின் குரலில் அட்டகாசமாக கொண்டுவந்துவிடுவார். ஏக்கம்…ஏக்கம்…ஏக்கமோ ஏக்கம்….ஒவ்வொரு legendம் பின்னி இருப்பாங்க…இசைஞானியின் இசை தொடங்கி, இவரின் குரலில் இருந்து, பாடலாசிரியரின் வரிகளில் இருந்து, கேமராமேனின் படமாக்கலில் இருந்து, நடிகையின் அட்டகாசமான நடிப்பு வரை.

இந்தப் பாட்டின் தாக்கம் பல வருடங்களுக்கு பின் வந்தவர்களுக்கு கூட பெண் சோலோ, ஏரிக்கரையில் குளியல், சுற்றி இயற்கை என்று சின்ன சின்ன ஆசையாக வந்தது. அவார்டும் குவித்தார்கள்.

இன்றைய பாடல் அந்தக் காலத்து சின்ன சின்ன ஆசை. என்னுடைய சின்ன சின்ன ஆசையும் கூட. ஆனால், இந்தப் பாட்டை இன்றளவும் கேட்டும், பார்க்கும் கூட்டம் அதிகமோ அதிகம்.

இந்தப் பாட்டை இன்றைக்கு களம் இறக்குவதற்கு காரணம் ரொம்ப சிம்பிள்: ஒவ்வொரு முறையும் இந்தப் படத்தின் பாட்டைக் கேட்டாலோ பார்த்தாலோ, முழுப்படத்தையும் பார்க்க ஆவல் வந்துவிடும். நேரமின்மையால் தள்ளிப்போட்டுக்கொண்டே வந்தேன். இன்று அரங்கேற்றம் செய்ய வேண்டியதாகிவிட்டது 🙂 ஆனால் இதை என்கோட் செய்ததில் அப்படி ஒரு மகிழ்ச்சி.

I took some special pains to encode this track, as it is personal and special for me 🙂 I bet, you will like it, as not many good versions of audio are available for this song on the Net 🙂

அதே போல, இவரின் முகபாவங்களை ஏதோ என்னால் முடிந்த அளவுக்கு ஆங்காங்கே snag செய்து Vimeoவில் ஏற்றிவிட்டேன். 🙂 அவருடைய பல பாவங்களில், அவரின் கண்ணும் உதட்டு அசைப்பே இல்லாத வாயும், பல மொழிகளைப் பேசும். இவரின் வேகத்துக்கு நம்மால் இடம் கொடுக்க முடியாது. என்றாலும், என்னால் முடிந்த அளவுக்கு snag செய்திருக்கிறேன். Mobile Devicesல் நன்றாகவே இருக்கும். PCல், சற்று ஓகேவாகத் தான் இருக்கும். ஒளியுடன், ஒலியையும் ரசியுங்கள். இரைச்சலை நன்றாக பிரித்து எடுத்துவிட்டேன்.

விடையை சுட்டுவிட்டு முழுக்க பார்த்து enjoy செய்யுங்கள். 🙂 கிண்டல் அடிக்க வேண்டாம். நான் சொன்னது போல, தமிழ் திரையுலகில் உண்மையில் இழப்பு என்றால், இவர் இல்லாதது தான். இவருக்கு பின் யாரும் இல்லை. அதனாலேயே தான் இவரை சிலாகிக்காதவர்கள் வெகு குறைவு.

இவரின் நடிப்பு உங்களுக்கும் பிடிக்குமா? 🙂

How is the audio-quality for this song, given other versions you may have heard? பல முறை noise-reduction and noise-gate செய்து இதை சரியாக கொண்டு வரவேண்டி இருந்தது. அதனால் தான் மிருதங்கம் + தபேலா ஆகியவற்றை நன்கு கொண்டு வர முடிந்தது.

குறைந்தது, இன்று மட்டும் 50 தடவை இந்தப் பாட்டை கேட்டு…சாரி.. பார்த்து இருப்பேன். இதனாலேயே தான், இதை இதற்கு முன்பே பதிவு செய்யவில்லை.

Have a nice weekend.

நன்றி.

Have a nice week ahead.

Please leave your answers below in the COMMENTS section with your Twitter handle/username. For other discussions on Twitter, please use hashtag #365RajaQuiz.

Audio is recorded by extensively subjecting to repeated noise-removal and noise-gate passes. Due to poor audio in the LP records, cassettes, and CDs, I went with my VCD source, which relatively had manageable noise. No tempo was altered.

Clue: Please try to figure out the answer sincerely as the posted audio is the clue and hint you will ever need. But, if you need one more lifeline, then just select the box below,with your mouse, between the double-quotes to view the additional hint:

This movie was a visual portrayal of an award-winning novel.

NB: Enjoy the Continuous Play of all the clues so far.

Answer: Adi Penne (அடிப் பெண்ணே) from Mullum Malarum (முள்ளும் மலரும்) (1978)

357/365 – #365RajaQuiz – Tribal ‘Calypso’ Tribute to Vaali by Maestro

Tags

, , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

வணக்கம்.

இன்று 15 நிமிடங்கள் தாமதமாக வருவதற்காக வருந்துகிறேன். கடைசி நிமிடத்தில் 260/365க்கு நடந்தது போலவே இன்று 357/365க்கும் SoundCloud ஒத்துழைக்காமல் படுத்தி எடுத்துவிட்டது. QuizMaster வாழ்க்கையில் இதெல்லாம் சகஜமப்பா.

அடிக்கடி என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தும் இன்னொரு சங்கதி என்ன என்றால், கீச்சில் எப்போதெல்லாம் நான் activeஆக உரையாடிக்கொண்டு இல்லாமல் இருக்கின்றேனோ, அப்போதெல்லாம் இங்கு தளத்தில் traffic குறைவாக உள்ளது. A noticeable shortage of traffic. இங்கு கண்டிப்பாக ஒரு correlation இருக்கிறது. அது ஏதேச்சையானதா என்று என்னால் சொல்ல முடியவில்லை. நிறைய தடவை இதை கண்டு விளங்காமல் யோசித்து பார்த்தது உண்டு. அடிக்கடி கலந்து கொள்பவர்களை உற்சாகப்படுத்துவது, அடிக்கடி engagedஆக உரையடுவதால், activeஆக கலந்து கொள்ளாதவர்களும் #365RajaQuiz தளத்திற்கு வந்து என்ன தான் இருக்கிறது என்று பார்க்க வருவது என பல காரணங்கள் இருக்கலாம். எதுவாக இருந்தாலும், இதை நான் அடிக்கடி கண்டது உண்டு. அடுத்து வரும் க்விஸ்மாஸ்டர்கள் இதை கவனிக்கவேண்டியே இங்கு குறிப்பிடுகிறேன். கடந்த ஒரு வாரம் நிறைய பளு — வேலையிலும் சரி, தனிப்பட்ட விசயங்களிலும். அதனால் தான் அதிகம் இணையம் பக்கம் வரவில்லை.

இன்று backlogs in tagging will be cleared. So, please post your answers, if you haven’t done it already. 🙂


நம் புதிர் போட்டிக்கு, இது இறுதி வாரம். இருந்தாலும், #365RajaQuizக்கு என்றும் இல்லை முடிவு. இல்லையா? Continuous Play தொடங்கி, சிலாகித்தும், உருகி உருகி பின்னூட்டங்கள் இட்டும் நிறைய விசயங்கள் தினமும் நுகர இருக்கிறது.

நேற்று வாலியின் இறுதி ஊர்வலம் நடந்து முடிந்தது. அவர் இசைஞானி இளையராஜாவுடன் பணியாற்றியபோது தான் எத்துணை எத்துணை பாடல்களை எழுதி தள்ளியுள்ளார். இருந்தும், இந்து பத்திரிகையில் வாலி இசைஞானிக்காக 5,000 பாடல்களை எழுதியுள்ளார் என்ற செய்தியைப் படித்து அழுவதா சிரிப்பதா என்று தெரியாமல், இப்படி கூட அடிச்சு ஊத்தறாங்களா என்று கோபம் தான் வந்தது 🙂

இன்றைய பாடல், மிக அற்புதமான பாடல். Calypso styleல் நம் ஊர் சங்கதிகள் நிறைந்த பட்டையைக் கிளப்பும் பாடல். இதில் இருக்கும் இசைத் துள்ளல், இந்த வார இறுதியை அட்டகாசமாக கொண்டு செல்லும் என்றே நம்புகிறேன். Percussion arrangement மட்டும் அல்ல, இதில் வரும் Wind instrumentsன் ஆளுமையையும், அதை விட, இதில் வரும் Strings arrangementஐயும் பாருங்களேன். விக்கித்து நின்றுவிடுவீர்கள். அது மட்டுமா? இதில் வரும் choral arrangement? அட்டகாசம் என்று சொல்லி சொல்லி சளித்துவிடும் போலிருக்கிறது 🙂 ஆரம்பமே ஆதிவாசி மனிதர்களின் குரலில் choral ஆட்டம் ஆரம்பிக்கிறது.

அங்கே இருந்தே percussionம் ஆரம்பித்துவிடுகிறது. ஆனால் அந்த percussion beats எப்படி அந்த மலைவாழ் மக்களின் ஸ்டைலில் வருகிறது பாருங்கள். அவர்கள் இசை மரபில் வரும் கைத்தட்டல்கள் கூட இசையாக இங்கு வருவது, 100% nativity. அதே போல Flutesம் Bagpiper போன்ற ஊது கருவிகளுடன் ஷெனாய் போன்ற இன்னொரு ஊது கருவியும் வருகிறது. அந்த இடங்களில் எல்லாம் Guitar Strings பிய்த்து உதறிக்கொண்டு வருகிறது.

இறுதியில் choral arrangementsஐ வைத்தே இசைஞானி இளையராஜா இந்தப் பாடலை இறுதியிசையாக முடித்துவிடுகிறார்.

இந்தப் பாட்டின் மூலம் உங்கள் அனைவரின் சார்பாகவும் #365RajQuiz வழியாக கவிஞர் வாலிக்கு அஞ்சலி செலுத்திவிடுகிறேன். 🙂

நன்றி.

Have a nice weekend.

Please leave your answers below in the COMMENTS section with your Twitter handle/username. For other discussions on Twitter, please use hashtag #365RajaQuiz.

Clue: Please try to figure out the answer sincerely as the posted audio is the clue and hint you will ever need. But, if you need one more lifeline, then just select the box below,with your mouse, between the double-quotes to view the additional hint:

This song is from a movie dubbed from another language. Maestro won a nationwide acclaim for his music, in this movie. Both the lyricists — in the original and in Tamil (Vaali) are no more with us.

NB: Enjoy the Continuous Play of all the clues so far.

Answer: Ambum Kumbum (அம்பும் கொம்பும்) from Pazhassi Raaja (பழசி ராஜா) (2011)

356/365 – #365RajaQuiz – கவிஞர் வாலிக்கு அஞ்சலி

Tags

, , , , , , , , , , , , , , , , , , , , , ,

வணக்கம்.

ilaiyaraaja_vaali
தமிழ் திரை இசை உலகில் தனக்கு என்று என்றுமே நீங்காத ஒரு இடத்தை அமைத்துக்கொண்டு கோலோச்சிய கவிஞர் வாலி, இன்று நம்மிடம் இல்லை. இந்தப் புதிரின் இறுதி நாட்களிலே, இவருக்கே நாம் இறுதியாகவும் இறுக்கமாகவும் விடையளித்து அஞ்சலி செலுத்துவோம் என்று எதிர்பார்க்கவில்லை தான்.

அதனால் வெள்ளிக்கிழமை பூஜைக்கும் பதிலாக, இவர் எழுதிய அருமையான பாடலே இவருக்கு பூஜையாகவும் அஞ்சலியாகவும் அர்ப்பணித்துவிடுவோம் என்று இதை களம் இறக்குகின்றேன்.

மேலும், வாலிப வாலி என்று எல்லாரும் அன்போடும், stereotypicalஆகவும் இவரை அழைப்பதால், அவரின் பிற பாடல்கள் பல, அவ்வளவு வெளியே தெரிவது இல்லை என்பதை சூசகமாக காட்டவே, இதை களம் இறக்குகின்றேன்.

இதைத் தவிர, இன்று முதல் நம் #365RajaQuizக்கு இறுதி 10 நாட்கள் countdown ஆரம்பிக்கிறது. ஒவ்வொரு சீசனுக்கும் ஆரம்பம் என்று வீணையிலே தான் ஒவ்வொரு க்ளூவையும் கொடுத்து வந்தோம் (உதாரணம்: 1/365, 101/365, 201/365 மற்றும் 301/365). இன்று நம் புதிருக்கு இறுதி நாட்களின் தொடக்கமாக இது இருக்கும் காரணத்தால், அதே வீணை செண்டிமெண்ட் உள்ள பாடலாகவும், இதை களம் இறக்குகின்றேன்.

மேலும், இந்தியாவில் மாறிவரும் ஒருதலை பட்சமான புதிய சட்ட மாறுதல்களால், சில வருடங்களுக்கு முன் இருந்து வந்த வழக்கங்கள் கூட இந்தக் காலத்து மக்களுக்கு மறந்து போயிருக்கும் இன்றைய நாட்களில், இம்மாதிரி பாடல்களால் சில விசயங்களை ஞாபகப்படுத்தலாம் என்ற எண்ணத்திலும் இதை களம் இறக்குகின்றேன்.

இறுதியாக, 82-வயது வாலி, ஜாலியான மனுஷர். அவர் இறந்தது வருத்தம் தான் என்றாலும், எல்லா விதத்திலும் ஒரு முழுமையை உணர்ந்து, அனுபவித்து, பாடல்களை எழுதி humorousஆக பேசி சிரித்து மகிழ்ந்த மனிதன் வாலி. அதனால், அவரின் அஞ்சலிக்கு ஜாலியாகவும் இல்லாமல், அதே சமயம் சோகமாகவும் இல்லாமல், மிதமான அளவில் இருக்கும் ஒரு மங்கலகரமான பாடலை அவருக்கு மரியாதையுடன் sponsor செய்ய இதை களம் இறக்குகின்றேன்.

இன்றைக்கு வர இருந்த பாடல், அடுத்த வெள்ளிக்கிழமைக்கு தள்ளிப்போட்டுவிட்டேன்.

இது கவிஞர் வாலிக்கு என்று நம் கருத்துகளை பகிர்ந்துகொண்டு அஞ்சலி செலுத்தும் பதிவாக இருக்கட்டும்.

இறுதி நாட்களில் சில க்ளூக்களில் மேடு ஏறுவதை தவிர்க்க இயலாது. அதனால், உங்களை மெல்ல தயார் செய்துகொள்ளுங்கள். நன்றி.

RIP Vaali. You will be missed 😦 .

Please leave your answers below in the COMMENTS section with your Twitter handle/username. For other discussions on Twitter, please use hashtag #365RajaQuiz.

Clue: Please try to figure out the answer sincerely as the posted audio is the clue and hint you will ever need. But, if you need one more lifeline, then just select the box below,with your mouse, between the double-quotes to view the additional hint:

Maestro Ilaiyaraaja sings another song he sang from this movie, almost anywhere he goes! That song was NOT written by Vaali.

NB: Enjoy the Continuous Play of all the clues so far.

Answer: Sumangali Poojai (சுமங்கலிப் பூஜை இது) from Dharmapathini (தரமபத்தினி) (1986)

355/365 – #365RajaQuiz – மலேசியா பாறைகள் – 3 (இசைஞானி)

Tags

, , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

வணக்கம்.

இன்றுடன் மலேசியா பாறைகள் முடிவடைகிறது. நாளைய பூஜைக்கு பாலு வந்துவிடுவார் 😉

இன்றும் நேற்று போன்றே ஒரு இனிய, ஜாலி tie-breaker. இரண்டில் ஒன்றுக்கு பதில் சொன்னால் போதும். சரியா?

  1. முதலில் மலேசியா அண்ணனின் அட்டகாசமான காதல் டூயட் பாடல்.
  2. இரண்டாவதாக இசைஞானி இளையராஜா பாடிய குழந்தையின் பாடல்.

இந்தப் பாட்டு சாதாரண பாட்டே இல்லீங்க. இது ஒரு மாதிரியான துருதுருன்னு போற காதல் டூயட் பாட்டு. இந்தப் பாட்டை நன்றாக புரிந்துகொள்ள வேண்டுமானால், அந்தக் காலத்து சைட் அடிச்சான் காதல் சங்கதிகளுக்குள் போய் ஆகவேண்டும். கோயிலிலும், தெருவிலும், தண்ணீர் பிடிக்கும் இடத்திலும், பஸ் ஸ்டாப்பிலும் என்று பாவாடை தாவணியும்-புது பேண்ட் சட்டையும் ஒருத்தர ஒருத்தர் வுடற லுக்குள இருந்து, புதர்களில் அதிசயமாக சில ஆடுவது, அசைவது என்று ஒரு மாதிரியாக காதலித்த காலம் அது. சிறிய ஊர் அல்லது காலனி என்றால், யார் யாரை டாவடிக்கிறார்கள் என்பது எல்லாம் அரசல் புரசலாக sotto voceல் பேசப்படும் 🙂 அப்படி இருக்கும் போது, மற்றவர்கள் ஒரு மாதிரியாக பேசுகிறார்கள் என்பதை காதலர்கள் உணரும்போது, ஒரு வித பயமும் படபடப்பும் வரும். இல்லையா? சிலருக்கு, அது நல்லதாக தோன்றும்… வீட்டுல சேதி போச்சுன்னா கண்ணாலம் பண்ணி வைப்பாய்ங்க என்ற எண்ணமாக இருக்கலாம். சில சமயம், WTH என்றும் கூட ஒரு வித thrillஉடன் காதல் செய்யலாம். அப்படிப்பட்ட பாட்டு இது. மலேசியா அண்ணன் இன்னொரு பாடகியுடன் அட்டகாசமான டூயட்டில் இறங்கி அடிப்பார்.பாட்டின் ஆரம்பமே நிதானமாக கிடாரில் ஆரம்பிக்கும். பின்னர் தபேலாவும், சந்தூரும் அடித்து தூள் கிளப்பிக்கொண்டு பல்லவி செல்லச் செல்ல, புல்லாங்குழலும் வரும். காதல் மட்டும் இல்லை, இந்தப் பாட்டின் மெட்டில் இருந்து இசை வரைக்கும் வெறும் காதல் மட்டும் இல்லாமல் காதலோடு சேர்ந்து ஒரு வித விறுவிறுப்பும், குறும்பும் கலந்து வரும். அது தான் பாடலின் சிறப்பே. நம்மள பத்தி என்னமோ கிசுகிசு எல்லாம் வருதாமே..அது உண்மையாங்கற thrillல இரண்டு பேரும் பாடுவார்கள். விடை கண்டுபிடித்த பின்னர், அந்தப் பாட்டை முழுவதுமாக ரசித்துக் கேளுங்களேன். அப்போது புரியும், இசைஞானியின் வித்தை, இதில் எந்த அளவுக்கு என்று! இந்த பின்னணியை வைத்து இசைத்துணுக்கை கேளுங்களேன் 🙂

அடுத்ததாக, குழந்தையை மையமாக வைத்து பாடப்பட்டிருக்கும் அருமையான பாட்டு. இந்தப் பாட்டில் வரும் வரிகள் ஒவ்வொன்றும் கவனித்து அனுபவித்து கேட்கவேண்டியது. அதில் ஒரு இடத்தில் உன்னை படைத்தவன் யார் என்ற ரீதியில் வரிகள் செல்லும்போது, இசைஞானி இளையராஜாவையே நாம் அப்படி கேட்கத் தோன்றினாலும் தோன்றலாம். ஒரு முறை கார் ஓட்டிக்கொண்டு இருக்கும்போது வெகு நாட்களுக்குப் பின் இந்தப் பாடலை கேட்க நேர்ந்தது. ஒரு இடத்தில் என்னையும் அறியாமல் இவர் பாடும் வர்ஷனில் கண்ணீர் வந்துவிட்டது. It is so rich in its melodic richness! இது சோகப்பாடல் இல்லை. இருந்தாலும், இதனுள் ஒரு சிறு மென்சோகம் இழையோடிக்கொண்டு இருப்பது போலத் தெரியும். இதிலும் சந்தூரின் நெடி அதிகம் உண்டு. ஆரம்பத்தில் ஒரு நீண்ட ஹம்மிங்கில் தலைவர் ஆரம்பிப்பார் — கிடாரின் துணை கொண்டு. அங்கேயே அப்படியே சொக்கிப்போய் உட்கார்ந்துவிடுவோம். அந்த மாதிரியான ஒரு மெட்டு. ஒவ்வொரு குழந்தையையும் பெற்றெடுக்க நோன்பு எடுக்கும் பெற்றோர்கள் எத்துணை எத்துணை பேர். அவர்களுக்கு ஆறுதல் தரும் விதமாகவும், அவர்களை நினைத்துக் கொள்ளவும் ஏதுவாக இந்தப் புதிரை இறக்குகின்றேன். சரியா? ரியலி 🙂 யார் இந்தப் பாடலை எழுதினார் என்று தெரியவில்லை. மழலை மணம் கமழும் பாடல்! இரண்டாவது இடையிசையில் கிடாரும், புல்லாங்குழலும் இணைந்து கொடுக்கும் சுக இசையை என்னவென்று சொல்வது. அதில் சந்தூரும் இணைந்து கொள்ளும் போது, ஒரு fulfillment தான். மனிதர்களுக்கு அன்பு என்று ஒன்றை நினைவுபடுத்தும் சின்னமாகவே சிறுகுழந்தைகள் இருக்கின்றார்கள்.

இருந்தும், நேற்று பீகாரில் 27 குழந்தைகளின் மரணம் நம்மை உலுக்கி எடுத்தது, இல்லையா? 😦 இந்தச் செல்வக் குழந்தைகளின் மரணம் மீண்டும் மீண்டும் சமூகத்தில் இவர்களின் vulnerabilityஐயும், இவர்களுக்கு எதிராக குற்றங்களைத் தைரியமாக செய்யத் துணியும் கயவர்கள் என்றுமே இருக்கின்றார்கள் என்பதையும் அல்ல நினைவூட்டுகிறது? Crimes against children are a bane of civilized society. 😦 இப்படி பல விசயங்கள் வந்து செல்லும் இந்த நேரத்தில், இந்தப் பாடல் உகந்ததாக இருக்கும் என்றே, இன்றைய புதிரில் சேர்க்கப்படுவதாகவும் எடுத்துக்கொள்ளுங்கள். ஏனென்றால் மலேசியா அண்ணனின் பாடலை மட்டும் தான் தருவதாக இருந்தேன்.

நன்றி.

Have a nice week ahead.

Please leave your answers below in the COMMENTS section with your Twitter handle/username. For other discussions on Twitter, please use hashtag #365RajaQuiz.

Noise-removed. Noise-gate applied. No tempo was altered.

Clue: Please try to figure out the answer sincerely as the posted audio is the clue and hint you will ever need. But, if you need one more lifeline, then just select the box below,with your mouse, between the double-quotes to view the additional hint:

In the Isaignani Ilaiyaraaja song, there is another version by P.Susheela. 🙂

NB: Enjoy the Continuous Play of all the clues so far.

Answer: Oorukkulla Unnayum Paththi (OR) Singara Selvangalai (ஊருக்குள்ள உன்னையும் (அல்லது) சிங்காரச் செல்வங்களை) from Ninaivu Chinnam (நினைவுச்சின்னம்) (1989)

354/365 – #365RajaQuiz – மலேசியா பாறைகள் – 2 (or ஜேசுதாஸ் க்ளூ)

Tags

, , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

வணக்கம்.

இன்று ஒரு சுலபமான விதத்தில் tie-breaker. சரியா? இரண்டில் ஒன்றுக்கு பதில் சொன்னால் போதும்.

ஒன்று மலேசியா அண்ணனின் பாடல். இன்னொன்று அதே படத்தில் வரும் கே.ஜே ஜேசுதாஸின் பாடல்.

முதல் க்ளூ மலேசியா அண்ணேனின் டூயட் பாடல்களில் மிகவும் பிடித்தவைகளில் ஒன்று. இந்தப் பாட்டின் துணுக்கைக் கேட்கும்போதே உங்களுக்கு அது புரிய ஆரம்பிக்கும். இதுவும் 340/365 போல அந்தக் காலத்தில் வெளுத்துக்கட்டிய பாட்டு. அகில இந்திய வானொலி மற்றும் சிலோன் வானொலியில் அடிக்கடி கேட்டப் பாடல். இந்தப் பாட்டில் சந்தூரின் அடி, மிக அழகாக பாடல் முழுவதும் வரும். ஆரம்ப இசையிலேயே இதைக் கவனிக்கலாம். வயலின்களிலும், சதங்கையிலும், கிடாரிலும் பாஸ் கிடாரிலும் ஆரம்பமாகும் இசையில், சோலோ வயலின்களும், சந்தூரும், க்ரூப் வயலின்களும், எத்துணை அழகாக அமைந்திருக்கிறது. பார்த்தீர்களா? இடையிசையில் அந்த க்ரூப் வயலின்கள் — இரு வேறு டிராக்குகளில் வருவது, அட்டகாசம். இல்லையா? இந்தப் பாடலை எழுதியவர், மலேசியா அண்ணனின் நெருங்கிய நண்பர் கங்கை அமரன்.

இரண்டாம் பாடல், நிறைய பேருக்கு தெரிந்திருக்க வாய்ப்பு இருக்கிறது. கர்னாடக சங்கீதத்தில் கவியரசர் கண்ணதாசன் எழுதிய பாடலாச்சே. எப்படி தெரியாமல் போகும்? இந்தப் பாட்டு எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் ஒன்று. இதே படத்தில் இன்னொரு பாடலில் வரும் பியூசன் ஆகா..அப்படி இருக்கும்! கர்னாடக சங்கீதம் புரியாத நம்மையே பாட வைக்கும் ஒரு அருமையான பாடல் இது. கேட்டுவிடுவோமே.

சரி. இந்த இரு பாடல்களில் உங்களுக்கு மிகவும் பிடித்த பாடல் எதுவோ, அதற்கு மட்டும் பதில் சொன்னால் போதும். Just for fun. Let us assess, which one of the two, you liked the most. சரியா?

நன்றி.

Have a nice week ahead.

Please leave your answers below in the COMMENTS section with your Twitter handle/username. For other discussions on Twitter, please use hashtag #365RajaQuiz.

Extensively noise-removed. Noise-gate applied. No tempo was altered. இணையத்தில் இந்த அளவுக்கு தரத்தில் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. இருந்தால் சொல்லவும்.

Clue: Please try to figure out the answer sincerely as the posted audio is the clue and hint you will ever need. But, if you need one more lifeline, then just select the box below,with your mouse, between the double-quotes to view the additional hint:

Hero in this movie, appeared as a villain in two movies, acted by two different heroes, who were son-in-law and father-in-law to each other in real-life.

NB: Enjoy the Continuous Play of all the clues so far.

Answer: Nee Illatha Pothu (OR) Sridevi (நீ இல்லாத போது (அல்லது) ஸ்ரீதேவி) from Ilamaikolam (இளமைக்கோலம்) (1980)