Tags

, , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

வாழ்க்கையின் பெரும் பங்கு காத்திருத்தலில் அல்லவா செல்கிறது? ஒரு குழந்தை பிறப்பதில் இருந்து, வரன் பார்த்து மணம் முடிக்கும் வரை ஆகட்டும், காதலிக்கு கடிதம் கொடுத்துவிட்டு பதில் வரும் வரைக்கும் பொறுப்பதிலிருந்து கோயம்புத்தூர் வாசிகள் இன்றைய நாளில் 12 மணி நேர மின்வெட்டு முடிந்து மீண்டும் மின்விசிறி சுழல காத்திருப்பதாகட்டும், everything in life is one of patient awaiting. அண்டை மாநிலமான தென் கரோலினாவின் motto கூட இலத்தீனில் “dum spiro, spero“. அதாவது, “என் உயிர் மூச்சு உள்ள வரை, நான் நம்பிக்கையோடு இருப்பேன்” என்று பொருள்.

அத்தகைய நம்பிக்கை உடைய காதலி, தன் நாயகன் வரும் நாளை எதிர்பார்த்து ஆற்றாமல் இருக்கும் நேரத்தில், டைரக்டர் நுழைத்துவிடும் அருமையான காதல் களம் கொண்ட கனவுப்பாடல் தான் இது. இந்தப் பாடலில், நாயகன் பல நாட்களுக்குப் பிறகு வரவிருக்கின்றான். அவன் ஊருக்கு சொல்லாமல் கொள்ளாமல் ஓடுவதற்கு முன்னர் வரை இவர்கள் இருவரும் ஓடி ஆடி விளையாடி பூரித்ததை எல்லாம் நினைவு கூறும் வகையில் ஆரம்பிக்கிறது, இந்தப் புதிரின் ஆரம்ப புல்லாங்குழல் இசை. அந்த innocent ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம், ஆரம்ப இசையில் துல்லியம்.அந்த வயலின்கள், பழைய நினைவுகளை அள்ளி வருகிறது. இவளின் ஆற்றாமை பொறுக்காமல் ஓடும் இவளின் நினைவுகளை திரையில் காட்ட, டைரக்டர் இந்த 21-markerல் ஒரு அழகு வெள்ளாட்டுக் குட்டியை துள்ளி ஓட வைத்திருப்பார். அதை இவள் துரத்த, இவளை அவன் துரத்த, பார்க்கவே மிக அருமையாக இருக்கும். (புகைப்படங்களிலும், திரைப்படங்களிலும், சித்திரங்களிலும், எனக்கு ஆட்டுக் குட்டிகள் என்றால் அலாதி பிரியம். பிரியாணி வைக்க அல்ல. அவற்றின் innocence என்னை மிகவும் கவர்ந்த ஒன்று 🙂). ஆக இவளின் மனமோ அந்த ஆட்டுக்குட்டி போலத் துள்ளி ஓட, நடக்கவிருக்கும் இடி போன்ற பயங்கரத்தை அசாத்தியமாக இசையில் காட்டிவிடுகிறார் இசைஞானி — ஒரு வித eeriness கலந்த percussion-based drums and trumpets மூலமாக. அதென்ன பயங்கரம்? வெள்ளித்திரையில் காண்க. 🙂

இந்தப் படம் வந்த பொழுது, ஆல் இந்திய ரேடியோ, சிலோன் ரேடியோ என்று எல்லாத்திலும் இந்தப் படத்தின் பாடல்கள் தான். A-Center, B-Center, C-Center என்று வசூல் அள்ளியதோடு மட்டுமல்லாமல், எல்லா தர மக்களும் காதல் வயப்பட வைத்தது என்றால் அது மிகையாகாது. நாகரீகம், மட்டை, மண்ணாங்கட்டி என்று பாசாங்கு காட்டிகிட்டு இருக்கும் நவீன காலக்கட்டத்தில் இந்தப் புதிரின் படம் போல ஒரு அருமையான கதைக் கொண்ட சில படங்களை இன்றும் பண்ணிக்கொண்டு இருந்தாலும், அன்று அனைத்து தர மக்களையும் ஆட்கொண்ட மாதிரி ஏன் இன்று அம்மாதிரி படங்கள் ஓடுவதில்லை என்று என்னால் யோசிக்காமல் இருக்க முடியவில்லை.

இந்த டைரக்டரின் படங்களில், பாடல்கள் கேரண்டி! இவரின் படங்களும், அதற்கு ராஜாவின் இசையும் காலத்தால் அழிக்க முடியாதவை. பொன்னால் பொதிக்கப்பட்டவை. இந்தப் பெருமைமிகு கூட்டணிக்கு என்னைப் போலவும், உங்களைப் போலவும் பல விசிறிகள் உண்டு. 🙂

Have a nice weekend 🙂

Please leave your answers below in the COMMENTS section with your Twitter handle/username. For other discussions on Twitter, please use hashtag #365RajaQuiz.

Clue: Please try to figure out the answer sincerely as the posted audio is the clue and hint you will ever need. But, if you need one more lifeline, then just select the box below,with your mouse, between the double-quotes to view the additional hint:

Actress Gandhimathi’s role in this movie, received equal if not more accolades than the the lead actors in this movie.

Answer: Aanandha Then Sindhum (ஆனந்தத் தேன் சிந்தும்) from Man Vaasanai(மண் வாசனை.) (1983)