Tags

, , , , , , , , , , , , , , ,

நேற்றைய வேகப் பாடலை அடுத்து, இன்று வருவது, தாய்-மகனின் பாசத்தை வெளிப்படுத்தும் பாடல். பாச உணர்வுகளை மிக அழகாகவும், உணர்வு பூர்வமாகவும் காட்டுவதில் நம் ராஜா பலே கில்லாடி. இந்தப் பாடலில் நாயகன், தன் அம்மாவிற்கு செய்ய விரும்பும் பணிவிடைகளை எல்லாம் செய்வதாக நினைத்துப் பார்த்து பூரிப்பு அடைகின்றான். புதிருக்கு நான் எடுத்த இசை சந்தோஷப் பாடலாக வரும் பகுதி தான். ஆனால் ராஜா, தன்னுடைய இசை ஆளுமையை இந்தப் பாடலில் எப்படி காட்டி இருப்பார் என்றால், ஒரே பாடலில் நாயகன் தன் அம்மாவோடு மகிழ்ச்சியாக இருந்ததையும், பின்னர் தன் தாயை இழந்து சோகத்தோடு இருக்கும் போது பாடுவதையும் இருவேறு சரணங்களில் காட்டி இருப்பார் ராஜா. இப்படி காட்டப்போவதை டைரக்டர் முன்னமே சொல்லியிருப்பாரோ என்னவோ, மகிழ்ச்சியாக பாடல் வரும்போதே, பல்லவியின் ராகத்தில் ஒரு சோக அறிகுறியை நன்றாக காட்டியிருப்பார். சந்தூர் மற்றும் ஷெனாய் பாடலின் ஆரம்பத்தில் இருந்தே வேகம் பிடிக்கும்.

இந்தப் புதிரின் ஆரம்பத்தை கவனித்தால், ஆரம்பத்தில் group-violins மெல்லியதாக backgroundல் இசைக்கும். அத்தோடு, மகிழ்ச்சியாக துள்ளும் புல்லாங்குழல். அதை பிடித்துக்கொண்டே foregroundல் group-violins வர, நாயகனின் அம்மாவுக்காக மங்கல வீணை. 15-20 நொடிகளில் என்ன என்ன உணர்ச்சிகள். அவற்றிற்கு கையாளப்பட்டிருக்கும் இசைக் கருவிகள், இவை எல்லாம் நமக்கு நம் அம்மாக்களின் நினைவை கண்டிப்பாக கொண்டுவருது இல்லையா? அப்படி என்றால், இந்தப் பாட்டும் உங்கள் நினைவுக்கு வரும். இன்றைய டைரக்டருக்கும், இசைஞானி அளவற்ற ஹிட் பாடல்களை அள்ளித் தந்துள்ளார். வசூல்ராஜா இயக்குநர் — இவரின் படத்தில், மசாலா, காமிடி, அப்புறம் இசைஞானி பாடல்கள் என்று ஒரு formulaவே வச்சிருந்தார்.

Please leave your answers below in the COMMENTS section with your Twitter handle/username. For other discussions on Twitter, please use hashtag #365RajaQuiz.

Clue: Please try to figure out the answer sincerely as the posted audio is the clue and hint you will ever need. But, if you need one more lifeline, then just select the box below,with your mouse, between the double-quotes to view the additional hint:

Kerala fame of yesteryear, Actress Jaibharati, featured in this song.

Answer: Ammamma Unai Pola (அம்மம்மா உனைப் போலே) from Saathu(சாது) (1995)