Tags

, , , , , , , , , , , , , , , , , , , ,

நேற்று அருமையான பாடலை பார்த்த மகிழ்ச்சியில் இருப்பீர்கள். இன்றும் மிக அருமையான ஒரு மெலடி பாடல் வருகிறது. இதை சோகம் என்று ஒரேடியாக சொல்லிவிட முடியாது. சோகம் தான். அனால், இந்தப் பாடல் வந்த பொழுது, பயங்கர ஹிட். ஆனால், ஏனோ படம் எடுபடலை. அதனால், அதிகம் கேட்டிராதவர்களுக்கு இது ஒரு pleasant shocking பாடல். காதலன் தன் காதல் தோல்வியைப் பற்றி ஒரு குழந்தை/சிறுவனுக்கு பாடுவது போல இந்தப் பாடல் வருவதாக நினைவு. இப்படத்தை நான் பள்ளியில் இருக்கும் போது, கோயம்புத்தூர் கங்கா திரையரங்கத்தில் matinee show பார்த்த ஞாபகம் மட்டும் இருக்கிறது.விடை தெரிந்தவுடன், கண்டிப்பாக இந்தப் பாடலை ரசித்து, continuous playவில் நீங்கள் கேட்காவிடில் சொல்லுங்கள். அதே போல, பாடலின் விடை தெரிந்தவுடன் “இந்தப் பாடல் நமக்கு எப்படி தெரியாமல் போனது” என்று வேண்டுமானால் சில பேர் யோசிக்கக்கூடுமே தவிர, இதை ஏன் புதிர் கேள்வியாக கேட்டார் என்று புரியாத புதிராக இது நிச்சயம் இருக்காது. அதுக்கு நான் guarantee. 🙂

So, எப்படி பதிலை கண்டுபிடிக்கலாம்? இதோ, இதை நல்லா follow பண்ணுங்க. இந்தப் படம் ஒரு மசாலா revenge subject. பெரிய வாரிசு நடிகரும், அந்தக் காலத்தில் கொடி கட்டிய இன்னொரு ஹீரோ நடிகரும் இணைந்து நடித்தப் படம். இந்தப் பாடல் ஹிட் ஆவதற்கு பல காரணங்கள் உண்டு. முதல் காரணம், இசை. உண்மையில், இந்தப் பாடலில் மெலடியை இசைஞானி, இழைத்து கொடுத்திருப்பார். இந்தப் பாடல் SPB அவ்வளவு உருக்கத்தோடு பாடியிருப்பார். பாடலின் வரிகளும் பொருத்தமாகவே வந்திருக்கும். காதலைப் பற்றியும் அதன் தோல்வியை இவன் கதையாக சொல்வது போலவும் இந்தப் பாடல் வரும். இந்தப் பாடலை திரைப்படத்தில் வாரிசு நடிகர் பாடுவார். பாடல் முழுதும் சந்தூர் கருவியின் ஆளுமை அதிகமாக இருக்கும். இந்தப் புதிரின் ஆரம்பத்தில் கோயில் மங்கல இசை வாத்தியம் போல குழலும், பின்னர் வயலிங்களின் சோக இசை ஒரு பக்கமும், வருகிறது. அருமையான guitar notes உம் உண்டு.

இந்த டைரக்டர் இசைஞானியின் அனைத்துப் பாடல்களையும் ஹிட் பாடல்களாகவே வாங்கிய ராசிக்காரர். இவர் பட பாடல்கள் இன்றும் காலத்தை விஞ்சி நிற்பது ஆகும். இந்தப் படம் 80s/90s periodகளில் வந்தது. Narrow it down to late 80s and early 90s 🙂

சற்றே மிதமான கடினமான குளூ தான். ஒத்துக்கொள்கிறேன். விடை தெரியும்போது எல்லாம் தெளிவு வரும். But, trust me, it is worth every bit as you will realize soon. 51ஆம் புதிரில் நான் பொடி வைத்திருந்ததை புரிந்துகொண்ட கில்லாடிகள், இந்தப் பாடல் என்னவாக இருக்கும் என்று உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள். சுலபமாக இருக்கும். அதை தெரியாதவர்கள், life-line clueவுக்கு போங்கள்.

சனிக்கிழமை இனிதாக இருக்கட்டும். வாழ்க வளமுடன்.

Please leave your answers below in the COMMENTS section with your Twitter handle/username. For other discussions on Twitter, please use hashtag #365RajaQuiz.

Clue: Please try to figure out the answer sincerely as the posted audio is the clue and hint you will ever need. But, if you need one more lifeline, then just select the box below,with your mouse, between the double-quotes to view the additional hint:

This movie was this Director’s first movie with Maestro Ilaiyaraaja and within a short span of 5 years, gave fabulous hits with mega stars of Tamil cine-field.

Answer: Anbuk kathai vambuk kathai (அன்புக் கதை வம்புக் கதை) from Uruthimozhi(உறுதிமொழி) (1990)

Advertisements