Tags

, , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

நமது புதிர் வரிசையில் பெரிய theme எல்லாம் இல்லாமல், randomஆகப் போவதைதான் கொள்கையாக வைத்திருக்கிறோம். ஆனால், 51/365யில் நான் ஒரு “பொடி” சமாசாரத்தைத் தூவியிருந்தேன். ஞாபகம் உள்ளதா? @rajabalanm முதன்முதலில் அதைக் கண்டுபிடித்தார். பின்னர் நிறைய பேர் கண்டுபிடித்தார்கள். அதில் சிலர் அந்த சூட்சுமத்தைப் பிடித்ததால், 52 முதல் 58வரையிலான பாடல்களைக் கண்டறிய அது மிகவும் உதவியதாகச் சொன்னார்கள். மிக்க மகிழ்ச்சி.

அந்தப் பொடியின் விடை இதோ: “ஜெயா டிவி” வழங்கிய “நீதானே என் பொன்வசந்தம்” audio launch நிகழ்ச்சியில் இசைஞானி இளையராஜாவைப் பற்றி மக்கள் முன் சிலாகித்த இயக்குநர்களின் படங்களில் இருந்து வரிசையாகப் பாடல்கள் 51/365 முதலாக நேற்றைய 58/365 வரை வலம் வந்தன:

  1. 51/365 – பாலு மகேந்திரா
  2. 52/365 – K. பாலச்சந்தர்
  3. 53/365 – R. K. செல்வமணி
  4. 54/365 – P. வாசு
  5. 55/365 – பாரதிராஜா
  6. 56/365 – R. V. உதயகுமார்
  7. 57/365 – சுரேஷ் கிருஷ்ணா
  8. 58/365 – R. சுந்தர்ராஜன்

அதேபோல, நேற்றைய “58/365 காதலி விடு தூது” படு பயங்கர ஹிட். அனைவரையும் பரவசப்படுத்தும்விதத்தில் அமைந்திருந்ததை வியந்து, சிலாகித்த உங்களின் கீச்சுக்களும் பின்னூட்டங்களுமே சாட்சி. ராஜாவுக்கு நன்றி 🙂 விடையைச் சொல்ல முடியாதவர்கள் கூட, “கைக்கு எட்டியது, வாய்க்கு எட்டவில்லையே” என்ற அளவில்தான் miss செய்தார்கள்போலத் தெரிகிறது.

அது 80களின் காதல் விடு தூது என்றால், இன்று வருவது 90களின் காதலி விடு (கொலவெறி) தூது. அது என்ன என்று கேட்கிறீர்களா? 🙂 58/365ல் நாயகி தனக்கு நடக்கவிருக்கும் திருமணத்தை எண்ணிப் பூரிப்படைந்து பாடுகிறாள். ஆனால் இன்று வரும் 90களின் நாயகி ஒரு படி மேலே! இவளுக்கு Dating மோகம். “ஏதோ மோகம், ஏதோ தாகம்” என்னும் அளவுக்கு இவளுக்கு விரகதாபம் ஏற “என்னுடைய உடம்பே யாகம் செய்யும் ஒரு கோயில்போல. வா என் மன்னவா, வந்து ஒரு யாகம் செய்யப்பா… பலன் எல்லாம் உடனே Guaranteeயோட கிடைக்குது“ன்னு நல்லா கிர்ர் ஏத்தி பாடுறா.

இந்தக் காலகட்டத்தில் தமிழ்த் திரையுலகில், ஆண்களைச் சிறை வைத்துப் பெண்கள் பாடுவதாகவும், தூது செல்ல தோழிகளைக் கெஞ்சுவது போலவும் நிறைய பாடல்கள் வர ஆரம்பித்தன. 80களின் கடைசியிலே மணிரத்னம் போன்ற இயக்குநர்களால் அறிமுகப்படுத்தப்பட்டு, பின்னர் பல Xeroxகளால் கடுப்பேத்தும் அளவுக்கு அரைத்த மாவாக வந்து BP ஏற்றியது.

ஆனாலும், இந்தப் பாடல் ஓர் அருமையான ஹிட். இசைஞானி மிக அதிகமாக orchestrationஐ பயன்படுத்தியிருப்பார். கற்பனையாக வரும் இந்தப் பாடலில் ஹீரோவுக்குச் சிறைவாசம், ஹீரோயினிக்கு மோகக் கிளுகிளுப்பு(?). இவள் பாட, கோரஸ் நாயகிகள் ஜிங்குஜாக் நடனம் ஆட, நம் வசன ஹீரோ, பல்லைக் கடித்துக்கொண்டு சிறைக் கம்பியை உடைக்க, காவலாளிகள் அவரைத் தடுக்க என்பது போல இந்தப் பாடல் புயல் வேகத்தில் போகும். புரண்டு வரும் விரகதாபத்தை நவீன கருவிகள் கொண்டு இசையமைத்துக் காட்டியது இந்தப் பாடலின் சிறப்பு. அதுவே நமக்குக் கிளுகிளுப்பு. (வின்னர் படத்தில் வடிவேலு சொல்லுவது போல, இந்தக் கலவர பூமியிலும் ஒரு காதல் கிளுகிளுப்பு.)

Today’s quiz is a buffet lunch: it has everything in proper order: it has a haunting chorus in the beginning, with raging violins and roaring trumpets. Watch how the group-violins pick-up in the middle of the sequence at the 33-second marker. Amazing pace and an awesome liftoff! And see how it slows down with a pleasing chorus at the end. Amazing song. Fantastic hit of the 1990s. Please identify 🙂

Please leave your answers below in the COMMENTS section with your Twitter handle/username. For other discussions on Twitter, please use hashtag #365RajaQuiz.

Clue: Please try to figure out the answer sincerely as the posted audio is the clue and hint you will ever need. But, if you need one more lifeline, then just select the box below,with your mouse, between the double-quotes to view the additional hint:

Actress featured in this song is an active politician today.
இப்பாடலில் வரும் நடிகை, இன்றைய இந்திய அரசியல்வாதி.

Answer: Special thanks to @ezharai and @prasannaR_ for pointing us to the actual Musical-Note composition sheet in Maestro Ilaiyaraaja’s own handwriting, for this amazing song. Please check it out. Adho Andha Nadhiyoram (அதோ அந்த நதியோரம்) from Ezhai Jaadhi (ஏழைஜாதி) (1993)

Advertisements