Tags

, , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

வணக்கம்.

CAUTION: Today you have 2 clues to listen and answer. Very long post. I am sorry for its length. It comes unedited — straight from my heart 🙂

விமர்சனமே எழுதாமல் ஒலித் துணுக்கை மட்டும் கொடுத்துவிடு ஓடிட வேண்டும் என்று நான் நினைத்திருந்தால், இன்றைய புதிர் தான் அதற்கு ஏற்றது. ஏனென்றால், உணர்ச்சிவசப்படாமல் இதற்கெல்லாம் சிந்தனைகளை சிதற விடாமல் இருக்கவே முடியாது 🙂

இத்துணைக்கும் இது சோகப் பாடல் அல்ல. அருமையான காதல் பாடல்.

அட்டகாசமான டூயட் பாடல்.

ஆனால், அதில் நம்மையும் அறியாமல் சிறு வயது நினைவுகள் தைக்கப்பட்டு இருப்பதால், ஏதேதோ, தூரத்து விசயங்கள் எல்லாம் வந்து அழுத்துவது போன்றதொரு சுகமான சுமை, கண் இமைக்கும் நேரத்தில் வந்துவிட்டு ஓடிவிடுகிறது.

நேற்றைய பாடலில் ஒரு மலேசியா வாசுதேவன் அண்ணனின் பாடல் இருந்தாலும், அதை கொடுக்க முடியாத காரணத்தினால் வருந்துகிறேன் என்ற ரீதியில் சொல்லிவிட்டு போயிருந்தேன், அல்லவா? இன்று அதை சரி செய்யும் விதத்தில், மலேசியா அண்ணனின் டூயட் பாடல்களில் வரிசை போட்டால், முன்னணியில் உள்ள பாடல்களில் ஒன்றான இதை களம் இறக்குவதில் ஒரு சுகம்.

அடிக்கடி நான் இங்கு குறிப்பிட்டு சொன்னது போல, மலேசியா அண்ணன், அந்தக் காலத்தில் stereotype and clichesஆல் அடிபட்ட மனிதர். இசைஞானி எப்படி நிறைய ஏசுக்களுக்கும் பாட்டுக்களுக்கும் ஆளானாரோ, அதே போல இவரும்! இன்றைய மக்கள் ஆட்டுக்குட்டி முட்டையிட்டை ஆயிரம் தடவை புகழ்ந்து பேசுகின்றனர். 1970களின் இறுதியில் தொடங்கி 1980களில் எல்லாம் அதே பாடலை மலேசியா அண்ணன் பாடியதாலேயே அவரை நையாண்டி செய்தும், குறைத்துப் பேசியுமே சுகம் கண்டது நம் இனம் என்பதை மிகுந்த வருத்தத்தோடு தான் இங்கு பதிவு செய்ய வேண்டி இருக்கிறது. நமக்கே இப்படி என்றால், அண்ணன் எப்படி feel பண்ணி இருப்பார்னு நெனச்சு பார்க்கவே கஷ்டமா இருக்கு 😦 ஆக, அந்த generation ஆள் என்பதால் அத்தகைய bias என் ரசனையையும் ரகசியமாகவே அமுத்தி வைத்திருந்தது என்றால், அது மிகை இல்லை. பின்னாட்களில் தான், அண்ணனின் பாடல்களில் என்னையே என்னால் அடையாளம் கண்டு கொள்ள முடிந்தது. அடிக்கடி என்னுடைய நண்பர்களிடம் சொன்னதுண்டு. பரவாயில்ல டா…அந்தக் கால நட்டுக போல்டுக கிரிட்டிசிசத்தை எல்லாம் கண்டுக்காம, மலேசியா அண்ணன், இசைஞானி எல்லாம் பாடினதுனால காலம் பூரா நாம இந்த மாதிரி அட்டகாசனான பாட்டை எல்லாம் கேக்க முடியுதுன்னு குதூகலிப்பேன்.

இவர்கள் இருவரின் குரலில் ஈர்க்கப்பட்டதால், எங்கள் வீட்டு பாத்ரூம் என் ரிக்கார்டிங் செண்டராக மாற ;), அந்தக் கொடுமையை (??) பொறுக்க முடியாமல் வேப்பிலையை அடித்து பேயை விரட்டும் ஆட்டையாம்பட்டியாக என் அக்காள் அதை மாற்றும் வகையில் என் மீது பாய… எல்லாம் இன்னும் நினைத்துப் பார்த்தால் பசுமையோ பசுமை. 🙂

நிற்க.

அடிக்கடி நம் ஜிரா (@RagavanG) சொல்வார் — மலேசியா வாசுதேவன் – சுசீலா டூயட்கள் எல்லாமும் செம என்று. அதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு.
P SusheelaMalaysia Vasudevan
நிற்க.

இன்றைய பாடலும் அகில இந்திய வானொலி, கோயமுத்தூர் நிலையத்தாரின் ரசனையால் அடிக்கடி கேட்டு கேட்டு மனத்தில் ஆழமாகப் பதிந்தது. பின்னர் அதிகம் வானொலியில் வரவும் இல்லை, தூர்தர்ஷனிலும் பார்த்ததே இல்லை.

ஆனால், அமெரிக்கா வந்த பின்னர், இந்தப் பாடலை கேட்காமல் ஒரு மாதிரி இருந்தது. புளோரிடாவில் பட்டம் வாங்கின கையோடு விடுமுறையில் இந்தியா சென்றபோது, நேராக ஓடிப்போய் சரண்டர் ஆனது ராயல் எலக்ட்ராணிக்ஸில். அங்கு, இந்தப் பாடலின் முதல் வரியைப் பாடி காட்டி இது என்ன படம்? அந்தப் பாட்டை பதிவு செஞ்சுடுங்கன்னு சொல்லி, பதிவு செய்து வந்தேன் (அந்தக் காலத்தில் Alta Vista and Yahoo search enginesதான். Unicodeம் இல்லை, தமிழ் சார்ந்த தேடலுக்கு எல்லாம் அவ்வளவு மவுசு இல்லை!). அதில் இருந்து தான் இந்த encoding வருகிறது. 🙂

இப்படி ஒரு புதிருக்கு பின்னால் தான் என்னென்ன கதை இருக்கிறது பாருங்கள். 🙂


சரி, மலேசியா + தாயின் மடி + வளர்பிறை யில், மலேசியாவைப் பற்றி சொல்லிவிட்டேன். அதென்ன தாயின் மடி…அதையும் சொல்லிடறேன். பொறுத்துக்கோங்க. நான் தான் சொன்னேன்ல, இந்தப் பாட்டுக்கு எல்லாம் என்னால உணர்ச்சிவசப்படாம இருக்கவே முடியாதுன்னு 🙂 இதுனாலேயே தான் இந்தப் பாட்டை எல்லாம் முதலிலேயே பதிவேற்ற முடியவில்லை 🙂

தாயின் மடி.

ஹும்…..

Wanderlust — இப்படி ஒரு ஆங்கில வார்த்தை உங்களில் பலருக்கு தெரியும். பல நாடு, ஊர், என்று போய் பார்க்க வேண்டும் என்று நம் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் அந்த உந்துதலுக்குத் தான் wanderlust என்று பொருள் 🙂 ஆனால், பல இடங்களுக்குப் பறந்து, திரிந்து, சென்று, வசித்து என்று எல்லாமும் ஆகி முடிந்தாலும், ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, அது என்னவோ தாயின் மடியில் வந்து படுத்தால், அது ஒரு தனி ஸ்பெஷாலிட்டி தான். இல்லையா?

உலகத்தின் ஏழு அதிசயங்கள் அது இதுன்னு பட்டியல் போடுற இடத்துல, தாயின் மடியை சேர்க்காமல் விட்டது தப்புன்னு சொல்வேன் 😉

தாயின் மடியில் படுத்துக்கொண்டு விட்டத்தைப் பார்த்தாலும் சரி, தாயின் முகத்தில் முகம் பார்த்தாலும் சரி, நம்மையே நாம் உணரும் மிகச் சிலத் தருணங்களில் அதுவும் ஒன்று, அல்லவா?

அப்படித் தான், மலேசியா அண்ணனின் பல பாடல்களைப் பார்க்கின்றேன் — குறிப்பாக இந்தப் பாடலை 🙂


அடுத்ததாக வளர்பிறை.

வளர்பிறை என்பதும் தேய்பிறை என்பதும்
நிலவுக்குத் தெரியாது
இன்பங்கள் என்பதும் துன்பங்கள் என்பதும்
அன்புக்கு கிடையாது

இப்படி ஒரு அருமையான பாடல் ஒன்று உண்டு. அது போல, இசைஞானியும் சரி, மலேசியா அண்ணனும் சரி, இணைந்து பணியாற்றிய போது, இது ஹிட், இது சூப்பர் ஹிட் என்றெல்லாம் பார்க்காமல், வெளுத்து வாங்கினார்கள். It was just as air is blowing, waves are undulating, birds chirping…No special effort was ever needed. நிலவுக்கு ஏது கவலை — அது வளர்கிறதா, தேய்கிறதா என்று? அதை ரசிப்பதில் அல்லவா நம் எண்ணம் என்பது வளர்பிறையாக வளர்ந்து கொண்டே போகிறது?

அது போல இசைஞானியின் இசையில், மலேசியா அண்ணனின் பாடல்கள் ஒவ்வொன்றுமே வளர்பிறை தான். ஒரு கலைஞனின் பெருமையை அவ்வளவாக வெளியில் பேசப்படாமலே ஒரு தலைமுறையை வீணடித்த காரணத்தினால், இவருடைய பாடல்களை கேட்குமட்டும் கேட்குமட்டும், அந்தப் பாடல்களில் உள்ள பாசம், காதல், கோபம், தாபம், கிண்டல், கேலி, நக்கல் என்று சகலமும் நாளுக்கு நாள் வளர்ந்து நம்மை ஆட்கொள்ளும் வளர்பிறை போல. நான் மகான் அல்ல வி.கே.ராமசாமி ஸ்டைலில் சொல்ல வேண்டுமானால், என்ன கழுத நான் சொல்றது ;)))


இப்போது வாருங்கள் துணுக்குக்கு.

முதல் துணுக்கு. கேளுங்கள். (3 interludes woven together)

மலேசியா அண்ணன் இறப்பதற்கு முன், ஜெயா டிவியில் திரும்பிப் பார்க்கிறேன் நிகழ்ச்சியில் தனது நினைவுகளை தவழ விட்டார். அதிர்ஷ்டவசமாக கோயம்புத்தூர் சென்றிருந்தபோது பார்க்க முடிந்தது. ஆனால் பதிவு செய்யும் வசதி தான் இல்லை. அதில், இசைஞானியுடனான தனது ஆரம்ப நாட்களை நன்றாக அசைபோட்டார். அதில் ஒரு ஆத்மார்த்தமான wavelength வெளிப்பட்டதை இங்கு நினைவு கூர விரும்புகிறேன். ஏனென்றால், இந்தப் பாடலில் நீங்கள் அதை ஆத்மார்த்தமாக உணர்வு ரீதியாக நன்கு உணரலாம். இந்த sequenceஐயே எடுத்துக்கோங்களேன். முதன் முதலில் காதலியின் மெய்யைப் பற்றியவுடன் அவள் நாணுவதைப் போல இங்கே வீணை தான் எப்படி சிணுங்குகிறது பாருங்கள். சந்தூரும் புல்லாங்குழலும், வீணையின் சிணுங்குதலுக்கு ஏற்றாற் போல துரத்திக்கொண்டே காதல் விளையாட்டை நடத்துகிறது. இது இசைஞானியின் சித்து விளையாட்டு. இந்த விளையாட்டிற்கு, மிக, மிக அருமையாக சுசீலாம்மாவும் மலேசியா அண்ணனும் டூயட்டை பாடி இருப்பார்கள். தேன் குரல் — சுசீலாம்மாவுடையது. இந்தப் பாடலில் அந்தத் தேன் குரல் இன்னும் ரம்மியமாக ஒலிக்கும். ஆனால், மலேசியா அண்ணனோ, subduedஆக, ஒரு shyness கலந்த ஆண், காதல் வயப்பட்டு பாடுவது போல, the man next door 🙂 ஸ்டைலில் பட்டையைக் கிளப்பி இருப்பார். ஆயிரம் மலர்களே மலருங்கள் என்ற பாடலில் பூமியில் மேகங்கள் கூடியாடும் யோகமேன்னு மூன்றாம் சரணத்துல அதிரடியாக நொழஞ்சு நம்ம மனசுல கப்புன்னு உக்காந்துகிட்ட அண்ணன், இதுல ஆரம்ப பல்லவியிலேயே டேரா போட்டு உக்காந்துக்குவார்.

வயலின்களும், சந்தூரும், கிடாரும், வீணையும், புல்லாங்குழலும் — இவை எல்லாவற்றையும் விட — வீணையுடன் போட்டி போட்டுக்கொண்டு bass guitar வேறு….போதுமப்பா.. மண்டைல இதுக்கு மேல நிறுத்தி வச்சுகிட்டு தட்டச்சு செய்யமுடியல…அப்படி ஒரு பரவசம் வருது, இந்தப் பாட்ட நெனச்சாலே! 🙂

இரண்டாம் துணுக்கு. கேளுங்கள். (prelude)

இதுல பாட்டோட சரணமே வந்துடறது. அதனால பதில் சொல்வதில் குழப்பம் இருக்கக்கூடாது. ஏன் இதைக் கொடுத்தீர்கள் என்று சிலர் கேட்கலாம். அய்யா, இந்தப் பாட்டெல்லாம் எத்துணை சிறந்ததோ, அந்த அளவுக்கு அவை extinctஆக உள்ளது. இணைய காலத்தில் கூட இதெல்லாம் இன்னும் பரவலாக வெளிவரவில்லை. என்னுடைய நோக்கம் எல்லாம், யார் என்ன நினைத்தாலும், அய்யோ அந்த ரெக்ஸ் ரம்பக் கேஸ் (??) பெருசா ஒரு போஸ்ட் எழுதுச்சே…அந்தப் பாட்டுய்யான்னு 😉 யாரேனும் ஒருவர் நினைத்தாலும் கூட பரவாயில்லை, எனக்கு அதுவே போதும் :). இந்தப் பாடல் இன்னும் பலரை போய் சேர வேண்டும். எப்படி, இந்தப் பாடலை எல்லாம் கேட்காமல் இருந்தோம் என்று யோசிக்கவாவது வேண்டும். இன்னும் இது போல் எத்துணை என்று தேட வேண்டும். இன்னும் பலர் இம்மாதிரி பாடல்களை எல்லாம் தேடி, விமர்சனம், தியானம் என்று அடித்து தூள் கிளப்ப வேண்டும். இப்படி நினைப்பதில் தவறு ஒன்றும் இல்லையே? 🙂

அதற்காகத் தான் இரண்டு நாட்களாக இதை encode செய்ய கஷ்டப்பட்டேன். ஒலியின் துல்லியம் ஒரு பக்கம், சந்தூர் + வீணை + கிடாரின் ஒலியில் ஒரு ஆழம் — இணையத்தில் எங்கும் இதை நீங்கள் காண முடியாது. பெருமைக்காக சொல்லவில்லை… இசைஞானி+ மலேசியா அண்ணனின் பாடல்களை, இப்படியும் கேட்டுப் பாருங்கள் என்பதை மட்டும் தான் சொல்ல வருகிறேன். அது போதும் எனக்கு. ஒரு துளி hissing noise கூட இல்லாத வண்ணம், அணுஅணுவாய் தேடித்தேடி துடைத்துவிட்டேன். மலேசியா அண்ணனுக்கு எனக்கு தெரிந்த விதத்தில் இது ஒரு அஞ்சலி என்று கூட சொல்வேன் 🙂 இசை இசைஞானியுடையது. குரல் மலேசியா அண்ணனுடையது. என்னுடையது? வெறும் தூசு துடைப்பது 😉 வயசான கிழவி, ஊருக்கு போயிருக்கற அவ மவன் படத்த எடுத்து தூசி தொடச்சுட்டு, மவன் எப்ப வருவான்னு ஒக்காந்துட்டு இருப்பா இல்ல? அது மாதிரியான நெலமை தான் நம்மோடதும் 😉 எனக்கு தெரிஞ்சதை தானே நான் செய்ய முடியும் 🙂

இந்தத் துணுக்கில் பாருங்களேன். பாயசத்துல இனிப்பு இருக்கேமா..அப்புறம் எதுக்குமா இந்த முந்திரின்னு சின்ன வயசுல அம்மாவை நச்சரிப்பேன். அப்ப அவங்க சொல்வாங்க, நல்லா இருக்கும் தம்பி..சாப்பிடு. அதாவது, சுவைக்கு சுவை கூட்டும் முந்திரி..அதை ஆராயாமல் பருகிவிட்டு எந்திரின்னு அம்மா சொல்லாம சொல்வாங்க. அதே போலத் தான் இந்தத் துணுக்கு. அத்துணை இசைக்கு மத்தியிலும் 26 நொடிக்கு மேலே அந்த வீணை sequence தேவையா? அது இல்லாமல் இருந்திருந்தால் கூட நன்றாகத் தானே இருந்திருக்கும். இருந்தாலும், நம் இசைஞானி அம்மா மாதிரி. நல்லா இருக்கும் தம்பி..சாப்பிடுன்னு இசையாலேயே சொல்லிவிடும் அந்த அழகு…அந்த பாசம்…

போதும்டா சாமி. நான் போய் படுக்கறேன். நீங்க பதில பதிச்சுடுங்க. நான் கீச்சு பக்கம் கூட வர மாட்டேன். இன்னிக்கெல்லாம் இந்தப் பாட்டு தான்.

மலேசியா அண்ணன் தான் இன்னிக்கு நம்ம கூட முழுசா இருப்பார் 🙂

நன்றி.

Have a nice week ahead. Happy 4th of July to those in America and drive-safe, if you are traveling.

Please leave your answers below in the COMMENTS section with your Twitter handle/username. For other discussions on Twitter, please use hashtag #365RajaQuiz.

Extensively noise-removed and noise-gate applied. No tempo was altered. Multiple passes to remove hiss noise and LP noise. 3 interludes were conjoined together. 2nd track is just the prelude.


Clue: Please try to figure out the answer sincerely as the posted audio is the clue and hint you will ever need. But, if you need one more lifeline, then just select the box below,with your mouse, between the double-quotes to view the additional hint:

Movie title comes from the starting line of a very famous Pattukottai Kalyanasundaranar song, tuned by MSV-Ramamurthy duo and sung by the inimitable Late TM Soundarrajan.

NB: Enjoy the Continuous Play of all the clues so far.

Answer: Aasai Nenjin Kanavugal (ஆசை நெஞ்சின் கனவுகள்) from Mugathil Mugam Paarkalaam (முகத்தில் முகம் பார்க்கலாம்) (1979)

Advertisements