Tags

, , , , , , , , , , , , , , , , , ,

தலைவிக்குத் திருமண ஆசை வந்துவிட்டது. காதல் என்னும் ஏக்கம் அவளை வாட்டுகிறது. தலைவன்பால் அவளுடைய அன்பும் எதிர்பார்ப்பும் கூடிக்கொண்டேபோகிறது. கூடும் ஆவலினால் வெடித்துவிடாமல் இருக்க ஒரு Pressure valve இவளுக்குத் தேவைப்படுகிறது. அதனால், ஒரு பாடலைப் பாடித் தலைவனுக்கு இவள் தூது விடுகிறாள். அந்தப் பாடல்தான் இன்றைய புதிர்.

வீசும் காற்றைப் பார்த்து “வேண்டாம், என்னைத் தொடாதே” என்கிறாள். அதையும் தாண்டி “வேண்டாம் மனமே, நீ என்னை ஏற்றிவிடாதே” என்றும் கடிந்துகொள்கிறாள். பாரதிராஜா படத்தில் வருவதுபோல, தேவதைகள் chorus பாடுவதும் இந்தப் பாடலில் உண்டு. இதைத் தவிர வீணை, நாகஸ்வரம், புல்லாங்குழல் என்று அனைத்தும் உண்டு.

ஒரு பெண்ணின் மனத்தில் ஏற்படும் காதலை, உணர்வுபூர்வமாக இசையின் வழியே இசைஞானி காட்டியதால், இந்தப் பாடல் அந்தக் காலத்தில் உடனடியாகக் கவனிக்கப்பட்டது. இந்தப் படத்தில் பல ஹிட் பாடல்கள் இருந்தாலும் மெலடி, சங்கதிகளைத் தாண்டி உணர்வு அடிப்படையில் அமைந்தமையாலேயே இந்தப் பாடல் நிறைய பேரின் உள்ளத்தைக் கவ்வியது என்றால் அது மிகையாகாது.

பி.கு:: சில சிரமங்களால், ஒரு நாளைக்கு மூன்று அல்லது நான்கு முறைமட்டுமே Winner Tagsஐ update செய்யலாம் என்று யோசிக்கின்றேன். அதனால், பதில் அளித்தவுடன் உங்கள் பெயர் tag செய்யப்படவில்லை என்றால் பதறவேண்டாம். கண்டிப்பாக Tag செய்யப்படும். புரிதலுக்கு நன்றி.

Have a great week ahead. Wish you the very best.

Please leave your answers below in the COMMENTS section with your Twitter handle/username. For other discussions on Twitter, please use hashtag #365RajaQuiz.

Clue: Please try to figure out the answer sincerely as the posted audio is the clue and hint you will ever need. But, if you need one more lifeline, then just select the box below,with your mouse, between the double-quotes to view the additional hint:

This movie had 2 lead actresses. Uniqueness of this song is that the lead actress was choreographed as singing/emoting this sequence with her own Doppelgänger (her own “double”).
இரு கதாநாயகிகள் நடித்தப் படத்தின் இப்பாடலில் நாயகி தன்னுடைய நகல் பிரதியாக தன்னோடு சேர்ந்தே ஆடிப் பாடி வருவது போல காட்சியை அமைத்திருப்பார் டைரக்டர்.

Answer: Poongaatre Theendaathe (பூங்காற்றே தீண்டாதே ஏன் நெஞ்சே) from Kungumachimizh(குங்குமச்சிமிழ்) (1985)