Tags

, , , , , , , , , , , , , , , , , , , ,

நேற்றைய பாடல் மேகத்தில் பல நாட்களாக இருந்தது. வெளியிட்டால், எங்கே எல்லாரும் என்னை பயங்கரமாக ஓட்டிவிடுவார்கள் என்றே, சற்று காலம் தாமதித்து வெளியிட்டேன். அப்படியும் Twitterல் ஓட்டி எடுத்துவிட்டீர்கள். நல்லது 🙂 பாட்டு எப்படி? அது தானே நமக்கு முக்கியம்?

இப்படியாக இன்றைய புதிருக்கு preview போட்டிருந்தேன், இல்லையா?

So, for today’s quiz, let me place a humble request:

Please consider using a HQ headphone or stereo speaker system for today’s clue. It’ll be a bliss. Really!

NB: This is an encoded file for optimal hearing pleasure.

இன்றைய பாடலை பற்றி என்ன சொல்வதென்றே தெரியவில்லை. இந்த பாடலை எனக்கு பல வருடங்களுக்கு முன்பு வாஷிங்டனில் உள்ள என் நண்பர்கள் தான் அறிமுகம் செய்தனர். அன்றிலிருந்து இன்று வரை இந்த பாடலை ஒரு முறை இசைத்தால், அதில் இருந்து என்னால் விலகி செல்லவே முடியாத வண்ணம், இசைஞானியின் இசையும், இசைக்குயில் சித்ராவின் தேன்குரலும் என்னை கட்டிப்போட்டு விடும்.

அப்படி என்னங்க இந்த பாட்டுல இருக்குன்னு கேட்டா, நான் list போட்டு சொல்ல வேண்டியது இருக்கும். 🙂

 1. இசைக்குயில் K.S Chitraவின் அன்றைய பூவே பூச்சூடவா குரலில் ஒலிவடிவம் பெற்ற பாடல் இது. அவரது குரல் இந்த பாடலில் அப்படி ஒரு சர்க்கரை பாகு போன்று தித்திக்கும், பாருங்கள்! அப்பப்பா!
  இசைக்குயில் K.S Chitra
 2. இது, ஒரு கிராமத்து விதவைப்(??) பெண்ணின் காதல் ஏக்கத்தை பிரதிபலிக்கும் மகிழ்ச்சி பெருக்கு. ஏறக்குறைய 58/365 பாடலின் கருப்பொருள் கொண்ட பாடல் இது. இம்மாதிரி காதல் வயப்படும் ஒரு பெண்ணின் மன உணர்ச்சியை பிரதிபலிக்கும் விதமாக இசைக்கப்பட்ட பாடல் ஒவ்வொன்றிலும் வெளிப்படும் ராஜாவின் ராஜ முத்திரையை, இந்த பாடலில் ஏகத்துக்கும் காணலாம். அனுபவிக்கலாம்!
 3. பாடலில் சித்ரா “____டு” என்று அந்த சொல்லை, ஒரு காதல் வயத்தோடு “___ஊஊஊ” என்று பாடும் அழகு இருக்கிறதே, flat தான். அப்படி ஒரு அழகு! பாடப்படும் அந்த பெண்ணின் ஆழ்மன உணர்வுகளை அங்கேயே நச் என்று வெளிப்படுத்திவிடுவார். நீங்களே கேட்டுவிட்டு சொல்லுங்கள். ஆனால், தயவு கூர்ந்து HQ ஒலியில் கேளுங்கள், இல்லை என்றால் எல்லாம் அமுங்கி தேமே என்று ஒலிக்கும் 😦
 4. பாடலின் வரிகள், மிகவும் பொருத்தமாகவும், அருமையாகவும் இருக்கும். தயவு செய்து, இந்த பாடலை இயற்றிய பாடலாசிரியர் யார் என்று சொல்லுங்களேன்.
 5. பாடலின் ஆரம்பமே, மிகவும் மங்கலகரமாக இருக்கும். புதிரின் இசையில் ஒரு 12 இடங்களை mark செய்திருக்கிறேன். These markings are the special reasons, why I love this song so much. So, let us focus on the clue itself.
 6. ஆரம்ப Flute இருக்கிறேதே….ஆஹா…என்னுடைய Goldwave encoding sessionன் பொழுது, அந்த 10-second flute sequenceஐ மீண்டும், மீண்டும் ஒலிக்கச் செய்து பரவசம் அடைந்தேன். தேவலோகம் எங்கே என்று இந்த லோகத்தில் நாம் காணும் வண்ணம் அமைந்த சிலவற்றில், இந்த இசை sequenceஐ தாராளமாக சொல்லலாம் :-). அந்த markings between 0-10 secondsல் நான் 1…2…3…4…5…6…7…8 என்று காட்டி இருக்கும் இடங்களில் தான், மெல்லிய keyboard (+ guitar??) stroke ஒன்றை, ஓசையின்றி ராஜா கொடுத்திருப்பார். மொத்தம் 8 முறை, அடக்கி வாசிக்கப்பெற்று வரும். Just a gentle “ding” keyboard/guitar strumming lasting barely 1/2 a second for 8 times. (பாயசத்துக்குள் சிறு முந்திரியைப் போட்டு சுவையைத் தூக்குவார்களே, அது மாதிரி வரும் 8 instances இவை.) அதிலும் அந்த 8ல் ஒரு சிறு pause கொடுத்து, எடுத்திருப்பார் பாருங்கள், அது தான் ராஜாவின் master stroke of a genius.
 7. ஏன் என்றால், அங்கே தான் எனக்கு மிகவும் பிடித்த உச்சக்கட்ட சந்தூர் இசை புறப்படுகிறது. ஒரு வாடாத மல்லி போல உள்ள விதவை நாயகிக்கு, நாயகன் திலகமிட்டுவிட, பூட்டியிருந்த காதல் வண்டு, அவள் இதயத்தில் இருந்து புறப்பட்டு, வானம் நோக்கி பறக்க ஆரம்பிக்கும் அந்த அழகை, சந்தூரில் காவியமாய் படைத்திருப்பார் ராஜா.
 8. இந்த சந்தூர் இசையோடு வரும் violins parallel tracksல் பயணிப்பதை கவனித்து கேளுங்கள். இங்கே நீங்கள் அவளின் அலைபாயும் மனதை இசையால் துல்லியமாக அறியலாம். அவளின் படபடக்கும் பட்டாம்பூச்சி மனத்தை சந்தூரும், அவளின் கரைபுரண்டு ஓடும் காமத்தை,அதே வேகத்தோடு parallelஆக செல்லும் violinsம் ஆரவாரம் இல்லாமல் காட்டிவிடும்.
 9. ஆக, அந்த Santoor + Violin sequenceம், ஆரம்ப Flute sequenceம், இறுதியில் சங்கமிக்கும் flute + violin sequenceம், என்னை fixate செய்து விட்ட இசைத்துளிகள். ஆங்கிலத்திலும் பிரெஞ்சிலும் idee fixe என்று சொல்வார்களே, அது போல 🙂

இப்படியும் கீச்சி இருந்தேன்.

என்ன மனத்தை பறிகொடுத்துவிட்டீர்களா? 🙂 இந்த பாடலை இதற்கு முன்னர் நீங்கள் கேட்டிருக்கின்றீர்களா என்று பின்னூட்டத்தில் தெரிவித்தால் மகிழ்வேன். நன்றி.

நம்மை சுற்றி நடக்கும் சில சோக நிகழ்வுகளுக்கு நடுவே, இந்த புதிரை ஒரு வித palliativeஆகவும் எடுத்துக்கொள்ளலாம்.

எல்லோரும் இன்புற்று இருப்பது அல்லால் வேறொன்றும் அறியேன் பராபரமே.

Have a good day!

Please leave your answers below in the COMMENTS section with your Twitter handle/username. For other discussions on Twitter, please use hashtag #365RajaQuiz.

Clue: Please try to figure out the answer sincerely as the posted audio is the clue and hint you will ever need. But, if you need one more lifeline, then just select the box below,with your mouse, between the double-quotes to view the additional hint:

This awesome song by K.S. Chitra was for a movie directed by one of the Directors, who had attended Maestro Ilaiyaraaja’s “Nee Thaane En Ponvasantham” audio release function.

NB: Enjoy the Continuous Play of all the clues so far.

Answer: Mangalathu Kunguma Pottu (மங்கலத்து குங்கும பொட்டு) from Saami Potta Mudichchu (சாமி போட்ட முடிச்சு ) (1991)

Advertisements