Tags

, , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

வணக்கம்.

முதலில், 300/365க்கு விரைவில் விடையை அளித்துவிடுங்கள். முடிவுகளை அளிக்க எனக்கு பேருதவியாக இருக்கும் 🙂 நன்றி!


இன்று நான்காம் மற்றும் இறுதி சீசனின் முதல் புதிர். எல்லாரும் சொல்வது போல, நேற்று தான் ஆரம்பித்தது போல் இருக்கிறது. அதற்குள் 301!

எப்பவும் போல 201/365, 101/365, 201/365 போலவே தான் மங்கலகரமாக வீணை நாதத்தோடு கடைசி சீசனை ஆரம்பிக்கின்றோம்.

ஆனால், ஒரு சிறிய மாற்றம் – முக்கியமானது கூட.

All good things should come to an end என்பதை குறிக்கும் விதமாக சூசகமாக, இசைஞானியின் பாடல்களிலேயே மிகவும் நீண்டு வரும் கடையிசையை (postlude) இடையிசையோடு இணைத்திருக்கின்றேன். So, that is not a coincidence 🙂 😦

இந்த சீசன் ஒரு விதத்தில் மிகவும் specialஆனது என்று சொன்னால் அது மிகையாகாது. நம் புதிரின் மூலம் வலுவான உறவுகளும் நட்புகளும் உருவாகி இருக்கிறது என்பதை மறுக்கவே முடியாது.

உதாரணத்திற்கு நேற்று இரவு @VRSaran மற்றும் @Thachimammu உடன் மூன்று மணி நேரம் உரையாடினேன். இருவரையுமே என் வாழ்க்கையில் நான் சந்திப்பது இதுவே இரண்டாவது முறை என்றாலும், என்னமோ பள்ளி, கல்லூரி நாட்களிலேயே நட்புடன் பழகியவர்கள் போல அப்படி ஒரு நெருக்கமும் நட்பும். இத்தாலியர்கள் Carissimi என்பார்கள். அன்பானவர்களே என்பதையே இன்னும் பாசத்தோடும் அன்போடும் விழிப்பது போன்ற ஒரு வார்த்தை தான் அது. இவர்கள் இருவரோடும் உரையாடிக்கொண்டிருந்த போது எனக்கு அப்படித் தான் தோன்றியது. நினைத்துப் பார்க்கிறேன். இது வரை இப்புதிரில் நான் இவர்களை சந்திக்காமல் இருந்திருந்தால், இவர்களின் நட்பையும் பெறாமல் அல்லவா போயிருப்பேன். இப்படி உங்களில் பலரோடு பழகியதில் மட்டற்ற மகிழ்ச்சி. இம்மாதிரியான நிகழ்வுகள் உங்களுக்கும் இருக்கலாம். அதனாலேயே தான் உங்கள் அனைவரையும் இறுதி கட்ட போட்டிக்கு வருக, வருக என அழைக்கின்றேன்.

இது உங்கள் புதிர்.

இது நம் புதிர்.

இதில் பயணிப்பதில் பல நல்ல விசயங்களை நாம் அனைவரும் கற்றுக்கொண்டே வருகிறோம்.

நான் @ezharaiக்கு சொன்னது போல. இசைஞானியின் பாடல்கள் என்னும் புதையல் புதிரில் இருந்து சுரந்த அன்பியமாக நம் #365RajaQuiz சென்று கொண்டிருக்கிறது.

இறுதி கட்டத்தில் உங்களின் Willpower என்ன? இசையின் சுவை தான் என்ன? மற்ற நண்பர்களோடு விவாதித்து அதை நுகரும் சுகம் தான் என்ன என்று குதித்துத் தான் பாருங்களேன். This season will be short by 1/3rd. It could be competitive. But, please be part of this experience. Invite your friends. Encourage them. This is a nice community.

வாருங்கள். கடைசி கட்டமாக, தினம் ஒரு முத்தை அள்ளுவோம்.

இது வரை அளித்து வந்த அனைத்து ஆதரவுக்கும் நன்றி, நன்றி, நன்றி!

Have a nice week ahead.

Please leave your answers below in the COMMENTS section with your Twitter handle/username. For other discussions on Twitter, please use hashtag #365RajaQuiz.

An interlude and a postlude are joined together in this track.

Clue: Please try to figure out the answer sincerely as the posted audio is the clue and hint you will ever need. But, if you need one more lifeline, then just select the box below,with your mouse, between the double-quotes to view the additional hint:

This VK Ramasamy, Poornam Viswanathan, Janakaraj starrer was one of the blockbusters of Tamil Film Music, which propelled a very iconic actress into the limelight.

NB: Enjoy the Continuous Play of all the clues so far.

Answer: Gangai Karai (கங்கைக்கரை மன்னனடி ) from Varusham 16 (வருஷம் 16) (1989)

Advertisements