Tags

, , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

மூன்றாம் சீசனுக்கு உங்கள் அனைவரையும் அழைத்துச் செல்வதில் மட்டற்ற மகிழ்ச்சி. Welcome to Season-3. I am so happy, you are here.

201/365க்குள் போகும் முன்னர், சில முக்கிய அறிவிப்புகளை செய்துவிடலாமே. புதிதாக சேர்பவர்களுக்கு அது உபயோகமாக இருக்கும்.

  1. About பக்கத்தை ஒரு முறை பார்த்துவிடுங்கள். ஒவ்வொரு நாளும் க்ளூக்கள் பிரசுரமாகும் நேரம் எல்லாம் அதில் தெளிவாகவே இருக்கும்.
  2. பதில்களை, இங்கேயே பின்னூட்டத்தில் இட்டால், எனக்கு tag செய்ய சுலபமாக இருக்கும். Twitter DMஐ விட, இதில் அதிகம் தவறு நேர வாய்ப்பில்லை.
  3. தயவு செய்து, Twitter அல்லது இணையத்தில் வெளிப்படையாக பதில்களைப் பற்றியோ, பதில்களை பதிக்க உதவும் வெளிப்படையான க்ளூக்களையோ தரவேண்டாம் என்று ஒரு அன்பு request 🙂 மிக்க நன்றி 🙂
  4. மின்சாரத் தடை, வேலையின் நிமித்தம் பயணம் என்று பல காரணங்கள் உள்ளதால், பதிலளிக்க குறைந்தபட்சம் 24 மணி நேர அவகாசம் என்று இருந்தது, 36 மணி நேர அவகாசமாக அதிகரிக்கப்படுகிறது.
  5. ஒலி க்ளூ ஒன்று மட்டுமே போதுமானது என்பது நிறைய பேரின் கருத்து. ஆனால், சிலருக்கு அதை மட்டும் வைத்து கண்டுபிடிப்பது என்பது சிரமமாக இருக்கலாம். அதனால் text lifeline clue கண்டிப்பாக இருக்கும். ஆனால், க்ளூ LIVE ஆன பிறகு, அதில் மாற்றங்கள் செய்ய requestகள் வந்தாலும், செய்யவேண்டாம் என்று முடிவுசெய்துள்ளேன். மிக அரிய சமயங்களில், அவ்வாறு நான் செய்யும்போது, ஒரு சிலருக்கு அது வருத்தத்தை கொண்டுவருகிறது. LL clues can be helpful to some and not to all. I am sure, all of us can acknowledge it. If you go back to the previous clues, you will see how one person will say that the LL clue was helpless, while, another person will say that is what actually helped find the answer.
  6. நிறைய பேர் பங்கேற்கும் ஒரு புதிரில், அனைவருக்கும் உதவும் வகையில் LL க்ளூ கொடுக்க நேர்ந்தால், அது மிக சுலபமாக்கி மற்றவர்களின் ஆர்வத்தை குறைத்துவிடலாம். அதனால், இனிமேல், எனக்கு என்ன தோன்றுகிறதோ, அதை கொடுத்துவிடுகிறேன். உதவினால், நல்லது. உதவாவிட்டால், கண்டிப்பாக பின்னூட்டத்தில் அதையே குறையாக சுட்டிக்காட்டுங்கள். So far, I had never censored and will never censor any comment, unless explicitly requested by the commentator. Likewise, I will not withhold any comment, even if it has biting criticism in it :). So, please feel free.
  7. இரண்டாம் சீசனில் எப்படி competition கடுமையாக இருந்தது என்று எல்லாரும் அறிவோம். அதைவிட பயங்கரமாக மூன்றாம் சீசன் இருக்கும் என்பது எனது அனுமானம். அதனால், க்ளூக்களின் standardஉம் அதை பிரதிபலிக்கும் வண்ணம் இருந்தால், all-in-the-game என்று எடுத்து, போராடி பாருங்கள்? It will be fun, isn’t it?
  8. கிழக்கே போகும் ரயில் BGM க்ளூவை எடுத்துக்கொள்ளுங்கள். அதில் step-by-stepஆக, எப்படி க்ளூவிலேயே நிறைய விசயங்கள் அடங்கி இருக்கிறது என்பதை வர்ணனை மூலம் விளக்கியது, நிறைய பேருக்கு பதில் கண்டுபிடிக்க உதவியதாக சொன்னார்கள். That is precisely the point: Please do not view LL clue in isolation. Please relate that to everything that is being said in the description, including the audio-clue. Most of the LL clue can be less than helpful, if they are viewed in isolation. Sometimes, I purposefully drop some words in the description, that may be a hidden-clue as well. So, just enjoy the ride 🙂
  9. வேறு எந்த விதத்திலும் மாறுதல்கள் என்று இருக்காது. நிறைகளை சுட்டுவது போல, குறைகளை தாராளமாக சுட்டுங்கள். கண்டிப்பாக நல்ல முறையில் எடுத்துக்கொண்டு, எங்கே எல்லாம் மாற்றங்களைக் கொண்டுவர முடியுமோ, அங்கு கொண்டு வருவேன். பலரின் கருத்துகளையும் கவனித்து வருவதால், சில அல்லது பல முறை, உங்களது தனிப்பட்ட கருத்துகளை புறக்கணிக்க நேரலாம். அதற்கு காரணம் இது தானே தவிர வேறு ஒன்றும் இல்லை.

Happy St. Valentine’s Day. இனிய காதலர் தின வாழ்த்துகள்.

ஆனால் Valentine’s Day என்பது “காதல்” குறித்தது மட்டுமல்ல. யாரோ அவசரத்தில் அப்படி மொழிப்பெயர்த்து சிதைத்தேவிட்டார்கள் என்பது தான் உண்மை. பெரும்பாலும் காதல் குறித்த தினம் தான் என்றாலும், அன்பைக் குறித்த தினம் இது. தாய், தந்தை, குழந்தை, நண்பர், அண்டை-அயலார், என்று யாருக்கு வேண்டுமானாலும் அன்பின் வாழ்த்துகளை தெரிவிக்கும் தினம் தான் இன்று.

ஆகையால், உங்கள் அனைவருக்கும் வாலண்டைன் தின வாழ்த்துகள் 🙂

எப்பவும், முதல் பாடலாக வீணை இசை நிறைந்த பாடலை இறக்கிவிட்டிருக்கின்றேன். 1/365ம் சரி, 101/365ம் சரி, வீணையில் இருந்தே ஆரம்பித்ததால், இந்த முறையும் 201/365ஐ வீணை க்ளூ மூலம் ஆரம்பிக்கின்றேன்.

இன்று அன்பின் தினம் என்பதால், நமது உறவுகளில் மிக முக்கிய உறவான குடும்பத்தில் மிகவும் போற்றப்படவேண்டிய ஒருவரைப் பற்றிய பாடல் தான் இது. இந்த பாடல் படுபயங்கர ஹிட். படத்தைத் தயாரித்த நிறுவனமும் பெரியது, நடித்த நடிகரும் சாந்தமாக இருந்து விஸ்வரூபம் எடுக்கும் இரு வேடங்களில் நடித்தவர். இந்த பாடல் மிகவும் இனிமையாக இருந்த காரணத்தால், இசைஞானி இளையராஜவும் ஒரு வர்ஷன் பாடியிருப்பார், இன்னொரு பெரிய பாடகரும் இன்னொரு வர்ஷன் பாடியிருப்பார்.

Ilaiyaraaja

ஆரம்பம் வீணை. ஆனால், நடுவில் பாஸ் கிடார், லீட் கிடார், எலக்ட்ரிக் கிடார் என்று பயணிக்கும் இடையிசையில், புல்லாங்குழலின் குளுமையும், சந்தூரின் தட்டலும், காங்கோ டிரம்ஸின் தட்டலும் உண்டு.

யாரைப்பற்றிய பாடல் என்று நான் சொல்லித்தான் தெரியவேண்டும் என்று இல்லை. இன்னும் தெரியவில்லை என்றால் 0:30-0:34 நொடிகளில் வரும் இசை என்ன சொல்கிறது என்று உங்கள் இதயத்தை கேளுங்கள். நேரே போய், Happy Valentine’s Day அம்மா! என்று வயதான அவருக்கு வாழ்த்து சொல்ல அது துணை புரியும்.

That is Raaja and his power of music.

I hope, we all can travel together for the next 165 days. Have a good one, including all you lovey-dovey Valentines 🙂

Please leave your answers below in the COMMENTS section with your Twitter handle/username. For other discussions on Twitter, please use hashtag #365RajaQuiz.

Clue: Please try to figure out the answer sincerely as the posted audio is the clue and hint you will ever need. But, if you need one more lifeline, then just select the box below,with your mouse, between the double-quotes to view the additional hint:

Title of this movie is the starting line of a famous song by the legendary Pattukottai Kalyanasundaram for a MGR movie.

NB: Enjoy the Continuous Play of all the clues so far.

Answer: Naanaaga Naan Illai ( நானாக நான் இல்லை) from Thoongaathe Thambi Thoongaathe (தூங்காதே தம்பி தூங்காதே) (1986)

Advertisements