Tags

, , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

வணக்கம்.

இன்றுடன் மலேசியா பாறைகள் முடிவடைகிறது. நாளைய பூஜைக்கு பாலு வந்துவிடுவார் 😉

இன்றும் நேற்று போன்றே ஒரு இனிய, ஜாலி tie-breaker. இரண்டில் ஒன்றுக்கு பதில் சொன்னால் போதும். சரியா?

  1. முதலில் மலேசியா அண்ணனின் அட்டகாசமான காதல் டூயட் பாடல்.
  2. இரண்டாவதாக இசைஞானி இளையராஜா பாடிய குழந்தையின் பாடல்.

இந்தப் பாட்டு சாதாரண பாட்டே இல்லீங்க. இது ஒரு மாதிரியான துருதுருன்னு போற காதல் டூயட் பாட்டு. இந்தப் பாட்டை நன்றாக புரிந்துகொள்ள வேண்டுமானால், அந்தக் காலத்து சைட் அடிச்சான் காதல் சங்கதிகளுக்குள் போய் ஆகவேண்டும். கோயிலிலும், தெருவிலும், தண்ணீர் பிடிக்கும் இடத்திலும், பஸ் ஸ்டாப்பிலும் என்று பாவாடை தாவணியும்-புது பேண்ட் சட்டையும் ஒருத்தர ஒருத்தர் வுடற லுக்குள இருந்து, புதர்களில் அதிசயமாக சில ஆடுவது, அசைவது என்று ஒரு மாதிரியாக காதலித்த காலம் அது. சிறிய ஊர் அல்லது காலனி என்றால், யார் யாரை டாவடிக்கிறார்கள் என்பது எல்லாம் அரசல் புரசலாக sotto voceல் பேசப்படும் 🙂 அப்படி இருக்கும் போது, மற்றவர்கள் ஒரு மாதிரியாக பேசுகிறார்கள் என்பதை காதலர்கள் உணரும்போது, ஒரு வித பயமும் படபடப்பும் வரும். இல்லையா? சிலருக்கு, அது நல்லதாக தோன்றும்… வீட்டுல சேதி போச்சுன்னா கண்ணாலம் பண்ணி வைப்பாய்ங்க என்ற எண்ணமாக இருக்கலாம். சில சமயம், WTH என்றும் கூட ஒரு வித thrillஉடன் காதல் செய்யலாம். அப்படிப்பட்ட பாட்டு இது. மலேசியா அண்ணன் இன்னொரு பாடகியுடன் அட்டகாசமான டூயட்டில் இறங்கி அடிப்பார்.பாட்டின் ஆரம்பமே நிதானமாக கிடாரில் ஆரம்பிக்கும். பின்னர் தபேலாவும், சந்தூரும் அடித்து தூள் கிளப்பிக்கொண்டு பல்லவி செல்லச் செல்ல, புல்லாங்குழலும் வரும். காதல் மட்டும் இல்லை, இந்தப் பாட்டின் மெட்டில் இருந்து இசை வரைக்கும் வெறும் காதல் மட்டும் இல்லாமல் காதலோடு சேர்ந்து ஒரு வித விறுவிறுப்பும், குறும்பும் கலந்து வரும். அது தான் பாடலின் சிறப்பே. நம்மள பத்தி என்னமோ கிசுகிசு எல்லாம் வருதாமே..அது உண்மையாங்கற thrillல இரண்டு பேரும் பாடுவார்கள். விடை கண்டுபிடித்த பின்னர், அந்தப் பாட்டை முழுவதுமாக ரசித்துக் கேளுங்களேன். அப்போது புரியும், இசைஞானியின் வித்தை, இதில் எந்த அளவுக்கு என்று! இந்த பின்னணியை வைத்து இசைத்துணுக்கை கேளுங்களேன் 🙂

அடுத்ததாக, குழந்தையை மையமாக வைத்து பாடப்பட்டிருக்கும் அருமையான பாட்டு. இந்தப் பாட்டில் வரும் வரிகள் ஒவ்வொன்றும் கவனித்து அனுபவித்து கேட்கவேண்டியது. அதில் ஒரு இடத்தில் உன்னை படைத்தவன் யார் என்ற ரீதியில் வரிகள் செல்லும்போது, இசைஞானி இளையராஜாவையே நாம் அப்படி கேட்கத் தோன்றினாலும் தோன்றலாம். ஒரு முறை கார் ஓட்டிக்கொண்டு இருக்கும்போது வெகு நாட்களுக்குப் பின் இந்தப் பாடலை கேட்க நேர்ந்தது. ஒரு இடத்தில் என்னையும் அறியாமல் இவர் பாடும் வர்ஷனில் கண்ணீர் வந்துவிட்டது. It is so rich in its melodic richness! இது சோகப்பாடல் இல்லை. இருந்தாலும், இதனுள் ஒரு சிறு மென்சோகம் இழையோடிக்கொண்டு இருப்பது போலத் தெரியும். இதிலும் சந்தூரின் நெடி அதிகம் உண்டு. ஆரம்பத்தில் ஒரு நீண்ட ஹம்மிங்கில் தலைவர் ஆரம்பிப்பார் — கிடாரின் துணை கொண்டு. அங்கேயே அப்படியே சொக்கிப்போய் உட்கார்ந்துவிடுவோம். அந்த மாதிரியான ஒரு மெட்டு. ஒவ்வொரு குழந்தையையும் பெற்றெடுக்க நோன்பு எடுக்கும் பெற்றோர்கள் எத்துணை எத்துணை பேர். அவர்களுக்கு ஆறுதல் தரும் விதமாகவும், அவர்களை நினைத்துக் கொள்ளவும் ஏதுவாக இந்தப் புதிரை இறக்குகின்றேன். சரியா? ரியலி 🙂 யார் இந்தப் பாடலை எழுதினார் என்று தெரியவில்லை. மழலை மணம் கமழும் பாடல்! இரண்டாவது இடையிசையில் கிடாரும், புல்லாங்குழலும் இணைந்து கொடுக்கும் சுக இசையை என்னவென்று சொல்வது. அதில் சந்தூரும் இணைந்து கொள்ளும் போது, ஒரு fulfillment தான். மனிதர்களுக்கு அன்பு என்று ஒன்றை நினைவுபடுத்தும் சின்னமாகவே சிறுகுழந்தைகள் இருக்கின்றார்கள்.

இருந்தும், நேற்று பீகாரில் 27 குழந்தைகளின் மரணம் நம்மை உலுக்கி எடுத்தது, இல்லையா? 😦 இந்தச் செல்வக் குழந்தைகளின் மரணம் மீண்டும் மீண்டும் சமூகத்தில் இவர்களின் vulnerabilityஐயும், இவர்களுக்கு எதிராக குற்றங்களைத் தைரியமாக செய்யத் துணியும் கயவர்கள் என்றுமே இருக்கின்றார்கள் என்பதையும் அல்ல நினைவூட்டுகிறது? Crimes against children are a bane of civilized society. 😦 இப்படி பல விசயங்கள் வந்து செல்லும் இந்த நேரத்தில், இந்தப் பாடல் உகந்ததாக இருக்கும் என்றே, இன்றைய புதிரில் சேர்க்கப்படுவதாகவும் எடுத்துக்கொள்ளுங்கள். ஏனென்றால் மலேசியா அண்ணனின் பாடலை மட்டும் தான் தருவதாக இருந்தேன்.

நன்றி.

Have a nice week ahead.

Please leave your answers below in the COMMENTS section with your Twitter handle/username. For other discussions on Twitter, please use hashtag #365RajaQuiz.

Noise-removed. Noise-gate applied. No tempo was altered.

Clue: Please try to figure out the answer sincerely as the posted audio is the clue and hint you will ever need. But, if you need one more lifeline, then just select the box below,with your mouse, between the double-quotes to view the additional hint:

In the Isaignani Ilaiyaraaja song, there is another version by P.Susheela. 🙂

NB: Enjoy the Continuous Play of all the clues so far.

Answer: Oorukkulla Unnayum Paththi (OR) Singara Selvangalai (ஊருக்குள்ள உன்னையும் (அல்லது) சிங்காரச் செல்வங்களை) from Ninaivu Chinnam (நினைவுச்சின்னம்) (1989)

Advertisements