Tags

, , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

200 வந்தே வந்துவிட்டது. அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் எனது நன்றிகள். குறைகளைப் பொறுத்து, நிறைகளைப் பெருக்கி, சீரான நடைபோட்டுக்கொண்டு போவது நிறைவாக இருக்கிறது. ஒவ்வொரு நாளும், இதை முடித்தப் பிறகே மறு வேலை என்னும் அளவுக்கு வாழ்வில் ஒன்றாகிவிட்டது என்று சிலாகித்து பெருமைபடுத்திய அத்துணை உள்ளங்களுக்கும் நன்றி.

இதே போல 3ஆவது மற்றும் 4ஆவது சீசனும் நல்லபடியாக சென்று சேரவேண்டும் என்று விரும்புகிறேன். உங்கள் மீது உள்ள நம்பிக்கையில் அது சாத்தியம் என்றும் நம்புகிறேன்.

இன்று நமக்கு மற்றும் ஒரு இனிய மைல்கல் காத்துக்கொண்டிருக்கிறது. இன்றைய க்ளூவையும் சரியாக பதில் கண்டுபிடித்துவிட்டால், @ezharai ஒரு மாபெரும் சாதனையை படைப்பார் — 100க்கு 100. ஆம். தொடர்ச்சியாக, இடைவெளி இல்லாமல், 100 நாட்களாக, ஒரு புதிரைக் கூட விடாமல், தவறின்றி பதிலளித்து வந்துள்ளார் இவர். இவரின் விடாமுயற்சியும், எது இவரை இப்படி உந்துகிறது என்று புரியாத புதிராக விளங்கும் இவரின் தீர்க்கமும், நம்மை வெகுவாக கவர்கிறது. இல்லையா?

இன்னும் பல நண்பர்கள் — இது எனது 100வது பதில் — என்பதில் இருந்து, இன்னும் பற்பல விதங்களில் தங்களின் பயணங்களில் மைல்கற்களை அளவிட்டுக்கொண்டே வருவது மட்டுமல்லாமல், அவற்றை நம்மோடு பகிர்ந்துகொண்டு மகிழ்வதாலும், நமக்கு கிடைக்கும் மகிழ்ச்சியே தனி தான்.

Malaysia Vasudevan
200வது க்ளூவை யாரு ஞாபகமா வச்சுக்கலாம்னு, யோசிக்கறதுக்கு முன்னாடியே, மலேசியா வாசுதேவன் அண்ணன் தான் பதிலாக வந்து விழுந்தது. இந்த சிங்கம் பாடாத பாடல்னு ஒன்னு இருக்கா? ஊஹூம்!

200வது பாடல் ஒரு மைல்கல்லாகவும் இருக்கணும், 100/365 போல மக்கள் அதிகம் கேட்டிராத, ஆனால், கேட்டால், ரசித்துப்போய் அதில் லயித்துவிடும் அளவுக்கு ஒரு பாடல் வேணும். அது 100/365 போலவே நல்லா percussion drums அடி நெறஞ்சதா இருக்கணும், அதில் நம்ம favorite ஷெனாயும் சரி, trumpetsஉம் சரி, இருந்தா அமோகமா இருக்கும்னு விரும்பினேன். இதெல்லாம் கலந்த, அருமையான மலேசியா அண்ணனும் இன்னொரு பிரபல பாடகியும் இணைந்து பாடிய பாடல் சட்டென்று என் மனதில் வந்து உட்கார்ந்துகொண்டது.

இந்த பாடலை நான் தேர்ந்தெடுக்க மேலே சொன்னதைவிடவும் பல காரணங்கள் உண்டு. நம்ம மலேசியா அண்ணன் கூட சேர்ந்து பாடும் பாடகியையும் எனக்கு பிடிக்கும். ஆனால், மலேசியா அண்ணன் கூட இவங்க எல்லாம் இந்த மாதிரி வேக பாடலில் பாட இறங்கினா…கஷ்டம் தான். இந்த பாட்டை கேட்டால் தெரியும், மலேசியா அண்ணேன் எந்த அளவுக்கு அடிச்சு தள்ளிட்டு போயிருப்பாருன்னு. ஆக, பாடலில் energy ஒரு பக்கமும், இசையில் ஒரு வேகம் + peppyயும் இருக்க வேண்டும் என்று விரும்பினேன்.

அதே போல, இசைக்கு பயங்கர முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட பாடல்களில் இதுவும் ஒன்று. ஆரம்ப இசை (prelude) இல்லாமலேயே, இந்த கோப்பு 2:13 நிமிட நீளம் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். அதையும் நான் கொடுத்திருந்தேன் என்றால், இசை மட்டுமே 3 நிமிட நீளம். பாடலின் ஒட்டு மொத்த நீளமே 5:15 நிமிடங்கள் தான். அந்த அளவுக்கு பாடலில் இசைக்கு முக்கியத்துவம் உண்டு.

அதற்கு காரணமும் உண்டு 🙂

இந்த பாடலில் வேகமும் பார்ப்பீர்கள், ஒரு மென்மையையும் பார்ப்பீர்கள். வேகம், வெறி, மோசம், களவு, தீமை – இவற்றைக் குறிக்கும் விதமாக வருவது தான் அத்துணை percussion drum beats, trumpets, electronic flutes, group violins இவை எல்லாம். ஆனால், மென்மையாக, நெகிழ்வோடு அழகாக 0:27-marker and 1:09-markerல் நுழையும் ஷெனாய் வாத்தியம், அந்த தீமையையும், களவையும், நடக்கவிருக்கும் விபரீதத்தையும் அறியாத மக்களின் மனநிலையைக் குறிக்கும்.

I tend to appreciate the duality of nature, in general. And this very dichotomy of the DANGER and INNOCENCE juxtaposed to each other, in this song sequence, fully justifies the paradoxical musical composition that Maestro Ilaiyaraaja has scored for this.

இந்த பாடல், அதிகம் தெரிந்திருக்காது என்ற அனுமானத்தில் கொடுக்கிறேன். இந்த பாடல் எல்லாம் அவ்வளவாக பேசப்படவில்லையே என்று ஒரு கோபம் கூட எனக்கு உண்டு 🙂

Our entire clue today, comprises 3 parts woven together.

  1. Interlude – 1 : 0:00 to 0:36 marker
  2. interlude – 2:: 0:37 to 1:18 marker
  3. Postlude : 1:19 to 2:13 marker

அட, இந்த பாட்டோட வெறும் கடையிசை (postludes) மட்டும் கொடுக்கலாமா என்று யோசித்தேன். ஆனால், இங்கு வரும் பல அன்பர்களின் ஆஸ்தான திரைப்பாடல் தளத்தில், இந்த பாடலின் postludesஐ விட்டுவிட்டார்கள். இந்த பாடலின் சிறப்பம்சமே, மிரட்டிக்கொண்டு பல நொடிகள் வரும் அந்த முடிவு இசை தான். அதில் வரும் தாள அமைப்பு — rhythms & beatsக்கு, ஆடாமல் அசையாமல் ஒருவரும் இருக்கவே முடியாது. இசைஞானி இளையராஜா, தான் ஒரு percussion colossusனு காட்டியிருக்கும் அடி, ஒவ்வொன்றும் இடி மாதிரி இருக்கும். அதைப்போய் ஏன் திரைப்பாடல் மக்கள் miss செய்துவிட்டார்கள் என்று தெரியவில்லை. அவர்களுக்கு கிடைத்த கோப்பில் இல்லாமல் இருந்திருக்கலாம்.

இந்த க்ளூவை கேட்டிராதவர்கள், இந்த postludesஐ பற்றி அதிகம் கீச்சவும், பின்னூட்டம் இடவும் சாத்தியம் அதிகம் என்பது என் அனுமானம். எனக்கு முதன்முதலில் ஒலிப்பதிவு கூடத்தில் வைத்து இதைக் கேட்டபோது, இந்த கடையிசையில் வந்த beats தான் மனதில் உடனே பதிந்தது. அதுவும் அந்த 1:58-மார்கரில் வரும் பலமுனைத்தாக்குதல் அடி இருக்கிறதே…என்ன அடி சாமி அது. அப்படியே drums மிரட்டி அடிக்கும் அந்த புதுமை, செம!

சரி, இந்த postludes section எங்கே? soundcloudல் நான் குறித்துள்ளதைக் கவனியுங்கள். எங்கே இடையிசை – 1 தொடங்குகிறது, எங்கே இடையிசை – 2 தொடங்குகிறது, எங்கே கடையிசை தொடங்குகிறது என்பதை எல்லாம் அங்கே குறித்துள்ளேன்.

இந்த பாடல், கோயம்புத்தூர் அகில இந்திய வானொலியில் ஒரு முறை கூட ஒலிக்கவில்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறேன் 🙂

அரசியல் பேரணி ஒன்று நடந்துக்கொண்டு இருக்கிறது. தலைவர்கள் மேடையில் இருந்து பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள். இதை கட்சி பிரமுகர்களும், கட்சி ஆட்களும் மட்டுமல்லாமல், பொதுமக்களும் ரசித்துக்கொண்டு இருக்கிறார்கள். இவர்களின் மொத்த innocenceஐ காட்டும் இசைச் சேர்ப்பு ஒரு புறம் என்றாலும், சிலர் கூட்டத்தில் ஊடுருவி, தலைவர்களை கொலை செய்யும் திட்டத்தில் முன்னேறுவதைக் குறிக்கும் விதமாக, வேக இசையும், தாள இசையையும் அடித்து தூள் கிளப்பியிருப்பார் இசைஞானி. இந்த பாடலின் நடுவே, ஆளுயற கட்டவுட்டுகள், பேரணி ஊர்வலம் என்று கலக்கி எடுத்து இருப்பார்கள்.

Just listen to this entire clue-track with high-quality speakers/headphones and see what you feel after that 🙂

இந்த பாட்டின் அடி, இடி எல்லாம் சரியான stress-busters. மேலே கொடுத்த க்ளூவை வைத்தே இது என்ன படம் என்று நீங்கள் சொல்லிவிட முடியும் என்று நம்புகிறேன். பார்ப்போம்.

வாழ்த்துகள். 200வது மைல்கல் தினத்தை முன்னிட்டு. எப்பவும் விட முன்னமே, இந்த க்ளூவை ரிலீஸ் செய்துவிடுகிறேன்.

மீண்டும் நன்றி. வாழ்க, வளர்க!

Please leave your answers below in the COMMENTS section with your Twitter handle/username. For other discussions on Twitter, please use hashtag #365RajaQuiz.

Clue: Please try to figure out the answer sincerely as the posted audio is the clue and hint you will ever need. But, if you need one more lifeline, then just select the box below,with your mouse, between the double-quotes to view the additional hint:

This “Realism Movie” Director, followed his earlier formula of having only 2 songs in this movie too, based on the sentiment of his earlier blockbuster hit movie. Unfortunately, this movie ran into serious legal and censorship problems with the Government of India, as it was loosely made on real-life events, as a political-thriller. For example, in this very song sequence, realistic, gigantic cut-outs of current Chief Minister of Tamil Nadu will be on display. In fact, a look-alike woman of the current Tamil Nadu CM, will be seated in the dais, when the procession goes before her, during this song sequence. This entire song comes in the movie, as though, the folks are singing for their dear Madame leader.

NB: Enjoy the Continuous Play of all the clues so far.

Answer: Thaamthana Thanthom (தாம்தன தந்தோம் என) from Kutrappaththirikkai (குற்றப்பத்திரிகை) (2006)