Tags
@AishwaryaGovindarajan, @amas32, @appandai, @dtwdy, @ezharai, @gopi37, @hakkeemCBE, @I_VR, @kaarthikarul, @maestrosworld, @manivel, @mayilSK, @muthiahrm, @nchokkan, @npodiyan, @prasannaR_, @QatarSeenu, @rajabalanm, @rmdeva, @rrslm, @sagittarian82, @seevin, @StallionStorms, @suressu, @tcsprasan, @thachimammu, @usharanims, @vrsaran, @w0ven
200 வந்தே வந்துவிட்டது. அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் எனது நன்றிகள். குறைகளைப் பொறுத்து, நிறைகளைப் பெருக்கி, சீரான நடைபோட்டுக்கொண்டு போவது நிறைவாக இருக்கிறது. ஒவ்வொரு நாளும், இதை முடித்தப் பிறகே மறு வேலை என்னும் அளவுக்கு வாழ்வில் ஒன்றாகிவிட்டது என்று சிலாகித்து பெருமைபடுத்திய அத்துணை உள்ளங்களுக்கும் நன்றி.
இதே போல 3ஆவது மற்றும் 4ஆவது சீசனும் நல்லபடியாக சென்று சேரவேண்டும் என்று விரும்புகிறேன். உங்கள் மீது உள்ள நம்பிக்கையில் அது சாத்தியம் என்றும் நம்புகிறேன்.
இன்று நமக்கு மற்றும் ஒரு இனிய மைல்கல் காத்துக்கொண்டிருக்கிறது. இன்றைய க்ளூவையும் சரியாக பதில் கண்டுபிடித்துவிட்டால், @ezharai ஒரு மாபெரும் சாதனையை படைப்பார் — 100க்கு 100. ஆம். தொடர்ச்சியாக, இடைவெளி இல்லாமல், 100 நாட்களாக, ஒரு புதிரைக் கூட விடாமல், தவறின்றி பதிலளித்து வந்துள்ளார் இவர். இவரின் விடாமுயற்சியும், எது இவரை இப்படி உந்துகிறது என்று புரியாத புதிராக விளங்கும் இவரின் தீர்க்கமும், நம்மை வெகுவாக கவர்கிறது. இல்லையா?
இன்னும் பல நண்பர்கள் — இது எனது 100வது பதில் — என்பதில் இருந்து, இன்னும் பற்பல விதங்களில் தங்களின் பயணங்களில் மைல்கற்களை அளவிட்டுக்கொண்டே வருவது மட்டுமல்லாமல், அவற்றை நம்மோடு பகிர்ந்துகொண்டு மகிழ்வதாலும், நமக்கு கிடைக்கும் மகிழ்ச்சியே தனி தான்.
200வது க்ளூவை யாரு ஞாபகமா வச்சுக்கலாம்னு, யோசிக்கறதுக்கு முன்னாடியே, மலேசியா வாசுதேவன் அண்ணன் தான் பதிலாக வந்து விழுந்தது. இந்த சிங்கம் பாடாத பாடல்னு ஒன்னு இருக்கா? ஊஹூம்!
200வது பாடல் ஒரு மைல்கல்லாகவும் இருக்கணும், 100/365 போல மக்கள் அதிகம் கேட்டிராத, ஆனால், கேட்டால், ரசித்துப்போய் அதில் லயித்துவிடும் அளவுக்கு ஒரு பாடல் வேணும். அது 100/365 போலவே நல்லா percussion drums அடி நெறஞ்சதா இருக்கணும், அதில் நம்ம favorite ஷெனாயும் சரி, trumpetsஉம் சரி, இருந்தா அமோகமா இருக்கும்னு விரும்பினேன். இதெல்லாம் கலந்த, அருமையான மலேசியா அண்ணனும் இன்னொரு பிரபல பாடகியும் இணைந்து பாடிய பாடல் சட்டென்று என் மனதில் வந்து உட்கார்ந்துகொண்டது.
இந்த பாடலை நான் தேர்ந்தெடுக்க மேலே சொன்னதைவிடவும் பல காரணங்கள் உண்டு. நம்ம மலேசியா அண்ணன் கூட சேர்ந்து பாடும் பாடகியையும் எனக்கு பிடிக்கும். ஆனால், மலேசியா அண்ணன் கூட இவங்க எல்லாம் இந்த மாதிரி வேக பாடலில் பாட இறங்கினா…கஷ்டம் தான். இந்த பாட்டை கேட்டால் தெரியும், மலேசியா அண்ணேன் எந்த அளவுக்கு அடிச்சு தள்ளிட்டு போயிருப்பாருன்னு. ஆக, பாடலில் energy ஒரு பக்கமும், இசையில் ஒரு வேகம் + peppyயும் இருக்க வேண்டும் என்று விரும்பினேன்.
அதே போல, இசைக்கு பயங்கர முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட பாடல்களில் இதுவும் ஒன்று. ஆரம்ப இசை (prelude) இல்லாமலேயே, இந்த கோப்பு 2:13 நிமிட நீளம் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். அதையும் நான் கொடுத்திருந்தேன் என்றால், இசை மட்டுமே 3 நிமிட நீளம். பாடலின் ஒட்டு மொத்த நீளமே 5:15 நிமிடங்கள் தான். அந்த அளவுக்கு பாடலில் இசைக்கு முக்கியத்துவம் உண்டு.
அதற்கு காரணமும் உண்டு 🙂
இந்த பாடலில் வேகமும் பார்ப்பீர்கள், ஒரு மென்மையையும் பார்ப்பீர்கள். வேகம், வெறி, மோசம், களவு, தீமை – இவற்றைக் குறிக்கும் விதமாக வருவது தான் அத்துணை percussion drum beats, trumpets, electronic flutes, group violins இவை எல்லாம். ஆனால், மென்மையாக, நெகிழ்வோடு அழகாக 0:27-marker and 1:09-markerல் நுழையும் ஷெனாய் வாத்தியம், அந்த தீமையையும், களவையும், நடக்கவிருக்கும் விபரீதத்தையும் அறியாத மக்களின் மனநிலையைக் குறிக்கும்.
I tend to appreciate the duality of nature, in general. And this very dichotomy of the DANGER and INNOCENCE juxtaposed to each other, in this song sequence, fully justifies the paradoxical musical composition that Maestro Ilaiyaraaja has scored for this.
இந்த பாடல், அதிகம் தெரிந்திருக்காது என்ற அனுமானத்தில் கொடுக்கிறேன். இந்த பாடல் எல்லாம் அவ்வளவாக பேசப்படவில்லையே என்று ஒரு கோபம் கூட எனக்கு உண்டு 🙂
Our entire clue today, comprises 3 parts woven together.
- Interlude – 1 : 0:00 to 0:36 marker
- interlude – 2:: 0:37 to 1:18 marker
- Postlude : 1:19 to 2:13 marker
அட, இந்த பாட்டோட வெறும் கடையிசை (postludes) மட்டும் கொடுக்கலாமா என்று யோசித்தேன். ஆனால், இங்கு வரும் பல அன்பர்களின் ஆஸ்தான திரைப்பாடல் தளத்தில், இந்த பாடலின் postludesஐ விட்டுவிட்டார்கள். இந்த பாடலின் சிறப்பம்சமே, மிரட்டிக்கொண்டு பல நொடிகள் வரும் அந்த முடிவு இசை தான். அதில் வரும் தாள அமைப்பு — rhythms & beatsக்கு, ஆடாமல் அசையாமல் ஒருவரும் இருக்கவே முடியாது. இசைஞானி இளையராஜா, தான் ஒரு percussion colossusனு காட்டியிருக்கும் அடி, ஒவ்வொன்றும் இடி மாதிரி இருக்கும். அதைப்போய் ஏன் திரைப்பாடல் மக்கள் miss செய்துவிட்டார்கள் என்று தெரியவில்லை. அவர்களுக்கு கிடைத்த கோப்பில் இல்லாமல் இருந்திருக்கலாம்.
இந்த க்ளூவை கேட்டிராதவர்கள், இந்த postludesஐ பற்றி அதிகம் கீச்சவும், பின்னூட்டம் இடவும் சாத்தியம் அதிகம் என்பது என் அனுமானம். எனக்கு முதன்முதலில் ஒலிப்பதிவு கூடத்தில் வைத்து இதைக் கேட்டபோது, இந்த கடையிசையில் வந்த beats தான் மனதில் உடனே பதிந்தது. அதுவும் அந்த 1:58-மார்கரில் வரும் பலமுனைத்தாக்குதல் அடி இருக்கிறதே…என்ன அடி சாமி அது. அப்படியே drums மிரட்டி அடிக்கும் அந்த புதுமை, செம!
சரி, இந்த postludes section எங்கே? soundcloudல் நான் குறித்துள்ளதைக் கவனியுங்கள். எங்கே இடையிசை – 1 தொடங்குகிறது, எங்கே இடையிசை – 2 தொடங்குகிறது, எங்கே கடையிசை தொடங்குகிறது என்பதை எல்லாம் அங்கே குறித்துள்ளேன்.
இந்த பாடல், கோயம்புத்தூர் அகில இந்திய வானொலியில் ஒரு முறை கூட ஒலிக்கவில்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறேன் 🙂
அரசியல் பேரணி ஒன்று நடந்துக்கொண்டு இருக்கிறது. தலைவர்கள் மேடையில் இருந்து பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள். இதை கட்சி பிரமுகர்களும், கட்சி ஆட்களும் மட்டுமல்லாமல், பொதுமக்களும் ரசித்துக்கொண்டு இருக்கிறார்கள். இவர்களின் மொத்த innocenceஐ காட்டும் இசைச் சேர்ப்பு ஒரு புறம் என்றாலும், சிலர் கூட்டத்தில் ஊடுருவி, தலைவர்களை கொலை செய்யும் திட்டத்தில் முன்னேறுவதைக் குறிக்கும் விதமாக, வேக இசையும், தாள இசையையும் அடித்து தூள் கிளப்பியிருப்பார் இசைஞானி. இந்த பாடலின் நடுவே, ஆளுயற கட்டவுட்டுகள், பேரணி ஊர்வலம் என்று கலக்கி எடுத்து இருப்பார்கள்.
Just listen to this entire clue-track with high-quality speakers/headphones and see what you feel after that 🙂
இந்த பாட்டின் அடி, இடி எல்லாம் சரியான stress-busters. மேலே கொடுத்த க்ளூவை வைத்தே இது என்ன படம் என்று நீங்கள் சொல்லிவிட முடியும் என்று நம்புகிறேன். பார்ப்போம்.
வாழ்த்துகள். 200வது மைல்கல் தினத்தை முன்னிட்டு. எப்பவும் விட முன்னமே, இந்த க்ளூவை ரிலீஸ் செய்துவிடுகிறேன்.
மீண்டும் நன்றி. வாழ்க, வளர்க!
Please leave your answers below in the COMMENTS section with your Twitter handle/username. For other discussions on Twitter, please use hashtag #365RajaQuiz.
Clue: Please try to figure out the answer sincerely as the posted audio is the clue and hint you will ever need. But, if you need one more lifeline, then just select the box below,with your mouse, between the double-quotes to view the additional hint:
NB: Enjoy the Continuous Play of all the clues so far.This “Realism Movie” Director, followed his earlier formula of having only 2 songs in this movie too, based on the sentiment of his earlier blockbuster hit movie. Unfortunately, this movie ran into serious legal and censorship problems with the Government of India, as it was loosely made on real-life events, as a political-thriller. For example, in this very song sequence, realistic, gigantic cut-outs of current Chief Minister of Tamil Nadu will be on display. In fact, a look-alike woman of the current Tamil Nadu CM, will be seated in the dais, when the procession goes before her, during this song sequence. This entire song comes in the movie, as though, the folks are singing for their dear Madame leader.
Answer: Thaamthana Thanthom (தாம்தன தந்தோம் என) from Kutrappaththirikkai (குற்றப்பத்திரிகை) (2006)
Anonymous said:
@seevin Kuttrap Paththirikkai – Thaam Thana Thaiyoom Endru
என். சொக்கன் said:
தாம்தனதையோம் from குற்றப் பத்திரிக்கை
ரிஷி said:
200ஆம் தின நல்வாழ்த்துகள் மாஸ்டர்….இனியும் வரும் பல புதையல்களுக்கும் நன்றி!
“தாம் தன தைய்யோம் என்று… திம் தன தைதோம் என்று ஆடடி பூங்குயிலே..” ராசாவின் மிரட்டலான இசையில் வாசுதேவரும் மின்மினியும் பாடிய “குற்றப்பத்திரிக்கை” பாடல்.
ரிஷி said:
ஏழரைக்கு 100 வாழ்த்துகள்!! 🙂
Rex Arul said:
Thanks, Subbu 🙂
R. Saravanan said:
பாடல் ” தாம்தனத் தையோம் என்று தீம்தனத் தெய்தோம் என்று ஆடடி பூங்குயிலே “. படம் குற்றப் பத்திரிக்கை. மலேசியா வாசுதேவன் & மின்மினி பாடிய பாடல்.
ராஜா குவிஸ் 200 நாட்கள் தொட்டதற்கு எனது இதயம் கனிந்த வாழ்த்துகள் ரெக்ஸ் அருள் !!
எனக்கு தினமும் இந்தப் புதிரில் கலந்துகொள்வது, அன்றாட வேலைப்பளுவில் இருந்து விடுபட கிடைக்கும் ஒரு மகிழ்ச்சியான வாய்ப்பு. எனவே இது 365 நாட்கள் தாண்டிய பின்னும் 730, 1095 என்று அடுத்தடுத்த கட்டம் நோக்கி பயணிக்கவேண்டும் என்றே பேராசை கொள்கிறேன்.
200 நாட்கள் கட்டுக்கோப்புடன், சிறிதும் எங்களது ஆர்வம் குறையவிடாமல், அவ்வப்போது உற்சாகம் கொடுத்து, க்ளூக்கள் பற்றி வந்த பல்வேறு விமர்சனங்களையும் இன்முகத்துடன் ஏற்று நடத்தி வரும் ரெக்ஸ் அருளுக்கு மீண்டும் ஒரு பெரிய சல்யூட் !!
Rex Arul said:
மிக்க நன்றி, சரண். இந்த க்விஸ் நிகழ்ச்சியை நடத்துவதில், உங்களுடன் எல்லாம், பல்லாயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் இருந்து தினமும் உரையாடும் வாய்ப்பு கிடைக்கிறது. அது மட்டுமல்லாமல், உங்களைப் போன்ற ஒரு நல்ல நண்பரை நேரிலும் சந்தித்து கருத்துகளை பரிமாறிக்கொள்ளவும் உதவியது என்றால் அது மிகையாகாது.
ஹாஹா.. உங்களின் வாழ்த்துகளுக்கு நன்றி. 730ம், 1095ம் அவனின் சித்தப்படியே நடக்கட்டும். இப்புதிரைப் பார்த்து, யாரேனும் முன்வந்து, நான் நடத்துகிறேன் என்று இன்னும் சிறப்பாக நடத்தக்கூடும். அப்போது, நானும் கலந்துகொண்டு எப்படி நீங்கள் பட்ட கஷ்டத்தைப்படுகிறேன் என்று அந்தக் கூத்தையும் பார்க்க ஆவலாக இருக்கின்றேன் 🙂
/:200 நாட்கள் கட்டுக்கோப்புடன், சிறிதும் எங்களது ஆர்வம் குறையவிடாமல், அவ்வப்போது உற்சாகம் கொடுத்து, க்ளூக்கள் பற்றி வந்த பல்வேறு விமர்சனங்களையும் இன்முகத்துடன் ஏற்று நடத்தி வரும் ரெக்ஸ் அருளுக்கு மீண்டும் ஒரு பெரிய சல்யூட் !!:/
இது ஒன்று தான், நீங்கள் தினம் படும் இன்பவேதனையின் மறுபக்கம். அதாவது, நான் எதிர்கொண்டு கச்சிதமாக நடக்க வேண்டிய புதிர் இது தான். வரும் கருத்துகளை சரியான மனநிலையோடு எதிர்கொண்டு, கருத்து சொல்பவரின் உணர்வுகளுக்கும் மதிப்பு கொடுத்து, யாருக்கும் மனவருத்தம் இல்லாத வண்ணம் glide செய்வது தான், எனக்கு இருக்கும் சேலஞ்ச். நானும் பயிலும் களம் தான் நம் ராஜா க்விஸ் 🙂
மிக்க நன்றி, சரண் 🙂
Kaarthik Arul said:
First of all Congrats for Double Century. Thanks is a very small word for ur efforts. I get introduced to many rare gems of Raja and discover some unheard songs while hunting for the answers. It’s become a part of my day to day activity.
I was not much active in the first 100. Git active towards the end of the 1st season. Got inspired from many twitters like @nchokkan, @ragavanG, @prasannaR_, @seevin who not only just answer here but also discuss it in Twitter.
Now @ezharai is my inspiration to try to crack 100/100 in the next season 🙂
Rex Arul said:
Thanks a lot, Arul. Absolutely, you all motivate each other to bring out the best. Thanks.
Kaarthik Arul said:
Thaam Thana Thaiyom Endru from kutRapathirikkai.
Since Thiraipaadal.com is down since yesterday I’m not able to verify the answer.
I’m just guessing the answer. Thanks for the ‘censor’ clue. BTW, did the movie get released??
Rex Arul said:
Yes, Arul. The movie finally got released in 2006. But, this is a perfect example of how, litigation and censor-bans can kill the movie. At the time it was released, a generation of people did not know anything about the movie. Besides, a lot of things were badly and horribly censored. So, editing was pathetic. However, a lot of attention to detail was there in the movie. Right from the Rajiv Gandhi’s attire — including the canvas shoes he wore at the time, Dhanu’s Salwar Kameez (orange and green), etc. etc.
Yet, nobody cared for this movie as most of the actresses like Mohini and Roja were passe by the time it was released.
As @RMDeva said elsewhere, if it had been released in 1992, it would have been a blockbuster. But, it just tanked. What a mess. I think the cameraman-cum-producer Ravi Yadav and Director R.K Selvamani saw the beginning of their end, I guess.
Kaarthik Arul said:
Oh! Thanks for the details. Will try to watch in YouTube
Rex Arul said:
:)) You are welcome.
Arun Rajendran said:
பாடல் – தாம்தன தையோம் என்று
படம் – குற்றப்பத்திரிக்கை
முதல் தடவயா கேட்கிறேன்…பிரமாண்டமான இசைனு சொல்றத விட இசையின் பிரமாண்டம்னு தான் சொல்லனும்..
Rex Arul said:
அருமை, அருண். சரியாகச் சொன்னீர்கள் 🙂
Eswar (@w0ven) said:
‘தாம் தான தையோம் என்று’ -குற்ற பத்திரிக்கை
@appandai said:
Thaamthana thaiyom endru – Kutrappathirikai
amas32 (@amas32) said:
As a show of appreciation for you, I definitely wanted to solve today’s puzzle 🙂 குற்றப் பத்திரிக்கை படத்தில் இருந்து தாம் தன தையோம் என்று.என்ற பாடல்.
#200 வாழ்த்துகள்!
amas32
Rex Arul said:
ஆகா…சூப்பர்ங்மா. கலக்கிவிட்டீர்கள். பாருங்க, எப்படி பதில் சொல்லிட்டு வர்றீங்கன்னு. அருமை.
மிக்க நன்றி. மூன்றாம் சீசனிலும் நீங்கள் பதில்களைக் கண்டுபிடிக்க வாழ்த்துகள் 🙂
கோபிநாத் said:
100க்கு 100 எடுத்து கலக்கி கொண்டு இருக்கும் ஏழர மற்றும் அனைத்து தல களுக்கும் என்னோட மனமார்ந்த வாழ்த்துக்கள் ;)))
Rex Arul said:
:))
@npodiyan said:
200 வாழ்த்துகள் பாஸ்!! 🙂
விடை: தாம் தான தையோம் என்று
மைல்கல்லுக்கு மிகப் பொருத்தமான டக்கரான பாட்டு.
சில மாதங்களுக்கு முன்பு தான் இந்தப் பாடல் எனக்கு அறிமுகமானது இது போன்ற பாடல்கள் பிரபலமாகாத சோகத்தை எங்கே போய் சொல்வது? 😦 ஏதோ தேடித் தேடிக் கேட்பதாலும் உங்கள் போன்றவர்களின் புண்ணியத்தாலும் தான் இது போன்ற அரிய பாடல்களை அறிந்து கொள்ள முடிகிறது. இந்தப் பாடலின் நல்ல ஒலித்தரமுள்ள mp3 இன்னமும் தேடிக் கொண்டிருக்கிறேன். postlude கூட என்னிடமிருக்கும் mp3 இல் இல்லை 😦
Rex Arul said:
நன்றிங்க. கவலை வேண்டாம். புதிர் முடியும் தருவாயில், இந்த பாடலை நான் பதிவு செய்து தருகிறேன்.
@npodiyan said:
மிக்க நன்றி பாஸ் 🙂
ஏழர said:
அண்ணே வழக்கம் போல நாலரைக்கு வந்து பார்த்தா இன்னிக்கு முன்னாடியே போட்டுட்டீங்க போல,
பாடல் தாம் தன தையோமென்று – குற்றப்பத்திரிக்கை
Rex Arul said:
கொஞ்சம் அதிக அவகாசம், நம்ம மைல்கல் புதிருக்கு கொடுக்கலாம்னு தான் ஏழர. வாழ்த்துகள். 100/100 – சீசன் 2ல். கலக்கிவிட்டீர்கள் 🙂
Anonymous said:
குற்றப்பத்திரிகை (1993) – தாம் தன தையொமென்று
@manivel
Prasannaa S (@tcsprasan) said:
thaam thana thaidhom endru dheem thana thaithom endru aadadi poonguyile. – Kuttra Pathirikkai
If the movie got released on time, this song would have been a hit for sure. The other swarnalatha song from the movie is also good.
Congrats rex on reaching 200. Thanks for putting up so much hard work to ensure that we are hooked up to RajaQuiz. Its not at all easy to sustain the interest for such a long time. I can understand the level of dedication. No words to express my thanks. As I mentioned earlier, this has now become a part of life. I do not want this quiz to end ever. Atleast you should consider to extend this for one more year. I know its a tough task, but no one i know is better qualified than you to do this. Pls consider
Rex Arul said:
/:Congrats rex on reaching 200. Thanks for putting up so much hard work to ensure that we are hooked up to RajaQuiz. Its not at all easy to sustain the interest for such a long time. I can understand the level of dedication. No words to express my thanks. As I mentioned earlier, this has now become a part of life. I do not want this quiz to end ever.:/
Thanks a lot, Prasanna. I truly appreciate your heartfelt words of appreciation. I am humbled and elated 🙂
/:Atleast you should consider to extend this for one more year. I know its a tough task, but no one i know is better qualified than you to do this. Pls consider:/
By God’s grace, if all goes well until 365/365, I will be the happiest, Prasanna. It is tough and I agree it is tough. But, you know what is the toughest? To be insulated from everything that goes around you. There could be some tragedy, some sadness, but, when it is time, encoding must start for a happy song 🙂 and say, even write commentary about that 🙂 That is the part, I find extremely tough. But, I try to insulate myself and focus only on the job to ensure that we all are riveted. So, once I reach 365/365, I am pretty sure, somebody among us will be motivated to take the baton and I will be happy to provide all assistance possible for that endeavor 🙂
But, thanks for your wishes, Prasanna.
Prasanna Venkatesan (@prasannaR_) said:
பாடல்: தாம் தனத் தையோம் என்று
படம்: குற்றப்பத்திரிக்கை
@sagittarian82 said:
தாம் தன தய்யோம் என்று ஆடடி பூங்குயிலே – குற்ற பத்திரிக்கை
இந்தப் பாடலில் முடிவிசை உள்ளதென்பது இப்போது தான் தெரியும்..
200க்கு வாழ்த்துகள்!
Rex Arul said:
Thanks, @Sagittarian82. What a postlude it is 🙂
Srinivasan said:
பாடல் : தாம் தன தைய்யோம் என்று
படம் : குற்றப்பத்திரிக்கை
முதல் முறை கேட்க்கிறேன் மாஸ்டர்
@Qatarseenu
Rex Arul said:
அப்படியா சீனு? அருமை. நன்றி.
dtwdy said:
Thaam Thana Thaiyom Endru
Movie : Kutra Pathirikkai
ஏழர said:
200வது புதிருக்குவாழ்த்துக்கள் அண்ணே, கிட்டத்தட்ட 7 மாசமா நாம இதுல பயணம் செஞ்சிட்டிருக்கோம், ஆனா நாள் போனதே தெரியல….
இந்த இரண்டாவது சுற்றில் பலர் பேரார்வத்தோடு கலந்துகிட்டு பெரிய அளவில் வெற்றிபெறச்செய்திருக்கிறார்கள். அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
குறிப்பாக 70 விடைகளுக்கு மேல் சரியாக சொல்லியிருக்கும்
@seevin
@muthiahrm
@dtwdy
@maestroworld
@hakkeemCBE
@vrsaran
@tcsprasan
@manivel
@prasannaR_
@rajabalanm
@rmdeva
@kaarthikarul
@rrslm
@baraneee
@nchokkan
@raasubbu
@thachimammu
ஆகியோரின் ஊக்கத்துக்கு பாராட்டுக்கள். அனைவரும் மூன்றாவது சுற்றிலும் கலந்து கொண்டு சதமடிப்பார்கள் என்று எதிர்பார்க்கின்றேன்
என்னளவில், முதல் சுற்றில் 90 இந்த சுற்றில் 100 என மொத்தமாக 200க்கு 190 சரியான விடைகளை அளித்திருக்கிறேன். முதல் 2-3 வாரங்கள் புதிர்களில் தினமும் கலந்து கொள்ள முடியாத நிலை, எனவே சில புதிர்கள் விடுபட்டுவிட்டது, 18வது புதிரிலிருந்து தொடர்ந்து சரியான விடையளித்து வருகிறேன், இது 183வது தொடர் சரியான விடை.
சிரமாகத்தான் இருக்கிறது, ஆனாலும், 365 என்று முடிவெடுத்தபின்னர் சற்றும் பின்வாங்காமல், பனி, புயல், பயணம், வேலை என்று எத்துணை இடர் வந்தாலும் சளைக்காமல் ஒவ்வொரு நாளும் அருமையானதொரு புதிர் போடுவதை நீங்கள் தொடரும்போது, வெறும் ‘அட்டன்டன்ஸ்’ போடுவதெ நான் சிரமம் என்று நினைப்பதற்கு கூச்சமாக இருக்கிறது. இப்படி ஒரு வாய்ப்பை எங்கள் அனைவருக்கும் வழங்கிவரும் உங்களுக்கும், தொடந்து மறுமொழிகளில் அனுபவங்களை பகிர்ந்து வரும் அனைவருக்கும் நன்றி
அருமையான பாடலுடன் இரண்டாவது சுற்றை முடித்திருக்கிறீர்கள். இந்த பாடலின் பின்னிசை இணையத்தில் எங்கும் இல்லை, இதை இதற்கு முன் ஒருமுறை கேட்டதுதான் அப்போதே மனதில் பதிந்துவிட்டது.
அனைவரும் 201ல் சந்திப்போம்
ரிஷி said:
ஏழர, 183/200…..யப்பா…சாமி….!! (என்னுடைய +2 தமிழ் மதிப்பெண் போல் இருக்கிறது.. 🙂 ) ராசாவின் இசை மேல் உங்களுக்கு உள்ள ”காதல்” நன்றாகவே வெளிப்பட்டு கொண்டிருக்கிறது…. சில சமயம் நீங்கள் ராசாவின் cloned versionஓ என்று கூட ஐயம் வருகிறது… 😉
உளங்கனிந்த வாழ்த்துகள்!!
@RRSLM said:
வாழ்த்துக்கள் எழர சார். தொடர்ந்து.
183 தொடர்ந்து பதிலளித்தது மட்டுமல்ல, முக்கல் வாசி நாள் இவர் தான் முதல் நபராக பதிலதிருப்பர். Rex போஸ்ட் பண்ண இரண்டாவது நிமிடத்தில் இவருடைய பதில்/கமெண்ட் வந்திருப்பதி கவனிததிருகின்றேன். Its amazing. Kudos andCongrats again.
Rex Arul said:
@RRSLM – So true 🙂
மயில்செந்தில் said:
மிஸ்டர். ஏழர, இதுவரை நடந்ததெல்லாம் டிரெய்லர்தான்மா. இனி நாங்களும் போட்டிக்கும் வர்றோம். :-/// (எங்கிருந்துதான் இப்டி செயல்வீரர்களா வர்றாங்களோ)
Rex Arul said:
அப்படிப்போடு மயிலு…மயிலுன்னா கொக்கா 🙂
Kaarthik Arul said:
@ezharai kudos to u 🙂
//சற்றும் பின்வாங்காமல், பனி, புயல், பயணம், வேலை என்று எத்துணை இடர் வந்தாலும் சளைக்காமல் ஒவ்வொரு நாளும் அருமையானதொரு புதிர் போடுவதை நீங்கள் தொடரும்போது, வெறும் ‘அட்டன்டன்ஸ்’ போடுவதெ நான் சிரமம் என்று நினைப்பதற்கு கூச்சமாக இருக்கிறது. இப்படி ஒரு வாய்ப்பை எங்கள் அனைவருக்கும் வழங்கிவரும் உங்களுக்கும், தொடந்து மறுமொழிகளில் அனுபவங்களை பகிர்ந்து வரும் அனைவருக்கும் நன்றி// – I second this 🙂
Rex Arul said:
மிக்க நன்றி, அருள் & ஏழர 🙂
Rex Arul said:
@ezharai — மிக்க நன்றி. பாருங்க. 200வது மைல்கல் என்பதைத் தாண்டி, எழரையின் சதம் அடித்த மைல்கல் என்று தான் அதிகம் அறியப்படுகிறது. அதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி. 🙂
ஏனென்றால், இதன்மூலம் நீங்கள் மற்றவர்களை ஈர்க்கின்றீர்கள், களத்தில் இறங்கி கலக்க. இதைவிட சிறந்த பணி வேறு என்ன இருக்க முடியும், ஏழர? மிக்க நன்றி.
“முயற்சி திருவினையாக்கும்” என்ற வாக்குக்கு மிகவும் எளிமையாகவும், விடாமுயற்சியோடும் நீங்கள் புதிரில் விளையாடி வருவது, எனக்கும், என் தனிப்பட்ட வாழ்க்கைக்கும் பாடமாக இருக்கிறது என்பதை இங்கு பதிக்க விரும்புகின்றேன்.
கலக்குங்க ஏழர. உங்களுக்கு துணையாக இன்னும் பலர் வரவேண்டும் என்பதே, எமது அவாவும் கூட 🙂
surewaugh said:
குற்றப்பத்திரிக்கை — தாம் தன தையோம் @suressu
ராஜா said:
குற்றப்பத்திரிகை படத்திலிருந்து தாம்தன தையோம் பாடல்.
இந்த பாட்டை இன்னைக்குதான் முத தடவையா கேக்குறேன். ஆனாலும் டெக்ஸ்ட் க்ளுவ படிச்சதும் இந்த படம்தானு தெரிஞ்சு போச்சு, எல்லாம் கரகாட்டக்காரி செய்த மாயம் :). அன்னைக்கு மொபைல்ல தேடுனதுனாலயும் டெக்ஸ்ட் க்ளு இந்தப் பட பாட்டுகளுக்கு பொருந்தாதனாலயும் கேக்கல. சென்னைக்கு வந்ததும் டவுன்லோட் பண்ணி கேக்கலாம்னு நினைச்சேன், அதுக்குள்ள புதிராவே வந்துடுச்சு :).
சும்மா சொல்லக்கூடாது, இந்த பாட்டுல அடி ஒன்னும் இடி மாதிரில விழுகுது. இணையத்துல கடைசி இசை இல்லாததுனால இந்த பாட்டை மட்டும் எங்களுக்கு அனுப்ப முடியுமா? 😉
@rajabalanm
Rex Arul said:
/:சும்மா சொல்லக்கூடாது, இந்த பாட்டுல அடி ஒன்னும் இடி மாதிரில விழுகுது. இணையத்துல கடைசி இசை இல்லாததுனால இந்த பாட்டை மட்டும் எங்களுக்கு அனுப்ப முடியுமா?
நன்றி ராஜபாலன். கண்டிப்பா, இந்த பாட்டை கூடிய விரைவில்….அல்லது, இந்த 365/365 முடியும் தருவாயில் உட்கார்ந்து பதிவு செய்து தருகிறேன்.
Aishwarya Govindarajan said:
ஆடடிப் பூங்குயிலே – ‘குற்றப் பத்திரிகை’
மலேசியாவின் பாடல் என்று படித்ததும்தான் தாமதம் ‘என்றென்றும் ஆனந்தமே’ பாடலாக இருக்குமோ என்று எண்ணினேன்,ஆனால் இருநூறு அவ்வளவு எளிதாக இருக்க வாய்ப்பில்லை. பதிவின் அடுத்த வரிகளைப் படிக்க படிக்க அந்த எண்ணம் முழுதும் தளர்ந்தது.கோயமுத்தூர் வானொலி நிலையமும் Realism Movieயுமே கடைசியில் கை கொடுத்தனர்.and Happy Radio day 🙂
Rex Arul said:
உங்களின் டி.எம்மில் வந்த பாடல் வரிகள் சரியானது. Did you say, you had to use transliteration? Please let me know if Tamil is causing issues for you to identify and answer. Thanks.
ராஜா said:
200க்கு வாழ்த்துக்கள். நேத்துதான் 17வது புதிருக்கு (நம்மளோட முத புதிர் 😉 ) விடை சொன்ன மாதிரி இருக்கு, அதுக்குள்ள 200 வந்துடுச்சு.
ஆரம்ப நாட்கள்ல இது மாதிரி தொடர்ந்து வருவேனுனோ, வந்தாலும் இவ்வளவு பாட்டு கண்டுபிடிப்பேனுனோ (டெக்ஸ்ட் க்ளு பிட்டுனாலதான் 😉 ) நினைக்கல, ஆனா அது கொஞ்ச நாள்லயே மாறி 4.30 ஆனாலே தானாவே இங்க வர ஆரம்பிச்சாச்சு. எல்லாத்துக்கும் காரணம் நீங்க தேர்ந்தெடுக்குற பாட்டும், அதுக்கு நீங்க குடுக்குற வர்ணனையும் & டெக்ஸ்ட் க்ளுவும் தான் (?!?!? 😉 ).
முதல் சுற்றை விட ரெண்டாவது சுற்றுல நிறைய பேரு வர ஆரம்பிச்சதால நல்லதொரு போட்டியும் இருந்துச்சு. அதே மாதிரி மூனு & நாலாவது சுற்றிலயும் இன்னும் நிறைய பேரு வந்து, அந்த சுற்றுகளும் மிகப்பெரிய வெற்றியடைய வாழ்த்துக்கள்.
Rex Arul said:
மிக்க நன்றி, ராஜபாலன். நீங்கள் விரும்புவதே, என்னுடைய விருப்பமும் கூட.
@RRSLM said:
@RRSLM “தாம் தான தையோம்” from “குற்றபத்திரிக்கை”
Muthiah (@muthiahrm) said:
பாடல் – தாம் தன தையோம் என்று தீம் தன தைதோம் என்று ஆடடி பூங்குயிலே….
பாடியவர்கள் – மலேசியா வாசுதேவன் & மின்மினி
படம் – குற்றப் பத்திரிகை
தேவா.. said:
Today so exhausted and reached hotel at 12pm.
consciously came here to wish you on this 200th Post. Once again Hats off to your dedication and effort.
this helped to me as after college years, I got a bunch of friends online, spl thanks for that.
lets bang into 201 and make it wonderful season.
——————————————————————————————————
thai thagathimi from kutrapathirikkai.MV and minmini. I watched this when it was released but in that 14 yrs our life style got changed lot and the movie was something like shot and released from some other undeveloped world. if this wud have been released on time, wud have been a block bluster
———————————————————————————————————
Rex Arul said:
Thanks a lot, Deva. Looking forward to your best fight like Season-1. This will be awesome. Thank you.
மயில்செந்தில் said:
தாம் தன தையோம் என்று – குற்றப்பத்திரிக்கை
என்னத்த சொல்ல.. அடிச்சு ஆடுங்க மாஸ்டர். 🙂 இனி தினமும் இங்க வர்றதா இருக்கேன்.. பாத்துருவோம்.. நீங்களா நானான்னு. :-///
Rex Arul said:
அப்படிப்போடுங்க மயிலு. எப்படி அடி, இடி மாதிரி நம்ம இசைஞானி ஒருபக்கம், மலேசியா அண்ணேன் இன்னொரு பக்கம்னு பாட்டு கலக்குது பாத்தீங்களா? 🙂
Vijay said:
thaam thana thaiyyOm endru from Kutra Paththrikai
Congratulations Rex for making it a big 200. Wonderful energetic song to complete 200. I can understand the restless, yet selfless effort from you (that too daily amidst your other tasks) which made it this big and successful. The way quiz is presented is the main reason for this success. Kudos to Rex!. 😀 We can see more number of music fans dropping in and participating with great enthusiasm to make it a tremendous success.
Congratulations to ezharai for topping the list and also answering the quiz continuously without a break for 183 days and totalling 190 already. Wow! that’s a rare achievement. Keep it up! Many congratulations to all who answered most of them and also who actively participated. It was very nice to read all your comments and your enthusiasm. With Maestro’s music we never feel bored or tired, in fact any brisk day starts after we hear his music and any tired day ends with listening to Maestro’s music. Thank you all our friends and let us keep the same momentum in third and future episodes. All the best! 😀
Vijay said:
thaam thana thaiyyOm endru from Kutra Paththrikai
Congratulations Rex for making it a big 200. Wonderful energetic song to complete 200. I can understand the restless, yet selfless effort from you (that too daily amidst your other tasks) which made it this big and successful. The way quiz is presented is the main reason for this success. Kudos to Rex!. 😀 We can see more number of music fans dropping in and participating with great enthusiasm to make it a tremendous success.
Congratulations to ezharai for topping the list and also answering the quiz continuously without a break for 183 days and totalling 190 already. Wow! that’s a rare achievement. Keep it up! Many congratulations to all who answered most of them and also who actively participated. It was very nice to read all your comments and your enthusiasm. With Maestro’s music we never feel bored or tired, in fact any brisk day starts after we hear his music and any tired day ends with listening to Maestro’s music. Thank you all our friends and let us keep the same momentum in third and future episodes. All the very best! 😀
Vijay said:
thaam thana thaiyyOm endru from Kutra Paththrikai.
Congratulations Rex for making it a big 200. Wonderful energetic song to complete 200. I can understand the restless, yet selfless effort from you (that too daily amidst your other tasks) which made it this big and successful. The way quiz is presented is the main reason for this success. Kudos to Rex!. 😀 We can see more number of music fans dropping in and participating with great enthusiasm to make it a tremendous success.
Congratulations to ezharai for topping the list and also answering the quiz continuously without a break for 183 days and totalling 190 already. Wow! that’s a rare achievement. Keep it up! Many congratulations to all who answered most of them and also who actively participated. It was very nice to read all your comments and your enthusiasm. With Maestro’s music we never feel bored or tired, in fact any brisk day starts after we hear his music and any tired day ends with listening to Maestro’s music. Thank you all our friends and let us keep the same momentum in third and future episodes. All the very best! 😀
Rex Arul said:
Thanks a lot, Vijay. I truly appreciate all of your comments.
Yes, @ezharai is doing his part in motivating all of us. This is truly a people’s project, dude. I mean, each one of us is doing his or her job to motivate and encourage others. Perfect 🙂
Usharani M (@usharanims) said:
தாம் தன் தையோம்….. மலேசியா வாசுதேவன் & மின்மினி – குற்றப் பத்திரிகை
Anonymous said:
@hakkeemCBE Thaam Thana Thaiyom Endru Movie Kutrapathrikai
கோபிநாத் said:
எழர என்ற பெயரை முதல் முதலில் இத்தனை நபர்கள் வாழ்த்தி பார்ப்பது இதான் முதல் தபா….தல உங்க உண்மையான பெயர் என்னாவோ தெரியல…ஆனாலும் உங்களால ஏழரக்கு பெருமை ;)))
உங்க உண்மையான பெயருக்கும் ஒரு வாழ்த்துக்கள் ;))
Rex Arul said:
ஹ ஹா 🙂
vrsaran said:
இந்த சீஸனில் 100/100 சரியான விடை அளித்த ஏழரைக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். இது உண்மையில் ஒரு அசுர சாதனை.
பெரும்பாலான விடைகளை புதிர் வந்த பத்து நிமிடத்துக்குள் தந்துவிடுவதும் அசத்தல். மூன்றாம் சீஸனில் எங்கள் அனைவருக்கும் ஏழரை ஒரு முன் மாதிரி !
Rex Arul said:
சரியாக சொன்னீர்கள், சரண். இந்த மாதிரி போட்டிக்கு ஒரு enthu இருந்தா, அப்படியே சின்ன வயசுல பரமபதம் விளையாடிய thrill-effect தான் போங்க 🙂
ஏழர said:
வாழ்த்திய அனைவருக்கும் இப்படி உலகின் பல இடங்களிலிருந்து நாமெல்லாம் ஒன்று கூடி நமது இரசனையை மேம்படுத்துவதை சாத்தியமாக்கிய ரெக்ஸ் அண்ணனுக்கும் மீண்டும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
201-300ல் அனைவருக்கும் சதமடிக்க வாழ்த்துக்கள்