Tags

, , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

நன்றி.

நேற்றைய புதிரில் வந்த ஒரு புதுமையைத் தொடர்ந்து, இன்றைய பாடலிலும் அந்தப் புதுமை தொடர்கிறது. நாளையும், அவ்வித புதுமை தொடர்ந்து hat-trickஉடன் முடியும். 🙂

ஆம், இன்றைய பாடலின் பாடலாசிரியரும் இசைஞானி இளையராஜா தான்.

இன்றையப் பாடலைப் போல ஒரு பாடலை எவரேனும் நிகழ்காலத்தில் இசைக்க தயாரா என்று ஒவ்வொரு முறையும், இந்தப் பாடலைக் கேட்கும்போது, என்னையும் மீறி ஒரு வினா எழும். முதலில் துணுக்கைக் கேட்டுவிடுகின்றீர்களா?

Be prepared for the roller-coaster ride. This piece will be nothing close to the serene opening it has. Wait until the traditional rhythms take you out of this world. Please set high volume 🙂

இதில் என்ன புதுமை என்று கேட்பவர்கள், சற்று நிதானமாக பின்வருவனவற்றைப் பார்த்துவிட்டு பின்னர் சொல்லுங்கள், இது rara avis அல்லது sui generis என்று வழங்கக்கூடிய வகையில் உள்ள பாடலா இல்லையா என்று.

  1. இந்தப் பாடல் மிக, மிக நீளமானப் பாடல். சற்றேரக் குறைய 10 நிமிடங்களைத் தொடும் ஒரே பாடல்!
  2. இந்தப் பாடல் பல சுழற்சிகளைக் கொண்டது. வண்டியின் சக்கரம் போல, பல நிலைகளையும், உணர்ச்சிகளையும் கடந்து, மாறி மாறி, பாட்டு பாட்டுக்கு போய்க் கொண்டே இருக்கும். 🙂
  3. இந்தப் பாடலை இசைப்பது எவ்வளவு கடினமோ, அதை விடக் கடினம், இந்தப் பாடலுக்கு பாடல் வரிகளை எழுதுவது.
  4. ஏனென்றால், இந்த முழுப்பாடலில், படத்தின் முழுக்கதையைச் சொல்லிவிட வேண்டும்.
  5. பாடல் ஒரு வாழ்க்கை வரலாறையே தொகுத்து வழங்குவதால், பாடலில் வரும் மெட்டும், தாளமும், இசையும் transformationsஐ சிதைக்காமல் ஒன்றில் இருந்து மற்றொன்றுக்கு கூடு விட்டு கூடு தாண்டி segue ஆக வேண்டும். உதாரணத்திற்கு, இங்கு ஒரு சோக நிகழ்வில் இருந்து அப்படியே மாங்கல்ய இசைக்கு தாவும் லாவகத்தைப் பாருங்கள்…அதாவது கேளுங்கள்.
  6. என்ன? பார்த்தீர்களா? சோகம்..அதைத் தொடருந்து பயங்கர சீற்றம்…அந்த சீற்றத்தின் முடிவில் பெரும் சோகம் என்று ஆரம்பித்த ஷெனாய், மங்கல ஷெனாயாக ஒரு நொடியில் மாறி பயணித்துக்கொண்டே இருக்கிறது! எப்படி, பாருங்கள். இப்படி தான் பாடல் முழுக்க வரும்.

All India Radio, Coimbatore

அகில இந்திய வானொலி, கோயமுத்தூரில் ஒரு காலத்தில் உடுக்கடிப் பாட்டாக வெளிவந்த வரலாறு சார்ந்த பழங்கதையை ஒட்டி புனையப்பட்ட ஒரு சரித்திரக் கற்பனைக் (historical-fiction) கதையின் திரைவடிவத்தில் வந்த பாடல் தான் இது. அதனால், பாடல் முழுக்க வெவ்வேறு உணர்ச்சிகளை நிரப்பி இருப்பார் இசைஞானி.

பிறப்பு முதல் மனிதனின் இறப்பு வரையிலான பல்வேறு கட்டங்களுக்கு இசைஞானி இளையராஜா இசைத்துள்ள பாடல்கள் பல ஆயிரம் உண்டு என்று சிலாகிக்கும் நம்மில் பலரும், இந்த ஒருப் பாடலிலேயே அத்துணைக் கட்டங்களையும் காட்டிவிடும் இசைஞானியின் சாமர்த்தியத்தை மெச்சிப் பேசாமல் இருக்க முடியுமா? அந்த செல்லாண்டி அம்மனுக்கே அடுக்காமல் போய்விடும், இல்லையா? 😉 அதனால், இந்தப் பாடலைப் பற்றி சிலாகித்து, கீச்சவும், பின்னூட்டம் இடவும் தயாராகிவிட்டீர்கள் என்று நான் நம்பிக்கையுடன் இதை முடிக்கலாமா? Please note, this is NOT an ordinary song. This is what I called earlier: sui generis 🙂

Also, can you do me a small favor? Can you briefly say, in one word or sentence as to what #365RajaQuiz means to you?

Thanks 🙂

Have a nice day.

Please leave your answers below in the COMMENTS section with your Twitter handle/username. For other discussions on Twitter, please use hashtag #365RajaQuiz.

Please listen to the TWO tracks. 2nd track is the lifeline-clue.


Clue: Please try to figure out the answer sincerely as the posted audio is the clue and hint you will ever need. But, if you need one more lifeline, then just select the box below,with your mouse, between the double-quotes to view the additional hint:

Musical Clue is the lifeline clue:

NB: Enjoy the Continuous Play of all the clues so far.

Answer: Annanmaar Kathaya (அண்ணன்மார் கதைய சொல்லப்போறேன்) from Ponnar Shankar (பொன்னர் சங்கர்) (2011)

Advertisements