Tags

, , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

#365RajaQuizல் இதுகாறும் பயணம் செய்த அத்துணை பேருக்கும் முதற்கண் நன்றி!
Thanks to everybody for the journey so far at #365RajaQuiz.

கடந்த நூறு நாள்களாக இசைஞானியின் இசைமுத்துக்களை அள்ளி ஆரம் கோத்து மகிழ்ந்தோம். இந்தப் பயணத்தில் நிறைய உணர்வுகளையும் பகிர்ந்துகொண்டோம். பல அறியாத பாடல்களை அறிந்துகொண்டோம், சில கேட்ட பாடல்களை மேலும் புரிந்துகொண்டோம். தேர்வுக்குச் செல்லும் மாணவர்கள்போல, புதிரின் விடையைக் கண்டுபிடிக்க நிறைய முயற்சிகள் எடுத்தோம். பின்னர், மதிப்பெண் பட்டியலில் நாம் மேலும் கீழுமாக ஏறி இறங்குவதைக் கண்டு அதிசயித்தோம். இதெல்லாம் ஒரு life line குளூவா? என்று செல்லமாகவும், சற்று கோபமாகவும் கொதித்தோம். பாடல்களை ரசிக்கும் முறையையே மாற்றிவிட்டீர்கள் என்று சிலாகித்தோம். இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம். கடந்த ஒரு மாதமாக Twitterல் #365RajaQuiz பற்றிய உங்களின் விமர்சனங்களின் ஒரு சிறு sampleஐ storify செய்து இருக்கிறேன். தவறாமல் பாருங்கள்.

தகப்பனோடு ஒரு மகள், தாயோடு மற்றொரு மகள், roommates உடன் சிலர், மனைவியோடு கணவன், குடும்பத்தில் உள்ள அனைவரோடும் சேர்ந்து ஒரு mini புதிராக என்று பலவித experiences இந்த முயற்சிக்குக் கிடைத்திருக்கும் பரிசு என்றே நினைக்கிறேன். எங்கோ ஒரு மூலையிலிருந்து இந்தப் புதிர் முளைக்க, அதைத் தினமும் அணுகி, ரசித்து, பின்னூட்டங்கள் இட்டு, ட்விட்டர், ஃபேஸ்புக்கில் உடனடிச் செய்திகள் அனுப்பி, விவாதித்து என்று பலவிதமாக ராஜாவின் பாடல்களை தினம் ஒன்றாக நாம் ரசிப்பது வரவேற்கத்தக்க ஒரு பொழுதுபோக்கு.

மீண்டும், அனைவருக்கும் நன்றி. இந்த 100 உடன் Season 1 முடிவுக்கு வருகிறது. இனி நாளையிலிருந்து புதுக் கணக்கெடுப்பு ஆரம்பமாகிறது. இதில் யார் leadingல் வருகிறீர்கள் என்று பார்க்கலாம். தயவு செய்து கூடியவரை பொதுவில் விடையையும் அல்லது பகிரங்க குளூக்களையும் கொடுக்கவேண்டாம் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன். சிலர் மிகுந்த சிரத்தையோடு ஒவ்வொரு புதிருக்குமான பதிலைக் கண்டுபிடிக்க துணிகிறார்கள். மேலும், ஒவ்வொரு புதிருக்கும் நிறைய சிரத்தை எடுத்துதான் பதிவு செய்து போடுகிறோம். அதனால், பாடலைப்பற்றி விவாதிக்கும்போதும்கூட கவனமாக, பதிலைத் தெரிவித்துவிடாதபடி கொண்டுசெல்லுங்கள். புரிதலுக்கு மிக்க நன்றி.

இன்றைய குளூவை பாருங்கள்.

100/365 is dedicated to கல்லூரி காலம் தொட்டே காதலர்களாக வலம் வரும் இன்றைய ஜோடிகள் 🙂

அருமையான traditional tabla & drums உள்ள percussion. இதில் என்னை மிகவும் கவர்ந்ததே அந்த percussionஉம் ஷெனாயும்தான். பாடல் முழுக்க இந்த beats வரும். சுலபமாக இருக்கடும் என்று preludeஉம் interludeஉம் சேர்த்துப் பதிவு செய்திருக்கிறேன். மோதல் புரிதலால் காதலாக மலர்கிறது. மோதிக்கொண்டிருந்த இரு காதலர்களும் அன்பால் இணையும் தருணம். காதலனின் கைகளில் குருதி. காதலி ஒத்தடம் கொடுப்பது போல அவன் கைகளில் ஒரு மென்மையான முத்தம் இடுகிறாள். And then she pouts her lips as though the stain on her lips is due to some tomato sauce 🙂 சுற்றிலும் கும்மிருட்டு. ஊட்டி மலைக் காடுகளில் இருட்டு நிறைந்த மரங்களின் நடுவே காதலர் களி கொள்ளும் நேரம் இது.

நிற்க. இந்த விவரம் நமக்கு எதற்கு என்று யோசிக்கிறீரோ?

இந்த settingக்காகதான் இசைஞானி இப்படி ஒரு வித்தியாசமான musical orchestrationஐக் கையாண்டிருக்கிறார் என்பதை வலியுறுத்தவே அந்த detailed background commentary. ஒரு டூயட்டுக்கு மெலடியைத் தூக்கலாக ஏற்றியவர், ஏன் இப்படி ஒரு drums நிறைந்த percussionஐ உபயோகித்திருக்கிறார் என்று நீங்கள் யோசித்தால், இந்தக் காட்சியின் background உபயோகப்படும் என்றுதான்.

Per Dr.Rajagopal (@happy_as_a_baby), this song is based on Brindavana Saaranga… a late evening Raga ..

அதேபோல, எதற்கு இவ்வளவு exhaustive ஷெனாய் வாத்தியத்தை நுழைத்திருக்கிறார் என்று நான் வியக்காத நாளில்லை. அந்த அதிரும் Guitarsக்கு மத்தியில் வரும் ஷெனாய், அதனைத் தொடர்ந்து ஊறி வரும் flute… இவற்றுக்குப் பின்புலமாக ஒரே மாதிரி வரும் tabla percussion என்று அந்த இசை எப்படி இருக்கிறது!

ஒரே பிரச்னை, இதே படத்தில் வந்த மற்ற hit songsஆல் இந்தக் குறிப்பிட்ட பாடல் அவ்வளவு பிரபலமாகாமலேயே போய்விட்டது. இந்தப் படத்தின் அனைத்து பாடல்களும் ஹிட். வேறொரு ஹிட் பாடலால் இந்தப் பாடலும், மற்ற ஹிட் பாடல்களும் பின்னுக்குத் தள்ளப்பட்டன. இந்த பாடலைப் பாடிய பெண் பாடகிக்கு நமது #365RajaQuizல் உணர்ச்சிவசப்படக்கூடிய ரசிகர்கள் பலர் உள்ளனர்.

இந்தப் பாடலை கேட்டிருந்தால், இந்தப் பாடலுக்கு ஓர் அடிமையாகவே இருப்பீர்கள். இல்லை என்றால், சீக்கிரம் விடையைக் கண்டுபிடித்துத் தொடர்ந்து continuous-loopல் enjoy செய்யத் தயாராக இருங்கள்.

புதியதொரு வாரத்துக்காக வாழ்த்துகள். மீண்டும் நாளை சந்திப்போம்.

Please leave your answers below in the COMMENTS section with your Twitter handle/username. For other discussions on Twitter, please use hashtag #365RajaQuiz.

Clue: Please try to figure out the answer sincerely as the posted audio is the clue and hint you will ever need. But, if you need one more lifeline, then just select the box below,with your mouse, between the double-quotes to view the additional hint:

Director for this movie was present in “Nee Thaane En Pon Vasantham” audio release function. One of the actors in 99/365 is there here in 100/365 also.
Here is the list of directors:

NB: Enjoy the Continuous Play of all the clues so far.

Answer: Oru Pokkiri Raathiri (ஒரு போக்கிரி பாக்குற ) from Ithu Namma Bhoomi (இது நம்ம பூமி ) (1992)

Audio Link Issues? Try this: Oru Pokkiri Raathiri

Advertisements