Tags

, , , , , , , , , , , , , , , , , , , , ,

இசைஞானியுடைய இசையில் ஒரு ஆன்மாவை வருடும் குணம் எப்போதும் இருப்பதாலேயே தான், இம்மாதிரி #365RajaQuiz அப்படி, இப்படின்னு நாம எல்லாரும் இன்னும் அதே மகிழ்வோடும், ஆர்வத்தோடும் பங்கேற்கிறோம். ஆனால், இந்தப்பட BGM இசை, அந்தக் கூற்றையே, மேலும் மெய்ப்பிக்கும் விதமாக இருப்பதை யாராலும் மறுக்கமுடியாது. திரையரங்கில், இந்த இசை ஒலித்தபோதெல்லாம், ஒரு நிசப்தத்தை உணர்ந்தேன். கோயம்புத்தூர் கங்கா, யமுனா, காவேரி திரையரங்கில், பள்ளி மாணவனாய் இருக்கும் போது, விடுமுறையில் மூன்று முறை இந்தப் படத்தை பார்த்து முடித்தேன். தொலைக்காட்சி இல்லாத காலத்திலும், இம்மாதிரி பின்னணி இசை மனதில் புகுந்து ஒரு நிரந்தர இடைத்தைப் பிடித்த சுகத்தை என்னவென்று சொல்வது.

ஒரே note, மூன்று வித levelsஇல் மாறி வரும் அற்புதத்தை சொல்வதா, அல்லது, அந்த மூன்று கட்டைகளில், ஏற்றத்தில் போகும்போது மூன்று வித இசைக்கருவிகளில் பயணிக்கும் அதிசயத்தைப் பற்றி யோசிப்பதா என்று மனம் பேதளிக்கும். பாருங்கள்: 10 நொடி வரை ஒரு வித xylophone வாத்தியம் போல, ஒரு குழந்தையின் innocenceஉடன் ஆரம்பமாகிறது இசை. அந்த 10ஆவது நொடியில் புல்லாங்குழல், இதயத்தை துளைத்துக்கொண்டு ஆரம்பிக்கும் அழகைப் பார்த்து வியக்காத நாளில்லை 🙂 100% மண்ணின் வாசமும், அந்த மக்களின் நேசமும் அக்மார்க் முத்திரையாக இருக்கும் இந்த இடத்தில்!

இந்த அருமையான மெலடி இசை 40வது நொடியில் முடிந்துவிடுகிறது. அவ்வளவு தான். ஆனால், அங்கே தான் ராஜா அடுத்த “கட்டைக்கும்”, கருவிக்கும் அதே இசையில் தொடர்கிறார். Keyboardல் நடக்கும் இந்த மாயம் 1:05 வரை தொடர்கிறது. இங்கு, அது புல்லாங்குழலோடு இணைந்து சற்றே seriousஆக அடுத்த medium noteல் பயணிக்கிறது.

ஆனால் 1:20ல் வருகிறது பாருங்கள், மூன்றாவது லெவலில் குரூப் வயலின்களோடு — அருமையோ அருமை.

இந்தப் படத்தின் மென்மை, காதல், பாசம், குரூரம், சோகம், என்று எல்லாவற்றையும் இந்த 1 1/2 நிமிட இசையில் இதமாகவும், பாந்தமாகவும் சொல்லிவிடுகிறார் இசைஞானி.

இந்த இசையை கேட்டவுடன், உங்கள் மனதிற்கு பிடித்தவர்கள்: தாயோ, தந்தையோ, மகனோ, மகளோ, காதலனோ, காதலியோ, தாத்தாவோ, பாட்டியோ, நண்பனோ…இப்படி யாரவது வந்து உங்கள் மனதில் குடியிருக்கவில்லை என்று சொல்லுங்கள், இன்றே இந்த #365RajaQuiz ஐ நிறுத்திடலாம்….ஹ ஹா ஹா :-))

பி.கு.: கணினியில் ஏற்றப்பட்டு, இரைச்சல் அகற்றப்பட்டது. Encoded. (1st track alone.)

Please leave your answers below in the COMMENTS section with your Twitter handle/username. For other discussions on Twitter, please use hashtag #365RajaQuiz.

Clue – 1

Clue – 2 (This sequence was much appreciated by neutral movie reviewers of the time as Maestro Ilaiyaraaja had used the Carnatic Jathi for a fight sequence, something that was very innovative, never attempted before or after him,, AFAIK.)

Clue: Please try to figure out the answer sincerely as the posted audio is the clue and hint you will ever need. But, if you need one more lifeline, then just select the box below,with your mouse, between the double-quotes to view the additional hint:

Although, this was his/her 2nd movie, it established the career for this actor/actress, who since then had been one of the most pivotal faces of Tamil cinema.

Answer: Varusham 16 (1989) / வருஷம் 16 (1989)

From beginning marker