Tags

, , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

அமாம். என்னவென்று சொல்வதம்மா தான்! அட பாருங்க, எல்லாப் பாட்டும் சூப்பர் தான், ஆனா அதுலயும் சில பாட்டுங்க இருக்கே, சூப்பருக்கு சூப்பர். இது அந்த வகை. 1980களின் பிரியர்கள், இந்தப் பாட்டுக்கு எந்திரிச்சு நின்னு உணர்ச்சி வசப்படுவாங்க.🙂 இதை ரசிப்பதற்காகவாவது சீக்கிரம் கண்டுபிடிங்க.

அவ்வளவு அருமையான interludes உள்ள பாடல் இது. ஆரம்பமே, வட இந்தியர்களின் ஷெனாய்ல கொடுப்பாரு ஒரு அருமையான டேக். அதோட momentum குறையாத வண்ணம் அப்படியே பெர்சிய/இரானிய/வடஇந்திய மற்றொரு இசைக்கருவியான “சந்தூர்”ல தேன்மாரி பொழிய, கிடார் நோட்ஸ் வேறு கலகலக்கும். ஆனா, இந்த பகுதி இன்னிக்கு புதிர்ல நான் தரல🙂

நடுவுல வர்ற interludes தான் இன்றைய புதிர். ஆனால், ஆரம்ப சங்கதி, இந்த interludeலயும் நிறைய இருக்கும். கிடார் தான் முழு ஆளுமை, இந்த புதிருக்கு. பத்தாத்துக்கு, இவரு புல்லாங்குழல் வேற விட்டு ஆட்டுவாரு. அருமையான கர்னாடக சங்கீத சங்கதிகள் நிறைந்த இப்பாடலைப் பற்றி, சற்று நுணுக்கமான துணுக்குகளை அள்ளிவிட்டால், எல்லாரும் மகிழ்ச்சியுடன் நுகரலாம்.

NB: இதை நான் thiraipaadal.com ல இருந்து பதிவு செஞ்சேன், ஏன்னா, என்னோட ஒலிநாடா தேடிப் பார்த்தேன், உடனே கிடைக்கல. ஆனா, சைட்ல இரைச்சல் அதிகம் இருந்துச்சு. அதை அகற்றினேன் ஓரளவுக்கு. விடை தெரியும்போது நீங்கள் compare பண்ணி பார்க்கலாம், if you are curious about the difference.

Have a nice weekend.

Please leave your answers below in the COMMENTS section with your Twitter handle/username. For other discussions on Twitter, please use hashtag #365RajaQuiz.

Clue: Please try to figure out the answer sincerely as the posted audio is the clue and hint you will ever need. But, if you need one more lifeline, then just select the box below,with your mouse, between the double-quotes to view the additional hint:

This singer of this duet song has given great hits for Ilaiyaraaja. One of the hit songs of this singer is in “Kozhi Koovuthu” movie by Gangai Amaran.

Answer: Thendral Ennai Muthammittadhu (தென்றல் என்னை முத்தமிட்டது) from Oru Odai Nathiyaaginrathu(ஒரு ஓடை நதியாகின்றது) (1983)