Tags

, , , , , , , , , , , , , , , , , , , ,

வணக்கம் நண்பர்களே.

பரவாயில்லைங்க. நெனச்சத விட, நேற்றைய 242/365க்கு பதில்கள் வந்து சேர்ந்த வண்ணம் உள்ளது. ஆச்சரியம் தான். ஆனா, அதுலயும் ஒரு நிதரசன உண்மை உக்காந்துட்டு இருக்கறத பாத்தீங்களா? அப்படிப்பட்ட ஒரு பாட்டை யாராவது சட்டை செய்ததுண்டா?

ஆனா, அந்த பாட்டை கேட்ட பிறகு, நம்ம மூளையில எரிஞ்ச பல்பு தான் இன்னிக்கு வர்றது. நேத்திக்கு வந்த பாட்டுல இருந்த புதுமை சங்கதிக இன்னிக்கு கொஞ்சம் வேற மாதிரி வரும். திருப்பி, திருப்பி, விடாம continuous loopல க்ளூவை கேட்டீங்கன்னா நான் சொல்றது புரியும். கைத்தட்டலின் பின்னணியில், முதலில் கோரஸ் பாப்பாக்களின், ஹேய்.ஹேய்.ஹெஹேய் ஹம்மிங்கில் இருந்து சந்தூர் ஆரம்பிக்கிறது பாருங்கள்…அது பாட்டுக்கு ஒரு தனி டிராக்கில் போய்க்கொண்டே இருக்கும். ஆனா, அது பாட்டுக்கு போய்க்கொண்டிருக்கும் பாதையில் இருந்து தனித்து வயலின்களின் இன்னிசை வேறொரு டிராக்கிலும், புல்லாங்குழல் வேறொரு டிராக்கிலும் குண்டக்க மண்டக்க ஓடிக்கொண்டு இருக்கும். கூர்ந்து கவனித்தால், 242/365ல் இசைஞானி புகுத்தியிருந்த புதுமைகள் மாதிரியே இதிலும் புகுத்தியிருப்பது நன்கு புரியும். குறிப்பாக second-half of the interludeல், சந்தூருடன் சேர்ந்து வரும் group violinsஐ மட்டும் focus செய்து கேட்டுப்பாருங்கள்.

மண்ணின் வாசம் நிறைந்த இந்த பாடல் எல்லாம் எத்துணை பேர் அந்தக் காலத்துல கேட்டாங்களோ!

இந்தப் படத்தின் பாடல்கள் எல்லாமுமே நல்ல பாடல்கள் தான். ஹிட் தான் 🙂 அதிலும் ஒரே ஒரு பாடல் ஹிட்டோ ஹிட், அப்படியொரு ஹிட்.

கண்டிப்பாக இந்தப் பாட்டை கேட்காமல் இருந்திருக்கமாட்டீர்கள். பாடிய பாடகர்களைத் தாண்டி, எனக்கு இந்தப் பாட்டு மிகவும் பிடிக்கக் காரணம் அனைத்து interludes & preludes என்றாலும், சரணத்தில் வரும் அட்டகாசமான bass-guitarன் ரீங்காரம் எனக்கு மிகவும் பிடிக்கும்.

கண்டுபிடியுங்கள். டை-பிரேக்கருக்கு நடுவில் வரும் breather தான் இது. நாளையும் breather தான். விட்டு பிடிப்போம். என்ன அவசரம். இல்லையா? 😉

Please leave your answers below in the COMMENTS section with your Twitter handle/username. For other discussions on Twitter, please use hashtag #365RajaQuiz.

Clue: Please try to figure out the answer sincerely as the posted audio is the clue and hint you will ever need. But, if you need one more lifeline, then just select the box below,with your mouse, between the double-quotes to view the additional hint:

This veteran artist in this movie hails from Coimbatore, while the other veteran artist in this movie is married to a director-cum-actor, who hails from neighboring Erode.

NB: Enjoy the Continuous Play of all the clues so far.

Answer: Adi Kezhakaale (அடி கெழக்காலே) from Naattuppura Paattu ( நாட்டுப்புற பாட்டு) (1996)