Tags

, , , , , , , , , , , , , , , , , , , , , ,

வணக்கம்.

இன்று முதல் அடுத்த இரண்டு நாட்களுக்கு tie-breakerகள் களம் இறக்கப்படுகின்றன. ஓடும் Marathonல் கடைசியில் ஒரு உந்துதல் கொடுத்து finish-lineக்கு செல்ல வேண்டும் என்பதே logic 🙂 ஆனால், களம் இறங்கப் போகும் பாடல்கள் ஒவ்வொன்றும் காலத்தால் அழியாத முத்துக்கள். சிதறிய முத்துக்களை அள்ளுவதற்குள் மேலும் மேலும் முத்துக்கள் நம்மீது இசைஞானி தெளித்துக்கொண்டே வந்ததால், விழுந்த முத்துக்களை எடுக்க முடியாமல் தான் போய்விடுமோ என்ற ஒரு சிறு அச்சத்தால் கூட இவை வருவதாக நினைத்துக்கொள்ளுங்களேன்… ஏனென்றால், என் கவலை எனக்கு.

முதலில் இந்தப் பாடலை அருமையாக எழுதியுள்ள கவிஞர் முத்துலிங்கம் அவர்களுக்கு ஒரு மாபெரும் வணக்கத்தை வைத்துவிடுவோம்.
Kavingar Muthulingam

அப்புறம் உருகி உருகி இந்தப் பாடலை அட்டகாசமாக பாடி இருக்கும் அண்ணன் மலேசியா வாசுதேவனுக்கு இன்னொரு வணக்கத்தையும் வைத்துவிடுவோம்.

Malaysia Vasudevan

There are TWO audio snippets. Please listen carefully. I request that you do not Google/SQL “lyrical lines” alone 🙂

புதிருக்குள் நுழைவோமா?

சென்னையில் மழையாமே? Note this point folks. சென்னை. Alright? யாதும் ஊரே யாவரும் கேளிர்… 😉

அந்த மழைக்கு ஏற்றாற்போல வருவது தான் இன்றைய மெலடி மழையில் ஒரு டூயட் பாட்டு.

In order to appreciate this song, you need to pay attention to THREE very important things:

  1. Gradual build-up of soft percussions rhythmically.
  2. Guitar strings. Excellent lead into the percussion accompaniment.
  3. Despite the extensive reliance on percussion, the whole song takes on a melodic note WITHOUT the use of Maestro’s favorite melodic instrument in a group-setting: VIOLINS 🙂

இசைஞானி இளையராஜாவின் இசையில் கண்ணே கலைமானே, ராக்கம்மா கையத்தட்டு என்று கன்னாபின்னா ஹிட் ஆன பாடல்களில் சுவை எவ்வளவு உள்ளதோ, அதற்கு சற்றும் குறையாத பத்திரமாத்து தங்கங்கள் offbeat பாடல்களிலும் உள்ளது. இதை சொல்வதால் elitist என்று மட்டும் முத்திரையைக் குத்திவிடாதீர்கள் அப்பு 😉 மெய்யாலும் தான் சொல்கிறேன். ஏன் என்றால், இந்த offbeat பாடல்களில் எவ்வித pressuresம் இல்லாமல், அவர் எண்ண அலைகள் அவரை அழைத்துச் சென்ற இடங்களுக்கு எல்லாம் சென்று இசைமழையைப் பொழிந்திருப்பார், இசைஞானி.

இன்று வரும் இந்த டூயட் பாட்டு, எனக்கு மிகவும் பிடித்தது. இதற்கு இசை ஒரு காரணம், மலேசியா அண்ணனின் காதல் தெறிக்கும் குரல் ஒரு பக்கம், அப்புறம் இவருடன் பாடியிருக்கும் பாடகியின் குரல் ஒரு பக்கம். பாடல் வரிகளும் அருமையாக இருக்கும்.

ஒரே ஒரு காரணம் மட்டும் சொல்லுங்கள் என்று யாராவது கேட்டால், இந்த பாட்டில் வரும் rhythms.

அப்படி என்னய்யா rhythms இந்தப் பாட்டுல போட்டுட்டார்னு யாராவது கேட்டா..என்னுடைய பதில், இந்தப் பாட்ட ஒரு வாட்டி…ஒரே ஒரு வாட்டி முழுசா கேட்டுட்டு வாங்களேன் பாஸ்…அதுக்கப்புறம் நீங்க சொல்லுங்க.. நான் உங்க கிட்ட கேட்டு தெரிஞ்சுக்கறேன்னு கண்ணடிப்பேன் 😉

தோ, வாங்க…பாத்துடுவோம்.

இது தொடக்க இசையும் + முதல் இடையிசையும் + சரணத்தின் ஒரு பகுதியும்.


முதலில் துணி துவைப்பது போல ஒரு இசை அமைப்பு. பின்னர் இடியுடன் கூடிய மழை. இங்கு எல்லாம், அவசரமே இல்லாமல், காதலர்கள் இயற்கையை ரசித்தவாறே காதலிக்கிறார்கள். அதற்கு ஏற்ற மாதிரியான இசை அமைப்பு தான் இந்தப் பாடலில் என்னை அடிக்கடி சுண்டி இழுக்கும். புல்லாங்குழலுடன் அந்த கிடார் வருதே..அதை மட்டுமே focus செய்து கேட்டுப் பாருங்கள், வேறு ஒரு உலகத்துக்குள் போவது போல இருக்கும். முதல் இடையிசையை ஒரு வித இயற்கை சூழலில் சின்னக் குயில்கள் பாடும் ஒலியுடனும் நீர்த்துளிகளின் ஒலியுடனும் ஆரம்பிப்பார். அங்கே அந்த கிடார் strumming, fantastic யா! அதை உடனே தொடர்ந்து வரும் அந்த கொட்டாங்குச்சி வயலின் போல வரும் இசைக்கருவியோடு ரிதம் தாளத்தை எப்படி ஒவ்வொன்றாக ஏத்து ஏத்துன்னு ஏத்தறார் பாருங்க. அட்டகாசங்க… அம்மா பாத்து பாத்து ரசத்துக்கு பெருங்காயம், குருமிளகு, கொத்தமள்ளின்னு ஒவ்வொன்னா அளவு அளவா பாத்து பாத்து, கிள்ளி கிள்ளி போடுவது போல..அட்டகாசம். ஆகா! அப்புறம், சரணத்தில் வேறு, இடையிசை மாதிரி ஒரு சங்கதியை நுழைச்சிருப்பார். From 52 seconds to 1:02, what you are hearing is an actual interlude from the SARANAM; not from the 1st interlude itself. That’s how this song’s saranams are special 🙂 பின்னாலேயே நம்ம மலேசிய அண்ணன் உருகி உருகி, காதல் தெறிக்க பாடும்போது, அங்க வருது பாருங்க flute…ஆகா…சுவைன்னா இதுவல்லவோ சுவைங்கறேன். இதெல்லாம் இல்லாமல் இருந்தாலே இதெல்லாம் சூப்பர் பாட்டு தான். இருந்தும் வைக்கிறார் பாருங்க விருந்து. அங்க தான் இசைஞானியும் + மலேசியா அண்ணனும் நிக்கறாங்க.

இது இரண்டாம் இடையிசையும் + இரண்டாம் சரணத்தின் ஒரு பகுதியும்.

இதோ இரண்டாம் இடையிசை. இங்கு கோரஸ் பாப்பாக்கள் உலக்கையை எடுத்து குத்துறது அந்த திருவாசகம் பாட்ட ஞாபகப்படுத்தற மாதிரி இருக்குல?

இங்கேயும் கோரஸ் பாப்பாக்களின் அந்த கிராமியம் நிறைந்த உலக்கையைக் குத்தும் சந்தப் பாட்டு. அது முடியும் இடத்தில் எப்படி எடுக்கறாரு பாருங்க. அத்தோட மட்டும் இல்லாம அந்த டும்..டும்..டும் signature beats ஒட வருது பாருங்க. அது தான் இந்தப் பாட்டின் முத்திரையே.. இங்கேயும், மலேசியா அண்ணன் எப்படி ஒரு யூத் வாய்ஸ்ல பாடுறார் பாருஙக.

இந்தப் படத்தில் எல்லாப் பாட்டுமே முத்து தான். செம பாட்டு.

இந்த மாதிரி பாட்டை எல்லாம் ஏதோ ஒரு Playlist, இல்லை bakeryல tea அடிச்சுகிட்டே கேட்கிற மாதிரி பாட்டே இல்லைங்க. படுக்கும் போதும், அமைதியா ஒரு இடத்தில் பாட்டை மட்டும் கேட்கும்போது, சுகமாக கண்ணை மூடிகிட்டே கேக்க வேண்டிய பாட்டுங்க. அவ்வளவு சங்கதிங்க இருக்கு இதுல.

ஒரே ஒரு வேண்டுகோள். தேடுங்க..ஆனா பாட்டின் வரியை வைத்து மட்டும் தேட வேணாம். எதற்கு பாட்டின் வரிகளைத் தந்தேன் என்றால், சரணத்தில் கூட இவர் இடையிசை போன்ற சங்கதிகளில் இந்தப் பாடலில் கையாண்டதால், பாடல் கேட்பதற்கே மிக அருமையாக இருக்கும் என்பதை சுட்டிக்காட்டத்தான். சரியா?

இன்னும் இரண்டு அட்டகாசமான பாடல்கள் மூலமாக சந்திப்போம்.

Have a nice day 🙂

Have a nice week ahead.

Please leave your answers below in the COMMENTS section with your Twitter handle/username. For other discussions on Twitter, please use hashtag #365RajaQuiz.

Extensively noise-removed. Noise-gate applied. No tempo was altered. Pieces are heavily censored, stitched, and woven together. Hiss noise was particularly removed to enhance the bass.


Clue: Please try to figure out the answer sincerely as the posted audio is the clue and hint you will ever need. But, if you need one more lifeline, then just select the box below,with your mouse, between the double-quotes to view the additional hint:

One of the worst choreographed songs (view it at your own risk), a diety-named actress, will dance for this duet with a diety-named actor, hailing from Coimbatore. He “brief”ly scared the fans of this site with some awkward movements in one of the earlier “diety-based” movie clue. Title of this movie has 2 or more words.

NB: Enjoy the Continuous Play of all the clues so far.

Answer: Chithira Maasathu (சி்த்திர மாசத்து ) from Chinnakuyil Paaduthu (சின்னக்குயில் பாடுது) (1987)