Tags

, , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

Good Morning… அட…ஹலோ, உங்களத்தான்.. குட் மார்னிங் 😉

ஒன்னும் இல்ல, இத எழுதும் போது early morning 😉

கொஞ்சம் உடம்புக்கு சரியில்ல..அதனால, வேகமா, நேரா க்ளூக்குள்ள டிக்கெட் வாங்கிட்டு நொழஞ்சுடலாமா?

இன்னிக்கு வர க்ளூ சிலருக்கு tie-breakerஆவும், சிலருக்கு breatherஆவும் இருக்கும். It all depends on, how closely you have paid attention to this song and its interludes. அவ்வளவு தான் matter. பாருங்க, இந்தப் பாட்டை நான் select செய்ய காரணம், இசைஞானியின் chorus accompaniments சிலர் குறை சொல்ற மாதிரி எல்லாம் இல்லவே இல்லை. In fact, it is just the opposite. அதில் ஒரு நளினமும், எதார்த்தமும், புதுமையையும் எப்பவுமே வச்சிருப்பார். இந்தப் பாட்ட இது வரைக்கும் கேட்டதில்லைன்னா, இனிமேலே உங்களுக்கு கோரஸ் பாப்பக்கள்னா, இந்தப் பாட்டு ஞாபகத்துக்கு வர்ற அளவுக்கு கெட்டியான பாட்டு.

கோரஸ் பாப்பாக்கள் இதுல எத்துணை வாட்டி, நம்ம தலைவரால் வாட்டி எடுக்கப்பட்டார்கள் என்பதை I can only imagine. சும்மா non-stop, point-to-point express மாதிரி சீறி பாய்ஞ்சுகிட்டே போறத பாருங்க. சில இடங்கள்ல, மேட்டுப்பாளையம்–குன்னூர் 14 hairpin-bendகள் மாதிரியும், வால்பாறை போக 44 hairpin-bendகள் மாதிரியும், கோரஸ் பாப்பக்களை பெண்டு மேல பெண்டு நிமித்தி இருப்பார். எல்லாமும் ரசிக்கற மாதிரியே பாப்பாக்களும் பின்னி எடுத்திருப்பாங்க.

க்ளூலேயே 20 இடங்களில் குறியீடுகளை இட்டிருக்கிறேன். ஏனென்றால், இதெல்லாம் கேட்டுக்கொண்டே உள்வாங்க வேண்டிய விசயங்கள். முதலில் துணுக்கை பார்த்துக்கொண்டே கேட்டுவிடுங்கள்.

இசைஞானி, எதிலுமே பஞ்ச் வைக்கும் ஞானி. இங்கே இவர் கோரஸ் பாப்பாக்களின் accompanimentsல் தன்னுடைய மேதைமையை எப்படி நாசூக்காக காட்டிவிடுகிறார் தெரியுமா? ஒரு இடத்தில் அவரின் திருவிளையாடலை நீங்கள் கவனிக்கலாம். Here it is: 51வது நொடி முதல் 55வது நொடி வரை வரும் வேக டிரம்ஸ் + கிடார் + டிரம்பட்ஸ் சீக்வென்ஸில், கோரஸ் பாப்பாக்கள் மூச்சு கூட இருக்காது. ஆனால், அந்த 55வது நொடியில் இருந்து 1:03 வரை, அதே கோரஸ் பாப்பாக்கள் அதே 51-55 நொடி சீக்வென்ஸை, கிடார்+டிரம்பட்ஸ்+டிரம்ஸுடன் direct race conditionல் நீயா நானா என்று ஒரு கை பார்த்துவிடுவார்கள். இந்த ஒரு சீக்வென்ஸ் போதும், கோரஸ் பாப்பாக்களின் பங்கையும், இசைஞானி as a conductor எப்படி அந்த choral harmonyஐ percussion உடன் சேர்த்து drive பண்ணிக்கொண்டு போகிறார் என்பதை புரிந்துகொள்ள. 😉

விடையை பதிக்கின்றீர்களோ இல்லையோ. இந்த முழு துணுக்கையும் மீண்டும் மீண்டும் கேளுங்கள். அங்கே புரியும், கோரஸ் பாடுவது அவ்வளவு சுலபம் அல்ல என்பது. அதை விட, இந்தப் பாட்டுக்கு இடைவிடாமல் அவர்களை இசைக்கருவிகளோடு போட்டி போடும் விதமாக இசைஞானி பாடவைத்திருப்பது அழகோ அழகு. 33/365 – #365RajaQuiz Aah PaPaPaPa – ஆ பபபபா ல் பாலு டிரம்பட்ஸுடன் மோதியதைக் காட்டிலும், இது ரொம்ப கடினம் + peppy என்பது என் சொந்தக் கருத்து. பாலு கியரை சோலோவாக மாற்றிக்கொண்டு பாடுவது நன்கு தெரியும். ஆனால், இன்றையப் பாடலில், கோரஸ் பாப்பாக்களின் குரல் எது, டிரம்பட்ஸ் எது, கிடார் எது என்று தெரியாத அளவுக்கு கியரை மாற்றிக்கொண்டே அவர்கள் வண்டியை வேகமாக நகர்த்திக்கொண்டு செல்வது, கிளாஸ் ஓ கிளாஸ்! Volvo வாழ்வு தான், போங்க.. இந்த மாதிரியான நளினமான பாடல்களில் பயணிப்பதற்கு.

எந்த அளவுக்கு கிடார் மூலமா மிரட்டி எடுத்து இருக்காரோ இசைஞானி, இதைப் பாடிய விதத்தில் அப்படி ஒரு யூத் அப்பீல் தெறிக்கும். பின்னி அடித்திருப்பார். ஜாலியா… செமயா பாடியிருப்பார். படம் வெளிவந்தபோது, நன்கு பிரபலானது இந்தப் பாடல். ஆனால், இதில் வரும் இன்னொரு சோலோ மெலடி பயங்கரப் பிரபலம் ஆகவே, இது சற்று பின் தள்ளிப்போனது.

கடைசியா ஒன்னு: எதுக்கு இந்தப் பாட்டுக்கு இப்படி ஒரு அமர்க்களமான கோரஸ் பாப்பாக்களின் contributions வெளிப்படும் விதமாக இசைஞானி இசை அமைச்சிருக்கார்னு யோசிச்சாலே பதில் வந்து விழும். 😉 அங்க இன்னொன்னையும் கவனிக்கணும். He is a musical narrator. சிச்சுவேஷன் என்னன்னு கேட்ட மாத்திரத்தில் அவர் எண்ணங்கள் சுழல ஆரம்பித்துவிடும் போலிருக்கு. எத்துணை வாட்டி இதை எல்லாம் highlight செஞ்சு இருக்கோம். இங்க அது ரொம்ப முக்கியமான பாயிண்ட். படத்தைப் பார்த்தவர்களுக்கு, இவர் ஏன் இத்துணை கோரஸ் பாப்பாக்களை பாடல் முழுக்க உபயோகித்திருக்கிறார் என்று தோன்றி இருக்கணும். அப்படி இதுகாறும் யோசித்திருக்காவிட்டால், இப்பவாவது யோசிச்சு பாத்து ஆனந்தப் பரவசம் அடைங்க மக்களே. இசைஞானி தன் திறமையை காட்டவேண்டும் என்று என்றும் மெனக்கெட்டதில்லை. சிச்சுவேஷன் என்னவோ, அங்க காட்டுவார். இந்தப் பாட்டு 100% அந்த நிலைப்பாட்டுக்கு சான்று. உங்க பின்னூட்டத்துல இதெல்லாம் பத்தி விசில் அடிச்சு எழுதுங்கப்பா… 😉

Hold-on!

நன்றி. 😉

Have a nice weekend.

Please leave your answers below in the COMMENTS section with your Twitter handle/username. For other discussions on Twitter, please use hashtag #365RajaQuiz.

Noise-gate applied. No tempo was altered.

Clue: Please try to figure out the answer sincerely as the posted audio is the clue and hint you will ever need. But, if you need one more lifeline, then just select the box below,with your mouse, between the double-quotes to view the additional hint:

This song, penned by Gangai Amaran, was sung by Maestro Ilaiyaraaja himself. Title of the movie will remind you of your HR (Human Resources).

NB: Enjoy the Continuous Play of all the clues so far.

Answer: Yaaradi (யாரடி ) from Pondaati Thevai (பொண்டாட்டி தேவை) (1990)

Advertisements