Tags

, , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

வணக்கம்.

இன்று மைல்கல் 350. இது நாள் வரை நம்முடன் பயணித்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி. இந்தப் பயணமே ஒரு அனுபவம் தான். இல்லையா? இந்தத் தளத்தின் about பக்கத்தில், முதலிலேயே நான் ஒன்றைச் சொல்லி இருந்தேன்: the journey will be the reward என்று. அது வெறும் வெட்டிப் பேச்சு அல்ல என்பதை, இந்தப் பயணத்தில் நாம் புரிந்துகொண்டதே அதற்குச் சாட்சி. உதாரணத்திற்கு, 349/365க்கு @sagittarian82 இட்ட பின்னூட்டத்தின் ஒரு பகுதியைப் பாருங்கள் 🙂

மாஸ்டர், என்னைப் பொருத்தவரை இந்தப் புதிர்த்தொடரின் மிகப்பெரிய வெற்றி இது தான் – “இந்தப் பாடலின் இடையிசையில் இவ்வளவு நுணுக்கமான சங்கதிகளா?” என்று என்னைப் போல் பலரை வியக்க வைத்தது – இது நீங்கள் கொடுத்துள்ள சற்றேறக்குறைய அத்துணை பாடல்களுக்கும் பொருந்தும்.

ஏன், நான் கூட இந்தப் பாடலை சில பல முறை கேட்டிருந்தாலும், என்னை பெரிதாக ஈர்த்திருக்கவில்லை, இதுவரை என்னுடைய எந்த ப்ளேலிஸ்டிலும் இடம்பெறவில்லை. ஆனால் இந்த இடை இசையை மட்டும் தனியாக (அதிலும் உங்கள் துல்லியமான எந்த வித இரைச்சலும்இல்லாத ஒலிக்குறிப்புகளைப் பற்றி குறிப்பிட்டே ஆகவேண்டும்) கேட்டபின் தான் தெரிகிறது இந்தப் பாடலின் மகத்துவம். இப்படி எத்தனை எத்தனை பாடல்களை நாம் சாதாரணமாக (taken them for granted) எடுத்துக் கொண்டிருக்கிறோம். மகா பாவம் அல்லவா. உங்கள் புதிரின் வாயிலாக இவ்வாறு பல பாடல்களை வெளிச்சத்துக்கு கொண்டுவந்துள்ளீர்கள். உங்கள் இத்திருதொண்டுக்கு கோடான கோடி நன்றிகள்.

தலைவணங்கி நன்றி சொல்வதைத் தவிர நான் வேறு என்ன சொல்ல முடியும் என்று தெரியவில்லை. இப்படி பல பேருக்கு, இது விவரிக்க முடியாத அனுபவமாகவே ஆகிவிட்டது. உதாரணத்திற்கு, @usharanimsன் 34950/365 பின்னூட்டம்.

இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்.


இன்று taggingல் தேக்க நிலையை சரி செய்துவிடுவேன். அதனால், பதில் அளிக்காதவர்கள், தயவு செய்து பதில்களை உடனே அனுப்பிவிடுங்கள். ஏன் இந்த சீசனில் தேக்கநிலை என்று ஆச்சரியப்படுபவர்களுக்கு, என்னுடைய நிலையை நினைவூட்ட கடமைபட்டுள்ளேன். என்னுடைய laptop crashஆகிவிட்டது. அதனை இன்னும் recover செய்ய முடியவில்லை. அதைக் கொண்டு encodingக்கு சமாளித்துக்கொண்டிருந்தேன். பிப்ரவரியில் வாஷிங்டன் டி.சிக்கு ஒரு கருத்தரங்கத்திற்கு சென்ற போது தான், sound cards வலுவிழப்பதை அறிந்து உடனடியாக desktop ஒன்றை அவசர அவசரமாக வாங்கினேன். 350 நாட்களில் 12 மணி நேர தாமதத்தில் வெளிவந்த ஒரே க்ளூ அந்த சமயம் மட்டும் தான். ஏனென்றால் வாஷிங்டனில் இருந்து அட்லாண்டா பறந்து வந்து சேரும் வரை என்னால் ஒலிப்பதிவு செய்ய முடியவில்லை. இருந்தும் அந்த laptopல் தான் taggingக்கு சில விசயங்களைச் செய்துகொண்டு வந்தேன். அதுவும் அடிபட்டவுடன் இன்னும் கொஞ்சம் கடினமாகிவிட்டது. போதாதக் குறைக்கு என்னுடைய desktopம் புது ரவுட்டரும் நிறைய தொல்லைகளுக்கு ஆட்பட்டது. இந்த நிலையில் இன்று வேறு ஒரு புது மடிக்கணினி வாங்கிவிட்டேன். இப்படி பல logistical nightmare. Whether it is a coincidence, or, these huge WAV files and the encoding that sucks up so much of resources is behind such quick failures is something that I am not able to explain. Anyway, it is an experience. இதோ, இன்னும் 15 தான் இருக்கிறது. நல்லபடியாக முடித்தால் மகிழ்ச்சி. அதனால் தான் சற்று தாமதம் ஏற்படுகிறது, இந்த இறுதி கட்ட நாட்களில். பொறுத்தமைக்கு நன்றி.


இன்றும் நாளையும் கோரஸ் பாப்பாக்கள் தினம் 🙂

காரணம் இருக்கிறது.

Chorus என்றால் dance 🙂 அந்தக் “choros” (Latin)ல் இருந்து தான் choreography என்ற வார்த்தை வருகிறது 🙂 அந்தக்கால Athenian நாடகங்களில், நடனக்கலைஞர்களோடு பாடகர்களும் சேர்ந்து பங்குபெறுவார்கள். அதனாலேயே chorus என்பது பாடகர்களுக்கும் இயைபுடைய வார்த்தையாக மாறிவிட்டது.

ஆனால் மைல்கல் க்ளூவை நம் பாசத்திற்குரிய மலேசியா வாசுதேவன் அண்ணன் பின்னி எடுத்த பாடல் மூலமாக களம் இறக்குகின்றேன். 350/365ம் 365/365ம் முதல் சீசனிலேயே முடிவு செய்து வைத்திருந்த க்ளூக்கள்.

ஏன் இன்று மலேசியா அண்ணன் க்ளூ என்று முதலில் பார்த்துவிடுவோம்.

347/350க்கு பதிலைப் பதித்தவர்கள், அந்தப் பாடலை மலேசியா அண்ணன் பாடியிருந்திருந்தால் எப்படி இருந்து இருக்கும் என்று நினைத்திருக்கலாம். நினைக்காவிட்டால், இன்றையப் பாடலைக் கேட்டு முடித்தவுடன் நினைக்கக்கூடும். அது தான் Milestone Malaysiaவின் சிறு பின்புலம்.

இன்னொரு (அந்தக்கால) ஜூனியர் பாடகியுடன் மலேசியா அண்ணன் என்சாய் பண்ணி பாடிகிட்டே போவார் பாருங்க…ஆகா..என்னத்த சொல்ல.. புள்ளே புள்ளேனு சும்மா passionate, சிலுசிலுப்புடன் ஜாலியா பாடி இருப்பார். அந்த இடம் எல்லாம் கவனிச்சு கேளுங்க. அங்க புரியும் அண்ணனின் மகிமை 🙂 Malaysia Vasudevan is literally the clay that the potter (Music Director) would love to mold for his creation. கொடுமையா பாடு வாசுன்னாலும் பாடுவார், மிரட்டுர மாதிரி பாடு வாசுன்னாலும் பாடுவார், அடக்கிவாசிச்சு பாடு வாசுன்னாலும் பாடுவார். சுருக்கமா சொன்னா, சமீபத்துல நம் புதிர்ல வந்த ஒரு மென்மையான காதல் டூயட்ட பாடின அவரா இந்தப் பாட்டும் பாடினார் என்பதை சற்று நிதானமாக யோசித்தாலே அன்றி, அவரின் versatilityஐ appreciate செய்வது கடினம்.

நெக்ஸ்ட் கோரஸ் பாப்பாக்கள்.

இல்ல நிறைய தடவை, சிலர் என்னிடமே சொல்லி இருக்காங்க. ராஜா இசையில கோரஸ் எல்லாம் வேஸ்ட். Really? You got to be kidding me 🙂 இந்தப் புதிர் போட்டியில் எனக்கு மன நிறைவு தரும் பல விசயங்களில் மிக முக்கியமான ஒன்று — ஒதுக்கப்பட்ட தடைக்கற்கள் எவை எல்லாமோ, அவற்றை மூலக்கற்களாக முன் நிறுத்தியது தான்! அது மலேசியா அண்ணனாக இருக்கட்டும், பாடல்களின் சில இடையிசைத் துணுக்களில் மறைந்திருந்த சங்கதிகள் ஆகட்டும், கோரஸ் பாப்பாக்களின் பங்களிப்பாக இருக்கட்டும். வேண்டும் என்றே நக்கலாகவும், நைஸாகவும் 😉 விவரிப்பது போல, சில சங்கேத வார்த்தைகளை வைத்து we were able to keep those somewhat under-appreciated nuances alive in the public imagination, here at #365RajaQuiz. Thanks a lot for putting-up with that and even taking a liking to it progressively 🙂 On this alone, I feel very contented, because, you made it happen. The key has been and shall be this: YOU 🙂

இன்றையப் பாடலை எடுத்துக்கொள்ளுங்கள். இசைஞானியின் அடிப்பொலி திருவிழா தான்.

அருமையான ஒலிவடிவத்தில் வரும் இந்தத் துணுக்கை சற்று volume அதிகமாக வைத்து கேட்டுப் பாருங்கள். இல்லை, கேட்டுப் பாருங்கள்னு சொல்றேன். 😉 ஆடாம அசையாம கேக்கத்தான் முடியுமா? 😉

அட மக்களே, இப்பல்லாம் தியேட்டர்ல DTSனு என்னய்யா சத்தம்.. தலைவலி வருதா இல்லையா? ரொம்ப சத்தம் அதிகம் ஆகி மெனக்கெடுற மாதிரி இருக்கா இல்லையா? இதுல ரசிகன் சத்தம் எங்கய்யா கேக்குது?

இந்தப் பாட்டு 70mm தியேட்டர்ல பார்த்துட்டு இருக்கும்போது, இந்தப் பாட்டு வரும்போது எப்படி இருக்கும் தெரியுமா? திருவிழா! அப்படி ஒரு திருவிழா carnival atmosphere இருக்கும். கிராமத்துல, ஊர்க்கோயில்கள்ல விசேஷம் எல்லாம் நடக்கும் போது சாமி இறங்கின மாதிரி ஒரு festive கோலாகலம் ஒவ்வொரு காட்சியிலும் (தினசரி 4 காட்சிகள் — ஞாபகம் இருக்கா? :)) தியேட்டர்ல உக்காந்திருக்கிற ஆடியன்ஸுக்கு இந்த மாதிரி பாட்டுகள் வரும்போது இருக்கும். 😉 சும்மா டமக்கு டக்கா ஐட்டம் இல்லாமல் இசைஞானி இப்படி அடித்துத் தள்ளியதற்கு அது முக்கிய காரணம்.

அப்படிப்பட்ட அடிப்பொலியைக் கொண்டு சாத்தியிருக்கும் இசைஞானி, இந்தப் பாட்டில் ரிதமின் அளவை ஒரே சீராக எப்படித் தான் ஆரம்பத்தில் இருந்து முடியும் வரை maintain பண்ணினாரோ தெரியவில்லை. கூர்ந்து கேட்டீர்கள் என்றால், பல்லவி, சரணம் என்று எல்லாவற்றிலுமே ஒரு வித சீரான ஓட்டத்தை maintain பண்ணுவார். அந்த percussion அடிப்பொலி தான் key to find the answer 🙂

ஆனா, இந்த கோரஸ் பாப்பாக்களின் கோரஸ் ஒலியைக் கேளுங்கள். Start.

தாளத்துக்கு ஒரு மாதிரியும் கோரஸ் பாப்பாக்கள் ஒலியைக் கொடுத்து பாடுவதும், பின்னர் ஷெனாய் ஊது கருவியோடு போட்டி போட்டுக்கொண்டு அவர்கள் அப்படியே shenaiஉடன் alternate ஆகும் அந்த sequencesஐ எல்லாம் கவனித்துக் கேட்டால் அவ்வளவு ரசிக்கலாம்! அதுவும் இரண்டாவது interludeல் கோரஸ் பாப்பாக்களோடு, கோரஸ் பாபாக்கள் வேறு இணைந்து சேட்டை தான்.

செம பாட்டு.

அது சரி, கோரஸ் பாப்பாக்கள் டிரம்ஸோடும் ஷெனாயோடும் தங்கள் குரலைப் போட்டி போடுகிறார்கள் இங்கே. அவர்கள் SP Balasubramanian 33/365 – #365RajaQuiz Aah PaPaPaPa – ஆ பபபபா மாதிரி Trumpetsஉடன் போட்டி போட்டால் எப்படி இருக்கும்? நல்லா தான் இருக்கும்? இன்னும் 24 மணி நேரத்தில் அதையும் பார்த்துவிடுவோமே.

எப்படி? புதிர் சூடும் வித்தியாசமும் பிடிக்கிறதா? 😉

Once again, thanks a lot. Enjoy. Celebrate Maestro Ilaiyaraaja. Thanks for joining us for the past 350 days. We will hit the finish-line is exactly 15 more days. Hang in on there 🙂

நன்றி.

Have a nice week ahead.

Please leave your answers below in the COMMENTS section with your Twitter handle/username. For other discussions on Twitter, please use hashtag #365RajaQuiz.

Noise-gate applied. Good source. Volume optimized. No tempo was altered.

Clue: Please try to figure out the answer sincerely as the posted audio is the clue and hint you will ever need. But, if you need one more lifeline, then just select the box below,with your mouse, between the double-quotes to view the additional hint:

This song was penned by Gangai Amaran. All the songs in this album was by Malaysia Vasudevan 🙂

NB: Enjoy the Continuous Play of all the clues so far.

Answer: Sokkuppodi (சொக்குப்பொடி கக்கத்துல ) from Maaveeran (மாவீரன்) (1986)

Advertisements