Tags

, , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

வணக்கம்.

இந்த கீச்சே சொல்லிடுச்சே..எந்த அளவுக்கு தங்கச் சொம்பில் சோம்பலை எல்லாம் முறித்துவிட்டு வீசுங்க, நாங்க ரெடின்னு முந்திகிட்டு நிக்கறீங்கன்னு.

எனக்கும் ஆசை தான். இந்த வெள்ளிக்கிழமை ராமசாமி க்ளூக்களுக்கு, கிளுகிளுப்பா Traffic ராமசாமி மாதிரி, அதெப்படிய்யா சரியா ஆஜராகன்னு சில ஆட்கள் ரெடியா இருக்காங்க? @VRSaran @NChokkanனு இந்த பார்ட்டீங்க கன்னா வந்து பதிலைப் பதிச்சுடுவாய்ங்க. ;))

அதனால, இன்னிக்கு கொஞ்சம் இழுத்துபிடித்தே க்ளூ தருவோம். விடையை பறந்து வந்து பதிக்கும் அந்த சேம்பியன் யார்னு பார்போம். ஆகா…என்ன சித்து விளையாட்டு!

இந்த புதிருக்கு பதில் “2”னு யாராவது கடிச்சு மொக்க போட வந்தீங்கன்னா, அடி தான்! 😉

பதில் வேணும். இது என்ன பாட்டுன்னு சொல்லணும். இந்தப் பாட்டுல எனக்கு மிகவும் பிடித்த interludeஐ மட்டும் கொடுத்து இருக்கின்றேன். இந்தப் பாடலின் அடையாளமே அந்த rhythms. அதிலும் அந்த gradual build-up ஆகும் rhythms என் மனதை எப்போதும் குளிரவைக்கும். பல நேரங்களில், வெகுதூரப் பயணத்துக்கு என்று செல்லும்போது, இந்தப் பாடலைப் போட்டுக்கொண்டு வேகத்தைக் கூட்டுவது உண்டு. சில நேரங்களில், உள்ளூரிலேயே பயணம் செய்யும் போதும், இந்தப் பாட்டை விரும்பி போட்டுக்கொண்டு காரை விரட்டுவது உண்டு. ஏதோ ஒன்று இதில் உள்ளது என்று பார்க்கும் போது தான் இந்த இடையிசைத் துணுக்கில் வரும் அந்த rhythms என்று தெரிந்தது. 23 நொடியில் இருந்து 28 நொடி வரைக்கும் எவ்வளவு அழகாக தாளத்தைக் கூட்டிக்கொண்டே போகிறார் பாருங்கள்! அதே போல இவ்விதமான violin இசை மீட்டலும் மிகவும் பிடிக்கும். சோலோ வயலினில் வரும் அந்த இசை cowboy பாடல் effectல் பிய்த்து உதறும் 🙂 அமெரிக்க country இசையில் வரும் வயலின் போல http://www.youtube.com/watch?v=0ymMJ2_1Sh8 🙂

ஆனால் பாருங்கள். இதைத் தான் விதி என்று சொல்வதோ? அந்த 23-28 நொடி step by step rhythmsக்கு காமெடி நடிகர் நாகேஷ் walking-stick வைத்துக்கொண்டு step போட, கதாநாயகி, கதாநாயகனைத் தொடர்ந்து வந்து தொல்லைப் பண்ணுவதாக பாட்டை படமாக்கி கொன்றிருப்பார் டைரடக்கர். ஆமா, ஆமா.. இதுவும் முதலிரவுப் பாடல் தான். அதில் தான் இந்த மாதிரி கூத்து!

இந்தப் படம் என் வாழ்க்கையில் மறக்கவே முடியாது. சென்னை எழும்பூரில் உள்ள லிட்டில் ஆல்பர்ட் தியேட்டரில் பார்த்தது. கவுண்டமணிக்கும் இப்படி வெறித்தனமான ரசிகர்கள் உள்ளார்கள் என்று என்னால் நம்ப முடியாத அளவுக்கு கவுண்டர் வாங்கின அப்ளாசைப் பார்த்து ஆடி போய்விட்டேன். இந்த நாள் வரைக்கும் இந்தப் படப் பாடல்களைக் கேட்டாலே, இந்தத் தியேட்டரில் படம் பார்த்தது தான் ஞாபகத்துக்கு வரும்.

Have a nice weekend 🙂

Please leave your answers below in the COMMENTS section with your Twitter handle/username. For other discussions on Twitter, please use hashtag #365RajaQuiz.

Noise-removed. Noise-gate applied. No tempo was altered.

Clue: Please try to figure out the answer sincerely as the posted audio is the clue and hint you will ever need. But, if you need one more lifeline, then just select the box below,with your mouse, between the double-quotes to view the additional hint:

This actor/actress is active on Twitter and politics.

NB: Enjoy the Continuous Play of all the clues so far.

Answer: Manakkum Malligai (மணக்கும் மல்லிகை) from Rickshaw Maama (ரிக்‌ஷா மாமா) (1992)

Advertisements