Tags

, , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

வணக்கம்.

இன்று புதுமையான, வித்தியாசமான triviaக்களினால் வரும் பாடல் புதிர்களின் hat-trick. நாளை வேறு 😉

ஏனென்றால் நாளை வெள்ளி ஆச்சே..பொட்டு வச்ச தங்கக்குடங்கள் எல்லாம் மெட்ரோ வாட்டருக்கு குடத்தோடு காத்திருப்பது போல, கருத்தாழம் நிறைந்த பாடலுக்குக்காக நாளை எதிர்பார்த்து இருப்பார்களே. 😉

நேற்று அடிப்பொலியின் சிகரமாய் அமைந்த பாடல்.

இன்று?

அதற்கு நேர் எதிர் 🙂

முதலில் இசையைக் கேட்டுவிடுவோமே…

Please use headphones or raise the volume to appreciate the split, better 🙂


பிறந்த குழந்தைக்கு அருகில் இந்தப் பாடலின் ஆரம்ப இசையைப் போட்டுவிட்டு அழகாய் அது அமைதியாக உறங்குவதைக் கண்டு பெற்றோர்கள் ரசிக்கலாம். அந்த மாதிரி, உருகி உருகி, காதல் ததும்ப மெலடி கோலோச்சும், சுகமான பாடல் இது. அதற்கு ஏற்ற மாதிரி இசைஞானி இளையராஜா ஒரு காதல் ராஜாங்கத்தை மென்மையாக தவழவிடுவார்.

ஆரம்பம் அருமையான Piano மற்றும் bass-guitarல் வரும். அதில் மெல்ல beats நிறைந்த இசை மீட்டல். அது முடியும் இடத்தில் மிகவும் மென்மையாக புல்லாங்குழலின் ஸ்பரிசம் கலந்த ஒரு இசை. ஒரு குழந்தையைப் போல நாம் மாறிப்போய் அண்ணாந்து பார்க்கும் நேரம், இசை திடீரென்று வேகம் பிடித்து ஓடுகிறது. ஆனால் அந்த ஆரம்ப பியானோ இருக்கிறதே…அட்டகாசங்க… பொதுவா எனக்கு எல்லா இசைக்கருவிகள் மீதும் பிடித்தம் இருந்தாலும், பியானோவை அதிகம் கண்டுகொள்வது கிடையாது. இத்துணைக்கும் சின்ன வயசுல இருந்தே கோயில்ல அந்த இசைக்கருவி இல்லாமல் பாடல்களைப் பாடி செபித்தது இல்லை 🙂 இருந்தும் நமக்கு வயலின், கிடார், டிரம்பட்ஸ் அப்புறம் டிரம்ஸ். இது தான் ரொம்ப பிடிக்கும். இருந்தும், இந்தப் பாட்டுலயும் சரி, தர்மத்தின் தலைவன்ல வரும் தென்மதுரை வைகை நதி (யெஸ், இது பாசமுள்ள பாண்டியரு… நம்ம மதுரை மக்காக்களுக்காக ஸ்பெஷல் ஐஸ் ;))பாட்டுலயும் சரி, பியானோவுக்கு அடிமை நான் 🙂

எப்படி போட்டு இருக்கார் பாருங்க.

இந்த இசைத் துணுக்கில் வரும் அனைத்து கில்லி விசயங்களையும் குறியீடு போட்டு காட்டி இருக்கிறேன். இசைத் துணுக்கைக் கேட்டுக்கொண்டே அதைக் கவனித்தீர்கள் என்றால் இன்னும் ரசிக்கலாம்.

இந்தத் துணுக்கைக் கேட்டவுடன் உங்களால் பதில் உடனே சொல்ல முடியும்….ஒரு முறையாவது இந்தப் பாடலைக் கேட்டு இருந்தால். அப்படிப்பட்ட பாட்டு இது.

என்னுடைய அனுமானம் என்னவென்றால், பலர் இந்தப் பாடலைக் கேட்டு இருக்காமலும் இருக்கலாம். நேற்று அடிப்பொலியில் அடித்துத் தள்ளிய பாடலுக்கு எதிராக தர வேண்டும் என்றே கழுத்தறுத்துவிட்டார் என்று கோபப்படக்கூடாது. 🙂 ஒரு விதத்தில் அது உண்மை என்றாலும், இன்னொரு விதத்தில் அப்படி இல்லை. இவர் இசைஞானி. இந்தப் பாடலிலும் நேற்று வந்த transformations sequence ஒன்று இருக்கிறது. பார்க்கலாமா? அதாவது, காதல் டூயட்டில் கோரஸ் பாப்பாக்கள் காதல் குதூகலத்தில் கோரஸ் பாட, அங்கே மழலைகள்…குழந்தைகள்…உலகம் என்னும் பரந்து விரிந்த பூங்காவில் பூத்துக் குலுங்கும் பூக்கள்…அவர்களுக்கே உரிய மகிழ்ச்சி குதூகலத்துடன் சிரித்தும், மகிழ்ந்தும் ஆர்ப்பரிப்பதும் போன்ற ஒலிக்குள், காதல் கோரஸ் பாப்பாக்களின் கோரஸ் ஐக்கியம் ஆவதை — அந்த segue ஆகும் transformationஐ நேற்றைய 347/365உடன் ஒப்பிட்டு பாருங்கள். அதாவது, இதெல்லாம் ரொம்ப சாதாரணமப்பா என்று பல பாடல்களில் காலம் காலமாக அவர் காட்டி இருக்கிறார் என்ற கருத்தை முன்வைக்கவே இதைக் குறிப்பிட்டுச் சொல்கிறேன்.

இந்த விசேட சிரிப்பொலி — frolic — children’s innocence is dedicated to @I_VR and his daughter…for this tweet that he shared yesterday 🙂

என்ன கண்டுபிடிக்க முடிகிறதா?

இசை நல்லா இருக்கு, ஆனா கேட்ட மாதிரியே இல்லையேனு இருக்கா? பின்னூட்டத்துல சொல்லுங்களேன்.

ஆமா hat-trick விசயத்தையே தொடல நீங்கன்னு யாராவது யோசிச்சீங்களா? இல்லை, இசை மயக்கதுல அதைப் பற்றி யோசிக்கவே இல்லையா? 😉

சொல்றேன்.

எப்படி 346/365ல் பாடலாசிரியரே கதை-வசனம் எழுதினாரோ, 347/365ல் மிக நீண்டதொரு பாடலுக்கு இசையமைத்த இசைஞானியே பாடல் வரிகளை எழுதினாரோ, அது போல 348/365ல்… நம் அனைவருக்கும் மிகவும் பிடித்த பாடகர் ஒருவர் தான் கதை, திரைக்கதை, வசனம், டைரக்‌ஷன் என்று எல்லாவற்றையும் தூக்கிப் போட்டுக்கொண்டு இந்தப் படத்தை எடுத்து முடித்தார்.

அந்தக் காலத்துல நம்மூர்ல ஒரு கதை சொல்வாங்க. அது அது செய்யும் வேலைய விட்டுட்டு வேற ஒருத்தர் செய்ற வேலைய செஞ்சா வம்புல முடியும்னு ஒரு கதை. அது இங்கும் நடந்தது தான் பரிதாபமே. பாடகரின் spouse தான் Producer வேறு. என்னத்த சொல்ல. அந்தக் காலத்தில் மலையாளத்தில் பள்ளிக்காதலை சித்தரித்த ஒற்றைப் பெயர் கொண்ட படத்தை பிரதாப் போத்தன் இயக்கினார். அருமையான வெற்றிப் படமாக அது அக்கட பூமியில் வெள்ளி விழா கொண்டாடவே, அதில் நடித்த விடலைப் பையனையும் பொண்ணையும் இந்தத் தமிழ்ப் படத்தில் நடிக்க நம் பாடகர்/டைரக்டர் கூட்டி வந்து அறிமுகம் செய்தார். மலையாளப்படத்தில் ஓகோ என்று வெற்றி கண்ட மாதிரி இங்கும் பலிக்கும் என்று அவர் நம்பியது தவறிப்போனது. படமும் ஓடலை. பாடகரும் கையைச் சுட்டுக்கொண்டார். பாவம் 😦

ஆனால், இந்தப் பாட்டை பாடி இருப்பவரும் அவர் தான். இது முதல் முறை என்றால், இந்தப் பாடகரின் இந்தப் பாடலைக் கண்டிப்பாக காலம் முழுக்க மறக்கவே மாட்டீர்கள் என்பது மட்டும் உறுதி! 🙂 Serious…I bet dollars to donuts on that 🙂 This is one of the best offbeat songs you will see in #365RajaQuiz. The more you listen to this, the more you will appreciate, why I say this 🙂

நன்றி.

Have a nice week ahead.

Please leave your answers below in the COMMENTS section with your Twitter handle/username. For other discussions on Twitter, please use hashtag #365RajaQuiz.

Noise removed and noise-gate applied. Cassette hiss was cut, which enhanced the bass, so that bass-guitars will be clearer. No tempo was altered. Prelude was conflated with the two interludes.

Clue: Please try to figure out the answer sincerely as the posted audio is the clue and hint you will ever need. But, if you need one more lifeline, then just select the box below,with your mouse, between the double-quotes to view the additional hint:

This song was penned by Gangai Amaran. Title song — a beautiful title-song about பாசம் (affection towards a child) — was penned and sung by Isaignani Ilaiyaraaja. Movie’s title >= 2 words 😉

NB: Enjoy the Continuous Play of all the clues so far.

Answer: Sindhu Mani (சிந்து மணி) from Nee Siriththaal Deepavali (நீ சிரித்தால் தீபாவளி) (1990)

Advertisements