Tags

, , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

வணக்கம்.

சில நாட்களாக மனது சரியில்லை. சுற்றி நடக்கும் செய்திகள் மனதை பாதிக்கின்றது. அதற்கு ஒத்தடம் கொடுக்கும் வகையில் என் பார்வை திரும்பியது, இந்த மெலடி பாடலுக்கு.

அதுவே இன்று உங்கள் முன் புதிராக சதிராடுகிறது.

காதலன் காதலியை சந்திக்க முடியாத அளவுக்கு அவர்கள் காதலுக்கு முட்டுக்கட்டை. இதைத் தாண்டி அவன் வந்து அவளைத் திருட்டுத்தனமாக சந்திக்கின்றான். இருவரும் கூடி முயங்குகிறார்கள். இவன் செல்லப் பார்க்கிறான். ஆற்றாமையால், அவள் இவனைக் கட்டித் தழுவி கண்ணீர் சிந்தி பாடுகிறாள்.

இது தாங்க களம்.

இப்ப பாட்டைக் கேளுங்க.. சாரி.. ஐ மீன்..இப்ப துணுக்கைக் கேளுங்கள். உங்களுக்காக 19 இடங்களில் குறியீடுகளைக் குறித்து இருக்கின்றேன். நீங்களும் குறியீடு செய்வது என்றால் go ahead 🙂

Please pay attention to the 1:05 to 1:10 second in the track for the bass-guitars. Nowhere, can this be this clear and palpable as it is here.

அதற்கு முன் ஒரு clarification 🙂 இழுத்துப் பிடிக்க ஆசை என்றாலும், அந்தக் காலத்தில் இந்தப் பாடலை எத்துணை பேர் வானொலியில் கேட்டிருப்பீர்கள் என்ற சந்தேகம் உருவாகும் காரணத்தினால், இதைக் கேட்காதவர்களுக்குகாக ஓரளவுக்கு தேடி கண்டுபிடிக்கும் வகையில் க்ளூக்களைத் தருகிறேன். எப்பவும் விட சற்றே கடினமாகத் தென்பட்டாலும், விடாமல் தேடினால், சுலபமாக கண்டுபிடித்துவிடலாம்.

இந்தப் புதிரில் வந்த பல அருமையான முத்துக்களில், இந்த முத்துக்கும் ஒரு தனி இடம் கண்டிப்பாக இருக்கும். இதே படத்தில் வந்த இன்னொரு அட்டகாசமான டூயட் பிரபலமான காரணத்தினால், இது சற்று பின் தங்கிப்போனது என்னவோ உண்மை தான்.

ஆரம்பம் guitarல். தேவன் திருச்சபை மலர்களேவை ஞாபகப்படுத்தலாம். சரி தானே? ஆனால், அது சில நொடிகளுக்குத் தான். உடனே தண்டவாளம் மாறிப்போய் வேறு பாதையில் வண்டி போய்விடும். Flute ஆரம்பமாகும் போதே அந்த மாற்றம் தெரியும். இவர்கள் இருவரின் காதலுக்கு தடைகள் உள்ளதை அட்டகாசமாகக் காட்டும் அந்த ஷெனாய் இசையைப் பாருங்கள். அது சொல்லவில்லையா, அந்த இதயத்தின் வலியை? இந்தப் படத்தையும், பாடலையும் கண்டா அந்த உணர்வை நாம் அடைய வேண்டும்? கூடி முயங்கும் ஒரு காட்சிக்கும் எதற்கு இப்படி ஒரு சோக டூயட் என்பவர்கள், மேற் சொன்ன களத்தை நன்கு உணர வேண்டும். இசைஞானி, எப்படி கையாள்கிறார் பாருங்கள். ஏதோ ஒரு டூயட், டமக்கு டக்கா கொங்கக்கா மக்கான்னு போடாம, எப்படி situationஐ உணர்ந்து இசைத்து தனது இசையாலேயே அந்த உணர்ச்சிகளைக் காட்டிவிடுகிறார் என்பதற்கு இந்தப் பாடல் சிறந்த எடுத்துக்காட்டு.

இருவரின் காதலிலும், அன்பிலும் ஒரு தூய்மை இருப்பதை உணர்த்தவே அந்த வீணை interludes. அதற்க்கு மகுடம் சாத்தியது போல சந்தூரும் சேர்ந்துகொள்கிறது. அதே போல வீணையோடு கிடாரும், வீணை + கிடாரோடு fluteஉம் இணையும் அந்த அருமையான climaxஐ என்னவென்று சொல்வது?

Climax என்று தான் சொல்லனும். அதற்காகவே தான் திருக்குறள் 1330ஐ தலைப்பாக கொடுத்து உள்ளேன். எதுவுமே coincidence இல்லை 😉

இந்த டூயட் பாடலின் இசையை ரசித்துவிட்டு யூடியூப் பக்கம் போய்விடாதீர்கள். அங்கு உங்களுக்கு அதிர்ச்சி காத்துக்கொண்டு இருக்கும். அருமையான பாடல், அருமையான இசை, அருமையான வரிகள். இருந்தும், பாடலை படமாக்கிய டைரக்டர், ஏன் ஒரு மலையாளப் பட ரேஞ்சுக்கு சொதப்பிவிட்டார் என்று தெரியவில்லை. அதில் எமக்கு வருத்தமே. இருந்தும், இசைஞானி பாடல்கள் பலவற்றிற்கு இது தானே கதி. இதில் என்ன ஆச்சரியம். இல்லையா?

இன்னும் 19 புதிர்கள் தான் வரப்போகிறது. இன்னும் எத்துணை முத்துக்களைத் தான் எடுக்க முடியும்? இவரது கடல் மிகவும் ஆழம். ஒரு க்விஸ் அல்ல, 100 க்விஸ் வந்தாலும், எதையாவது ஆழ மூழ்கி எடுத்துக்கொண்டு தான் வர வேண்டி இருக்கும்.

ஏதோ என்னால் முடிந்தது, நான் கேட்டது — குறிப்பாக வானொலியில் கேட்டு, உள் வாங்கியதை, இங்கு சுவாசிக்கிறேன். அவ்வளவே. Again, the intent is to NOT make it purposefully difficult, as that goes against my objective for this Quiz. சரியா?

இந்தப் பாடலை கேட்டு இருக்கின்றீர்களா? இப்போது தான் கேட்கின்றீர்கள் என்றால், உங்கள் அனுபவங்களைப் பற்றியும் பகிர்ந்துகொள்ளுங்களேன்.

நன்றி.

Have a nice day.

Please leave your answers below in the COMMENTS section with your Twitter handle/username. For other discussions on Twitter, please use hashtag #365RajaQuiz.

Noise-removed from a good source. No tempo was altered, but, volume was maximized. Prelude and 2 interludes were conflated.

Clue: Please try to figure out the answer sincerely as the posted audio is the clue and hint you will ever need. But, if you need one more lifeline, then just select the box below,with your mouse, between the double-quotes to view the additional hint:

The lyricist — a close friend of Maestro Ilaiyaraaja at that time — has also handled the story and dialogues for this movie, while a disciple of a legendary director handled the screenplay and direction. Title of this movie is one of the 133 chapters (அதிகாரம்) of Thirukkural.

NB: Enjoy the Continuous Play of all the clues so far.

Answer: Unnai Kaana Thudiththen (உன்னைக் காணத் துடித்தேன்) from Natpu (நட்பு) (1986)

Advertisements