Tags

, , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

வணக்கம்.

ATTENTION: Today, there are 2 clues. You can choose to answer EITHER the 1st OR the 2nd. It is an “either-or” choice question. Enjoy.

நேற்று fusion guitar பார்த்து அசந்து போனோம். இல்லையா?

உலக இசை எல்லாம் அப்பவே போட்டுட்டார் என்ற மாதிரி எல்லாம் பின்னூட்டங்கள் வந்தன.

அந்தப் பாட்டைக் கேட்டு ரசித்தவர்கள், இன்று வரும் புதிரின் முதல் பாடலை நினைத்து பார்த்து இருக்க வேண்டும். நினைத்தீர்களா என்பதை பின்னூட்டத்தில் சொல்லிவிடுங்கள். அதே போல, இன்று வரும் இரு பாடல்களில், உங்களுக்கு மிகவும் பிடித்தது எது என்பதையும் சொல்லிவிடுங்கள். இரண்டுமே என்று சொல்லிவிடக் கூடாது 🙂 எது ஒரு படி அதிகம் பிடிக்கும் என்று சொல்லிவிடுங்கள். சரியா?

இரண்டு துணுக்குகளுமே stereophonic split audioவில் இடது, வலது, நடு என்று split ஆகும். அந்தக் காலத்துக்கு இதெல்லாம் புதுசு. இதை அனுபவிப்பதில், நமக்கெல்லாம் ஒரு பவுசு தான் 😉 Enjoy!

இன்று வரும் இரு புதிர் துணுக்களிலும் முதன்மை, முதல் மரியாதை Guitarக்கு தான். ஆனால் பாருங்கள்:

  1. Track-1 / Song-1: இதில் அடிப்பொலி தான். Guitar உடன் Sax மற்றும் மத்தளம், தபேலா, மோர்சிங் மாதிரி ஏதோ ஒரு கருவி. இவற்றுடன் கோரஸ் பாப்பாக்கள். அதுவும் போதாது என்று புல்லாங்குழல். அதையும் தாண்டி, எலக்ட்ரிக் கிடாரும் பாஸ் கிடாரும்….ஒன்றும் சொல்லிக்கொள்ள முடியாது. அந்த அளவுக்கு தர்ம அடி. டிரம்ஸ்ல சாத்துர மாதிரி இவர் Guitar-strumming ல பொளந்து கட்டி இருக்கார்.
  2. Track-2 / Song-2: இதில் மென்மையோ மென்மை. இது ஒரு பெண்ணின் மனத்தில் இருக்கும் ஏக்கத்தை ஏகத்துக்கும் வெளிக்கொணரத் துடிக்கும் பாடல். இதிலும் கிடார் உண்டு — கூடவே அருமையான சந்தூர் மற்றும் புல்லாங்குழல் மற்றும் கோரஸ் பாப்பாக்களின் தம்தம்தம் & பீபீபீபீபீ. In fact, guitar only gets its primacy in this song too. ஆனால், எந்த அளவுக்கு variationsஐ கொண்டு வந்திருக்கிறார் என்று பாருங்கள்!

இரண்டு துணுக்குகளையும் முழுவதுமாக ஒரே sittingல் கேட்டுப்பாருங்களேன். முடிந்ததும் பாருங்கள், எங்கிருந்தோ விழித்து எழுந்த மாதிரி இருக்கும்!

ஒரே இசைக்கருவி, எத்துணை வித்தியாசம்!

ஒரே இசைக்கருவி, எத்துணை வேறுபாடுகள் நிறைந்த genre!

ஒன்று fusion, இன்னொன்று பத்ம விபூஷன்!

ஆரம்பகாலத்தில் இவருக்கு இதைத் தவிர வேறு என்ன தெரியும் என்று நையாண்டியும் எள்ளலும் நிறைய. அதற்கெல்லாம் வரிந்து கட்டிக்கொண்டு குழாயடி சண்டை போடாமல், சவுடாலாக இசையாலேயே பதிலைச் சொன்னவர் தான் இசைஞானி. முதல் பாடலை அடையாளம் கண்டவர்களுக்கு நான் சொல்வது நன்கு புரியும் என்று நினைக்கின்றேன். ஒரு காட்டில் பல மிருகங்கள் வலம் வந்தாலும், அங்கே சிங்கம் தானே ராஜா? அது மாதிரி, பல genre and fusion என்று இவர் வலம் வந்தாலும், மெலடியில் பட்டையைக் கிளப்பும் ராஜா என்பதை இரண்டாவது பாடலில் சரியாக காட்டிவிடுவார்.

அதாவது Boeing-747 எடுத்துகிட்டு Space Shuttle ரேஞ்சுக்கு இவர் International Space Stationக்கே ஓட்டிட்டு போய்ட்டு வர்ற மாதிரி முதல் பாட்டுல போட்டுகிட்டு, அடுத்த பாட்டுல GoAir விமானத்தை நம்ம மீனம்பாக்கத்துல லேண்டிங் பண்ற மாதிரி பண்றார்.

எப்படி தான் சாத்தியமோ. ஆண்டவா. ராஜா ராஜா தான் 😉

இரண்டாம் பாடல் is very special to me. அப்போது 2-2 1/2 வயது இருக்கும் என் மகளுக்கு. ஒரு முறை பள்ளியில் போய் அவளை pick-up செய்ய போனேன். வந்து கார் சீட்டில் அமர வைத்துவிட்டு காரைத் தொடங்கினால், இரண்டாம் பாட்டு பாடத் தொடங்கியது. அது அவளுக்கு மிகவும் பிடித்துப் போய்விடவே, அப்பா, அக்கா song…என்று விடாமல் கேட்கத் தொடங்கினாள். கரும்பு தின்ன கூலியா என்ன? நமக்கு அந்த டீலிங் ரொம்பவே பிடிச்சிருந்தது. அதனால் தான் இன்று இரண்டு க்ளூ. சரியா 🙂

Track-1 / Song-1 (Guitar -> பியூசன் – ஹார்ட் மெட்டல் – ஃபோல்க்)

Track-2 / Song-2 (Guitar -> மெலடி கிராமத்து மெட்டு)


டாப்போ டாப்பு தானே?

இந்தப் படத்துல எல்லா பாட்டும் செம சூப்பர் டூப்பர் ஹிட்! எதைக் கொடுப்பது என்ற dilemmaவிலேயே கொடுக்கப்படாமல் காலம் தாழ்த்தப்பட்டு இன்று தான் இதற்கு விடியல்!

நன்றி.

Have a nice week ahead.

Please leave your answers below in the COMMENTS section with your Twitter handle/username. For other discussions on Twitter, please use hashtag #365RajaQuiz.

Excellent source. Only noise-gate applied to remove the hiss. Adjusted the volume control to optimize it for output. No other changes done.
Answer EITHER ONE of the two clues.


Clue: Please try to figure out the answer sincerely as the posted audio is the clue and hint you will ever need. But, if you need one more lifeline, then just select the box below,with your mouse, between the double-quotes to view the additional hint:

Both of these songs were penned by Valee. I wish I could give another excellent fusion duet song from Malaysia Vasudevan, in this album and that song was written by Panchu Arunachalam.

NB: Enjoy the Continuous Play of all the clues so far.

Answer: Naan Thaan Toppu & Raasaave Unna ( நான் தான் டாப்பு & ராசாவெ உன்ன தான்) from Thanikaattu Raaja (தனிக்காட்டு ராஜா) (1982)

Advertisements