Tags

, , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

வணக்கம்.

இனிய மாதம் புதிதாக புலர்ந்து இருக்கிறது. எல்லா நலமும், வளமும் என்றும் சூழ்ந்து இருக்கட்டும்.

இம்மாதிரி வாழ்த்துவது #365RajaQuizக்கு இதுவே கடைசி. 😦

ஒவ்வொருத்தரும் தனியாகவும், நேரில் சந்திக்கும் போதும், பகிர்ந்து கொள்ளும் ஒரே கேள்வி, ஜூலை 29 அன்று எப்படி இருக்கும் என்பது தான். அதற்குள் வேறு ஒருவர் க்விஸ் மாஸ்டராக வர மாட்டாரா என்று உங்களைப் போல நானும் எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.


Anyway, இன்று மாதத்தின் தொடக்கம் என்ற காரணத்தினாலும், திங்கள் என்ற காரணத்தினாலும், அருமையான guitar பாடலை களம் இறக்குகின்றேன். நேற்றைய பாடலைப் போலவே இதிலும் கிடார் தான் பின்னி எடுத்திருப்பார் இசைஞானி. ஆனால், இதில் electric guitarஐயும் துணைக்கு அழைத்து என்ன என்ன சித்து வேலைகளை செய்திருக்கிறார் பாருங்கள்.

இது ஒரு அருமையான fusion பாடலும் கூட. பெண் ஒரு அல்டாப்பு அலட்டல்காரியாக ஆங்கிலத்தில் மேற்கத்திய பாணியில் பீட்டர் விட, ஆண் குரலோ பக்கா நாட்டுப்புற மெட்டில் அடித்து தள்ளுவதாக பாடல் முழுக்க வரும். ஆக, கிராமியத்துக்கே உரிய தபேலா, மத்தளம் என்று இவனுக்கும், கிடார், லீட் கிடார், பாஸ் கிடார் என்ற அமைப்பில் அவளுக்கும் அமைத்து, இக்கரைக்கு அக்கரை பச்சை என்பதை இசையாலேயே மிரட்டி சொல்லிவிட்டு போய்விடுவார் இசைஞானி.

இந்தப் படத்தில் அனைத்துப் பாடல்களுமே பயங்கர ஹிட். இந்த #365RajaQuizக்கும் இந்த படத்தில் வந்த வேறு ஒரு அருமையான பாடலுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. இந்தத் தளத்தை தொடர்ந்து வந்து கொண்டிருக்கும் உங்களுக்கு நன்றாக தெரிந்திருக்க வாய்ப்பு இருக்கிறது. It all depends on how keenly you watched certain things 🙂 இப்படி சூசகமா சொல்லிட்டு பத்த வச்சுட்டு கிளம்பிடறது தானே நம்ம வேலையே. 😉

ஆரம்பத்தில் எப்படி, ஒன்றுமே நடக்கவில்லை என்பது போல சோலோ கிடார் ஆரம்பமாக, சென்னை ஆட்டோகாரன் சூடேற்றிய மீட்டர் போல வேகமாக பயணிக்குது பாருங்க. அங்கேயே, எலக்ட்ரிக் கிடாரும் கிராமிய தபேலாவும் டூயட் பாட, புல்லாங்குழல், ஷெனாய்னு செம லோக்கல் பட்டை+ஊறுகாய் ரேஞ்சுக்கு அவர் கொண்டு வர வர, some of the complex guitar interludes keep coming as well. என்னத்த சொல்ல. ஒரு நாளைக்கு பீட்ஸாவையும், சுக்கு காபியையும் fusion முறையில சாப்பிட்டு பாக்கணும். நெனச்சு பாக்கவே கொடுமையா இருக்கு. ஆனா, இவரு மட்டும் எப்படி தான் இப்படி இசைக் கலவைகளை அப்படியே ஒரே மண்ணுல உதிச்ச மாதிரி போட்டுகிட்டு போறாரு? இத்தனைக்கும் இவர் பஸ் புடிச்சு கிராமத்துல இருந்து ஊர் வந்து சேந்து மெதுவா படியேறுன காலத்துல இம்மாதிரி எல்லாம் போட்டார்னு நெனச்சாவே உடம்பெல்லாம் உதறுது.

இந்த கிடார் பாடலுக்கும், நேற்றைய கிடார் பாடல் போல இசைஞானியின் தம்பி கங்கை அமரன் தான் பாடல் வரிகளை எழுதியுள்ளார். நல்லா எழுதி இருப்பார். ஜாலியா இருக்கும்.

ஒரு வித Johann Sebastian Bach தனம் வெளிப்படும் விதத்திலேயே இந்தப் படத்தின் பாடல் interludes எல்லாம் இருப்பதாக எனக்கு அடிக்கடி தோன்றுவது உண்டு. ஏன் என்று தெரியவில்லை. May be there is no connection, but, there is something pretty unique in the way Maestro has used guitars excessively in this movie. கண்ணுக்குள்ள வாத்துமுட்டைய நொழச்ச மாதிரி ஒருத்தர் தான் இதுல ஹீரோவா நடிச்ச மாதிரி ஞாபகம்.

படத்த பாத்தவங்க, அதுக்கப்புறம் ஆம்லெட் போட்டாங்களான்னு சொன்னா கேட்டுக்குவேன் 😉

நன்றி.

Have a nice week ahead.

Please leave your answers below in the COMMENTS section with your Twitter handle/username. For other discussions on Twitter, please use hashtag #365RajaQuiz.

Extensively noise-removed through multiple-passes and noise-gate applied. No tempo was altered.

Clue: Please try to figure out the answer sincerely as the posted audio is the clue and hint you will ever need. But, if you need one more lifeline, then just select the box below,with your mouse, between the double-quotes to view the additional hint:

This movie was directed by a Director, who made this movie based on a story written by another writer, whose real-name was same as the Director’s.

NB: Enjoy the Continuous Play of all the clues so far.

Answer: Kalyanraman Kookoo Raman (கல்யாண்ராமன் கூகூ ராமன்) from Karayellam Shenbagapoo (கரையெல்லாம் ஷெண்பகப்பூ) (1981)

Advertisements