Tags

, , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

வணக்கம்.

இன்று மிக, மிக அருமையான பாடல் களம் இறங்குகிறது.

இந்தப் பாடலை எத்துணை பேர் இதற்கு முன்னர் கேட்டிருக்கின்றீர்கள் என்பதை பின்னூட்டத்தில் தவறாமல் சொல்லிவிடுங்கள் 🙂

காரணமாகத் தான் இம்மாதிரி அடிக்கடி நான் கேட்டுக்கொள்கிறேன்.

ஏனென்றால், எப்போதும் நான் சொல்வது போல, நான் இசைஞானியின் பாடல்களை இன்னும் பழைய காலத்து ஆளைப்போலத் தான் கேட்டு வருகிறேன். Not through Internet. Certainly not through my iPhone or iPad. I listen to them on my drive, or at my bedside through CDs and cassettes. அதனால் இங்கு #365RajaQuizல் வரும் பல பாடல்களை நான் கேட்டே பல வருடங்கள் ஆகிறது. முதலில் ஹம் செய்வேன். பின்னர், அந்தப் பாடலைத் தேடி I will rummage into my collection to get the audio 🙂 இப்படித் தான் பல பாடல்கள் வருகிறது. ஆனால், மனத்தில் ஆழமாக உழுது இருப்பதற்குக் காரணம் அகில இந்திய வானொலி தான்.

உதாரணமாக, இந்தப் பாடல். இந்தப் பாடலை நான் கேட்டு குறைந்தது 15 வருடங்கள் ஆகிறது 😦 ஆனால், உடனே தர வேண்டும் என்று நினைத்தாலும் இந்த கேசட் கிடைக்கவே இல்லை. வானொலியில் இது பல முறை ஒலித்து சூப்பர் டூப்பர் ஹிட்டான பாடல் இது.

இளைய நிலா பொழிகிறது Guitar எல்லாருக்கும் நன்கு பரிச்சயம். ஆனால், அதே மாதிரி பல நுணுக்கமான கிடார் interludes உள்ள பாடல் இது. ஆரம்பத்தில் இருந்தே, ஒரு haunting humming plus guitar interludesல் வேகம் பிடிக்கும் பாடல் இது. இதை வானொலியிலோ பிற்காலத்தில் இணையத்திலோ கேட்டிருந்தால், உடனே பதில் சொல்லிவிட முடியும். அல்லது, தேடுதல் வேட்டை தான்.

இளைய நிலாவுக்கும் இதற்கும் உள்ள வேறு ஒரு ஒற்றுமையை மையமாக வைத்து யோசித்தால், பாடலை பிடித்துவிடலாம். அருமையான டூயட். இந்த interludes மட்டுமன்றி, சரணத்தில் தான் உச்ச நிலை பரவசத்தை அடுக்கி வைத்திருப்பார் இசைஞானி. அதாவது, பாடலின் வேகமும், நளினமும் மெருகூறும் தருணமே சரணத்தில் என்று நான் சொல்வேன். ஏன் என்றால், அதில் அடிக்கடி guitar interludesஐ பாடகர்களின் வரிகளுக்கு இடையே நுழைத்து அட்டகாசம் செய்திருப்பார்.

இந்தப் பாடலை எழுதியவரும் கங்கை அமரன். அட்டகாசமாக எழுதி தள்ளி இருப்பார். சரணத்தில் வார்த்தைகள் “ம்” “ம்” என்று முடிய முடிய, அங்கே guitars வர, ஒரே சுக ராகம் தான்.

என்ன கண்டுபிடித்துவிடலாம் தானே?

நன்றி.

Have a nice weekend.

Please leave your answers below in the COMMENTS section with your Twitter handle/username. For other discussions on Twitter, please use hashtag #365RajaQuiz.

Extensively noise-removed and noise-gate applied. Tempo from my source was increased by 5%. I have pieced 2 interludes together. All original tracks for this song are in pretty bad condition. However, my version will clearly bring out the guitar — especially the bass-guitar — interludes. Enjoy.

Clue: Please try to figure out the answer sincerely as the posted audio is the clue and hint you will ever need. But, if you need one more lifeline, then just select the box below,with your mouse, between the double-quotes to view the additional hint:

This song comes from the movie, directed by a Director-and-comedian, who hailsfrom Sulur near Coimbatore. The lead actor/actress in this movie is also a law graduate, born in Singapore, and was introduced by Bharathiraaja, who himself hails from Alli Nagaram near Theni. 😉

NB: Enjoy the Continuous Play of all the clues so far.

Answer: Yaar Thoorigai (யார் தூரிகை) from Paaru Paaru Pattanam Paaru (பாரு பாரு பட்டணம் பாரு) (1986)

Advertisements