Tags

, , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

வணக்கம்.

இதை நான் வரைய அமரும் போது காலை 1:30 மணி. ஒரு அருமையான பாடலைத் துணுக்காக நறுக்கித் தர எண்ணி encoding செய்ததில் ஏமாற்றம் தான் மிஞ்சியது. அதனால், அதை பின்னுக்கு தள்ளிவிட்டு, என்னுடைய கியூவில் இருந்த அடுத்த பாடல் துணுக்கை களம் இறக்குகின்றேன்.

நேற்று கீச்சுலகில் நல்ல பல கலந்துரையாடல்கள் நடந்தது. உங்களுக்கு ஆட்சேபண இல்லேண்ணா, போய் பாத்துட்டு வாங்க 😉

கடைசி சீசனில், சற்று நீளமான புதிர்களைத் தருவதற்கு பல காரணங்கள்: இரைச்சல் நீக்கப்பட்ட நீண்ட ஒலித்துண்டுகளை நீங்கள் கேட்டு ரசிக்கட்டுமே என்ற பொது நலம் ஒரு பக்கம், மற்றும், நான் முன் வந்த சீசன்களில் இறக்க இருந்து, அப்போது நிறைய பேரின் ரொம்ப toughங்க என்ற புலம்பலினால் :), breathersஐ அள்ளி வழங்கியதால், நிறைய பாடல்கள் கடைசி சீசனில் களம் இறக்க வேண்டியதாயிற்று.

இதில் எனக்கு துளி வருத்தம் இல்லை.

ஏனென்றால், அத்தகைய adjustments தான், அனைவருக்கும் ஒரு பிடிப்பையும் driveஐயும் maintain செய்ய வைத்திருக்கிறது. I read somewhere early on that “will-power” is not limitless. It is like a reservoir. You need to use it and then you need to allow some time to replenish it. If you keep pushing it to the extreme, that will-power gets depleted and the drive nosedives. So, such ups (tie-breakers) and downs (breathers) are part of this #365RajaQuiz. It allows folks to get some respite. அவ்வளவு தான்.

ஆக, இதனால் கடைசி சீசனில் பல அரிய முத்துக்கள் வெளிவந்த வண்ணம் இருக்கிறது. கவியரசர் கண்ணதாசன் இயேசுகாவியம் என்ற கவிதைத் தொகுப்பில், தண்ணீரை திராட்சை ரசமாக மாற்றிய சம்பவத்தைப் பாடும் இடத்தில், விருந்தினர்கள், அட பொதுவா விருந்துலயும் பந்தியிலயும் முதல்ல நல்லதை பரிமாறிட்டு, கடைசி பந்தியில சாதாரணமானதா கொடுப்பாங்க.. இங்க எப்படி தலை கீழாக இருக்கேனு ஆச்சரியப்படுவதைப் பற்றி பாடும்போது, இப்படி எழுதி இருப்பார்:

தொடக்கத்தில் நல்ல சாறும்
தொடங்கிய பின்னே வந்த
மயக்கத்தில் சுவைஇல் லாத
மதுவையும் வழங்கு வார்கள்
நடக்கின்ற விருந்தி லோநீர்
நல்லதைப் பின்னால் தந்தீர்
அடக்கமா? என்ன இந்த
அதிசயம்” என்றார் சில்லோர்!

இசைஞானியின் பாடல்களில் எல்லா பாடல்களும் நல்ல பாடல்கள் தான் என்றாலும், ennui, monotony, humdrum, boredom, exhaustion என்று பலக் காரணங்களால் 365/365க்கு நெருங்க நெருங்க, ஒரு வித தொய்வு துணுக்கைக் கொடுப்பவருக்கும் ஏற்படலாம், க்விஸில் பங்கேற்பவர்களுக்கும் ஏற்படலாம். ஆனால், அப்படி இங்கு நடப்பதாக தெரியவில்லை. Touch wood! 🙂 அந்தக் காரணத்துக்காக இதைச் சொன்னேன். கடைசி சீசனில் தான் செம பாடல்கள் வந்த வண்ணம் இருக்கிறது.

இல்லையா?

சந்தேகமா?

So, here is 336/365. இந்தப் பாட்டு சுலபமான பாட்டு என்றே நம்புகிறேன். பீரியட் சற்று ரீசண்ட் என்ற காரணத்தினாலும் சரி, தொலைக்காட்சிகளில் கண்டு இருக்கக்கூடிய காரணத்தினாலும் சரி, இந்தப் பாட்டு பிரபலம் ஆனது. இந்தப் படத்தில் வந்த அனைத்துப் பாடல்களுமே சூப்பர் ஹிட். ஆனால், இந்தப் பாட்டை கடைசியாக எப்போது கேட்டீர்கள்? அடிக்கடி கேட்பது உண்டா? பின்னூட்டத்தில் சொல்லுங்கள்.

அழகாக, ஆர்ப்பாட்டமே இல்லாமல் வந்து ஓரளவுக்கு நன்றாகவே ஓடிய படம் தான் இது என்றாலும், பாடல்கள் அட்டகாசம்.

இந்தப் பாட்டையே எடுத்துக்கொண்டீர்கள் என்றால், மென்மையான paceல் தவழ்ந்து செல்லும் மழலை போல ஊர்ந்து போகும்.

வயலின்களின் மெல்லிசையில் புல்லாங்குழல்.

கோரஸ் பாப்பாக்களின் துள்ளல் ஹம்மிங்கில் பல காளையர்களின் கண்ணில் காதல் துள்ளல் தான்.

இந்த சிந்த் உபயோகம் ஒரு பக்கம், பாஸ் கிடாரின் அடக்கி, அமுக்கி வாசிக்கப்பட்டிருக்கும் நூதனம் எல்லாமுமே மிகைபடுத்தப்படாத விதத்தில் வருவது சிறப்போ சிறப்பு.

நேற்றைய பாடலைப் போல இன்றையப் பாடலிலும் காமம் உண்டு. ஏனென்றால் இது முதல் இரவுப் பாடல் என்று ஞாபகம். ஆனால் இது 100% அக்மார்க் காதல்; அதர்ம நெடி தலை தூக்கிய உங்களுக்கு ஆட்சேபணை இல்லேண்ணா களவானிப்பய காதல் இல்லை 😉 கணவன், மனைவி இருவரும் கூடலில் பாடும் விதமாக வரும் பாடல். ஆக, நேற்றைய thriller எல்லாம் இதில் இல்லை. சலனம் இல்லை. (பாடலைப் பார்த்து சலனப்படுபவர்களுக்கு கதைவைத் திற காற்று வரும் என்று ஆறுதல் சொல்ல நான் என்ன சாமியாரா? 😉 )

It is in these variations that Raaja stands so tall. It is in these vicissitudes of human emotions and the duality of human nature, Raaja’s music takes various forms. It is simply amazing. Be it yesterday or today, a simple score with melody instruments and arrangements would have still imparted a melody with the same finesse.

But, not all melodies, stay eternal.

Only those melodies that are woven into human sentiments, stay sempiternal.

And this is one such awesome melody. கண்டுபிடிங்க.

நன்றி.

Have a nice weekend. மணி 2:15 AM இப்போ. பார்ப்போம்.

Please leave your answers below in the COMMENTS section with your Twitter handle/username. For other discussions on Twitter, please use hashtag #365RajaQuiz.

Noise-removal done twice with noise-gate filter once. No tempo was altered.

Clue: Please try to figure out the answer sincerely as the posted audio is the clue and hint you will ever need. But, if you need one more lifeline, then just select the box below,with your mouse, between the double-quotes to view the additional hint:

This duet is for an actor (whose debut-movie had a “floral” theme in its title) with an actress introduced by Bharatiraaja.

NB: Enjoy the Continuous Play of all the clues so far.

Answer: Muthumani (முத்துமணி) from Adharmam (அதர்மம்) (1994)

Advertisements